பதவி அரசியல்! ஒரு அதிகாரியின் மறுபக்கம்!

சிறைத்துறை தலைமை இயக்குநராக (DGP) பணியாற்றி வந்த மகேஷ்வர்தயாள், சட்டம்-ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநராக மாற்றப்பட்ட நிலையில், அவரது இடத்தில் சங்கர் ஒடந நியமிக்கப் பட்டுள்ளார். பதவியிலிருந்து விடுபடு வதற்கு முன்பே, மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத கேன்டீனை மகேஷ்வர்தயாள் மூட உத்தரவிட்டிருந்தார். 

Advertisment

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணை யில், தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் உணவு விற்பனைக்காக செயல்பட்டுவந்த கேன்டீன்களை கடந்த 2024 ஏப்ரலில் மூட வேண்டும் என சிறைத் துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டி ருந்தும்,  மதுரை மத்திய சிறையில் மட்டும் அந்த கேன்டீன் 2025 டிசம்பர் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. மேலும்,  அரசால் சிறைவாசி களின் உணவுக்காக வழங்கப்படும் ரேஷன் பொருள்களை கேன்டீனுக்கு மாற்றி, அதன்மூலம் லாபம் பார்த்துள்ளனர்.

Advertisment

மதுரை மத்திய சிறையின் சில அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான புகார் கடிதங்கள் தொடர்ந்து நக்கீரன் அலுவலகத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. அதன் உண்மைத் தன்மையை விசாரித்தபோது, “சிறைத்துறை அதிகாரிகள் சிலர் எவ்வாறு தவறிழைக்கின்றனர்; எப்படியெல்லாம் தப்பிக்கின்றனர்?” என்று தகவல்களைக் கொட்டினார்கள்.   “ஈசன்’ பெயர் கொண்ட சதியானவர், இத்துறையில் என்னென்ன கோல்மால் செய்துவருகிறார் தெரியுமா?” என்று கொந்தளித்த சிறைத்துறை வட்டாரம்,  “எங்க அதிகாரி கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்று உதாரணம் காட்டு வதற்கு இவர் ஒருத்தரே போதும்’என்று ஆதங் கத்தை வெளிப் படுத்தினார்கள்.   

மதுரை மத்திய சிறையில் காவலர் கள் இரண்டு மாதங் களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவர். அந்த வகையில், கடந்த ஆண்டு சிறை கேன்டீன் கண்காணிப்புப் பணிக்காக இளம்பிராய குமரக்கடவுள் பெயருள்ள முதல் நிலைக் காவலர் நியமிக்கப்பட்டார். பின்னர், கேன்டீன் நடத்த விருப்பமில்லாத காவலர்களை அணுகி, அவர்களுக்குச் சில லகரங்களைக் கொடுத்து,  அவர்களைப் பெயரளவில் வைத்துக் கொண்டு, கேன்டீனை தானே நடத்திவந்தார். 

Advertisment

இந்நிலையில், சிறைவாசிகளின் உறவினர் களிடமிருந்து GPay, PhonePe   போன்ற செல்பேசி பணப் பரிமாற்ற செயலிகள் மூலம் பணம் பெற்றது குறித்து  சென்னை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் உஷாரான சம்பந்தப்பட்ட வர்கள், தற்போது நேரடியாகப் பணம் பெறாமல், சிறைக்கு வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் சிறைவாசிகளின் உறவினர்கள் பணம் கொடுக்கவேண்டும் என்றும், அந்தத் தொகையை  அந்த முதல்நிலைக் காவலர் பெற்றுக் கொண்டு,  மதுரை மத்திய சிறையின் ஈசனான உயர் அதிகாரிக்கு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிறைவாசிகள் அல்லது பணியாளர்களிடம்  உயர் அதிகாரி கடுமையாக நடந்துகொள்வதும், பின்னர் அந்த முதல்நிலை தலைமைக் காவலரை அனுப்பி அவர்களை சமாதானம் செய்வதும் வாடிக்கையாகி விட்டது. 

மதுரை மத்திய சிறைக்கு அந்த அதிகாரி வந்த பின்னணி -ஒரு பார்வை: திருச்சி மத்திய சிறையில் சிறை அலுவலராகக் களப்பயிற்சி பெற்ற பின்னர், புழல் ஒ மத்திய சிறையில் சிறை அலுவல ராக நியமிக்கப்பட்டார். அப்போது அங்கு சிறைக் கண்காணிப்பாளராக செந்தில்குமார் பணியாற்றி னார்.  கடும் கட்டுப்பாடுகளுடனும், தண்டனை வழங்கும் மனப்பாங்குடனும் செயல்படும் அதிகாரியாக அவர் அறியப்பட்டவர். அவரின் கீழ் பணியாற்றிய முதல் மூன்று மாதங்களிலேயே கடும் சிரமங்களைச் சந்தித்த அந்த அதிகாரி, 2019ஆம் ஆண்டு இறுதியில் திருச்சி மத்திய சிறைக்கு பணியிட மாற்றம் பெற்று சென்றார்.  பின்னர், கூடுதல் கண்காணிப்பாளராக அவர் பதவி உயர்வு பெறும் நேரத்தில், ஊர்மிளாவிற்குப் பதிலாக செந்தில்குமார் திருச்சி மத்திய சிறைக்கு கண் காணிப்பாளராகவும், ஜெயபாரதி DIG  ஆகவும் நியமிக்கப்பட்டனர். ஜெயபாரதியும் கடுமையான அணுகுமுறையைக் கொண்ட அதிகாரி என்பதால், ஊர்மிளா கோவை மத்திய சிறைக்கு பணி யிட மாற்றம் பெற முயன்றார். அந்தச் சூழலில், இந்த அதிகாரி தன்னைக் காப்பாற்றி கோவைக்கு அழைத்துச் செல்லுமாறு ஊர்மிளாவிடம் மன்றாடியதால், இவருக்கும் சேர்த்து பணம் செலவழித்து, இருவரும் சேர்ந்து கோவை மத்திய சிறைக்கு டிரான்ஸ்பர் பெற்று சென்றனர்.  அப்போது அங்கு சண்முகசுந்தரம் DIG-யாக இருந்தார்.

jail1

பின்னர், மதுரை மத்திய சிறையின் தொழிற்கூட ஊழல் விவகாரத்தில் சிக்கிய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா, கோவையிலும் இதேபோன்ற குற்றச்சாட்டு களில் சிக்கியதால் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் அங்கு செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். தனக்கு சிறைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைக்க இருந்த நேரத்தில் செந்தில்குமார் கோவை மத்திய சிறைக்கு மாற்றலாகி வந்தது, அந்த அதிகாரியை அச்சுறுத்தியது.

அதே காலகட்டத்தில், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கு கோவை மத்திய சிறையில் இருந்தபோது செல்பேசி வழங்கியதாக அந்த அதிகாரி மீது குற்றச் சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டால் கண்காணிப்பாளராக முடியாமல் பதவி உயர்வு தடைபடும் என்ற அச்சத்தில், மூன்று மாதங்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு பதவி உயர்வு கோப்பை விரைவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். 

மூன்று மாதங்களுக்குப் பின்னரும் பதவி உயர்வு கிடைக்காததால், மீண்டும் கோவை மத்திய சிறையில் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர்,  தலைமையிடத்து டி.ஐ.ஜி.யிடம் மன்றாடி, கடலூர் மத்திய சிறையி-ருந்த ஊர்மிளாவை மருத்துவ விடுப்பு எடுக்கவைத்து,  அங்கு பொறுப்பு அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கிருந்து பதவி உயர்வு கிடைத்த பிறகே கோவை மத்திய சிறைக்கு திரும்பினார்.

சிறைத்துறையில் சேர்ந்ததிலிருந்து பதவி உயர்வு பெறும்வரை தன்னைக்  கடுமையாக நடத்திய செந்தில்குமாரை பழிவாங்கும் நோக்கில், கோவையில்  ஜெயிலராகப் பணியாற்றும் தனது நண்பர் மூலம், கட்டுப்பாட்டு அறை வழியாக தினசரி தகவல்களைச் சேகரித்து இன்றுவரையிலும்  குடைச்சல் கொடுத்து வருகிறார். 

மதுரையில் இவர் சிறைக் கண்காணிப்பாள ரான பிறகு,  அப்போதைய மதுரை மண்டல அதி காரியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மண்டல அதிகாரி திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கும் அவர் நிம்மதியாக பணி புரிய முடியாத வகையில், அங்கு நடைபெறும் நிகழ்வுகளைத் தகவல்களாகச் சேகரித்து, மேலதிகாரி களுக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பி வருகிறார். 

மதுரைப்  பகுதியில் உள்ள ஒரு முக்கிய சமூகத்தைச் சேர்ந்தவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த அதிகாரியின் பெற்றோர் கலப்பு திருமணம் செய்துகொண்டவர் கள். இவரும் கலப்பு திருமணம் செய்துள்ளார். தனது  இரண்டு மகள்களுக்கும் மனைவி சார்ந் துள்ள சமுதாய  சாதிச்சான்றிதழ்களைப் பெற்றுள் ளார். அதேநேரத்தில், அனைத்துச் சமுதாயத்தின ருடனும் அனுசரணையாக செயல்படாமல், அதிகப்படியான சாதிய உணர்வுடன் நடந்து கொள்வதுதான் கொடுமை. கனகமான மேலதி காரியிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை வைத்துக் கொண்டு, இடமாற்றம் தேவைப்படுவோரிட மிருந்து குறிப்பிட்ட சில காவலர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து, அந்தத் தொகையை அந்த மேலதிகாரியிடம் கொடுத்து, இடமாற்றம் பெற்றுத் தருவதை ‘தனி பிசினஸாக செய்துவருகிறார்.  

கோழிப்பண்ணை திட்டத்தில் முறைகேடு: தமிழகச் சிறைகளில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் சிறைவாசிகளுக்கு கோழிக்கறி வழங்கப்படுகிறது. மத்திய சிறைகளில் கோழிக்கறி,  சந்தை விலையைவிட அதிக விலைக்கு வாங்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, அனைத்து மத்திய சிறைகளிலும் கோழிப் பண்ணைகள் அமைத்து, அதிலிருந்து தேவை யைப் பூர்த்தி செய்யவேண்டும் என சிறைத் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர்தயாள் உத்தரவிட்டார். அதன்படி தொடங்கப்பட்ட கோழிப்பண்ணை மூலம், மதுரை மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 16 மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளுக்குத் தேவையான கோழிக்கறியை, கட்டாயமாக மதுரை மத்திய சிறை கடையிலிருந்தே வாங்கவேண்டும் என கூறி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மதுரை சிறைக்கு நேரில் வந்து, கிலோ ரூ.230க்கு பில் இல்லாமல் கோழிக்கறி வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

இதற்காக, சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளின் அருகிலுள்ள கூட்டுறவு சங்கங்களி-ருந்து கோழிக்கறி வாங்கியதாக போலி பில்கள் பெறப்பட்டு,  அந்த பில்களின் அடிப்படை யில் அரசுக் கருவூலத்தின் மூலம் அந்தச் சங்கங் களுக்கு பணம் செலுத்தப்படுகிறது. பின்னர், அந்தத் தொகையை மாவட்ட மற்றும் கிளைச் சிறை பணியாளர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டு, மதுரை மத்திய சிறையின் கோழிக்கடையில் கொடுத்து  கோழிக்கறியைப் பெற்றுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையில், மாவட்ட,  கிளைச் சிறைகள் அமைந்துள்ள பகுதிகளிலேயே அலைச்சல் இன்றியும், இதைவிட குறைந்த விலையிலும் கோழிக்கறி வாங்கமுடியும். அவ்வாறு நேரடியாக வாங்க அனுமதி வழங்கப்பட்டால், அந்த அதிகாரியால் வாராவாரம் ரூ.60,000 வரை எப்படி சைடு வருமானம் பார்க்கமுடியும்?

ஒரு சிறைவாசியின் மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு காவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரைக் காப்பாற்றி, அந்த நபரை இந்தக் கோழிப்பண்ணை பணியில் அமர்த்தியுள்ளார். பெட்ரோல் பங்க், சிறை வெளி கேன்டீன் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படும் லஞ்சப் பணத்தை இந்த அதிகாரியே பெற்றுக்கொள்கிறார்.  மதுரை மத்திய சிறையில் மட்டுமல்ல.. இதே ரீதியில்தான் வேறு சில மத்திய சிறைகளிலும்  கோழிக்கறி தொடர்பான முறைகேடுகள் கூவிக்கொண்டிருக்கின்றன.   

(ஊழல் தொடர்ந்து கசியும்..,)