சுத்தமான குடிநீர் கைதிகளின் அடிப்படை உரிமை!
உலகளவில் ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள கைதிகளுக்கான குறைந்தபட்ச தர விதிகளின்படி (நெல்சன் மண்டேலா விதிகள்), கைதிகள் தங்களது உடலைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்குத் தேவையான நீர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் {18 (1)}. ஒவ்வொரு கைதிக்கும் அவரது தேவைக்கேற்ப எந்த நேரத்திலும் குடிநீர் வழங்கப் படவேண்டும் {22 (2)}. சிறைக் குற்றம் புரிந்ததற்காக மிகக் கடுமையான தண்டனை விதிக்கப் பட்டிருந்தாலும், கைதிக்கு உணவும் குடிநீரும் வழங்கப்படாமல் இருக்கக்கூடாது {43 (1) (க்)}.
சுவிட்சர்லாந்தை தலைமை யிடமாகக் கொண்ட International Committee of the Red Cross # ICRC, பிப்ரவரி 2013-ல் ‘Water, Sanitation, Hygiene and Habitat in Prisons என்ற வழிகாட்டி கையேட்டை வெளியிட்டது. சிறைச்சூழல்களில் நோய்கள் பரவுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட இந்தக் கையேட் டில், கைதிகளுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான வாழ்விடங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும், கழிவுகளை அகற்றுதல் மற்றும் சுகாதார மேம்பாடு குறித்த வழிமுறைகளும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன
இந்திய அளவில் 1957-59 காலகட்டத்தில் வெளியான அகில இந்திய சிறை கையேடு குழுவின் அறிக்கையில், அனைத்து மாநிலங் களும் சிறைவாசிகளுக்கு சுகா தாரமான தங்குமிடம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் சேவைகளை வழங்கவேண்டும் (பக்.94) என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 1980-83-ல் வெளியான சிறைச் சீர்திருத்தங்களுக்கான அகில இந்திய (ஆ.ச.முல்லா) கமிட்டியின் அறிக்கை (தொகுதி-ஒ), ஒவ்வொரு சிறையிலும் போதுமான ஆழ்துளைக் கிணறுகள் அல்லது கைக்குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் வசதி இருக்கவேண்டும் (பக். 66) என குறிப்பிடுகிறது. மேலும், கைதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தமானதாக இருக்கவேண்டும் என்றும், அதனைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதிக்கவேண்டும் (பக்.74) என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அதோடு, ஒவ்வொரு சிறை யிலும் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்குத் தேவை யான தண்ணீர் சேமிப்பு வசதி இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது (பக்.75).
மத்திய உள்துறை அமைச்சகம் 17.07.2009-ல் சிறை நிர்வாகம் தொடர்பாக அனைத்து மாநில சிறை டி.ஜி.பி.களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் (எண்: 17014/3/2009-டத), அனைத்துச் சிறைகளிலும் உள்ள கைதிகளுக்குப் போதுமான உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை, சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் வசதி, தூய்மையான சுகாதாரமான தங்குமிடம், தனிப்பட்ட சுத்தம், போதுமான ஆடை, படுக்கை விரிப்புகள் மற்றும் தேவையான பிற உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
2013, அக்டோபரில் வெளியான ஒய்க்ண்ஹய் ஓர்ன்ழ்ய்ஹப் ச்ர்ழ் டள்ஹ்ஸ்ரீட்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் ஙங்க்ண்ஸ்ரீண்ய்ங் ஆய்வுக் கட்டுரை தெரிவிப்பதாவது, கர்நாடக மாநிலம் குல்பர்கா மத்திய சிறையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்கியிருந்த 300 ஆயுள் தண்டனைக் கைதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குடிநீரில் போதுமான அளவு குளோரின் கலக்கப்படாதது, போதிய நீர் வழங்கப்படாதது, வெந்நீர் வசதி இல்லாதது மற்றும் நீர் பற்றாக்குறையால் அரிதாக மட்டுமே குளிக்கமுடிந்த நிலை ஆகிய காரணங்களால், 90 சதவீத கைதிகள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய மாநிலங்களில், ஜூலை 2002-ல் திகார் சிறையில் Coca Cola நிறுவனத்தின் நிதி உதவியுடனும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE)வழங்கிய தொழில்நுட்ப ஆதரவுட னும், கைதிகள் மூலம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு தற்போது சிறைவாசிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/jail1-2026-01-02-12-33-33.jpg)
அதே நேரத்தில், ஆகஸ்ட் 2009-ல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல சிறைகளில் போதிய நீர் விநியோகம் இல்லாததால், கைதிகள் அசுத்தமான நீரைக் குடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல கைதி கள், வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட னர். இதையடுத்து, தேசிய மனித உரிமை கள் ஆணையத்தின் தலையீட்டினால், ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்(RO) சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு, கைதிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது.
பஞ்சாப், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள சிறை களில் குடிநீர் பிரச்சினை தொடர்பான நிகழ்வுகள்: பஞ்சாப் மாநிலத்தில், 2013-ல் பரித்கோட் (Faridkot) மத்திய சிறைக்கு சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயிலிருந்து வழங்கப் பட்ட தரமற்ற நீரால், இரண்டு ஆண்டுகளில் 30 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் கைதிகள் போராட் டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்(RO) சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், ஆகஸ்ட் 2019-ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மத்திய சிறையில் 1,700 கைதிகள் அடைக்கப்பட்டி ருந்த நிலையில், கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்கொள்ள சிறை நிர்வாகமும் கைதிகளும் இணைந்து, சிறை வளாகத்திற்குள் 13 அடி ஆழமுள்ள குளத்தைத் தோண்டினர். அதில் மழைநீர் சேகரிக்கப்பட்டு, இதன்மூலம் ஆழ்துளைக் கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்தது.
மேலும், ஜனவரி 2023-ல் ஹரியானா மாநில சிறைகளில் உள்ள கைதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட மழைநீரைக் குடிநீராக வழங்கும் நோக்கில், மழைநீர் சேகரிப்புத் திட்டம் ரோஹ்தக் மாவட்டத்தில்
உள்ள சுனாரியா சிறையில் தொடங்கப் பட்டது. இந்தத் திட்டமானது, மாநிலத்தின் பிற சிறைகளிலும் விரிவுபடுத்தப்படும் என ஹரியானா சிறை டி.ஜி.பி. முகமது அகில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2025-ல் கேரள மாநிலம் காக்கநாடு மாவட்ட சிறையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, கேரள மனித உரிமைகள் ஆணையம் (KSHRC) தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறையில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை உடனடியாக பழுதுபார்க்கவும், அதற்காக ரூ.23.87 லட்சம் நிதி ஒதுக்கவும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்தக் காரணத்தினாலும் சிறைகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடாது எனவும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற வழக்கில் முக்கிய உத்தரவு: ஒரு கொலை வழக்கில் தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபய் குருந்த்கர், கைதிகளுக்கு குடிக்க, துவைக்க மற்றும் குளிக்க ஒரு நாளுக்கு 1 முதல் 1.5 வாளி தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அந்த நீரில் தூசி மற்றும் மண் துகள்கள் அதிகமாக இருப்பதால் கைதிகளின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். சுத்தமான குடிநீரைப் பெறுவது கைதிகளின் அடிப்படை உரிமை என்பதால், தலோஜா சிறைக்கு போதுமான தண்ணீர் வழங்க நகர மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்துக்கு (CIDCO) உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.
இதற்குப் பதிலளித்த மகாராஷ்டிர மாநில அரசு, தலோஜா சிறை வளாகத்தில் இரண்டு கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன என்றும், கைதிகளுக்கு தினமும் சுமார் 10 வாளி தண்ணீர் வழங்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. உண்மை நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ராய்காட் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் (DLSA) செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2023 ஜூன் 22-ல் DLSA செயலாளர் சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வுசெய்த நீதிமன்றம், கைதிகளுக்கு ஒரு நாளில் அனைத்து தேவைகளுக்கும் 1 முதல் 1.5 வாளி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது என்பதை உறுதிப்படுத்தியது. மேலும், சிறை வளாகத்தில் உள்ள இரண்டு கிணறுகளில் ஒன்று முற்றிலும் வறண்டு இருப்பதையும், மற்றொன்று 90 சதவீதம் வறண்டு இருப்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டியது. சேமிப்புத் தொட்டிகளில் உள்ள தண்ணீர் மிகவும் அசுத்தமாக இருந்ததாகவும், தனிப்பட்ட வாளிகளில் தண்ணீர் பிடிக்கும்போது பெருமளவு நீர் வீணாகும் நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டது.
இதுகுறித்து கடும் கவலை தெரிவித்த நீதிமன்றம், சிறைக்கு தினமும் 40 லட்சம் லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் தேவைப்படும் நிலையில், வெறும் 4.41 லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதில் உள்ள பெரும் முரண்பாட்டை கேள்விக்குள்ளாக்கியது. தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நீதிபதிகள், சுத்தமான குடிநீரை முன்னுரிமையாக வழங்கி, அதைப் பிற பயன்பாடுகளுக்கான நீரிலிருந்து தனியாகப் பிரிக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, சிறை வளாகத்தில் கூடுதல் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கவும், தனிப்பட்ட வாளிகளுக்குப் பதிலாக பொது தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கவும், சிறைக்கு வழங்கப்படும் நீரின் அளவை துல்லியமாகக் கண்காணிக்க நீர் மீட்டர்கள் பொருத்தவும், மேலும் நீர் தேவைகளை பூர்த்திசெய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) அமைக்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.
கைதிகள் சுத்தமான குடிநீரைப் பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை எனத் தெளிவுபடுத்திய மும்பை உயர் நீதிமன்றம், நீதிபதிகள் ரேவதி மோஹிதே-தேரே மற்றும் கௌரி கோட்சே ஆகியோர் அடங்கிய அமர்வு மூலம் இந்த உத்தரவை வழங்கியது.
(ஊழல் தொடர்ந்து கசியும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/jail-2026-01-02-12-33-23.jpg)