மரணத்தைக் கணித்த முருகானந்தம்!
தமிழ்நாடு சிறை DGP அனுப்பிய சுற்றறிக்கை: உச்ச நீதிமன்ற நீதிபதி த.மகாதேவன் Civil Appeal No. 9487 Of 2025 SLP(C) No. 1785 of 2023 (WP.No. 22431 OF 2021 Dated: 29.11.2022) என்ற வழக்கில், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி கைதிகளின் உரிமைகள், கண்ணி யம் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்வதற்காக விரிவான வழிமுறைகள் (முருகானந்தம் கோட் பாடு) அடங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டி, உச்ச நீதிமன்ற பதிவாளர் மூலம் தமிழக சிறை DGP-க்கு கடிதம் (NO.9487/2025 (Sec#XII) நாள்: 17.07.2025) அனுப்பப்பட்டது. சிறை DGP, தனது சுற்றறிக்கை எண்: No. TNPCS/1032/2024#PW#2 நாள்: 07-11-2025-ல் அனைத்துச் சிறை DIG & SP-களும் இதனைக் கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சுற்றறிக்கையில், மாற்றுத்திறனாளி சிறைவாசிகளுக்கு சுகாதார வசதிகளை அரசு வழங்கவேண்டும் என்பதால், பொது இடங்களில் கிடைப்பதற்குச் சமமான பிசியோதெரபி, பேச்சு சிகிச்சை, மனநல சேவைகள் மற்றும் உதவி சாதனங் கள் (சக்கர நாற்காலிகள், கேட்கும் கருவிகள், ஊன்றுகோல்கள்) போன்றவை சிறைகளில் கிடைப்பதற்கு வழிவகை செய்யவேண்டும். மாற்றுத்திறனாளிகள் சட்டம், 2016 பிரிவு 39-ல் குறிப்பிட்டுள்ளபடி, மாற்றுத்திறனாளி சிறைவாசி களை, எவ்வாறு சிறைக்குள் தங்கவைத்து சிகிச்சை அளித்துக் கையாளவேண்டும் என்பது குறித்து அனைத்துச் சிறை மருத்துவ அதிகாரிகளுக்கும் போதுமான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கவேண்டும்’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை: மாற்றுத்திறனாளிகள் சட்டம், 2016-ல் கூறியுள்ள உரிமைகளின் அடிப்படையில் காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பேரிடர் தணிப்பு மையங்களில் The Accessibility Standards and Guidelines-ஐ உருவாக்கி 02.01.2024-ல் மத்திய அரசு வெளியிட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் சிறையை அணுகக்கூடிய வகையில், தேசிய அளவிலான நவீன சிறை கட்டடக்கலை வடிவமைப்புடன், பாதைகள்/சாய்வுப் பாதைகள், கட்டடத்தின் நுழைவாயில், தாழ்வாரங்கள், கழிப்பறைகள், கதவுகள் போன்ற வசதிகளுடன் இருக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம், 2023-ன் பகுதி-XXI, பிரிவு 55(இ)-ன் கீழ் "மாற்றுத்திறனாளி கைதிகளுக் கான உரிமைகள் மற்றும் வசதிகள்' என, புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில், சிறைக்குள் புதிதாக அனுமதிக்கப்படும் அனைத்துக் கைதிகளை யும் பரிசோதனை செய்யும்போது மாற்றுத்திறனாளி என கண்டறியப்பட்டால், சிறையின் பதிவேடுகளில் முறையாகப் பதிவுசெய்யவேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி என்பதற்காக எவ்விதமான பாகுபாடும் காட்டாமல், சமமாகவும், கண்ணியமாக வும் நடத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும், பொருத்தமான தங்குமிட வசதிகள், மன நல/உளவியல் சேவைகள், சுகாதாரமான பராமரிப்பு, மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் சிகிச்சைகளுக் கான அணுகல் ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்டவற்றை இந்தியாவிலுள்ள அனைத்துச் சிறைகளும் கடைப்பிடிக்க வேண்டு மென, அனைத்துச் சிறை DGP-களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், சுற்றறிக்கை (V-17013/18/2025#PR, நாள்: 02.05.2025) வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.
சித்தப்பா தண்டபாணியிடம் சொத்துப் பிரச்சினை: முருகானந்தத்துக்கும், சித்தப்பா தண்டபாணிக்கும் இடையே தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் சொத்து சார்ந்த வழக்கு (O.S.No.58 of 2005) நடந்துவந்தது. பலமுறை தண்டபாணி தரப்பினர் சமரசத்துக்கு முயன்றும் முருகானந்தம் ஒத்துக்கொள்ளாததால், இந்த வழக்கை மறைத்து, தண்டபாணியின் மகன் கார்த்திகேயன் சிவில் வழக்கு (O.S.No.233 of 2021) தாக்கல் செய்தார். மேலும், தண்டபாணியின் தூண்டுதலின் பேரில் செல்வக்குமார் என்பவர், 29.2.2020-ல் கொடுத்த புகாரின் அடிப்படையில், தாரா புரம் காவல்நிலையத்தில் முருகானந்தம் மற்றும் தாயார் சுமித்ராதேவி ஆகியோர் மீது வழக்கு (கு.எண்108/2020) பதிவு செய்யப்பட் டது. இதுபோல் பல நெருக்கடிகள் கொடுக் கப்பட்டன. இந்தக் குற்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்தபின், தண்ட பாணி தரப்பினருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தி லுள்ள தேன்மலர் பள்ளிக் கட்டடத்திற்கு அனுமதி பெற்றபோது, பொதுப்பாதையாகக் காட்டிய 40 அடி பாதையை மறைத்து, தனது சுயலாபத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார் எனவும், அதனைப் பொதுப் பயன்பாட்டுக் காக அரசிடம் ஒப்படைத்து, பாதைக்கு தடை ஏற்படாமல் பாதுகாக்க உத்தரவிடவேண்டி யும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகா னந்தம் வழக்கு (W.P.No.7760 of 2023) தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், பொதுப் பயன்பாட்டுக்கு பாதையைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு உயர் அதி காரிகளுக்கு 04.10.2024-ல் உத்தரவிடப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/22/muruga1-2025-12-22-17-27-16.jpg)
மேலும், திருப்பூர் மாவட்டம் -தாரா புரம் பேருந்து நிலையத்திற்குப் பின்னாலுள்ள வழக்கறிஞர் லி.முருகானந்தத்தின் இடத்திற்கு (T.S.No.21/1B1) அருகே இருந்த தண்டபாணி யின் இடத்தில்(T.S.N0: 21/1A மற்றும் T.S.No: 20/19B)கட்டப்பட்ட தேன்மலர் மெட்ரிக் பள்ளி விதிமுறைகளை மீறி, கட்டிட பிளானிற்கு எதிராக தளங்களை எழுப்பியும் உள்ளார். பள்ளியில் தீ விபத்து போன்ற அவசர காலத்தின்போது வெளியேறுவதற் காக, பள்ளிக்கு முன்னால் 12 அடி இடம் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், இந்தப் பள்ளியிடம் அது இல்லை. பள்ளியை ஒட்டியுள்ள சுமார் 2.20 ஏக்கர் நிலம் முருகானந்தத்திற்குச் சொந்தமானது. இது குறித்து தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே, முருகானந்தத்தின் நிலத் தையும் தண்டபாணி ஆக்கிரமித்துள்ளார். இந்நிலையில், சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங் களை அப்புறப்படுத்தும் நோக்கத்திலும், பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு (W.P.No.4818/2025) தாக்கல் செய்தார். 02.04.2025-ல் தேன்மலர் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகத் தீர்ப்பானது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த தேன்மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணியின் வழக்கை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 2025, மே மாதத்திற்குள் சட்டத்திற்குப் புறம்பான அனைத்து கட்டுமானங்களையும் இடிக்க உத்தரவிட்ட நிலையில், தண்டபாணி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கால நீட்டிப்பு விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்தபின், நீதிமன்றம் தண்டபாணிக்கு 07.10.2025 வரை கால அவகாசம் கொடுத்தது. மேற்கண்ட நிகழ்வுகளால் தண்டபாணி தரப்பினர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றனர்.
உச்சகட்ட கொடுமை: கடந்த 28.07.2025 அன்று தண்டபாணியால் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளியை ஒட்டிய 2.20 ஏக்கர் நிலத்தில் நில அளவைக்காக, தாராபுரம் நகராட்சி சர்வே அதிகாரி கி.ரவிக்குமார் செல்போன் மூலமாக முருகானந்தத்திடம், தான் சர்வே செய்வதற்கு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு வந்துவிட்டதாகக் கூறி, உடனே வாருங்கள் என அழைத்துள்ளார். முருகானந் தம், தனது மாமா தங்கவேல், குருசாமி வாத்தியார், உடன் பணிபுரியும் வழக்கறிஞர்கள் ரகுராமன் மற்றும் தினேஷ் ஆகியோருடன் சுமார் மதியம் 1.40 மணியளவில் சம்பவ இடமான தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே அமைந் துள்ள “தேன்மலர் மெட்ரிக் பள்ளியின்” தெற்கு பக்கமாக வந்துள்ளார். அப்போது கூலிப்படையினரால், தனது தந்தை இறந்த அதே தினத்தில் 26 ஆண்டுகளுக்குப்பின் முருகானந் தம் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தாராபுரம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (கு.எண்.371/2025) பதிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட வர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள்மீது 31.08.2025-ல் குண்டாஸ் போடப்பட்டது. அந் தக் குண்டாஸ் வழக்கு, சட்ட விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து போடப்படவில்லை என்று அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேரும் அறிவுரை கழகத்தை 09.10.2025-ல் அணுக, 24.10.2025-ல் குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது.
முருகானந்தம் இறப்பதற்கு முன், அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்ததால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டியும், முதலமைச்சர் தனிப்பிரிவு, DGP, IG, DIG, SP ஆகியோருக்கு மனு அனுப்பினார். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எப்படியும் தனக்கு ஏதாவது ஆகிவிடும் என்று கணித்தவர், இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, ரூ.50 கோடி மதிப்புள்ள தனது சொத்துக்கள் குறித்து 13.03.2025-ல் உயில் எழுதி வைத் துள்ளார். அதில் “தாய் சுமித்ராதேவி, தனது காலத்தில் அனு பவித்துக்கொள்ளலாம். அவரது காலத்திற்குப் பின், தந்தை லிங்கசாமி பெயரில் அறக்கட்டளை தொடங்கி, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், கல்வி, மருத்துவச் செலவுகளுக் காகவும், ஆதரவற்ற மாடுகள் மற்றும் நாய்களை பராமரிக்க வும், விலங்குகள் நலன் தொடர்பாக பொதுநல வழக்குகளை நடத்தவும் பயன்படுத்தவேண்டும்’என குறிப்பிட்டுள்ளார்.
(ஊழல் தொடர்ந்து கசியும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/muruga-2025-12-22-17-27-00.jpg)