Advertisment

JAIL FOLLOW UP - 51 தமிழகச் சிறைகளில் ரூ.500  கோடி ஊழல்!

jail

மாற்றுத்திறனாளி கைதிகளுக்கான முருகானந்தம் கோட்பாடு!

1993-ல் தமிழகத்தில் சமூக நலத்துறையிடமிருந்து  பிரித்து மாற்றுத் திறனாளிகள் துறை தொடங்கப்பட்டது.   மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995-ன் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் உருவாக்கப்பட்டது. அரசாணை எண்:21, நாள்:30.05.2017-ன்படி அரசு வேலை வாய்ப்பில் 4% இடஒதுக்கீட்டை வழங்குகிறது. தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் துறை சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிலையிலும்,  மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து பல்வேறு உயர் நீதிமன்ற/உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ள நிலையிலும், மாற்றுத்திறனாளி கைதிகளின் நலன் குறித்து  எதுவும் கூறாமல் இருந்தது வேதனையான விஷயம். ஆனாலும்,  இந்தியாவிலுள்ள அனைத்துச் சிறைகளிலும் மாற்றுத்திறனாளி கைதிகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய முருகானந்தம் கோட்பாடு (The Muruganantham Doctrine) ஒரு தமிழரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக      உள்ளது.   

Advertisment

திருப்பூர் மாவட்டம்,  தாராபுரத்தைச் சேர்ந்த இராமசாமி -பாப்பாத்தி தம்பதியினரின் மூத்த மகன் லிங்குசாமி, இரண்டாவது மகன் தண்டபாணி. இவர் தாராபுரத்தில் உள்ள தேன்மலர் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர். லிங்குசாமிக்கும் அவரது உடன்பிறந்த தம்பி தண்டபாணிக்கும் ஏற்பட்ட சொத்துப் பிரச்சினையில், தம்பி தண்டபாணி, அண்ணன் லிங்குசாமியை 28.7.1999-ல் கொலை செய்து            விட்டார்.  தண்டபாணிக்கு எதிரான சாட்சியங்கள்  நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.  கொலை செய்யப்பட்ட லிங்குசாமி -சுமித்ராதேவி தம்பதியினரின் ஒரே மகனான லி.முருகானந்தம் “பெக்கர் தசைநார் சிதைவு நோயால்’(Becker Muscular Dystrophy (80% disability), autism and associated neurodevelopmental disorders)  ப

மாற்றுத்திறனாளி கைதிகளுக்கான முருகானந்தம் கோட்பாடு!

1993-ல் தமிழகத்தில் சமூக நலத்துறையிடமிருந்து  பிரித்து மாற்றுத் திறனாளிகள் துறை தொடங்கப்பட்டது.   மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995-ன் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் உருவாக்கப்பட்டது. அரசாணை எண்:21, நாள்:30.05.2017-ன்படி அரசு வேலை வாய்ப்பில் 4% இடஒதுக்கீட்டை வழங்குகிறது. தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் துறை சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிலையிலும்,  மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து பல்வேறு உயர் நீதிமன்ற/உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ள நிலையிலும், மாற்றுத்திறனாளி கைதிகளின் நலன் குறித்து  எதுவும் கூறாமல் இருந்தது வேதனையான விஷயம். ஆனாலும்,  இந்தியாவிலுள்ள அனைத்துச் சிறைகளிலும் மாற்றுத்திறனாளி கைதிகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய முருகானந்தம் கோட்பாடு (The Muruganantham Doctrine) ஒரு தமிழரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக      உள்ளது.   

Advertisment

திருப்பூர் மாவட்டம்,  தாராபுரத்தைச் சேர்ந்த இராமசாமி -பாப்பாத்தி தம்பதியினரின் மூத்த மகன் லிங்குசாமி, இரண்டாவது மகன் தண்டபாணி. இவர் தாராபுரத்தில் உள்ள தேன்மலர் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர். லிங்குசாமிக்கும் அவரது உடன்பிறந்த தம்பி தண்டபாணிக்கும் ஏற்பட்ட சொத்துப் பிரச்சினையில், தம்பி தண்டபாணி, அண்ணன் லிங்குசாமியை 28.7.1999-ல் கொலை செய்து            விட்டார்.  தண்டபாணிக்கு எதிரான சாட்சியங்கள்  நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.  கொலை செய்யப்பட்ட லிங்குசாமி -சுமித்ராதேவி தம்பதியினரின் ஒரே மகனான லி.முருகானந்தம் “பெக்கர் தசைநார் சிதைவு நோயால்’(Becker Muscular Dystrophy (80% disability), autism and associated neurodevelopmental disorders)  பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார். இவர் சட்டம் படித்து, 2017-ல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.

Advertisment

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டப் போராட்டம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றக் கட்டடங்களிலும்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் உபயோகிப்பதற்கான வசதி வேண்டியும் (W.P.No.6551 of 2017), நீதிமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளும் முதியோர்களும் தாக்கல் செய்யும் வழக்குகளை விரைவில் விசாரிக்கவும், முன்னுரிமை வழங்கவும், கட்டண விலக்கு வேண்டியும் (W.P.No.24341 of 2017), தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு, பாடநூல்கள் ப்ரெய்ல்/ஒலிவடிவில், குறியீட்டு மொழி/சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டியும்(W.P.No.14542, 24341 & 6551 of 2017; W.P.No.1749 of 2018), மாற்றுத்திறனாளிகளுக்கும், அபூர்வ மரபணுக்  கோளாறுகள் உள்ளவர்களுக்கும், வீட்டு வாசல் சுகாதார சேவைகள், விலையில்லா உயர்தர மருத்துவ சிகிச்சைகள், மருத்துவக் கற்கை நெறிகளில் இவ்வியல்புகளைச் சேர்க்கவேண்டியும் (W.P.No.1749 of 2018), COVID#19 காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு வாசலில் உணவு, மருந்துகள், 5000 உதவித் தொகை, தெருவோரத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டு தவிக்கும் நபர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படவேண்டும்(WP Nos.7511 & 7533 of 2020) எனவும், பல பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்து, பெரும்பாலும் தனது வீட்டிலிருந்தபடியே முருகானந்தம் ‘யண்க்ங்ர் ஈர்ய்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங்'’ மூலமாக  உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். 

தனது சித்தப்பா தண்டபாணியின் தூண்டுதலின் பேரில் செல்வக்குமார் என்பவர் 29.2.2020-ல்  கொடுத்த புகாரின் அடிப்படையில், தாராபுரம் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், முருகானந்தம் மற்றும் அவரது தாயார் சுமித்ராதேவி ஆகியோர் மீது கு.எண்.108/2020, நாள்: 29.02.2020 ம/ந 294 (க்ஷ) 323 மற்றும் 506 (ii) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தார். 29.02.2020-ல் முருகானந்தம் கைது செய்யப்பட்டு  11 நாட்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மத்திய சிறையின் மருத்துவமனையிலேயே அவர் தங்கவைக்கப்பட்டு, 10.03.2020-ல் பிணை விடுதலை செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தன் மீது பதிவான எஒத-ஐ ரத்து  செய்வதற்கான  ஆணை (Crl.OP.No.19291 of 2021) பெற்றார்.  

‘தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளிலுள்ள மருத்துவமனை மற்றும் சிறையின் பெரிய தொகுதிகளில், இரவு நேரங்களில் எப்போதும் Light-ஐ அணைக்க மாட்டார்கள், எரிந்துகொண்டே இருக்கும். மேலும்,  சிறைவாசிகளுக்கு மனு (நேர்காணல்) வந்திருந்தாலும், நீதிமன்றங்களுக்குச் செல்லவேண்டிய சிறைவாசிகள் குறித்தும் ஒலிபெருக்கி மூலம்  அறிவிப்பு செய்வதற்காக,  திருவிழாவில் கட்டியிருக்கும் மைக்செட் போல, பெரிய மைக்செட்கள் ஆங்காங்கே சிறைச்சாலை முழுவதும் பொருத்தப்பட்டி ருக்கும். சிறையின் ஜெயிலர் அறையிலிருந்து சிறைவாசிகளின் பெயரை வாசிக்கும்போது சிறை முழுவதும் கேட்கும் விதத்தில் அவற்றை அமைத்திருப்பார்கள்.              

பகல் முழுவதும் மைக்கில் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த இரண்டி னாலும் எனக்கு sensory distress (புலன்   துன்பம்) பாதிப்பு ஏற்பட்டது.  எனது உடல்நிலை குறித்து சிறை மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்த போதிலும் பிசியோதெரபியோ, உளவியல் சிகிச்சையோ, எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை. புரதம் நிறைந்த உணவுகள் வழங்கப்படவில்லை. சிறை மருத்துவமனை உட்பட, சிறையில் அணுகக்கூடிய இடங்கள் மற்றும் கழிப்பறைகளில்  சாய்வுப் பாதைகள் இல்லை’எனக் குறிப்பிட்டுள்ள முருகா னந்தம், சிறையில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறலுக்காக ரூ.50,00,000/- இழப்பீடும்,  The Rights of Persons with Disabilities Act, 2016-ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பொது நிதிக்கு ரூ. 2 கோடியை செலுத்தவும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் வழக்கு (2745/2020/C2) தொடுத்தார். 

jail1

27.08.2021-ல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து,  அந்தத் தொகையை முருகானந்தத்துக்கு வழங்கவும், கார்த்திகேயன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. விசாரணையின்போது,  சிறைத்துறையினர் மருத்துவமனையில் தங்கவைத்திருந்ததால், சிறையில் முருகானந்தத்துக்கு  எந்த மனித உரிமை மீறல்களும் நடக்கவில்லை என்று ஆணையத்திடம் கூறி  சிறைத்துறை தப்பித்தது. 

இந்தத் தீர்ப்பில் திருப்தி அடையாத முருகானந்தம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு (W.P.No.22527 of 2021)  தொடுத்தபோது,  அபராதத் தொகை ரூ.1 லட்சத்துடன், தமிழ்நாடு அரசு ரூ.4 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுகளுக்காக ரூ.25 ஆயிரமும், ஆக மொத்தம் ரூ.5,25,000-ஐ முருகானந்தத்துக்கு வழங்கவேண்டும் என உயர்த்தி உத்தரவிட்டது. இதற்கு அனுமதி அளித்து தமிழக அரசும் அரசாணை(G.O.(D) No.270, Home (Police#HR) Department, dated 07.03.2023) வெளியிட்டது. 

இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவல்துறையிலும் பல தவறுகள் நடந்துள்ளன.  எனவே, அனைத்துக் காவல் நிலையங்களிலும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறையாகச் செயல்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டது. மேலும்,  காவல்நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகாமல் செயல்படுவதை உறுதிசெய்வதற்கு மாவட்ட அளவிலான அதிகாரியை, காவல்துறை தலைமை இயக்குநர் நியமிக்கவேண்டும் என்றும், அந்த அதிகாரிகளே கேமராக்களின் பராமரிப்புக்கு பொறுப்பாவார்கள் என்றும், சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படவில்லை என்றால் அதற்கு அவர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  இனிமேல்,  காவல்நிலையத்தில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து சி.சி.டி.வி. ஆதாரம் கேட்டால்,  சி.சி.டி.வி. வேலை செய்யவில்லை என்று கூறி தப்பிக்க முடியாது அல்லவா?

மேற்கண்ட தீர்ப்பிலும் திருப்தி அடையாத முருகானந்தம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  (Civil Appeal No. 9487 of 2025 [Arising out of SLP (C) No. 1785 of 2023]) செய்தார்.  அதில், மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம், 2016 பிரிவு 45 ழ்/ஜ் 40 & விதிகள் 2017, பிரிவு 15-ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டுமான வசதிகளை சிறைகளில் ஏற்படுத்தவேண்டும் என்றும், சிறை களில் மாற்றுத்திறனாளி கைதிகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என விதிமுறைகள் (Guidelines)வகுக்கவேண்டும் எனவும், சட்டப்பிரிவு 3(5) r/w 2(h)-ன்படி மாற்றுத்திறனாளிகள் சிறையில் தங்குவதற்கு ஏற்றவகையில் சிறையின் கட்டட அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றும், The United Nations Convention on the Rights of Persons with Disabilities, பிரிவு 13 (2) மற்றும் சட்டப் பிரிவு 39 & 47 (1) (ஹ)-ன்படி மாற்றுத்திறனாளி கைதிகள் சட்ட உதவி பெறுவதை உறுதி செய்யவும், மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளி கைதிகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி,  அதற்குப் பொருத்தமான பயிற்சியை அரசு அளிக்கவேண்டும் என்றும்,  சட்டப் பிரிவு 80-ன்படி, மாற்றுத்திறனாளி கைதிகளின் உரிமைகளைச் சிறையில் பாதுகாக்கும் வகையில் சிறை விதிகளைத் திருத்தவேண்டும் எனவும் உத்தரவிடவேண்டி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்தான் முருகானந்தம் கோட்பாடு  (The Muruganantham Doctrine) உருவானது. 

(ஊழல் தொடர்ந்து கசியும்...)

-ராம்கி

nkn201225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe