சிறப்பு உணவு அரசியல்! 

சிறப்பு தினங்களில் சிறப்பு உணவு: சிறைவிதி 399-ன்படி பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற சிறப்பு தினங்களில் அனைத்து சிறைவாசிகளுக்கும் சிறப்பு உணவு வழங்கப்படும். அதற்காக தற்போது ஒவ்வொரு சிறைவாசிக்கும் தலா ரூ.100/- ஒதுக்கப்படுகிறது. 2022-2023 நிதியாண்டில் இருந்துதான்,  இத்தொகை ரூ.50-லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டது. 

Advertisment

பண்டிகை தினங்களில் சிறப்பு உணவு: சிறை DGP சுற்றறிக்கைகள் எண்: 27662/சிந.3/2011, நாள்:28.07.2011, எண்: 45203/சிந.3/2011, நாள்:09.12.2011, எண்:24624/சிந.3/2012, நாள்:20.07.2012, எண்:26912/சிந.3/2013, நாள்:05.07.2013, மற்றும் எண்:34296/சிந.3/2014, நாள்:28.08.2024 ஆகியவற்றின்படி, சிறை விதி: 291(6)-ல் குறிப்பிடப்பட்டுள்ள மதப் பண்டிகைகளான ரம்ஜான், பக்ரீத், மிலாடி நபி போன்ற முஸ்லிம் பண்டிகை தினங்களில் நோன்பு வைத்திருக்கும் முஸ்லிம் கைதிகளுக்கும், கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்களுக்கும்NGO-க்கள் மூலமாக மளிகைப் பொருள்கள் வழங்கப்படும். அவற்றை சம்பந்தப்பட்ட சிறைவாசிகள் மட்டும் சமைத்துச் சாப்பிடவேண்டும். நடைமுறையில் ஒவ்வொரு மத்திய சிறைக்கும் அருகிலுள்ள NGO-க்கள், சம்பந்தப்பட்ட மத்திய சிறையில் அடைபட்டுள்ள தங்களது மதம் சார்ந்த சிறைவாசிகளுக்கு சிறப்பு உணவு சமைக்க மளிகைப் பொருள்கள் வழங்கவேண்டி கடிதம் வழங்குவார்கள். சிறை விதி:292 (3) (ஹ) மற்றும் சுற்றறிக்கையின்படி, சிறைக் கண்காணிப்பாளர் தனது  திருப்திக்காக அந்தக் கடிதத்தை மத்திய சிறை அமைந்துள்ள மாநகர/மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட உளவுப்பிரிவினருக்கு அனுப்பி அறிக்கை பெறுவார். 

Advertisment

சஏஞ-வின் கடிதம் மற்றும் உளவுத்துறை யினரின் கடிதம் ஆகியவற்றை சேர்த்து சிறை உஏட-க்கு கடிதம் அனுப்பி அனுமதி வாங்கிய பின்பே சஏஞ-க்கள் வழங்கும் உணவுப் பொருள்களைப் பெற அனுமதி வழங்கப்படும். சிறையில் உள்ள அனைத்து சிறைவாசிகளுக்கும் உணவுப் பொருள்கள் வழங்க NGO-க்கள் தயாராக இருந்தாலும், சிறை அதிகாரிகள் வாங்கமாட் டார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு அனுமதித்தால் மற்ற மதத்தினர் மனம் புண்படும் என்றும், சிறை விதியும்  காரணமாகக் கூறப்படும். ஆனால்,  சிறைவாசிகள் மத்தியில் அப்படி கிடையாது.  உதாரணமாக,  ரம்ஜான் அன்று சிறையிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பிரியாணி சமைப்பதற்கு உணவுப் பொருள்கள் வரும். அதனை எந்தச் சிறைவாசியும் முஸ்லிம் உணவாகக் கருதி சாப்பிடாமல் இருக்கமாட்டார்கள். மாறாக, பிரியாணி சாப்பிடுவதற்கு சிறைவாசிகளுக்குள் கடுமையான போட்டி நிலவும். சிறைக்குள் காய்ந்துபோய்க் கிடப்பவர்களுக்கு  சோறுதான் முக்கியமே தவிர,  மதம் முக்கியம் கிடையாது என்பதைச்  சிறை அதிகாரிகள் புரிந்திருந்தும் புரியாதது போல கறார் காட்டுவார்கள். மேலும்,   சிறைக்குள் வரும் மட்டன் கறியில் மாட்டிறைச்சி கலந்திருக்கிறதா என்பது குறித்து சிறை மருத்துவர் சான்றளிக்கவேண்டும். எவ்வளவு பொருள் வருகிறது என்பதை CCTV கேமராவில் நன்கு தெரியும் விதத்தில் எடை போடவேண்டும்.  இதுபோல் பல கறார் வேலைகள் நடக்கும்.  

ரம்ஜான் நோன்பு வைக்கும் சிறைவாசிகளுக்கு 30 நாள்களும் சிறப்பு உணவு வழங்கப்படும். ரம்ஜான் நாளில் மட்டும் பிரியாணி வழங்கப்படும். சிறைவிதி: 295-ன்படி, சிறைக்குள் மதம் மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால்,  சிறைவாசி தானாக மனமுவந்து மதம் மாறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதால்,  இத்தகைய சிறப்பு உணவுகளுக்காகவே,  சில சிறைவாசிகள்  முஸ்லிமாக மதம் மாறியதும் உண்டு. 

Advertisment

jaila

சிறை மருத்துவர் பரிந்துரைக்கும் சிறப்பு உணவு:  சிறை விதி: 737/1983, 736/2024-ன்படி, சிறை மருத்துவமனையில் இல்லாமல்   பிளாக்குகளில் உள்ள உடல்நலக் குறைபாடு/நோயுற்ற கைதிகளுக்கு, மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு உணவு வழங்க சிறை மருத்துவர் பரிந்துரைப்பார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு உணவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் பட்டியல், சிறையின் உணவுக் கிடங்குக்கு வழங்கப்படும். அதன்படி சிறப்பு உணவு தனியாகச் சமைக்கப் படும். 15 நாள்களுக்கு மேல் ஒரு சிறைவாசிக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டால்,  அது குறித்து சிறை DGP-க்கு தெரிவித்து உரிய அனுமதி பெறவேண்டுமென்று சிறைவிதிகளில் தெளி வாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்,  தமிழகம் முழுவதும் எந்தச் சிறையிலும் இது முறையாகக் கடைப்பிடிக்கப்படுவ தில்லை என்பது மாநில தணிக்கைத் தலைவரின்   (CAG) ஆடிட் குழு ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்டு,  சிறை DGP-க்கு அறிக்கை அளிக்கப்பட்டது.  அதில் இந்தச் சிறப்பு உணவு அதிக அளவில்  வழங்குவதால் அரசுக்கு வீண் செலவு ஏற்படு கிறது என்று குறிப்பிடப்பட்டது.  சிறப்பு உணவு வழங்குவதில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சிறை உஏட சுற்றறிக்கை எண்:047533/டர.1/2014, நாள்: 

02.12.2014-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் மற்றும் உத்தரவுகளை எந்தச் சிறையிலும் இன்றுவரை கடைப்பிடிப்பது இல்லை. 

உணவுப் பரிசோதனை:  சிறை விதிகள் 406 & 407-ன்படி, சிறையில் மூன்று வேளையும் உணவு சமைத்து முடித்தபின், உணவின் தரம் மற்றும் சுவையைப் பரிசோதிப்பதற்கான ஒரு நடைமுறை மத்திய சிறைகளில் பின்பற்றப்படுகிறது.  சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், காய்கறி பொரியல் என 5 பதார்த்தங்களை சிறைவாசிகளுக்கு மதிய உணவாக வழங்குகிறார்கள் என்று உதாரணத்துக்கு  வைத்துக்கொள்வோம்.  ஒரு பெரிய தட்டில் உள்ள ஆறு கிண்ணங்களில் இந்த உணவும்,  ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் ஸ்பூனும் வைத்திருப்பார்கள்.  இந்த சாம்பிள் உணவையும், இது குறித்து பதிவு செய்வதற்கான பதிவேட்டையும், சமையற்கூட காவல் பணிக்கென ஒதுக்கப்பட்ட காவலரும், சிறையின் சமையலரும், சிறையின் உயர் அதிகாரிகளான ஜெயிலர், சிறை மருத்துவர், சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் எடுத்துச்செல்வார்கள்.  ஒவ்வொருவரும் அதைச் சாப்பிட்டு/பரிசோதித்து, அந்தப் பதிவேட்டில் கையொப்பமிடுவார்கள். இது ஒவ் வொரு நாளும் மூன்று வேளையும் பின்பற்றப்படுகின்ற நடைமுறையாகும்.            

A Class/Special Class சிறப்பு உணவு: தண்டனை சிறைவாசி என்றால் A Class {சிறை விதி: 233(2)}, விசாரணை சிறைவாசி என்றால் Special Class {சிறை விதி: 804} சலுகைகள் கிடைக்கும்.  இவ்வாறு A Class/Special Class சலுகைகளுக்காக வழங்கப்படும் தற்காலிக உத்தரவை, தண்டனை/ரிமான்ட் ஆணை பிறப்பித்த நீதிபதி வழங்குவார் (சிறை விதி: 231). அதன்பின்,  சம்பந்தப்பட்ட சிறைவாசி யின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியரிடமிருந்து, அச்சிறைவாசிக்கு A Class/Special Class வழங்குவது குறித்த கடிதத்தை சிறைக் கண்காணிப்பாளர் பெற்று, சிறை DGP மூலம் தமிழக அரசுக்கு அனுப்புவார் (சிறை விதி:232). இதன் அடிப்படையில், தமிழக அரசு ஆணையிட்ட பிறகுதான் நிரந்தரமாக A Class/Special Class வழங்கப்படும். A Class/Special Class  சிறைவாசிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கான உணவுப் பொருள்களைத் தனியாகப் பெற்று, சமையல்கூடத்திற்கு உள்ளேயே  தனியாகச் சமையல் செய்து தரப்படும். 

இவர்களுக்காகச் சமையல் பண்ணும் சாதாரண சிறைவாசிக்கும், A Class/Special Class சிறைவாசியிடம் ஆர்டர்லியாக வேலை செய்யும் சிறைவாசிகளுக்கும்,  இந்த உணவு பகிர்ந்தளிக்கப்படும். இதனை சிறைப் பணியாளர்கள் லோக்கல் அட்ஜஸ்ட்மென்ட் என்பார்கள்.   இதில்லாமல் சிறையில் நன்னடத்தையுடன்  நடந்துகொள்ளும் தண்டனை சிறைவாசிகளை Star Class என்று சிறைக் கண்காணிப்பாளர் பிரிக்கலாம்  (சிறை விதி: 233(2)).  நடைமுறையில் இதை யாரும் செய்வதில்லை.  

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு குறுக்கே நின்ற  சிறப்பு  உணவு:  சென்னை மத்திய சிறை II-ல் 2022-2024 காலகட்டத்தில், PCP கேன்டீனில் இரண்டு மாதங்கள் டூட்டி பார்த்த சிறைக்காவலர்களின் வங்கிக் கணக்கில், சிறைவாசிகளின் உறவினர்/நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் லட்சக்கணக்கில் வரவாகியிருந்தது. அந்த சிறைக் காவலர்கள் சிறைக்குள் இருந்த சிறைவாசி களுக்கு கேன்டீன் உணவு மற்றும் பீடி வழங்கியது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தியது. அதனை நிறுத்தவேண்டி, சிறைக்கு உள்ளே அமைச்சராக இருந்தவரும், வெளியே வந்தபின் தற்போதும் அமைச்சர் தோரணையில் வலம் வருபவருமான அந்த முன்னாள் VVIP சிறைவாசியின் இல்லத்திற்கு சிறைக் காவலர்கள் பலரும் சென்று முறையிட்டனர். VVIP-யும் தனக்கு சிறை PCP கேன்டீன் மூலம் சிறப்பு உணவு வழங்கி உதவிய காவலர்களின் கோரிக்கையை செய்நன்றி மறவாமல் கேட்டிருக்கிறார். அவருடைய தலையீட்டால், அந்த விசாரணை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போதைய மதுரை ரேஞ்ச் உயரதிகாரியும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார். அவர் அடிக்கடி மருத்துவ விடுப்பில் சென்று, தன்னால் முடிந்த சாம, தான, பேத, தண்ட உத்திகளைப் பிரயோகித்து, தலைமைச் செயலகத்தில் உள்ள அந்தக் கோப்பினை தடுத்து நிறுத்திவிட்டதாகப் பேசப்படுகிறது. 

(ஊழல் தொடர்ந்து கசியும்..,)