கைதிகளை அட்மிஷன் எடுப்பதில் பிரச்சினை!  

மிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் இரவு நேரத்தில் சிறைவாசியை சிறைக்குள் அனுமதிப்பதற்காக சிறைவாசியுடன் வரும் காவல்துறையினர், சிறைவாசியின் ரிமாண்ட் வாரண்ட் அல்லது ஸ்ரீர்ம்ம்ண்ற்ற்ஹப் (தண்டனை) வாரண்ட் கொண்டுவரும்போது, அதனுடன் வெளி அரசு மருத்துவமனையிலிருந்து பெறப் பட்ட சிறைவாசியின் மருத்துவ அறிக்கையை யும் உடன் எடுத்துவரவேண்டியது கட்டாய மாகும். அவ்வாறு காவல்துறையினர் எடுத்துவரும் மருத்துவ அறிக்கையில் ஏதேனும் தெளி வில்லாமல் இருந்தால்,  அல்லது சிறைவாசியின் உடல் நிலை/காயங்கள் குறித்து அதில் பதிவுசெய்யப்படாமல் இருந்தால், அதனை  மீண்டும் அரசு மருத்துவ மனைக்கு சிறைவாசியுடன் கொண்டுசென்று மாற்றி/பதிவு செய்து எடுத்துவருமாறு ஙசஆ-க்கள் (சிறை மருத்துவர்கள் இரவில் இல்லாததால்) கூறுவார்கள். முக்கியமான சந்தேகம் ஏற்படும் நேரங்களில், சிறை மருத்துவரை போனில் தொடர்புகொண்டு கேட்டு,  அதன்படியும் ஙசஆ-க்கள்  செயல்படுவார்கள்.  

Advertisment

அப்போது, “"அதை உங்கள் மருத்துவரை வந்து, சிறைவாசியைப் பார்த்தபின்பு சொல்லச் சொல், நீ ஙசஆதானே? நீ எப்படி சொல்லலாம்?'’’என்று காவல்துறையினர் வாக்குவாதம் செய்வார்கள்.  

Advertisment

பதிலுக்கு ஙசஆ காவலர், "நீ காவலர், நான் ந.ஒ./ஒய்ள்ல்ங்ஸ்ரீற்ர்ழ், நீ சொல்லி நான் எப்படி போக முடியும்?'’’என எகிறுவார்.  

ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 முறை, மத்திய சிறையின் ஙஹண்ய் ஏஹற்ங் முன்பு,  இதுபோன்று  ஏதாவது ஒரு வகையில் சண்டை நடக்கும். அதனால்,  நேரடியாகவே ஙசஆ/ஙசஆ காவலர்களுக்கு மிரட்டல் வரும். இது சிறையின் சாபக்கேடு.  இதனை நிவர்த்தி செய்வதற்கு எந்தவொரு அதிகாரியும் இதுவரையிலும் முன்வரவில்லை. 

Advertisment

சிறைவாசியுடன் வரும் காவல்துறையி னரை அரசு மருத்துவமனைக்குத் திருப்பி அனுப்பி, மறுமுறை கருத்து (தங்ம்ங்க்ண்ஸ்ரீஹப் ர்ல்ண்ய்ண்ர்ய்) பெற்றுவர அனுப்புவதற்கான படிவத்தில் சிறை மருத்துவர் ஏற்கனவே கையெழுத்திட்டிருப்பார். இதுபோன்ற சிறை மருத்துவர் கையெழுத்திட்ட  வெற்று படிவங்களை  முன்கூட்டியே தயாராக வைத்திருப்பார்கள்,   அல்லது சிறை மருத்துவரின் கையெழுத்தை ஙசஆ/ஙசஆ காவலர்களே போட்டுவிடுவார்கள். 

ஒரு சிறைவாசி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு,  வேலூர் மத்திய சிறைக்கு அனுமதிக்காக வருகிறார் என்றால், நாங்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் வாங்கிய சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்று கறார் காட்டுவார்கள். 

அட்மிஷன் எடுப்பதில் தேவையற்ற காலதாமதம்: ஒரே ஒரு பதிவேட்டை மட்டும் வைத்து,  ஒரே ஒரு அனுமதி அலுவலரை வைத்து அனுமதி எடுப்பதால்,  பலமணி நேரம் கைதியைக் கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கவேண்டிய கொடுமைகளை காவல்துறையினர் அனு பவித்து வருகிறார்கள்.   மக்கள் அதிகமாக வரும் முக்கிய இடத்தில் அமைந்துள்ள  ஒரு வங்கியில் ஒரே ஒரு கவுன்டர் (ஈர்ன்ய்ற்ங்ழ்) வைத்துச் செயல்பட்டால் என்னென்ன கஷ்டங்களை மக்கள் அனுபவிப்பார்களோ, அதையேதான் காவல்துறையினரும் அனு பவிக்கின்றனர். மத்திய சிறைகளில் உள்ள ஒரே அனுமதி பதிவேட்டில் கையால் எழுதி அனுமதி எடுத்து, அதன்பின் காவலர்களை வைத்து கணினியில் உள்ள ஊ-டழ்ண்ள்ர்ய் நர்ச்ற்ஜ்ஹழ்ங்-ல் ஏற்றுவதற்குப் பதிலாக, தேவைக்கேற்ப 4 கணினிகளை சிறையின் ஙஹண்ய் ஏஹற்ங்-ல் வைத்து, மின்னணு முறையில் அனுமதி எடுப்பதற்கு,  சிறை உஏட & ஒஏ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது காவல்துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

நீதித்துறை நடுவர்களுக்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: பல நேர்வுகளில் சிறைவாசி களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சிறைக்கு அழைத்துவராமல், நேரடியாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்துவிடுவார்கள். அவ்வாறு அனுமதிக்கக்கூடாது என நீதித்துறை நடுவர்கள், சிறைவாசியை ரிமாண்ட செய்யவரும் காவல் துறையினருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டி, உயர் நீதிமன்றத்திற்கு சிறை ஐ.ஜி சென்னை கடிதம் (எண்: 18/43/ந3/1980, நாள்: 09.07.1980) எழுதி, நீதித்துறை நடுவர்களுக்கு இது குறித்து அறிவுரை வழங்கக் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், தமிழக நீதித்துறை நடுவர்களுக்கு சுற்றறிக்கை எண்: 3027/ஊ.3/1980, நாள்:04.12.1980-ன்படி உத்தரவு பிறப்பித்தது. 

மருத்துவமனையில் அட்மிஷன் எடுத்தல்: இப்படி ஒரு உத்தரவு இருந்தபோதும், நேராக மருத்துவமனையில் அனுமதித்துவிடுவார்கள். அவ்வாறு அனுமதித்திருந்தால் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சிறைக் கண்காணிப் பாளருக்கு இது குறித்து கடிதம் அனுப்புவார்.  மேலும்,  காவல் ஆய்வாளர்கள் சிறைக் கண்காணிப்பாளரிடம் போன் மூலம் தொடர்புகொண்டு, “"காவல்நிலையப் பணிக்கு ஆள் இல்லை சார்,  எங்க ஊள்ஸ்ரீர்ழ்ற்தான் ஓடிக்கிட்டு இருக்கு சார், சிறையிலிருந்து வந்து அட்மிஷன் எடுத்தா உதவியா இருக்கும்'’என்று கேட்டுக்கொள்வார்கள்.   சிறைவாசியின் நிலைமையை விசாரித்து அறிந்துகொண்டு சிறைக் கண்காணிப்பாளர், ஜெயிலருக்கு உரிய உத்தரவைப் பிறப்பிப்பார். சிறைவாசி ஒருவேளை சாகக்கிடக்கிறார் என்றால்,  ஏதாவது காரணம் கூறி எடுப்பதற்கு தாமதிப்பார்கள்.  ஏனென்றால், அனுமதி எடுத்தபின் சிறைவாசி இறந்தால் அது சிறையின் கணக்கில் வந்துவிடும். மேலும், சிறைவாசியின் உறவினர்களுக்குத் தெரிவிப்பது, நீதித்துறை நடுவர் விசாரணை, மனித உரிமை ஆணைய விசாரணை, அரசுக்குத் தகவல் தெரிவிப்பது என அடுக்கடுக்கான வேலைப்பளுவில் சிறைத்துறை அதிகாரிகள் சிக்கிக்கொள்வார்கள். அட்மிஷன் எடுக்காமல் இருந்து சிறைவாசி இறந்தால், அது காவல்நிலையக் கணக்கில் சேர்ந்துவிடும். காவல்துறையினர்தான் மேற்கூறிய வேலைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 

சிறையிலிருந்து  வெளிமருத்துவமனைக்கு வந்து, சிறைவாசியை அனுமதி எடுத்து, சிறைவாசி எண் வழங்கப் பட்ட பின்புதான்,  அவர் எந்தக் காவல்நிலையத்தைச் சேர்ந்த கைதியோ, அந்தக் காவல்நிலைய ஆய்வாளரால் நிம்மதிப் பெருமூச்சுவிடமுடியும். சிறைவாசி எண் வழங்கப்பட்டால்தான், சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பொறுப்பிலிருந்து, ஆயுதப்படை காவல் பொறுப்புக்கு சிறைவாசியின் காவல் பொறுப்பை மாற்றமுடியும்.    

ஆயுதப்படை யள்  சிறைத்துறை: மத்திய சிறைக்கு காவல்துறையின் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த காவல் பணியாளர்கள் வழிக்காவல் செய்துவரும்போது,  சிறைவாசியை அனுமதி எடுப்பது குறித்து மேற்கூறியவாறு பிரச்சினை முற்றும்போது, மெயின் ரோட்டில் இருந்து சிறைக்குள் நுழையும் நுழைவாயில்களில் போக்குவரத்துக் காவலர்களை (ஆயுதப்படையின் மற்றொரு பிரிவு) நிறுத்தி, சிறைப் பணியாளர்களின் வாகனங்களை சோதனை செய்தும், தலைக்கவசம் அணியவில்லை என்றோ,  வேறு ஏதாவது காரணத்தைத் தேடிப்பிடித்தோ,  அபராதம் விதிப்பார்கள். அப்புறம் என்ன? சிறை அதிகாரிகள் மாநகர/மாவட்ட  காவல்துறையிடம் இறங்கி வருவார்கள். இந்த அபராதம் விதித்தலும் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படும். சிறையில் சில நாள்களுக்கு சிறைவாசிகளை அனுமதிப்பதில் உள்ள கெடுபிடிகள் குறையும்.    

சிறைக்குள் சிறைவாசியை அனுமதித்தபின் ணன்ஹழ்ஹய்ற்ண்ய்ங் ரஹழ்க்: கொரோனா காலகட்டத்தில்தான் ணன்ஹழ்ஹய்ற்ண்ய்ங் என்ற வார்த்தை பொதுமக்களிடம் பிரபலமடைந்தது.   சிறைதுறையினருக்கோ,  இது நன்கு பரிச்சயமான வார்த்தை.  சிறை ஐ.ஜி. சுற்றறிக்கைகள் எண்: 733/டந.2(7)/1999, நாள்: 06.01.1999, 05.02.1999 & 17.02.1999 & 24.02.1999, சர்.4803/டந.2(6)/1999, நாள்: 29.01.1999, தமிழகஅரசின் உ.ஞ. கடித எண்: 15510/டழ்ண்ள்ர்ய்.ஒஒஒ/99-1, உள்துறை, நாள்: 17.02.1999 மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணைய கடிதம்: 4/3/1999 டதட&ட, நாள்: 11.02.1999 ஆகிய சுற்றறிக்கைகளின்படி யும் சிறைவிதி : 196/1983, 202/2024   சிறைக்குள் புதிதாக அனுமதிக்கப்படும் சிறைவாசியை ணன்ஹழ்ஹய்ற்ண்ய்ங் ஜ்ஹழ்க்-ல் வைத்து அந்த சிறைவாசிகளுக்கு என்னென்ன நோய்கள் உள்ளது என்பதைக் கண்டறிந்து அவர்களைப் பிரித்து, அதன்பிறகுதான் யார் யாரை எந்த பிளாக்கில் அடைக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் சிறைக்குப் புதிதாக  அனுமதிக் கப்படும், சிறைவாசிகளை, சிறை மருத்துவர் பரிசோதனை செய்து, தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள படிவத்தினை சிறை மருத்துவர் பூர்த்தி செய்து,  அதனை ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் சிறை உஏட அலுவல கத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்து,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் உ.ஞ.ச.ர்.4/7/2010-டதட & ட, நாள்:17.05.2010-ன்படி இந்த மாதிரி படிவம், காலகட்டத்திற்கு ஏற்றவாறு திருத்தி அமைக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. 


(ஊழல் தொடர்ந்து கசியும்..,)