சிறை மருத்துவர் Vs சிறை கண்காணிப்பாளர்!
சிறைத்துறையில் SP முதல் DGPவரையிலான அதிகாரிகளின் ஆட்டமெல்லாம், தங்களுக்குக் கீழ் பணிபுரியும் காக்கிச்சட்டையிடம் மட்டும்தான். வெள்ளை கோட் (மருத்துவர்கள்), கருப்பு கோட் என்றால் பம்மிவிடுவார்கள். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மத்திய சிறையிலும் மூன்று மருத்துவர்கள் வேலை செய்கிறார்கள் என்றதும், ஒவ்வொருவரும் 8 மணி நேரம் எனப் பணியைப் பிரித்துக்கொண்டு, 24 மணி நேரமும் ஏதேனும் ஒரு மருத்துவர் சிறையில் இருந்து மருத்துவம் பார்ப்பார் என்றுதான் நினைக்கத் தோன்றும். உண்மையில் நடப்பதோ வேறு.
மூன்று மருத்துவர்களும் ஒரே நேரத்தில் வந்து மருத்துவம் பார்த்துவிட்டு, ஒரே நேரத்தில் சென்றுவிடுவார்கள். அரசு மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பணிபுரிந்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து/நடத்திக்கொள்ள லாம் என்று, பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதை இதற்கொரு காரணமாகக் கூறலாம். இதையும் தாண்டி உண்மையைக் கூறவேண்டும் என்றால், மருத்துவர் களைச் சிறை நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியாது/முடியவில்லை என்பதாகும்.
சிறை மருத்துவர் விஷயத்தில் சிறைக் கண்காணிப்பாளருக்கு உள்ள ஒரே பிடி என்னவென்றால், சிறை மருத்துவருக்கு தற்செயல் விடுப்பு வழங்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதுதான். வேறு எந்தவிதத்திலும் சிறை மருத்துவரிடம் அதிகாரம் செலுத்தமுடியாது. சிறை மருத்துவர் ஏதேனும் தவறு செய்தால்கூட, அதுகுறித்த புகாரை, அந்த மருத்துவர் சம்பந்தப்பட்ட மருத்துவ இணை இயக்கு நருக்கு அனுப்பமுடியுமே தவிர, மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இணை இயக்கு நரும், சிறை மருத்துவர் மீது 99 விழுக்காடு எந்த நட வடிக்கையும் எடுக்கமாட் டார். இதற்குக் காரணம், மரு
சிறை மருத்துவர் Vs சிறை கண்காணிப்பாளர்!
சிறைத்துறையில் SP முதல் DGPவரையிலான அதிகாரிகளின் ஆட்டமெல்லாம், தங்களுக்குக் கீழ் பணிபுரியும் காக்கிச்சட்டையிடம் மட்டும்தான். வெள்ளை கோட் (மருத்துவர்கள்), கருப்பு கோட் என்றால் பம்மிவிடுவார்கள். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மத்திய சிறையிலும் மூன்று மருத்துவர்கள் வேலை செய்கிறார்கள் என்றதும், ஒவ்வொருவரும் 8 மணி நேரம் எனப் பணியைப் பிரித்துக்கொண்டு, 24 மணி நேரமும் ஏதேனும் ஒரு மருத்துவர் சிறையில் இருந்து மருத்துவம் பார்ப்பார் என்றுதான் நினைக்கத் தோன்றும். உண்மையில் நடப்பதோ வேறு.
மூன்று மருத்துவர்களும் ஒரே நேரத்தில் வந்து மருத்துவம் பார்த்துவிட்டு, ஒரே நேரத்தில் சென்றுவிடுவார்கள். அரசு மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பணிபுரிந்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து/நடத்திக்கொள்ள லாம் என்று, பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதை இதற்கொரு காரணமாகக் கூறலாம். இதையும் தாண்டி உண்மையைக் கூறவேண்டும் என்றால், மருத்துவர் களைச் சிறை நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியாது/முடியவில்லை என்பதாகும்.
சிறை மருத்துவர் விஷயத்தில் சிறைக் கண்காணிப்பாளருக்கு உள்ள ஒரே பிடி என்னவென்றால், சிறை மருத்துவருக்கு தற்செயல் விடுப்பு வழங்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதுதான். வேறு எந்தவிதத்திலும் சிறை மருத்துவரிடம் அதிகாரம் செலுத்தமுடியாது. சிறை மருத்துவர் ஏதேனும் தவறு செய்தால்கூட, அதுகுறித்த புகாரை, அந்த மருத்துவர் சம்பந்தப்பட்ட மருத்துவ இணை இயக்கு நருக்கு அனுப்பமுடியுமே தவிர, மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இணை இயக்கு நரும், சிறை மருத்துவர் மீது 99 விழுக்காடு எந்த நட வடிக்கையும் எடுக்கமாட் டார். இதற்குக் காரணம், மருத்துவர்கள் சங்கம் மிக வலிமையாகவும், சக்தி வாய்ந்ததுமாகச் செயல்படு வதுதான். ஆனால் இந்த ஒற்றுமை சிறை அதிகாரி களிடம் இல்லாமல் ஒருவருக்கொருவர் குழிபறிப்பதிலேயே மும்முரமாக இருப்பார்கள்.
MNA காவலர்: சிறை மருத்துவமனைக்கு இரண்டு MNA-க்கள் மட்டும் போதாது என்பதால், இரண்டு சிறைக் காவலர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கென்று நிரந்தரமாக நியமிக்கப்படு வார்கள். அந்தக் காவலர்கள், காலப்போக்கில் தன்னிச்சையாக சிறைவாசிகளுக்கு ஊசி போடுவது, மருந்துகள் வழங்குவது என MNA-வாகவே மாறிவிடுவார்கள். ஒருநாள் வேலை ஒருநாள் ஓய்வு என்ற அடிப்படையில், ஒரு ஙசஆ மற்றும் ஒரு MNA காவலர் சேர்ந்து ஒருநாள் டியூட்டி பார்ப்பார்கள். இவர்களுக்குள் உணவு சாப்பிட மாற்றிக்கொண்டு வெளியே சென்றுவருவார்கள். மருத்துவம் சார்ந்த யாராவது ஒருவர் கண்டிப்பாகச் சிறையில் எப்போதும் இருக்கவேண்டும் என்பதற்காகவே, இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. இவர்களின் தேவை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/02/jail1-2025-12-02-14-56-41.jpg)
சிறை மருத்துவர்கள் தங்களது பணி நேரத்தில் முறையாக சிறையிலுள்ள மருத்துவ மனைக்கு வந்து பணிபுரியவில்லை என்றும், சிறைவாசிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கூறி, அதனைத் தவிர்ப்பதற்கான சில அறிவுரைகளை, சிறை DGP சுற்றறிக்கைகள் (எண்: 44753/CS.3/2010#2, நாள்:02.11.2010 மற்றும் 21724/CS.4/2013, நாள்: 28.05.2013) மூலம் வழங்கியுள்ளார்.
மத்திய சிறைகளில் சிறை மருத்துவர்கள் இரவுப் பணி மேற்கொள்ள ஏதுவாக, G.O.Ms.No.2792, Home Dept., dated: 23.12.1989, சிறை ஐ.ஜி சுற்றறிக்கை எண்கள் 51866/ஏ1/1985, சர்.419/ஏ1/1990 மற்றும் சிறை விதி: 84ஆ/1983, 92/2024 ஆகியவற்றின்படி, மத்திய சிறை மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், வாடகை இல்லாமல் மத்திய சிறை வளாகத்திலேயே, அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள குடியிருப்பில் தங்கிக்கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் எந்த மருத்துவரும் இந்தக் குடியிருப்பில் தங்குவது இல்லை.
சிறை மருத்துவர்கள் குறித்து சிறை DGP J.K.திரிபாதி I.P.S. வழங்கிய சுற்றறிக் கையில் (No.25370/CS.3/2014 நாள்:07/10/2014) சிறை மருத்துவர்கள் தங்களுக்கான குடியிருப்பில் தங்குவதில்லை என்றும், சிறைவாசிகளுக்கு இரவில் அவசர சிகிச்சை தேவைப்படும்போது பெரும் பாலான நேரங்களில் வருவதில்லை என்றும், பூர்த்தி செய்யப்படாத படிவங்களில் சிறை மருத்துவர்கள் முன்கூட்டியே கையொப்பமிட்டு, சிறை மருத்துவமனையிலுள்ள கடைநிலைப் பணியாளரிடம் கொடுத்துவிட்டு செல்வதாகவும், சிறைக்குள் இருக்கும் சிறைவாசிக்கு வெளி மருத்துவமனையில் அவசர சிகிச்சை தேவைப்படும் போது, கடைநிலைப் பணியாளர்கள் அப்படிவத் தைப் பூர்த்தி செய்து வெளியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகப் புகார் வருகிறது என்றும், உரிய அவசர சிகிச்சை அளிக்கப்படாததால் பல நேரங்களில் சிறைவாசிகள் செல்லும் வழியிலேயே இறந்துவிடுவதாகவும் தெரிவித்து, சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். ஆனால், இன் றும் அதே நிலைமை தொடர் கிறது என்பதே நிதர்சனம்.
குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது சிறைக்குள் இரவுச் சுற்று வரவேண்டும் என்று சிறை DGP அமரேஷ் பூஜாரி I.P.S. சுற்றறிக்கை (எண் : C.No.101/DGP/Camp/2023, நாள்: 08/09/2023) அனுப்பி னார். அதனை ஒரு பொருட்டாகவே சிறை மருத்துவர்கள் மதிக்கவில்லை. மேற்கூறிய சுற்றறிக்கைகளைச் செயல்படுத்த முடியாமல் சிறையின் உயரதிகாரிகள் திணறினார்கள் என்பதும், இன்றுவரை செயல்படுத்த முடியவில்லை என்பதும் கசப்பான உண்மையாகும். தங்களது அதிகாரத் தைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் பணிபுரியும் சிறை மருத்துவர்களாலும், தங்களது அதிகாரத்தைப் பற்றி தெரிந்திருந்தாலும், மனிதாபிமானத்துடனும், மனசாட்சியுடனும் செயல்படும் சில சிறை மருத்துவர்களாலும், மத்திய சிறைகளில் உள்ள மருத்துவ உலகம் ஓரளவு இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஈகோ மோதல்: பெரும்பாலும் சிறைக் கண்காணிப்பாளர் சிறை மருத்துவரிடம் இணக்கமாகப் போகவேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார். ஏனென்றால், சிறைக் கண்காணிப் பாளர் கண்ணாடி கூண்டுக்குள் இருக்கிறார். கல் எறிந்தால் நஷ்டம் இவருக்குத்தான். இவர்களுக்குள் ஈகோ மோதல் வந்தால், சிறைக் கண்காணிப்பாளர் நேரடியாகவோ அல்லது ஜெயிலர், உதவி ஜெயிலர் கள் மூலம் மறைமுகமாகவோ, MNAக்களையும் MNA காவலர்களையும் மிரட்டுவார் அல்லது சிறை மருத்துவமனையில் MNA காவலர்களாக நியமிக்கப்பட்ட சிறைக் காவலர்களை காவல் பணிக்கு அனுப்பிவிடுவார். சிறைக்காகத்தான் சிறை மருத்துவமனை, மருத்துவமனைக்காகச் சிறை கிடையாது என்று வசனம் பேசுவார்கள். ஆனால், நடப்பதோ வேறுவிதமாக இருக்கும்.
சிறைக் காவலர்கள்/பணியாளர்கள் மருத்துவ விடுப்புக்கு சிறைக் கண்காணிப்பாளரிடம் விண்ணப் பிக்கும்போது, மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என்பதாலும், வெளி மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் வாங்கிக் கொடுத்தால், அது தன்னிச்சை யான மருத்துவ விடுப்பு எனக் கூறி ஒழுங்கு நட வடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதாலும், பெரும்பாலான சிறைப் பணியாளர் கள் சிறை மருத்துவரிடம் சான்று பெற்றே மருத்துவ விடுப்புக்கு விண்ணப்பிப்பார்கள்.
சிறைக் கண்காணிப்பாளர் மீதுள்ள கோபத் தில் காவலர்களுக்கு விடுப்பு வழங்கி நிர்வாகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் மனநிலையில் சிறை மருத்துவர் இருக்கிறார் என்பது காவலர்களுக்குத் தெரியவந்தது என்றால், அந்தத் தகவல் காட்டுத் தீயாகப் பரவும். அதனால், அதிக காவலர்கள் அதிக நாட்களுக்கு மருத்துவ விடுப்புப் பெற விண்ணப்பித்து, மருத்துவச் சான்றிதழும் பெற்று, விடுப்பு கிடைத்து கொண்டாடிவிடுவார்கள்.
இவ்வாறு சிறைக் காவலர்கள் மருத்துவச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கும்போது, வேறு வழியின்றி அந்தப் பணியாளருக்கு விடுப்பு வழங்க வேண்டிய நெருக்கடி, சிறைக் கண்காணிப்பாள ருக்கு/ நிர்வாகத்திற்கு ஏற்பட்டுவிடும். ஒருவேளை மருத்துவர் பரிந்துரைத்தும் விடுப்பு தரவில்லை என்றால், உடல்நிலை சரியில்லாத போதும் வேலை வாங்குகின்றனர் என்று சிறைக் கண்காணிப்பாளர் மீது அவதூறு பரப்பி ஒரு வழி பண்ணிவிடுவார்கள். பிறகென்ன? சிறைக் கண்காணிப்பாளருக்கும்/ நிர்வாகத்திற்கும் பெரும் திண்டாட்டமாகப் போய்விடும்.
இதேபோல், அதிகமான சிறைவாசிகளுக்கு வெளி மருத்துவமனையில் சிகிச்சை பெற, சிறை மருத்துவர் பரிந்துரைப்பது நடக்கும். அச்சிறைவாசி களுக்காக காவல்துறை வழிக்காவல் பெற்று அவர் களை வெளி மருத்துவமனைகளுக்கு அனுப்புவது இயலாத காரியம். அனுப்பவில்லை என்றால், சிறைவாசிகள் தங்களது வழக்கறிஞர் மூலம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பாடாய்ப்படுத்தி விடுவார்கள். இயல்பாகவே, சிறைவாசிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டி நீதிமன்றத் தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் குவிந்து கிடக் கின்றன. அவ்வாறு வழக்கு தொடரப்படும்போது, சிறைவாசியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையினை சிறை நிர்வாகத்தின் சார்பாகத் தயாரித்து அளிக்க வேண்டியது சிறை மருத்துவர் தான். அதற்கும் சிறை நிர்வாகம் மருத்துவரிடம் தான் போய் நிற்கவேண்டும்.
சிறையில் உணவு தரமாக இல்லை, சிறையில் சுகாதாரம் சரியாகப் பேணப்படவில்லை என்று சிறை மருத்துவருக்கான அறிக்கைப் புத்தகத்தில் (Medical Officer Journal) எழுதி, அந்த அறிக்கையை மேல்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டால், சிறைக் கண்காணிப்பாளருக்கு கெட்ட பெயர் ஏற்படும். அதனால் அவர் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்பதால், எந்தச் சூழ்நிலையிலும் சற்று அடக்கியே வாசிக்க வேண்டியிருக்கும்.
(ஊழல் தொடர்ந்து கசியும்...)
-ராம்கி
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us