சிறப்பு முகாம்களில் அடைப்புச் செய்ய ஆணைபெறும் முறை: ஏப்ரல் 1994-மே 1996 காலகட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையைக் கவனித்து வந்தவரும், பல தடுப்பு ஆணைகளைப் பிறப்பித்தவருமான அரசுச் செயலர் த.பாலகிருஷ்ணன் I.A.S., நீதிபதி சிங்காரவேலு ஆணையத்திடம் கூறியது Q branch C.I.D. பிரிவைச் சேர்ந்தவர்கள், இலங்கைத் தமிழர்/வெளிநாட்டவர்களில் பிரச்சினைக்குரியவர்கள் மற்றும் கலகக்காரர்களை அடையாளம்கண்டு மாநில அரசுக்கு உளவுத் தகவல் அறிக்கைகளை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அரசுச் செயலரால் (பொது நிர்வாகம்), வெளிநாட்டவர் சட்டம், 1946-இன் பிரிவு 3(2)(e)-இன் கீழ் தடுப்பு ஆணை பிறப்பிக்கப்படும். Q branch அறிக்கையைத் தவிர மத்திய, மாநில அரசுகள் எந்த வழிகாட்டுதல்களும், அளவுகோலும் வழங்கவில்லை’என்று ஆணையத்திடம் சாட்சியம் அளித்தார் (அறிக்கை பத்தி 18).
1995-ல் வேலூர் சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் தப்பிச் சென்றபோது, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு DGP-யாக இருந்த V.வைகுந்த் I.P.S எழுதிய An Eye to Indian Policing: Challenge & Response என்ற புத்தகத்தில் சிறப்பு முகாம்களைப் பற்றி கூறுகையில், "வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் இலங்கை அகதிகளைக் கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது உண்மைதான். அதைத் தவிர, சிறப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் LTTE-யின் உறுப்பினர்கள்தான் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர்களை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு முகாம்களில் வைத்திருப்பதற்கு எங்க ளுக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை. மேலும், மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு ஒரு சாதாரண இலங்கைத் தமிழர் யார்? இலங்கைப் போராளி யார்? என்பது குறித்து தீர்மானிப்பதற்கு முறையான விதிமுறைகள்/வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். அவர்கள் கைதிகளோ அல்லது தடுப்புக்காவலில் உள்ளவர்களோ அல்ல. இவர்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதே உண்மை. மத்திய மற்றும் மாநில அரசுகளின் தவறான கொள்கைகளின் விளைவுகளுக்கு காவல்துறை மட்டும் ஏன் பழியை ஏற்கவேண்டும்?'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் கோட்டையிலிருந்து தப்பிக்க நடந்த முயற்சிகள்: 13.01.1991-ல் நடந்த முதலாவது தப்பிக்கும் முயற்சிக்குப் பின், 16.11.1992-ல் 19 போராளிகள் நீண்ட கயிற்றின் உதவியுடன் கோட்டைச்சுவரில் ஏறி தப்பிச் சென்றனர். தப்பி ஓடியவர்களில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். எட்டுப் பேர் பின்னர் சரணடைந்தனர். மீதமுள்ள ஏழு பேரை பிடிக்க முடியவில்லை. இதன்பின் முகாமில் சுற்றுச்சுவரின் உயரம் அதிகரிக்கப்பட்டு முள்கம்பி வேலி, சைரன், ஒலிகுவிக்கும் மின் விளக்குகள், கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டன.
29.10.1993-ல் முகாமிலிருந்த 13 பேர், ஹைதர் மகாலின் தென்மேற்கு மூலையிலிருந்து தப்பிப்பதற்காக 4 அடி ஆழம் வரை சுரங்கம் தோண்டியது, ரகசியத் தகவலின் அடிப்படையில் கண்டுபிடித்து முறியடிக்கப்பட்டது.
28.04.1994-ல் மாலை 5 மணி அளவில், ஹைதர் மகாலின் தரைத்தளத்தில் உள்ள 101-ஆம் அறைக்குப் பின்புறம் சுரங்கம் தோண்டுவதில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட் டது. அப்போதைய வட ஆற்காடு அம்பேத்கர் மாவட் டத்தின் வேலூர் கோட்டையில் இருந்த உயர் பாது காப்பு சிறப்பு முகாமி-ருந்து நான்கு பெண்கள் உட் பட 43 விடுதலைப்புலிகள் 15.08.1995 சுதந்திர தினத் தன்று தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, நீதிபதி (ஓய்வு) சிங்காரவேலன் தலைமையில் விசாரணை ஆணையம் (தமிழக அரசு அரசாணை எண்: 761, நாள்: 19.08.1995) அமைக்கப்பட்டு, 25.02.1997-ல் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டை தப்பிப்பு: காவல்துறையின ரால் ஏன் தினம்தோறும் வருகைப் பதிவு மற்றும் சோதனை செய்யப்படவில்லை? என்று ஆணையம் கோரியதற்கு, இது சிறையல்ல, சிறை விதிகள் சிறப்பு முகாமிற்கு பொருந்தாது’என வேலூர் சரக காவல் துறை DIG V.பாலசந்திரன் I.P.S., பதிலளித்துள்ளார். மேலும் தப்பிப்பதற்கு முன் 12.05.1995-ல்தான், கடைசியாக attendance எடுக்கப்பட்டது. அப்போது திப்பு மகாலில் 77 பேர் இருந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/21/jail1-2025-11-21-10-13-24.jpg)
இந்தச் சுரங்கப்பாதை தப்பிப்பு யோசனையை முதன்முதலில் கூறியவர் முகாமிலிருந்த ரகு. இவர்கள் அடைப்பு செய்யப்பட்டிருந்தது, முதல் மாடியின் 27-வது எண் அறையின் கீழ் பகுதியில் அமைந்துள்ள 84-வது பெரிய அறை. திப்பு மகாலின் மூலையிலிருந் தது. இதற்கடுத்து அறைகள் எதுவும் இல்லாததும், அறையின் அனைத்துக் கதவுகளும் சீல் வைக்கப்பட்டி ருந்ததும், இவர்களுக்கு வசதியாக அமைந்தது. 27-வது அறையின் தரைத் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த கடப்பாக்கல்லைத் திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்து, கீழே உள்ள 84-வது அறைக்கு உள்ளே சென்று வரும் வகையில் வசதியை ஏற்படுத்திக் கொண்டனர். சுரங்கம் தோண்டும் வேலை 21.03.1995-ல் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 16 பேர் சுழற்சி முறையில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். Attendance எடுக்கும் நாட்களில் மட்டும் சுரங்கம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இவ்வாறு இரும்புக் குழாய்கள் மற்றும் கம்பிகள் மூலம் 5 லாரி மணல் மற்றும் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு, 20 அடிக்குக் கீழே தோண் டப்பட்ட 153 அடி நீள சுரங்கம் அமைக்கப் பட்டது. இவ்வழியாக ஊர்ந்து சென்று 50 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட அகழியை நீந்தி, சாலையை அடைய வேண்டியிருந்தது. இதனைப் பயன்படுத்தி 13.05.1995 அன்று இரவு 6 பேர் தப்பிச் சென்றனர். அடுத்து, முகாம் அதிகாரிகள் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதில் முழு கவனத்தை செலுத்தியதாலும், 14.05.1995 அன்று இரவு, மிக கனமழையும், மின்தடையும் ஏற்பட்டு இருந்ததாலும், இதனைப் பயன்படுத்தி 37 பேர் தப்பிச் சென்றனர்.
அகழியை நீந்தத் தெரியாதவர்கள், காற்றடைப்பு தலையணையைப் பயன்படுத்தினர். இந்த அகழி முடிந்து, ரோட்டை அடையும் வரையிலான தூரத் திற்கு 7 அடி நீளமுள்ள கோரைப் புற்கள் வளர்ந்திருந்ததும் வசதியாகிப் போனது. இந்தச் சுரங்கப்பாதை முடியும் இடத்தில் கிருஷ்ணன் என்ற இலங்கை அகதி ஒவ்வொருவருக்கும் ரூ.200/- வீதம் வைத்துக்கொண்டு காத்திருந்தார். தப்பித்த 43 பேரில், எழும்பூர் ரயில் நிலையத்தில் 9 பேரும், மேட்டூர் வனப்பகுதியில் 9 பேரும் பிடிபட்டனர். 2 பேர் சயனைடு விழுங்கி இறந்தனர். மீதமிருந்த 23 பேரும் இலங்கைக்குத் தப்பிச் சென்றதாக உத்தேசிக்கப்பட்டது. எழும்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரிலேயே இந்தத் தப்பிப்பு கோட்டையிலுள்ள அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.
சம்பவ இடத்தை, அப்போதைய சட்டம் ஒழுங்கு DGP வைகுந்த்,I.P.S., மற்றும் ADGP W.I.தேவாரம் I.P.S., மாவட்ட ஆட்சியர் M.P.விஜயகுமார், மாவட்ட கண்காணிப்பாளர் அசுதோஷ் சுக்லா I.P.S ஆகியோர் பார்வையிட்டனர். பின் அசுதோஷ் சுக்லா (பின்னாளில் சிறை DGP-யாக இருந்து ஓய்வுபெற்றவர்) உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோட்டைக்குப் பொறுப்பான வட்டாட்சியர் K.N.கமலக்கண் ணன் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். தப்பிச்சென்று பிடிபட்டவர்களில் K.மாறன், S.ரவி, A.ஆனந்த், S.புஷ்பலதா ஆகியோர் அரசுத்தரப்பு சாட்சிகளாக மாறினர்.
தற்போதைய தமிழகச் சிறைகளில் வெளிநாட்டு சிறைவாசிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டி சிறை உஏட சுற்றறிக்கை (எண்: 34890/CS4/2012, நாள்:05.11.2012) வாயிலாக அனைத்துச் சிறை நட மற்றும் உஒஏ-களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
K.K.ரமேஷ் Vs மத்திய உள்துறைச் செயலர் வழக்கு: மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர், பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டினரை நாடு கடத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி ஏ.டி. மரியா கிளீட் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் 28.06.2025 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், 2022 முதல் மே 25, 2025 வரை 237 வெளிநாட்டினர் அவர்களது நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் கடந்த 2022 முதல், போதைப்பொருள் கடத்தியதாக 31 ஆப்பிரிக்க நாட்டவர்கள் மீது 14 வழக்குகளும், விசா காலாவதியாகி தங்கியிருந்த 188 வெளிநாட்டினர் மீது 66 வழக்குகளும், 280 வெளிநாட்டினர் மீது பிற குற்றங்களுக்காக 65 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு பணியகத்தின்(BOI) கூற்றுப்படி, 2011 முதல் மே 25, 2025 வரை 17,770 வெளிநாட்டினர் விசா காலாவதியாகியும் தமிழகத்தில் தங்கியிருப்பதை அறியமுடிகிறது.
(ஊழல் தொடர்ந்து கசியும்…)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/jail-2025-11-21-10-13-08.jpg)