Advertisment

JAIL FOLLOW-UP - 42 தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!

jail

பிணையக் கைதிகளான பெண் காவலர்கள்!


மிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு  தங்குதடை யின்றி வந்துசென்றனர். மேலும்,  இலங்கையில் நடைபெற்ற போர்களுக்கான பயிற்சியினை LTTE-யினர்  பெறுவதற்காக, தமிழ்நாட்டின் தற்போதைய நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையிலும், சேலம் -கொளத்தூரிலும் இரண்டு இராணுவ முகாம்கள் செயல்பட்டன. விவசாய நிலத்தில் வெளிப்படையாகவே, இந்த இராணுவ முகாம் 4 வருடங்களாகச் செயல்பட்டது. இதில் வே.பிரபாகரன் இராணுவப் பயிற்சியினை மேற்கொண்டார். இந்தப் பயிற்சிக்காகவும், அவர்களது நலனுக்காகவும், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பணமும் ஆதரவும் அளித்ததுடன், தமிழக அரசும் உதவித்தொகையாக கோடிக்கணக்கான பணமும், மானியமும் வழங்கியது.  

Advertisment

பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள்: 25.02.1997-ல் நீதிபதி சிங்காரவேலு ஆணையத்திடம், Q#Branch I.G.. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, “1980-களில் LTTE பிரிவினரால் தமிழ்நாடு விடுதலைப் படை  (TNLA) என்ற தமிழ் தேசியவாத ஆயுதக்குழு ஏற்படுத்தப் பட்டது. இது இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் ஆயுதப் பிரிவாக நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களாக பெருமாள் வாத்தியார், தமிழரசன் ஆகியோர் அறியப்படுகின்றனர்.  இந்த அமைப்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது’என கூறியுள்ளார்.  

Advertisment

உட்பகையால் கொல்லப்பட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்கள்: 1990 காலகட் டங்களில் இல

பிணையக் கைதிகளான பெண் காவலர்கள்!


மிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு  தங்குதடை யின்றி வந்துசென்றனர். மேலும்,  இலங்கையில் நடைபெற்ற போர்களுக்கான பயிற்சியினை LTTE-யினர்  பெறுவதற்காக, தமிழ்நாட்டின் தற்போதைய நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையிலும், சேலம் -கொளத்தூரிலும் இரண்டு இராணுவ முகாம்கள் செயல்பட்டன. விவசாய நிலத்தில் வெளிப்படையாகவே, இந்த இராணுவ முகாம் 4 வருடங்களாகச் செயல்பட்டது. இதில் வே.பிரபாகரன் இராணுவப் பயிற்சியினை மேற்கொண்டார். இந்தப் பயிற்சிக்காகவும், அவர்களது நலனுக்காகவும், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பணமும் ஆதரவும் அளித்ததுடன், தமிழக அரசும் உதவித்தொகையாக கோடிக்கணக்கான பணமும், மானியமும் வழங்கியது.  

Advertisment

பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள்: 25.02.1997-ல் நீதிபதி சிங்காரவேலு ஆணையத்திடம், Q#Branch I.G.. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, “1980-களில் LTTE பிரிவினரால் தமிழ்நாடு விடுதலைப் படை  (TNLA) என்ற தமிழ் தேசியவாத ஆயுதக்குழு ஏற்படுத்தப் பட்டது. இது இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் ஆயுதப் பிரிவாக நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களாக பெருமாள் வாத்தியார், தமிழரசன் ஆகியோர் அறியப்படுகின்றனர்.  இந்த அமைப்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது’என கூறியுள்ளார்.  

Advertisment

உட்பகையால் கொல்லப்பட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்கள்: 1990 காலகட் டங்களில் இலங்கையில் செயல்படும்  தமிழ் அமைப்புகளாக EPRLF, PLOTE, ENDLF, TELO, EPDP மற்றும் LTTE  போன்றவை இருந்தன. இவர்களுக்குள், தலைமை ஏற்பது யார் என்பதும், வேறு பல காரணங்களும் உட்பகையாக இருந்தது. இந்நிலையில் 19.06.1990-ல் EPRLF-பிரிவின் தலைவரான பத்மநாபா உள்ளிட்ட 14 பேரை, பொட்டு அம்மான் தலைமையிலான LTTE பிரிவினர் சென்னை, கோடம்பாக்கத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர். இதில் மேலும் 21 பேர் படுகாய மடைந்தனர். இந்த வழக்கிலும்,  இதே கால கட்டத்தில் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களான அமிர்தலிங்கம், பிரேமதாசா, மத்தாயா, உமா மகேஸ்வரன், சபாரத்தினம் ஆகியோரின் கொலை வழக்கில்  தொடர்புடையவர்களையும் சந்தேகத்தின் பேரில்,  வேலூர் கோட்டையில் இருந்த காவலர் பயிற்சிப் பள்ளியை மூடிவிட்டு, 14.12.1990-ல் சிறப்பு முகாமாக மாற்றிவிட்டு   அடைப்புச் செய்தனர்.   

வேலூர் கோட்டை சிறப்பு முகாம்: இக்கோட்டையில் திப்பு மஹால் மற்றும் ஹைதர் மஹால் ஆகிய இரண்டு மஹால்கள் இருந்தன. இவை இரண்டுக்கும் இடையே ஒரேயொரு பழமையான சுவர் மட்டுமே தடுப்பாக இருந்தது. ஹைதர் மஹாலில் 300-க்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளுடன் அடைப்பு செய்யப்பட்டிருந்தனர். திப்பு மஹாலில் திருமணம் ஆகாத/குடும்பம் இல்லாத 160 இளைஞர்கள் அடைப்புச் செய்யப்பட்டிருந்தனர். இதில் பெண்கள் மட்டும் வெளியில் சென்றுவர அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி அனைத்து ஆண்களும், மருத்துவ சிகிச்சைக்காகவும்,  நீதிமன்றம் சென்று வரவும்,  கடவுச்சீட்டு தொடர்பான விஷயங்களுக்கு  மட்டுமே,  காவலில் வெளியே அழைத்துச்  செல்லப்பட்டனர்.

ஏமாற்றி அடைக்கப்பட்ட அப்பாவி அகதிகள்: தமிழகத்தில் செயல்பட்ட சிறப்பு முகாம்கள் குறித்து Concentration Camps of Tamil Nadu: The so#called Special Camps’ என்ற  புத்தகத்தில் தோழர் பாலன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "சிறப்பு முகாம்களில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போராளிகள் அல்ல. மாறாக, தமிழ்நாட்டில் உள்ள சாதாரண அகதி முகாம்களில் வசித்துவந்த அப்பாவித் தமிழர்கள். வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வழங்குவதாக உறுதியளித்து, ஆர்ப்பாட்டமில்லாமல் இச்சிறப்பு முகாம்களில் ஏமாற்றி அடைக்கப்பட்டனர். அங்கு அடைக்கப் பட்ட பிறகு தான், அரசு தங்களை ஏமாற்றி விட்டது என்பதை அவர்கள் உணர்ந்தனர்' என கூறியுள்ளார்.   

தேசிய பாதுகாப்புச் சட்டமும் தடுப்புக் காவலும்: அடைப்பு செய்யப்பட்டவர்கள், தங்களை விடுதலை செய்யக்கோரி பல நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால், 13.01.1991-ல் இலங்கைத் தமிழர்களில் சுமார் 160 பேர்,  பிற்பகல் 3 மணியளவில் ஹைதர் மஹாலின் கதவுகள், ஜன்னல் களுக்குத் தீவைக்கத் தொடங்கினர். தடுக்கவந்த காவலர்கள் மீது கற்களை எறிந்தனர். மேலும், ஏ.கண்ணப்பன் என்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கி, அவர்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றனர். மேலும்,  இரண்டு பெண் காவலர்களை பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு கதவுகளைத் திறந்துவிடுமாறு மிரட்டினர். உதவி கலெக்டர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். இதில் ஒரு இலங்கைத் தமிழர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்(NSA)  கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.        

உயர் நீதிமன்றத்தில் வழக்கு:  மேற்கண்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, வெளிநாட்டவரை சிறப்பு முகாமில் வைத்திருப்பது, International Covenant on Civil and Political Rights, 1966-ன் பிரிவு 9 & 12 மற்றும் Universal Declaration of Human Rights, 1948-ன் பிரிவு 13-க்கு எதிரானது என்றும், இவ்வாறு அடைத்துவைப்பது தடுப்புக் காவல் எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில்  Kalavathy Vs State of Tamil Nadu and Ors (W.P.No.15044/91) என்ற வழக்கில் வாதிடப்பட்டது. அதற்கு சென்னை உயர் நீதிமன் றம்,  இது தடுப்புக் காவல் அல்ல என்றும்,  மாநில அரசிற்கு வெளிநாட்டவரின் நடமாட்டத்தைத் தடுத்துவைக்க அதிகாரம் உள்ளது என்றும், அரசியலமைப்பின் பிரிவு 22(4) மற்றும் 141,  இந்த முகாமில் உள்ள வெளிநாட்டவருக்குப் பொருந்தாது என்றும், 28.04.1992-ல் நீதிபதிகள் அருணாச்சலம் மற்றும் பிரதாப்சிங் தீர்ப்பு வழங்கினர்.  இந்த உத்தரவை மேல்முறையீட்டிலும்   (SLP No.1577 & 1578/1992) உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

தடை செய்யப்பட்ட இயக்கம்: 21.05.1991-ல் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்பு, தமிழக அரசு 10.03.1992 & 27.03.1992 ஆகிய தேதிகளில், LTTE இயக்கத்தைத் தடை செய்யவேண்டி, மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது. அதன்படி,  Unlawful Activities (Prevention) Act, 1967 என்ற சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. 26.12.1992-ல் இது தமிழக அரசிதழில் வெளி யிடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. 

சிறப்பு முகாம்களில் பாலியல் துன்புறுத்தல்: தமிழகம் முழுவதும் செயல்பட்ட சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பெண்கள், பாலியல் ரீதியாக பல துன்பங்களை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் அனுபவித்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.  உதாரணமாக,  "ஈழத்தின் பாரதி' என்று அழைக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த கந்தையா என்ற 80 வயது முதியவர்,  கரூர் சிறப்பு முகாமில் கைதியாக இருந்தார். இந்த முகாமில் இருந்த ஒரு இலங்கைப் பெண் அகதி, தாசில்தாரால் ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மறுநாள் கந்தையா, "தேனிலவு எப்படி இருந்தது?' என்று தாசில்தாரிடம் கேட்டார். இது தாசில்தாரைக் கோபப்படுத்தியது, பின்னர் அவர், கியூ பிரிவினரால் LTTE உறுப்பினர் என்று குற்றம்சாட்டப்பட்டு வேலூரில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்பப் பட்டார்.

1993-ல் துறையூரில் இருந்த சிறப்பு முகாமில் "ரீட்டா' என்ற இளம்பெண் அடைக்கப்பட்டார். மருத்துவச் சிகிச்சைக்காக எனக்கூறி, இரவில் அருகிலுள்ள "லாட்ஜ்களுக்கு' அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுடன் பாலியல் உறவுகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக முறையிட்டும், 17.10.1994-ல் விசாரணைக்காகச் சென்ற சிவா என்கிற முகாம் அகதி கரூர் நீதிமன்றத்தில் முறையிட்டும்கூட,  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

இந்த நேரத்தில்,  PLOT அமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் அதே முகாமில் இருந்தனர். ரீட்டா காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறலுக்கு ஒத்துழைப்பதாக அவர்கள் நம்பினர். இதை ஒரு அவமானமாகக் கருதினர். இறுதியில், அவர்கள் ரீட்டாவுடன் சேர்ந்து விடுவிக்கப்பட்டபோது, தங்களுடன் அழைத்துச்சென்று, இலங்கை வவுனியாவில் வைத்து  அவரைக்  கொலை செய்தனர்.

(ஊழல் தொடர்ந்து கசியும்…)

nkn191125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe