சிறப்பு முகாம்களில் வெளிநாட்டு கைதிகள்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 258(1), The Foreigners Act, 1946, பிரிவு 3(2)(e), Foreigners order 1948, பிரிவு 11(2), இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கைகள் S.O.No.590 & 591 Dated:19.04.1958 மற்றும் G.S.R.No.950 dated:12.08.1960-ன்படி, இந்தியாவில் உள்ள மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களுக்கு சிறப்பு/தடுப்பு முகாம் சிறைகளை ஏற்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Prof. Bhim Singh Vs. The Union of India & others (W.P.(Crl.) No. 310 of 2005) என்ற வழக்கில், வெளிநாட்டினரைத் தடுத்து வைத்துள்ள சிறப்பு/தடுப்பு முகாம் சிறைகளில் உணவு, மின்சாரம், தண்ணீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைச் சிறப்பாக வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 28.02.2012-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் செயல்படுத்தவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் 07.03.2012-ல் அறிவுறுத்தியது.
தற்போது மேற்கண்ட அனைத்து ஆணைகள் மற்றும் சட்டங்கள் நீக்கப்பட்டு, The Immigration and Foreigners Act, Order & rules 2025 ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப் பட்டு 01.09.2025 முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகச் சிறைகளுக்கும் சிறப்பு முகாம் சிறைகளுக்கும் உள்ள தொடர்பு: பொதுவாக சிறைவிதி: 5/2024-ன்படி, வெளிநாட்டவர் தமிழகத்தில் ஏதேனும் குற்றம் புரிந்துவிடுகிறார் எனில், காவல்துறையால் கைது செய்யப்பட்டு, விசாரணை சிறைவாசியாக சென்னை-II சிறையில் அடைக்கப்படுவார். அதன்பிறகு, அவருக்கு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் வெளியே வந்ததும் அவருடைய நாட்டுக்குத் தப்பித்துச் சென்று விடக்கூடாது என்பதற்காக, ஒரு இடத்தில் தங்கவைக்கவேண்டும் அல்லவா? அந்த இடம்தான் சிறப்பு முகாம் சிறை. அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தண்டனைச் சிறைவாசியாக சென்னை-I சிறையில் அடைக்கப்படுவார். சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின், அவர் வேறு ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாரா என்பது உளவுத்துறைகளின் மூலம் உறுதி செய்யப்படும்வரை இந்த முகாம் சிறைகளில் தங்கவைக்கப்படுவார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/jail1-2025-11-10-18-10-29.jpg)
தமிழக சிறை விதிகள்: மேலும் சிறை விதி எண்:532/1983, 531/2024-ன்படி, வெளிநாட்டவர் தமிழகச் சிறையில் விசாரணை சிறைவாசியாக அல்லது தண்டனைச் சிறைவாசியாக அனுமதிக்கப்பட்டாலோ, அல்லது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலோ, அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ, அந்த நாட்டின் Embassy-க்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், சிறைக் கண்காணிப்பாளர் தகவல் தெரிவிக்கவேண்டியது கட்டாயம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதங்கள் எண். 25019/3/97#F.III, dated 02.07.1998 மற்றும் F.14011/55/09 -F.VI dated: 23.11.2009-ன்படி சிறையில் தண்டனை முடிந்தவர்கள் மற்றும் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களை, அவர்களின் சொந்த நாட்டின் குடியுரிமையை உறுதிப்படுத்தி நாடு கடத்தப்படும்வரை, அந்த வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்த, மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களில் போதுமான அளவு தடுப்பு மையங்கள்/முகாம்களை ஏற்படுத்தி, அங்கு தடுத்து வைத்திருக்கவேண்டும்.
வெளிநாட்டு சிறைவாசிகளுக்கான விதிகள்: சென்னை II சிறையில் விசாரணை சிறைவாசியாக உள்ள எட்வின் கிங்ஸ்லி என்ற நைஜீரியா நாட்டு சிறைவாசி, சென்னை II சிறையில் வெளிநாட்டு சிறைவாசிகளுக்கு மருத்துவ வசதி, சிறப்பு உணவு வழங்கவேண்டியும், இதர காரணங்களுக்காகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் WP No. 1034 of 2025 என்ற வழக்கினைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில், தமிழகச் சிறைகளில் உள்ள வெளிநாட்டு சிறைவாசிகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது குறித்து உரிய விதிகளை வகுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் ந.ங.சுப்பிரமணியம் மற்றும் M.ஜோதிராமன் ஆகியோர் 27.01.2025-ல் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் சிறப்பு முகாம் சிறைகள்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, 1991-ல் செங்கல்பட்டு கிளைச் சிறையை சிறப்பு முகாம் சிறையாக மாற்றி முதலில் அங்கு தங்கவைத்தனர். அதன்பின், ஜனவரி 1993-ல் பூந்தமல்லி கிளைச் சிறையை சிறப்பு முகாம் சிறையாக மாற்றி அங்கு அனுப்பினர். பூந்தமல்லி சிறை வளாகத்தில், வெடிகுண்டு மற்றும் தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளதால், வழக்கு விசாரணைக்கு ஏதுவாக அங்கு அடைப்புச் செய்தனர்.
இந்நிலையில், உளவுத்துறை ADGP அறிக்கை எண்: C.5(A)No.16391/X/2010,C Dated: 03.12.2010 & 07.01.2011 மற்றும் சிறை ADGP அறிக்கை எண்.46997/CS4/2010, Dated:22.11.2010 & 19.02.2011 ஆகிய அறிக்கைகளின்படி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை G.O.(2D).No.24, Home (Prison #IV) Department, Dated:26.07.2011-ன்படி செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறைகள் ஜூன் 2013-ல் தமிழக சிறைத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டன. மேலும், திருச்சி மத்திய சிறை வளாகத்திலிருந்த கிளைச் சிறைக் கட்டிடத்தை பொதுப்பணித்துறை மூலம் மறுசீரமைப்பு செய்து, சிறப்பு முகாம் சிறையாக மாற்றினார்கள். அந்த இரு சிறைகளிலும் அடைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிறைவாசிகள், இந்த திருச்சி முகாம் சிறைக்கு மாற்றப்பட்டனர். திருச்சி முகாம் சிறையில் 80 சத வீதத்தினர் இலங்கையைச் சேர்ந்த சிறைவாசிகளே.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/jail2-2025-11-10-18-10-41.jpg)
அதன்பின் செங்கல்பட்டு சிறை, மாவட்டச் சிறை யாக தரம் உயர்த்தப் பட்டது. பூந்தமல்லி சிறையும் உயர் பாதுகாப்பு சிறை யாக மாற்றப்பட்டு, தமிழகத்திலுள்ள வெடிகுண்டு வழக்குகள் மற்றும் தீவிரவாத வழக்குகளுடன் தொடர்புடைய சிறை வாசிகள் இங்கு தங்க வைக்கப்படுகின்றனர்.
திருவண்ணாமலை யில் உள்ள செய்யாறில் புதிய சிறப்பு முகாம் சிறை மார்ச் 2014-ல் திறக்கப்பட்டு இலங்கை சிறைவாசிகள் தங்க வைக்கப்பட்டனர். தற் போது சேலம் ஆத்தூர் மாவட்டச் சிறை, சிறப்பு முகாம் சிறையாக மாற் றப்பட்டு, பங்களா தேசத்தைச் சேர்ந்த வர்கள் தங்கவைக் கப்பட்டுள்ளனர்.
சிறப்பு தடுப்பு மையத்திற்கு கையேடு கள்: In Re #Inhuman Conditions in 1382 Prisons (I.A. 105821/2018 of W.P.(Civil) No.406/2013) என்ற வழக்கில் 12.09.2018 மற்றும் 20.09.2018 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, சிறப்பு முகாம் சிறை/தடுப்பு மையங்களுக்கு எனப் புதிதாக ஒரு கையேடு மத்திய உள்துறை அமைச்சகத்தால் உரு வாக்கப்பட்டு, 09.1.2019 அன்று மாநிலங்கள்/யூனி யன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இக் கையேட்டில், சிறப்பு முகாம் சிறைகளின் அன்றாட நிர்வாகம் சிறப்பாக செயல்பட விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. இதில், தடுப்பு மையத்தில் உள்ள குழந்தைகளை அருகிலுள்ள உள்ளூர் பள்ளிகளில் சேர்த்து கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு மையம்/சிறப்பு முகாம் சிறை, அசாமின் கோல்பாரா மாவட்டத்தின் மத்தியாவில் 27.01.2023-ல் திறக்கப்பட்ட ““The 25 Bigha Centre ஆகும். இந்தத் தடுப்பு மையத்தில் 3000 முதல் 3,500 பேர் வரை தங்கவைக்க முடியும்.
(ஊழல் தொடர்ந்து கசியும்…)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/jail3box-2025-11-10-18-10-57.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/jail-2025-11-10-18-10-16.jpg)