Advertisment

JAIL FOLLOW UP  -39 தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!

jail

பார்ஸ்டல் பள்ளி திருத்தச் சட்டம், 1994-ன்படி, முதன்மைச் சட்டத்தில் பிரிவு 8ஆ சேர்க்கப்பட்டது. இதன்படி பார்ஸ்டல் பள்ளியில் ஏற்கனவே தடுப்புக்காவலில் உள்ள ஒரு இளம்பருவக் குற்ற வாளி, இத்தடுப்புக்காவலுக்கு முன்னர் செய்யப் பட்ட வேறொரு குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால்,  அடுத்தடுத்த தடுப்புக்காவல் தண்டனையானது முந்தைய தடுப் புக்காவல் தண்டனையுடன் சேர்த்து ஒரே நேரத்தில் (Run Concurrently)  அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. Run consecutively என்றால் ஒன்றன்பின் ஒன்றாக தண்டனை அனுபவிக்க வேண் டும் என்று அர்த்தம். பார்ஸ்டல் பள்ளிகளில் அடுத்தடுத்த தொடர்ச்சியான  (consecutive) தண்டனைகள் இல்லை.   

Advertisment

ஒருங்கிணைவாக  (Concurrently) என்பதற்கு உதா ரணமாக 18 - 21 வயதுள்ள இளம்பருவத்தினர் 5 கொலை செய்துள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். இதில் முதல் வழக்கில் தண்டனை பெற்று பார்ஸ்டல் பள்ளியில் 23 வயது வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தர விடப்பட்டுள்ளது எனில், அதே 21 வயதுக்குள் மற்ற வழக்குகளுக்கும் தண்டனை விதித்தால்,  அதே 23 வயதில் வெளியே வந்துவிடுவார். அனைத்து குற்ற வழக்குகளுக்குமான தண்டனை யை, ஏற்கனவே அனுபவித்துவரும் தண்டனையுடன்  சேர்த்து ஒரே தண்டனையாக அனுபவிப்பது.      

Advertisment

கி

கிளைச்சிறைகள் பார்ஸ்டல் பள்ளிகளாக மாற்றம்: பொதுவாக  18-21 வயதுள்ள தவறு செய் யும் இளைஞர்கள்,  வழக்கு  விசாரணையின்போது மத்திய/மாவட்ட/கிளைச் சிறைகளில் வைக்கப்படு கின்றனர்.  தண்டனை வழங்கினால் மட்டுமே  பார்ஸ்டல் பள்ளியில்  தங்கவைக்கப்படுகின்றனர். இவ்வாறு இளம்பருவக் குற்றவாளிகள், தங்களது வழக்கின் விசாரணை காலத்தில் வழக்கமான சிறைகளில் உள்ள மற்ற கைதிகளுடன் ஒன்றாகக் கலப்பதற்கு அனுமதிக்கப்பட்டால், சீர்திருத்தப் பட்டவர்களாக மாறுவதற்குப் பதிலாக கடுமை யான குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலையே உருவாகும். அதனால்,  அனைத்து இளம்பருவக் குற்றவாளிகளும், வழக்கு விசாரணைக் காலத்தில்  பார்ஸ்டல் பள்ளிகளில் மட்டுமே ரிமான்ட் காவலில் வைக்கப்படவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை டிவிஷன் பெஞ்சில் நடந்த (சண்முகநாதன் Vs தமிழக அரசு W.P.(MD).No.4674/2006) வழக்கில் நீதிபதி F.M.  இப்ராஹிம் கலிஃபுல்லா மற்றும் K.வெங்கடராமன் ஆகியோர் 03.06.2006-ல் உத்தரவிட்டனர்.  

jail1

அதன்படி சிறை DGP-யின் அலுவலகக் குறிப்பாணை எண்.19436/PW.1/2002 நாள்: 11.10.2007-ன்படி அனைத்து இளம் குற்றவாளிகளை யும் மத்திய சிறைகளில் இருந்து பார்ஸ்டல் பள்ளிக்கு மாற்றவேண்டுமென்று அனைத்து சிறைக் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. 

அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து இளம்பருவ ரிமான்ட் கைதிகளும் புதுக்கோட்டையில் உள்ள ஒரேயொரு பார்ஸ்டல் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அதனால், காவல்துறையினருக்கு அலைச்சலும், புதுக் கோட்டை பார்ஸ்டல் பள்ளியில் இடநெருக்கடியும் உண்டானது. இப்பிரச்சினையைத் தீர்க்கும்விதமாக, மேற்கண்ட நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள 10 கிளைச்சிறைகளைத் தேர்வுசெய்து, பார்ஸ்டல் பள்ளிகளாக அறிவிப்பதற்காக, சிறை DGP தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் (எண்:62042/Prison#IV/2006#14, நாள்:11.8.2008) எழுதினார். இதனை ஏற்றுக்கொண்டு அரசாணை (G.O.(D).No.922, Home (Prison#IV) department, நாள்:12.08.2008) பிறப்பித்தது தமிழக அரசு. அதன்படி,  நாங்குநேரி, சைதாப்பேட்டை, குடியாத்தம், பண்ருட்டி, செஞ்சி, பரமத்தி, பொள்ளாச்சி, மேலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 10 கிளைச் சிறைகளும், தண்டனைக்கு முந்தைய இளம்பருவக் கைதிகளை அடைப்பு செய்வதற்கான பார்ஸ்டல் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இந்த  கிளைச்சிறை பார்ஸ்டல் பள்ளிகளில்,  அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள இளம்பருவக் குற்றவாளிகள்  தங்க வைக்கப் பட்டனர். 

N.கௌதமன் அ பாபு Vs தமிழக அரசு என்ற வழக்கில் (வ.எண்:1441/2007)  தலைமை நீதிபதி P.N.பிரகாஷ், நீதிபதிகள் A.செல்வம், M.சத்திய நாராயணன், B.ராஜேந்திரன், R.மாலா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு,   பார்ஸ்டல் பள்ளிகளின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து   29.08.2016-ல் வழங்கிய தீர்ப்பில்  மேற்கண்ட உத்தரவையும், அரசாணையையும் ரத்து செய்ததுடன், பார்ஸ்டல் பள்ளிக்கு திறமையான ஆசிரியர்களும், பயிற்றுநர்களும், பெரிய உள்கட்டமைப்பு வசதிகளும் தேவை. அவ்வாறு இருந்தால்தான் இளம் குற்றவாளிகள் விடுதலை யான பிறகு அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பெறமுடியும். ஆனால்,  அத்தகைய வசதிகள் இல்லாத கிளைச் சிறையில் இளம்பருவக் குற்ற வாளிகளை விசாரணைக் காலத்தில் தங்கவைப்பது,  பார்ஸ்டல் பள்ளிகளின் நோக்கத்தைச் சிதைப் பதைப் போன்றதாகும்’ எனக் காரணங்களையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.    

பார்ஸ்டல் பள்ளிகள் சட்டம் ரத்து:   உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி கொலைவழக்கில் கைது செய்யப்படும் இளம் பருவக் குற்றவாளிகளுக்கு எக்காரணம் கொண்டும் ஆயுள் தண்டனை விதிக்கமுடியாது. மேலும்,  எத்தனை கொலை செய்தாலும் பிரிவு 8ஆ-ன்படி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தண்டனை அனுபவிக்கும் வசதி இச்சட்டத்தில்  உள்ளது. அதனால்,  18-21 வயதுள்ள இளைஞர் களைப் பயன்படுத்தி பழிக்குப்பழி கொலைகள், கூலிப்படை கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற் றங்கள் நடத்தப்பட்டன.  இச்சட்டம் இவ்வாறு தவ றாகப் பயன்படுத்தப் படுவதை கவனத்தில் எடுத்துக்கொண்ட சென்னை  உயர் நீதிமன் றம் (வழக்கு எண்: 1441/2007), பார்ஸ்டல் பள்ளிகள் சட்டத்தை 29.08.2016-ல் நீக்க உத்தரவிட்டது. இதன் மூலம்,  குற்றத்தின் தன்மையைப் பொருட்படுத் தாமல் 23 வயதை எட்டியவுடன்  குற்றவாளிகளை விடுவிக்க அனுமதித்து,  இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்திய பல நிகழ்வுகளுக்கு முடிவுகட்டப் பட்டது.  அதே நேரத்தில்,  "பார்ஸ்டல் பள்ளிகள் மூடப்படுவதால் முதல்முறை குற்றவாளிகளைச் சீர்திருத்தும் வாய்ப்பினை இழப்பதால், சமூகம் பெரும் சுமையை எதிர்கொள்ளும்'' என்று குற்றவியல் வல்லுநர்கள் கூறியிருப்பது  கவனிக்கத்தக்கது.   

jail2

மேலும்,  சிறார் நீதிச் சட்டம் 2015-ல் 16 வயதுக்கு மேல் உள்ள சிறார் கொடூரமான குற்றம் செய்தால்,  அவர் வயது வந்தவரைப் போல்  நடத்தப்படவேண்டும் என்று கூறு கிறது. இதற்கு எதிரான பிரிவுகளுடன் பார்ஸ் டல் பள்ளிகள் சட்டம் இருப்பதாலும், இச் சட்டத்தை  நீக்க உத்தரவிடப்பட்டது. இந்த நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசிதழ் எண்:33, நாள்:22.01.2025, Regd.No.TN/CCN/467/2012#14,R.Dis.No.197/2009-ன்படி தமிழ்நாடு பார்ஸ்டல் பள்ளிகள் சட்டம், 1925 நீக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து சிறை உஏட குறிப்பாணை எண்: 34368/PW.1/2016,   நாள்:13.02.2025-ன் படி புதுக்கோட்டையில் செயல்பட்ட  பார்ஸ்டல் பள்ளி மூடப்பட்டு மாவட்டச் சிறையுடன் இணைக்கப் பட்டது.

(ஊழல் தொடர்ந்து கசியும்)

jail3

nkn081125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe