உலகம் முழுவதும் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளிகள், குற்றம் செய்த குழந்தைகளுக்கு மட்டுமல்லாது வறுமையினால் படிக்க இயலாத குழந்தைகளையும் படிக்க வைப்பதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
பொதுவான கண்ணோட்டத்தில் சீர்திருத்தப் பள்ளிகளில் படிக்கின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையே?’என்ற கேள்வி பலருக்கும் எழும். அதற்கான பதிலாக அழியாப் புகழ்பெற்ற அற்புதக் கலைஞன் ஒருவர் இருக்கிறார். சிரிக்க வைத்து உலகைக் கவர்ந்த சிந்தனை நடிகரான சார்லி சாப்ளின், லண்டனில் உள்ள The Central London District School -Hanwell என்ற சீர்திருத்தப்பள்ளியில் படித்தவர் என்பது வரலாற்றுப் பதிவாகும்.
பார்ஸ்டல் பள்ளியின் தோற்றம்: 1895-ல் இங்கிலாந்தில், Herbert Gladstoneன் சிறைச்சாலை கமிட்டி, வயதுவந்த குற்றவாளிகளிடமிருந்து இளைஞர்களைப் பிரித்து அடைப்பு செய்யப் பரிந்துரை செய்தது. அதன்படி Sir Alexander Patterson, 1902-ல் முதன்முதலில் தர்ஸ்ரீட்ங்ள்ற்ங்ழ் நகரத்திலுள்ள பார்ஸ்டல் என்ற கிராமத்தில் 15-21 வயதுள்ள, குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறார்களுக்காக ஒரு பள்ளியை நிறுவினார். இதுபோன்ற பார்ஸ்டல் பள்ளிகளின் வெற்றியைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் குற்றத் தடுப்புச் சட்டம் -1908-ன் மூலம் முறைப்படுத்தி, இங்கிலாந்து முழுவதும் செயல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் பார்ஸ்டல் பள்ளிகள்: பிரிட்டிஷ் இந்தியாவில், இந்திய அரசு சட்டம்-1919 மற்றும் மெட்ராஸ் குழந்தைகள் சட்டம்-1920 ஆகியவற்றை அடிப் படையாகக்கொண்டு, மெட்ராஸ் மாகாணத்தில் பார்ஸ்டல் பள்ளிகள் சட்டம்-1925 உருவாக்கப்பட்டு, 20.07.1926-ல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் (1926), வங்காளம், மத்தியப் பிரதேசம் (1928) மற்றும் மும்பையில் (1929) இச்சட்டம் இயற்றப்பட்டது. மேலும் G.O.Ms.No.4098, Home, Fort St. George, நாள்: 25.08.1938-ன்படி மெட்ராஸ் பார்ஸ்டல் பள்ளி விதிகள், 1938 உருவாக்கப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/jail1-2025-11-04-12-24-46.jpg)
பார்ஸ்டல் பள்ளிகள், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 15(3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தைகளின் சீர்திருத்தம் மற்றும் நல்வாழ்வினை உறுதி செய்வதற்காகச் செயல்படு கின்றன. National Crime Records Bureau (NCRB)-ன் இந்திய சிறைகளின் புள்ளிவிவரம் டிசம்பர், 2022-ன்படி இந்தியாவில் தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டும் தலா ஒரு பார்ஸ்டல் பள்ளி வீதம் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில் பெண்களுக்கான பார்ஸ்டல் பள்ளிகள் கிடையாது. அது தேவைப்படவும் இல்லை.
தமிழகத்தில் பார்ஸ்டல் பள்ளிகள்: 1925-ல் சென்னை சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த லெப்டினன்ட் கர்னல் J.P.கேமரூன், இளம் குற்றவாளியின் சீர்திருத்தத்தை நோக்கமாகக்கொண்டு தமிழகத்தில் முதன்முதலில் பார்ஸ்டல் பள்ளி தஞ்சாவூரில் தொடங்கப் பட்டுள்ளதாகக் கூறினார். இச்சட்டம் 16 முதல் 21 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்காக உருவாக்கப்பட்டது. இப்பள்ளிகள் 1933 வரையிலும் சட்ட (பொது) துறையாலும், பின்னர் உள்துறையாலும் நிர்வகிக்கப்பட்டன. அதன்பிறகுதான் சிறைத்துறைக்கு மாற்றப்பட்டு, சிறை ஐ.ஜி.யின் கட்டுப் பாட்டுக்குக் கீழ் வந்தது. இது சிறைத்துறையின் கீழ் வந்தாலும் “பார்ஸ்டல் பள்ளி” என்றே அழைக்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் உள்ள தற்போதைய மத்திய சிறை, 1880-ல் மாவட்டச் சிறையாகக் கட்டப்பட்டது. அதன்பின் 1929-ல், பார்ஸ்டல் பள்ளியாக மாற்றப்பட்டது. 1935-ல் பார்ஸ்டல் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து வெளியிடப்பட்ட அரசாணை G.O.No.1923, Home Dept, Date:6/6/1935-ன்படி பாளையங்கோட்டை மற்றும் தஞ்சையில் மொத்தம் 663 கைதிகள் வரை அடைக்கப்பட்டிருந்தனர். அதன்பின் பாளையங்கோட்டை பார்ஸ்டல் பள்ளியில் மிகக் குறைவாகவே சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்டதால், 01.04.1968 முதல் பாளையங்கோட்டை மத்திய சிறையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் ஒரே ஒரு பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டையில் மட்டும் செயல்பட்டது. G.O. Ms. No 30 Home (Prison # IV) Dept. dated 10.01.2006-ன்படி புதுக்கோட்டையில் செயல்பட்ட பார்ஸ்டல் பள்ளியுடன், ஒரு மாவட்டச் சிறையும் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு பார்ஸ்டல் பள்ளிச் சட்டம் 1925-ன் பிரிவு 8(1)-ன் கீழ் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட 18-21 வயதுக்குட்பட்ட இளம்பருவக் குற்றவாளிகள் இங்கு அடைக்கப்பட்டனர். அதிகபட்சமாக 23 வயதுவரை உள்ளவர்களை இங்கு வைத்திருக்கலாம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/jail2-2025-11-04-12-25-01.jpg)
பார்ஸ்டல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் விதம்: பார்ஸ்டல் பள்ளிகளில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கு எந்தத் தண்டனையும் விதிக்கப்படுவ தில்லை. மாறாக, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள்வரை தடுப்புக்காவலில்(Detention)வைத்து, ஒழுக்கம் குறித்த அறி வுரைகள் வழங்குவது, தொழில் சார்ந்த பயிற்சி மட்டுமே அளிக்கப் படுகிறது. மேலும், இந்தத் தடுப்புக்காவல் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன், நீதிமன்றம் நன்னடத்தை அதிகாரியிடமிருந்து இளம் குற்றவாளியின் குணாதிசயம், உடல்நிலை, மனநிலை மற்றும் குற்றம் நடந்த சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தும். தமிழ்நாடு பார்ஸ்டல் பள்ளிகள் சட்டத்தின்படி, இளம் குற்றவாளி, 18 வயது நிரம்பிய நபராகவும், 21 வயதுக்கு முன்பே குற்றம் செய்து, தண்டனையும் பெற்றிருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் பார்ஸ் டல் பள்ளிகள் மற்றும் சிறைச்சாலைகள்: வல்லபபுரம் ரவி vs ஆந்திரப் பிரதேச அரசு (14.09.1984) மற்றும் C.ஏழுமலை vs தமிழ்நாடு அரசு (26.10.1984) ஆகிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம், ‘பார்ஸ்டல் பள்ளியில் சேர்க்கப்பட்ட இளம்பருவக் கைதிக்கு அதிக வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டால், 23 வயது நிறைவடைந்த பிறகு, மீதமுள்ள சிறைத்தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்காக, வழக்கமான சிறைக்கு மாற்றக்கூடாது’எனக் கூறியுள்ளது.
இதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு, G.O.Ms.No.1094, Home (Prison#IV) Department, Dated: 06.05.1987--ன்படி தமிழ்நாடு பார்ஸ்டல் பள்ளிச் சட்டம், 1925-ன் பிரிவு 10-ன் விதிமுறைகளின்படி, மத்திய சிறையிலிருந்து பார்ஸ்டல் பள்ளிக்கு மாற்றப்படும் இளம் பருவக் குற்றவாளிகள், அவர்கள் 23 வயதை அடைந்த தேதியில் கண்டிப்பாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் மீதமுள்ள சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக மத்திய சிறைக்கு மாற்றக் கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனைச் சிறை DGP, சிறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கைகள் எண்: 19436/PW.1/2002, Dated:22.04.2002 மற்றும் 44924/PW.1/07, Dated: 12.10.2007 ஆகியவற்றின் மூலம் மீண்டும் நினைவுபடுத்தினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/jail3-2025-11-04-12-26-03.jpg)
ராமசுவாமி யள் தமிழக அரசு (04.02.2000) என்ற வழக்கில், 21 வயதுக்குக் கீழுள்ள இளம்பருவக் குற்றவாளிக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியது செல்லாது எனக் கூறி ரத்து செய்தது. மேலும், செந்தில் யள் தமிழக அரசு (2012) என்ற வழக்கிலும், பார்ஸ்டல் பள்ளிச் சட்டம், 1925-ன் பிரிவு 8-ன்படி, 21 வயது நிரம்பாத எந்த ஒரு இளம்பருவ குற்றவாளிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
(ஊழல் தொடர்ந்து கசியும்)
_____________
தனியார் சிறைகள் (Private Prisons)
சிறைகள் அரசாங்கத்தால் நடத்தப்படுவதற்குப் பதிலாக ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும். உதாரணமாக, ஒரு நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் (Contract) போட்டு, அதன்படி தண்டனைக் கைதிகளை அந்நிறு வனத்திடம் அனுப்பி தங்கவைக்கும். மேலும், அந்நிறுவனத்தின் கீழ் செயல் படும் தொழிற்சாலைகளில் பணிபுரியவைத்து, அதற்கான ஊதியத்தையும் தரும். அரசிற்கும் அதில் பங்கு வழங்கப்படும். சில நாடுகளில் நிறுவனம் வைத்திருக் கும் கைதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து ஒரு கட்டணத்தையும் பெறுகிறது.
1983-ல் உலகின் முதல் தனியார் சிறை (Corrections Corporation of America #now Core Civic) நிறுவனமும், 1984-ல் இரண்டாவது (Wackenhut Corrections Corporation (WCC) நிறுவனமும் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, கிரீஸ், ஜமைக்கா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் மஃ ஆகிய நாடுகளிலும் தனியார் சிறைகள் செயல்படுகின்றன. இந்தத் தனியார் சிறைகளால், அரசாங்கத்தால் சிறைவாசிகளுக்காகச் செலவிடப்படும் உணவு, மருத்துவம், சிறைக் காவலர்களுக்கான சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கான பணம் மிச்சமாகிறது. மேலும், சிறைகளை சிறப்பாக நிர்வகிப்பது குறித்த புதிய யோசனைகள் செயல்படுத்தப்படும். சிறையில் கூட்ட நெரிசலும் குறையும்.
Gautam Navlakha Vs National Investigation Agency என்ற வழக்கில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியைக்கொண்டு தனியார் சிறைகளை இந்தியாவில் அமைப்பது குறித்து, மத்திய உள்துறை பரிசீலிக்க வேண்டும் என, 30.09.2022-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஃ.ங.ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ்ராய் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/jail-2025-11-04-12-24-37.jpg)