பாளையங்கோட்டை மத்திய சிறை ஏனோ தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளாகிவருகிறது. அங்கு புலம்பல் சத்தம் அதிகமாகக் கேட்கிறது.
Stand At Ease: இச்சிறையில் வருடக்கணக்கில் காவலர் முதல் உதவி சிறை அலுவலர் (S.I. Rank) வரை பயன்படுத்திய நாற்காலிகளையும், மேஜைகளையும் சிறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுவிட்டனர். காரணம் -பணியாளர்கள் நின்றுகொண்டே பணிபுரியவேண்டும் என்பதற் கான அதிரடி நடவடிக்கையாம்.
சிறைவாசியின் இறப்பில் சந்தேகம்: 15-10-2025 அன்று சிறைவாசி வினோத்குமார், த/பெ மாடசாமி சிறையில் இறந்தார். அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று வரையிலும் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள வில்லை.
கோமாளிப் பேச்சு: அந்த உயரதிகாரி ரவுண்ட்ஸ் வரும்போது, சிறைவாசிகளிடம் தேவையில்லாமல் மணிக்கணக்கில் பேசுகிறார். அதனால், 20 நிமிடங்களில் முடியவேண்டிய ஒவ்வொரு நாள் ரவுண்ட்ஸும், மூன்று மணி நேரத்திற்கு மேல் நீள்கிறது. இவருடய கோமாளித்தனமான பேச்சால், சிறைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பணியாளர்கள் திணறுகின்றனர்.
மொட்டை பெட்டிசன்: ஜெயிலரும் துணை ஜெயிலர்களும் ஒழுங்காக நைட் ரவுண்ட்ஸ் வருவதில்லை. இவர்களைக் கேள்வி கேட்டால் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியது வரும். அதனால், கேள்வி கேட்கவேண்டிய உயரதிகாரியே, ஒரு மொட்டை பெட்டிசனை பணியாளர்கள் எழுதுவது போல் எழுதுவார். அதைத் தனது அலுவலகத்திற்கே அனுப்புவார். பிறகு, பெட்டிசன் மீது நடவடிக்கை எடுப்பதுபோல், ஜெயிலர் மற்றும் துணை ஜெயிலர்களுக்கு நைட் ரவுண்ட்ஸ் வருவதற்கு அழுத்தம் கொடுத்து வரச் செய்வார். தங்களை நைட் ரவுண்ட்ஸ் வரவைத்து விட்டார்களே என்ற கோபத்தில், ஜெயிலரும் துணை ஜெயிலர்களும் பணியாளர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில், இரவுப் பணிய
பாளையங்கோட்டை மத்திய சிறை ஏனோ தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளாகிவருகிறது. அங்கு புலம்பல் சத்தம் அதிகமாகக் கேட்கிறது.
Stand At Ease: இச்சிறையில் வருடக்கணக்கில் காவலர் முதல் உதவி சிறை அலுவலர் (S.I. Rank) வரை பயன்படுத்திய நாற்காலிகளையும், மேஜைகளையும் சிறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுவிட்டனர். காரணம் -பணியாளர்கள் நின்றுகொண்டே பணிபுரியவேண்டும் என்பதற் கான அதிரடி நடவடிக்கையாம்.
சிறைவாசியின் இறப்பில் சந்தேகம்: 15-10-2025 அன்று சிறைவாசி வினோத்குமார், த/பெ மாடசாமி சிறையில் இறந்தார். அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று வரையிலும் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள வில்லை.
கோமாளிப் பேச்சு: அந்த உயரதிகாரி ரவுண்ட்ஸ் வரும்போது, சிறைவாசிகளிடம் தேவையில்லாமல் மணிக்கணக்கில் பேசுகிறார். அதனால், 20 நிமிடங்களில் முடியவேண்டிய ஒவ்வொரு நாள் ரவுண்ட்ஸும், மூன்று மணி நேரத்திற்கு மேல் நீள்கிறது. இவருடய கோமாளித்தனமான பேச்சால், சிறைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பணியாளர்கள் திணறுகின்றனர்.
மொட்டை பெட்டிசன்: ஜெயிலரும் துணை ஜெயிலர்களும் ஒழுங்காக நைட் ரவுண்ட்ஸ் வருவதில்லை. இவர்களைக் கேள்வி கேட்டால் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியது வரும். அதனால், கேள்வி கேட்கவேண்டிய உயரதிகாரியே, ஒரு மொட்டை பெட்டிசனை பணியாளர்கள் எழுதுவது போல் எழுதுவார். அதைத் தனது அலுவலகத்திற்கே அனுப்புவார். பிறகு, பெட்டிசன் மீது நடவடிக்கை எடுப்பதுபோல், ஜெயிலர் மற்றும் துணை ஜெயிலர்களுக்கு நைட் ரவுண்ட்ஸ் வருவதற்கு அழுத்தம் கொடுத்து வரச் செய்வார். தங்களை நைட் ரவுண்ட்ஸ் வரவைத்து விட்டார்களே என்ற கோபத்தில், ஜெயிலரும் துணை ஜெயிலர்களும் பணியாளர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில், இரவுப் பணியிலுள்ள பணியாளர்கள் மீது புகார் எழுதி வைப்பதும், பணியாளர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணைகள் வழங்குவதும் தொடர்ந்து நடக்கின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/jail1-2025-10-30-17-59-00.jpg)
மீடியாக்களுக்கு தகவல் தருபவர்களைக் கண்டுபிடிக்கும் குழு: சிறைவாசிகளும் பணியாளர்களும் என்ன குறை கூறினாலும் அந்த உயரதிகாரி, தனக்கெதுவும் தெரியாது, எல்லாம் ஜெயிலர்தான் என்று கூறி, தனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் மீது அத்தனை சுமைகளையும் ஏற்றிவிடுவார். தான் கோலோச்சும் சிறைச் சாலையில் நடக்கின்ற ஏடாகூடமான சமாச்சாரங்கள் எதுவும் மீடியாக்களுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே, தகவல் தருபவர்களைக் கண்டுபிடிப்பதற்குத் தனிக்குழுவே அமைத்துள்ளார்.
உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியே இத்தனை மோசமாக நடந்துகொள்வதும், சிறை நிர்வாகத்தின் குளறுபடிகளும், பணியாளர் களையும், சிறைவாசிகளையும் அதிருப்தி மனநிலையிலேயே வைத்திருப்பதால், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என பீதி கிளப்பும் விதத்திலேயே ஒவ்வொரு நாளும் இச்சிறையில் கடந்துபோகின்றன.
சி.சி.டி.வி. பதிவுகள் மறைக்கப்பட்டனவா? தூத்துக்குடி மாவட்டம் -தாளமுத்து நகர் காவல் நிலையத்தில், நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த தாக விசாரிக்கப்பட்ட ஈ.வின்சென்ட் என்பவர் 17.09.1999-ல் உயிரிழந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய தற்போது டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்ற ராமகிருஷ்ணன், நில அபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாகு மற்றும் ஜெயசேகரன், ஓய்வுபெற்ற கான்ஸ்டபிள்கள் ஜோசப் ராஜ், செல்லத்துரை, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் தொகுதி 14-ல் அடைப்பு செய்யப்பட்டுள்ளனர்.
இதே தொகுதி 14-ல்தான், கவின் ஆணவக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சுர்ஜித், சரவணன் (பட்டாலியன் சிறப்பு உதவி ஆய்வாளர்), ஜெயபாலன் ஆகியோரும் உள்ளனர். மேலும், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமாரும் (ஆயுதப்படை முதல்நிலை காவலர்) அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரை யும் அங்கு பாரா காவலர்களாகப் பணிபுரியும் பணியாளர்கள் “சார்..” என்றுதான் அழைக்க வேண்டும் என்றும், சிறப்பான உணவு வழங்கப்படவேண்டும் என்றும் சிறையின் உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டு, அதற்கான பணப்பலன்களை சிறைக்கு வெளியே பெற்றுக்கொள்கின்றனர். சிறைக் காவலர் சண்முகம் இதை எதிர்த்துக் கேள்வி கேட்டதால், அவரை சமையல்கூட பணியிலிருந்து எடுத்து விட்டனர்.
ராமகிருஷ்ணனின் இரண்டு மகன்களும் வழக்கறிஞர்கள் என்பதால், மூத்த மகனும், அவருடைய பெண் தோழி வழக்கறிஞரும், தினமும் 3 மணி நேரத்திற்கும் மேல் ஜெயிலர் அலுவலகத்தில் வைத்து மனு பார்த்து வருகின்றனர். அதுவும் ராமகிருஷ்ணனின் மகன் மூன்று, நான்கு தடவை சிறைக்கு வெளியே சென்று போனில் யாரிடமோ பேசிவிட்டு, அவருடைய அப்பாவிடம் அந்தத் தகவலைச் சொல்கிறார். கவின் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளும் மற்ற காவலர்களும் தங்களது வழக்கறிஞரிடம் ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் பேசி வருகிறார்கள்.
வெளியில் கசிந்த மேற்கண்ட தகவல்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது “சிறையில் 80 சி.சி.டி.வி. கேமராக் கள் உள்ளன. இங்கு எந்தத் தவறும் நடக்கவில்லை. சி.சி.டி.வி.யை வைத்துக்கொண்டு யாராவது தவறு செய்வார்களா?” என்று எதிர்க் கேள்வி கேட்டுள்ளது சிறை நிர்வாகம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/jail2-2025-10-30-17-59-16.jpg)
25-10-2025 அன்று மதியம் 12-45 மணியளவில் 8-ஆம் தொகுதியில் அடைப்பு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த தனசிங் என்ற 3 வருட தண்டனை பெற்ற சிறைவாசிக்கு, வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த பாலு என்ற சிறைவாசி, சமையலறையிலிருந்து மோர் எடுத்துவந்து 8-வது தொகுதியில் வைத்து மோர் ஊற்றும்போது, “இறக்கிப்பிடி” என்று கூறியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தனசிங், பாலுவை கன்னத்தில் அறைந்துவிட்டார். அது கைகலப்பாக மாறியது. அவ்விருவர் சார்ந்த இரு சமுதாயச் சிறைவாசிகளிடமும் இந்த மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது பணியில் இருந்த முதல்நிலை காவலர் சிதம்பர நாதன் மற்றும் இரண்டாம் நிலை காவலர் கணேசன் ஆகியோர் சிறைவாசிகள் அனைவரை யும் விலக்கிவிட்டு, மோதிக்கொண்ட இரு சிறைவாசிகளை மட்டும் ஜெயி லர் அறைக்கு கூட்டிச் சென்றனர். ஜெயிலர் முனியாண்டி அன்று விடுமுறை என்பதால், 25-10-2025-ல் பழனிவேலு ஜெயிலர் பொறுப்பில் இருந்தார். அவர் சிறைக் கண்காணிப் பாளருக்குத் தகவல் அளித்தார். பேரூரணி மாவட்ட சிறையின் ஆய்வுக்குச் சென்ற சிறைக் கண் காணிப்பாளர் அவசரமாக ஆய் வினை முடித்துவிட்டு, பாளையங் கோட்டை சிறைக்கு வந்தார். மதியம் 2 மணியளவில் இரண்டு சிறை வாசிகளிடமும், பணியாளர்களிடமும் நடந்த நிகழ்வு குறித்து ஜெயிலர் அலுவலகத்தில் வைத்து எழுதி வாங்கப்பட்டது.
இதுகுறித்து சிறையின் உளவுப் பிரிவினர் சிறை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் அறிக்கை அளித்துள்ளனர். இவையனைத்தும் 8-ஆம் தொகுதி, கோபுர (பர்ஜ்ங்ழ்) தொகுதி, ஜெயிலர் அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் தெளிவாகப் பதிவாகி யுள்ளன. சிறைக்குள் நடந்த சண்டை விவகாரம் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவர, டிரைவர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவர் மீதும் சந்தேகப்பட்டு, சிறைக்கு உள்ளே பணிக்கு அனுப்பப்பட்டனர். எந்தச் சண்டையும் சிறைக்குள் நடக்கவில்லை என்று 25-10-2025-ல் மறுப்புச் செய்தி சிறை நிர்வாகத்தால் வெளியிடப் பட்டது.
இந்த மறுப்புக்கு எதிராக “சிறைக்குள் 80 சி.சி.டி.வி. கேமராக்கள் இருப்பதாகக் கூறிய சிறை நிர்வாகம், அந்த பிளாக்குகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் அல்லவா மறுப்புச் செய்தியில் நம்பகத்தன்மை ஏற்படும்? இதெல்லாம் போங்கு..’என்று முணுமுணுப்பு எழுந்துள்ளது.
கழிவுகளிலும் மாமூல்: ஆரம்ப காலத்தி லெல்லாம் சிறையின் உணவுக் கூடத்தில் பெறப்படும் கழிவுகளுக்கு கணக்கு காட்டப்பட்டன. ரேஷன் ஸ்டோர்களில் கொள்ளையடிப்பதற்கு இது இடைஞ்சலாக இருந்தது. இந்நிலையில், அரசாணை எண்: 1427, உள் (சிறை 4) துறை, நாள்: 22-10-2028 மற்றும் சிறை உஏட சுற்றறிக்கை எண்: 25543/ஒ.ஈ.2/2012, நாள்: 23.04.2013-ன்படி உணவுப் பொருள்களுக்கு கழிவுகாட்டத் தேவை யில்லை என்று குறிப்பிடப்பட்டது. மேலும், அரசாணை எண்: 135, உள் (சிறை-4) துறை, நாள்: 10.02.2009 மற்றும் சிறை உஏட சுற்றறிக்கை எண்: 21335/ஒ.ஈ.2/2012, நாள் 23.07.2012-ன்படி காய்கறிகளுக்கும் கழிவுகாட்டத் தேவையில்லை என்றானது.
இந்நிலையில், ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் சிறையில் சேரும் உணவுக் கழிவுகளை பன்றிப் பண்ணை நடத்தும் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன், பனங்குடியைச் சேர்ந்த மதி ஆகியோருக்கு விற்று, இருவரிடமும் தலா ரூ.25000 வீதம் மொத்தம் ரூ.50000 மாதம்தோறும் மாமூலாகப் பெறப்படுகிறது. சிறையின் வெளி கேன்டீனில் நடத்தும் கோழிப்பண்ணையில் சேரும் கோழிக் கழிவுகளை விற்று, அதிலும் மாதம்தோறும் ரூ.10000 மாமூல் கிடைக்கிறது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் மட்டுமல்ல.. தமிழ்நாட்டின் அனைத்துச் சிறைகளிலும் இந்த மோசடி நடக்கிறது. நியாயமாகப் பார்த்தால், மேற்கண்ட கழிவுகளை விற்றுக் கிடைக்கும் பணத்தினை சலான் மூலம் அரசுக் கருவூலத்தில் கட்டியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், இதிலும் ஊழல் பண்ணுகின்றனர்.
(ஊழல் தொடர்ந்து கசியும்..,)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us