சிறார்கள் கொடூர குற்றம் செய்வது எந்த மனநிலையில்?
IPC பிரிவு 82 & BNS பிரிவு 20-ன்படி 7 வயதுக்குக் கீழுள்ள ஒரு குழந்தை செய்யும் எந்தவொரு செயலும் குற்றமாகாது. மேலும் IPC பிரிவு 83 மற்றும் BNS பிரிவு 21-ன்படி 7-12 வயதுள்ள குழந்தை தனது செயல்களின் விளைவுகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பக்குவம்/முதிர்ச்சி அடையவில்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அக்குழந்தை செய்த எந்தச் செயலும் குற்றமாகக் கருதப்படாது.
13 வயது முதல் 18 வயதுக்குள் உள்ள தவறு செய்த குழந்தைகளை, இளைஞர் நீதிக்குழுமம் (Juvenile Justice Board) மூலம் விசாரணை செய்து, குற்றம் உறுதியானால் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களைச் சீர்திருத்துவதற்காகவே சீர்திருத்தப்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் - உலகின் முதல் சிறார் சீர்திருத்தப்பள்ளியாக, The New York House of Refuge, 1825 கருதப்படுகிறது. உலகின் முதல் சிறார் நீதி அமைப்பானது, அமெரிக்காவின் Cook County, Illinois நகரத்தில் 1899-ல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு இளம் குற்றவாளிகளை பெரிய குற்றவாளிகளிட மிருந்து பிரித்துக் கையாளவும், தண்டனை வழங்குவதைவிட சீர்திருத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு, சிறார்களும் பெரியவர்கள் போலவே விசாரித்து தண்டிக்கப்பட்டனர்.
பிரிட்டிஷ் இந்தியாவில் தொழில் பயிற்சியாளர் சட்டம், 1850: சிறிய குற்றங்களைச் செய்த 15 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளைச் சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, தொழிற்சாலையிலோ/நிறுவனத்திலோ தொழில்பயிற்சி பெறும் நபராக நடத்த வழிவகை செய்தது.
சீர்திருத்தப் பள்ளிகள் சட்டம்: இச்சட்டம் முதன்முதலில் 1876-ல் கொண்டு வரப்பட்டு, இதிலுள்ள குறைகள் சரி செய்யப்பட்டு, 03.11.1897-ல் மீண்டும் கொண்டுவரப்பட்டது. 15 வயதுக்குக் கீழுள்ள, முதல்முறை தவறு செய்த குழந்தைகளை இந்தப் பள்ளிகளில் அனுமதித்து, கல்வி, தொழில் பயிற்சி மற்றும் தார்மீக வழிகாட்டுதல்கள் மூலம் மறுவாழ்வு அளிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்திய சிறைச்சாலை கமிட்டி (1919-1920) பரிந்துரையின்படி, மெட்ராஸ் குழந்தைகள் சட்டம், 1920 இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1922-ல் வங்காளத்திலும், 1924-ல் பம்பாயிலும் குழந்தைகள் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் சிறப்பு சிறார் நீதிமன்றங்களையும், சீர்திருத்தப் பள்ளிகளையும் நிறுவியது. இந்தியாவின் முதல் சிறார் நீதிமன்றம் மும்பையில் நிறுவப்பட்டது.
உலகளாவிய சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்: 20.11.1959-ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை வெளியிட்ட குழந்தைகளின் உரிமைகளுக்கான பிரகடனம் மற்றும் லண்டனில் நடைபெற்ற The Second United Nations Congress On The Prevention Of Crime And Treatment Of Offenders (Focus On Juvenile Delinquency), ஆகஸ்ட் 1960-ல் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்திய யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில், இந்திய அரசு, குழந்தைகள் சட்டத்தை டிசம்பர் 1960-ல் இயற்றியது. இச்சட்டம் எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளைச் சிறையில் அடைப்பதைத் தடைசெய்தது. மேலும் சில மாநிலங்கள், குற்றம் செய்த இளம் சிறார்களைக் கையாள்வதற்கென்றே சொந்தமாகச் சட்டத்தை இயற்றியிருந்தன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/jail1-2025-10-23-17-31-16.jpg)
Sheela Barse Vs. Union of India என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட/கைவிடப்பட்ட/ஆதரவற்ற குழந்தைகளின் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் மறுவாழ்வை உறுதி செய்வதற்கு, இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான குழந்தைகள் சட்டம் மற்றும் விதிகளை இயற்றவும், அச்சட்டம் திறம்பட செயல் படுத்தப்படுவதை உறுதி செய்யவும், மத்திய அரசுக்கு 05.08.1986-ல் பரிந்துரைத்தது.
உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படியும், The United Nations Minimum Rules for the Administration of Juvenile Justice, 1985 (Beijing Rules)-ன்படியும், குழந்தைகள் சட்டம், 1920 மற்றும் 1960 நீக்கப்பட்டு, இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான சிறார் நீதிச் சட்டம், (Juvenile Justice Act) 1986 அமலுக்கு வந்தது.
அதன்பின், United Nations Convention on the Rights of the Child (1989), United Nations Guidelines for the Prevention of Juvenile Delinquency (The Riyadh Guidelines #14.12.1990) மற்றும் the Hague Convention on Protection of Children and Co#operation in Respect of Inter#country Adoption (1993)ஆகியவற்றின் அடிப்படையில் Juvenile Justice Act, 1986 நீக்கப்பட்டு, The Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000 சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில் குழந்தை என்பதற்கான விளக்கத்தை, 16 வயதிலிருந்து 18 வயதாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/jail2-2025-10-23-17-31-29.jpg)
Arnit Das Vs. State of Bihar (09.05.2000) மற்றும் Pratap Singh Vs State of Jharkhand (02.02.2005) ஆகிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி, இச் சட்டத்தில் 2006-ல் செய்த சட்டத் திருத் தத்தில், ‘குற்றம் நடந்த தேதியிலிருந்து சிறார் என்று கருதப்படும்’ என்பதும் ‘எந்த நிலை யிலும் சிறார்கள் சிறைகளில் அல்லது காவல்நிலைய லாக்கப்பில் வைக்கப்படக்கூடாது’ என்பதுவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
2005-ல் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டத்தின்படி, மத்திய மற்றும் மாநில அரசுகள், தேசிய மற்றும் மாநில அளவில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கியது.
Bachpan Bachao Andolan Vs Union of India & Others (W.P.(C).No.51/2006) என்ற வழக்கில், இந்தியாவில் சிறார் நீதிச் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தவேண்டியும், குழந்தைகளின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியும் 18.04.2011-ல் வழங் கிய தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி யுள்ளது.
Madan B Lokur,, உச்ச நீதிமன்ற நீதிபதி: ஆகஸ்ட், 2013-ல் உச்ச நீதிமன்றம், சிறார் நீதிச் சட்டம், 2000 மற்றும் விதிகள், 2007-ன் கீழ் செயல்படும் இல் லங்களின் மேம்பட்ட செயல் பாடுகளுக்குப் பரிந்துரைக்க, நீதிபதி மதன் பீமாராவ் லோகூரை ஒரு நபர் கமிட்டியாக நியமித்தது. அவர், நாடு முழுவதும் 40 சதவீதம் சிறார் இல்லங்கள், சிறைகளை விட மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, பல பரிந்துரைகளை வழங்கினார். இவர் கடந்த 30-12-2018-ல் ஓய்வு பெற்றார். அதன்பின் Chair person of the UN Internal Justice Council ஓன்ள்ற்ண்ஸ்ரீங் ஈர்ன்ய்ஸ்ரீண்ப்-ஆக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் 12-11-2028-ல் முடிவடைகிறது.
நீதிபதி J.S. வர்மா கமிட்டி: 16.12.2012-ல் நடந்த டெல்லி நிர்பயா வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளிக்கு, 18 வயது ஆவதற்கு சில மாதங்களே இருந்ததால், அவரை குழந்தையாகப் பாவித்து தண்டனை வழங்கப்பட்டது, இந்தியா முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமைச் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டுவர நீதிபதி ஓ.ந. வர்மா தலைமையில் மூன்று நபர் கமிட்டியை 23.12.2012-ல் மத்திய அரசு அமைத்தது. இக்குழு 23.01.2013-ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான, சிறார் நீதிச் சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்பட்டு, 16-18 வயதிற்குட்பட்டவர்கள் புரிந்துள்ள குற்றங்கள் கொடூர குற்றமாக (heinous offence) இருப்பின், அவர்கள் சிறார் என்ற மனநிலையில் செய்தனரா? அல்லது இளைஞர் என்ற மனநிலையில் செய்தனரா? என்பதைக் கண்டறிந்து, வயது வந்த நபருக்கான மனநிலையில் செய்தது உறுதியானால், வயது வந்த நபராகவே பாவித்து, வழக்கு விசாரணை செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்படவேண்டும் எனப் பரிந்துரைத்தது.
சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015: மேற்கூறிய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளாலும், வரலாற்று படிப்பினைகளாலும் இச்சட்டம் இயற்றப்பட்டது. இதன்மூலம், 16-18 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை, கொடூரமான குற்றத்தைச் செய்வதற்கான மன மற்றும் உடல் திறன், குற்றத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் அவர் குற்றம் செய்ததாகக் கூறப்படும் சூழ்நிலைகள் குறித்து இச்சட்டத்தின் பிரிவு 17 மற்றும் 18-ன் கீழ் முதற்கட்ட விசாரணை நடத்தி, பிரிவு 15-ன்படி வழக்கு எந்த நீதிமன்றத்தில் நடத்தப்படவேண்டுமென உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.
சிறார் நீதி திருத்தச் சட்டம், 2021-ன்படி, குழந்தைகளைத் தத்தெடுப்பது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம், சிவில் நீதிமன்றத்திடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது.
(ஊழல் தொடர்ந்து கசியும்…)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/23/jail-2025-10-23-17-31-06.jpg)