மிழக அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய சென்னை (புழல் -I, II, & III) சிறைகள் : அனைத்து மத்திய சிறைக் கண்காணிப்பாளர் களுக்கும் சிறைத்துறை தலைவர் வழங்கிய சுற்றறிக்கை எண்: 1902/இத.2/2010, நாள்: 22.01.2010-ல் தமிழகச் சிறைகளில் பயன்படுத்தும் வணிக (Commercial) மின்சார tariff-ல் (ரூ.7- அதிக கட்டணம்/unit) இருந்து, அரசு அலுவலகங் களுக்கான tariff II-க்கு (ரூ.5- குறைந்த கட்டணம்/unit) மாற்றிக்கொள்ள உத்தரவிட்டிருந்தார். ஆனால் tariff-ஐ மாற்றி செயல்படுத்தாததால், கடந்த ஜனவரி 2013 முதல் டிசம்பர் 2016 வரையிலான காலகட்டத்தில் சென்னை (புழல்)-I,II,&III ஆகிய மூன்று சிறைகளிலும் ரூ.1.15 கோடியை (அட்டவணையைப் பார்க்க) TANGEDCO-விற்கு அதிகமாகச் செலுத்தி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.  Auditor General, Chennai-யின் தணிக்கை (Lr.No. PAG(G&SSA)/GS II/IV/19#028/16#17/01, Date: 17.02.2017) பிரகாரம்,  இதுகுறித்து நட வடிக்கை எடுக் கக்கோரி சிறை உஏட-க்கு அறிக்கை அளித்தனர். ஆனால்,  இன்றுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisment

 இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டச் சிறையிலும் வணிக tariff மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அதனால் செலுத்தப் பட்ட மின்கட்டணத்தில்,  அரசு அலுவலகத் திற்குப் பயன்படுத்தும் tariff-ல் கூறியுள்ள கட்டணம் போக மீதியுள்ள தொகையை திருப்பித் தரக்கோரி நாகப்பட்டின மின்பகிர்மான வட்டத்தின் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில், நாகப்பட்டின மாவட்டச் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு 08.01.2019-ல் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து Tamilnadu Electricity Ombudsman-ல் மேல் முறையீடு (மனு எண்:13/2019/D.No.1260, நாள்:07.03.2019) செய்யப்பட்டு, அதுவும் நிராகரிக்கப்பட்டது. 

Advertisment

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்:  சென்னை (புழல்) மத்திய சிறை வளாகத்தில்  சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க, அரசாணை எண்: 489, நாள்:11.07.2013-ன்படி தமிழக அரசு ரூ.2.41 கோடியை ஒதுக்கியது. சென்னை மத்திய சிறை -I-ல் 114 KWp, சென்னை மத்திய சிறை -II-ல் 118 KWp, பெண்கள் தனிச் சிறை - III-ல் 96KWp அளவிற்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து மின் கட்டணத்தை மிச்சப்படுத்துவதற் கான இத்திட்டத்தைச்  செயல்படுத்த, Lubi Electronics, Gujarat என்ற நிறுவனத்துடன் ஜூன் 2016-ல் ரூ.2.01 கோடி செலவில் செயல்படுத்த ஒப்பந்தம் போடப் பட்டது. அரசாணை எண்: 401, நாள்: 12.05.2016-ன்படி தமிழக அரசு இந்நிதியை வழங்கியது. இத்திட்டம் 17.02.2017 முதல் நடைமுறைப்படுத்தப் பட்டது. 2013-ல் அனுமதி வழங் கியதற்கு 2017-ல் காலதாமதமாகச் செயல்படுத்தியதாலும், சிறை நிர்வாகத்தின் இதர காரணங்களாலும், அரசுக்கு ரூ.68,65,462/- இழப்பு ஏற்பட்டுள்ளதாக Auditor General, Chennai-யின் தணிக்கை அறிக்கையில் (Lr.No.PAG(G&SSA)/GS.II/IV/19#028/16#17/01, தெரிவிக்கப்பட்டுள்ளது.   

jail1

பெண்கள் தனிச் சிறை - III, சென்னையில் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு இயந்திரங்களை முறையாகப் பயன்படுத்தாததால் பிப்ரவரி 2017 முதல் ஏப்ரல்,2019 வரையிலான காலகட்டத்தில் அரசுக்கு ரூ.41,77,585/- இழப்பு ஏற்பட்டுள்ளதாக  Auditor General, Chennai#«u R¦dûL @±dûL«p (Lr.No.PAG(G&SSA)/GS.II/11/19#008/19#20/79, Date:17.07.2019)  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சிறை          களில் இன்றும் இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்துகிறார்களா என்பது சிறைத் துறையினருக்கே வெளிச்சம். 

Advertisment

மின் திருட்டு என்றால் என்ன?  தமிழ்நாடு மின்சார வாரியம்  (TANGEDCO) பயன்பாட்டு தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு tariff-ஆகப் பிரித்து வீடு, கடை, அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் etc.. என ஒவ்வொன்றுக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு Unit-க்கும் அதிக/குறைவான விலைக்கு மின் சாரத்தை விற்பனை செய்கிறது. 

மின் திருட்டு எப்படி நடக்கிறதென்று பார்ப்போம். உதாரணத்துக்கு வீட்டிற்கு ஒரு unit-க்கு ரூ.3 என்றும், கடைக்கு ரூ.7 எனவும் வைத்துக்கொள்வோம். வீட்டிற்கென மின் இணைப்பு பெற்றுவிட்டு, அதிலிருந்து வயரை கனெக்ட் செய்து கடைக்கு இணைப்பு கொடுத்துப் பயன்படுத்தினால், ஒவ்வொரு unit-க்கும் ரூ.4 மின்சார வாரியத்திற்கு இழப்புதானே ஏற்படும்?  இதுவே மின் திருட்டு ஆகும். இதேபோல், தெருவோர மின்கம்பம் அல்லது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள  மின்பெட்டி/ட்ரான்ஸ்பார்மர்களில் கொக்கி போட்டு மின்சாரம் எடுப்பது, ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு பெற்றுவிட்டு, மற்றொரு வீடு/வணிக கடைகளுக்கு மின்சாரத்தைப் பயன் படுத்துவது, மீட்டரை ஓடவிடாமல் காந்தம் வைப்பது, மின் மீட்டரை குறிப்பிட்ட நாள்களுக்குப் பின் துண்டித்துவிட்டு, மின்சாரத்தைப் பயன்படுத்துவது, வீடு/கடை/அலுவலகம்/வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் கட்டுமானத்துக்கு என தற்காலிக இணைப்பு பெறாமல்,  ஏற்கனவே  இணைப்பிலுள்ள மின் சாரத்தைப்  பயன்படுத்துவது  போன்ற வையும் மின் திருட்டு ஆகும். 

சிறை அதிகாரிகள் மீது மின் திருட்டு புகார்:  கடந்த ஏப்ரல்,2022-ல் கோவை சரக சிறை DIG, தனது இல்லத்தின் மின் இணைப்பு எண்:030110031629-க்குரிய மின் சாரத்தைப் பயன்படுத்தாமல், கோவை மத்திய சிறையின் மின்சாரத்தை உபயோகித்துள்ளார். 2008-ல் பெறப்பட்ட இந்த மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருப்பதற்காக, குறைந்த பயன்பாட்டை மட்டும் கணக்கில் காட்டி, கடந்த 10 வருடங்களாக பலDIG-க்களும் இந்த நூதன மின் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். 

கோவை சிறை எஸ்.பி., தனக்கு ஒதுக்கப்     பட்ட அரசு வீட்டின் மின் இணைப்பு எண்:030110031630-க்கு உரிய மின்சாரத்தைப் பயன்படுத்தாமல், கோவை மத்திய சிறையின் மின்சாரத்தை உபயோகித்துள்ளார். இதற்கான அபராதத் தொகையாக ரூ.7,40,402/- கணக் கிடப்பட்டது. எஸ்.பி. செலுத்திய அபராதமோ,  ரூ.1,92,201 ஆகும். 

மதுரை சிறை DIG குடியிருந்த அரசு வீட்டின் மின் இணைப்பு (எண்:05057005975) 2006-ல் பெறப்பட்டது. 26-9-2009 வரை நிலுவைத் தொகை ரூ.3,655-ஐ செலுத்தாத காரணத்தால், 18-10-2009-ல் அந்த மின்  இணைப்பு துண் டிக்கப்பட்டது. மின் இணைப்பே இல்லாமல், மதுரை மத்திய சிறையிலிருந்து முறை கேடாக இணைப்பை ஏற்படுத்தி, கடந்த 10 வருடங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அபராதத் தொகையாக ரூ.1,43,845 செலுத்தப் பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற சிறைப்பணியாளர் சேகர்  அளித்த புகாரின் அடிப்படையில், மின்வாரிய அமலாக்கப்பிரிவின் பறக்கும் படையினர்  சோதனை செய்து, இந்த மின் திருட்டைக்  கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்திருட்டு முதல்முறை நடந்ததால், சம்பந்தப்பட்டவர்களிடம்  அபராதம் வசூலிக்கப்பட்டது என்றும், இரண்டாவது தடவையும் நடந்தால் மின்சார சட்டம், 2003-ன் பிரிவு 135 & 136-ன் படி FIR  பதிவு செய்யப்படும் என்றனர். 

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: மின்திருட்டில் ஈடுபட்ட அனைத்து உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உரிய அபராதத் தொகை வசூலிக்க வேண்டியும்,  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்W.P.(MD)No.25532 of 2023 -என்ற வழக்கை சேகர் தொடுத்தார். 06.10.2025-ல் மாநில உள்துறை செயலர் சார்பில், இக்குற்றச்சாட்டிற்கான எதிர் பிரமாணப் பத்திரம்  சிறை ஐ.ஜி-யால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சிறை ஐ.ஜி-யும், டிசம்பர், 2015 முதல் மார்ச், 2018 வரை மது ரையில் DIG யாகப் பணி புரிந்தபோது, மின் திருட்டில் ஈடுபட்டவர்தான் எனக் கூறி,  இவர் பதிலுரை தாக்கல் செய்ததற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால்,  இறுதி பதிலுரையை 04.11.2025-ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

jail2

இன்றும் தமிழகம் முழுவதுமுள்ள பெரும்பாலான கிளை மற்றும் மாவட்டச் சிறைகளில் வணிக EB tariff-களையே பயன்படுத்தி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்படுத்துகின்றனர். மற்றொரு பக்கம்,  மத்திய சிறைகளுக்குள் செயல்படும் தொழிற்கூடம், Bakery Unit, PCP கேன்டீன் மற்றும் சிறைக்கு வெளியே செயல்படும் சிறை சந்தை (Prison Bazzar)  போன்ற வணிகப் பயன்பாடுள்ள இடங்களுக்குத் தனியாக வணிக tariff மின்னிணைப்பு பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறாததால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளிடமும் பணியாளர்களிடமும் எவ்விதமான விழிப்புணர்வும் இல்லாததே இதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து உரிய சுற்றறிக்கை அளிக்கப்பட வேண்டும்.  

மின் திருட்டு புகார்களுக்கு ஆளான மேற்கண்ட அதிகாரிகள் மட்டுமல்ல.. 2010-ல் இருந்து ஆய்வு செய்தால் தமிழகத்திலுள்ள மற்ற சிறை உயர் அதிகாரிகளின் அரசு வீடுகளிலும், இதே ரீதியில் மின் திருட்டு நடந்துள்ளதை இன்றும்கூட கண்டுபிடிக்க முடியும்.

சாதாரண கூலித் தொழிலாளிகூட, தன் வீட்டுக்கான மின் கட்டணத்தை,  அவருடைய சொந்தப் பணத்திலிருந்தே செலுத்துகிறார். லட்சங்களில் மாதச் சம்பளமும், ஊழல் செய்து பெரும் தொகையையும் ஈட்டுகின்ற டி.ஐ.ஜி.க்களும், சிறைக் கண்காணிப் பாளர்களும், மின் திருட்டிலும் ஈடுபட்டு அரசாங்கத்தைச் சுரண்டுவது கொடுமை அல்லவா?   

(ஊழல் தொடர்ந்து கசியும்)