சிறை நிர்வாக முறை: 1996-ல் நாகர்கோவில் சிறையில் நடந்த லிங்கம் கொலையையும், வட இந்தியாவில் நடந்த பல கிளைச் சிறை உடைப்பு சம்பவங் களையும் காரணம்காட்டி, சிறைத்துறை தலைவர் கடித எண்: 19434/PS2(5)/99, Sôs : 22.04.99, 27.07.99  மற்றும் 14.09.99-ல் தமிழக அரசுக்கு எழுதிய  கடிதங்களில் “கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருள் கடத்துதல், தீவிரவாதச் செயல் பாடுகளில் ஈடுபட்டவர்கள், வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும்  தடுப்புக் காவல் சிறைவாசிகளை கிளைச் சிறைகளில் அனுமதிக்கக்கூடாது’ என்று தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்டு அரசாணை எண்: 199, நாள்: 22.02.2000 வெளியிடப்பட்டது.  இவ்வழக்குகள் அல் லாத, மற்ற சிறு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களையும், அந்த வழக்குகளில் ஒரு மாதத்திற்கும் குறைவாகத் தண்டனை பெற்ற சிறைவாசிகளையும், கிளைச் சிறைகளில் அனுமதிப்பார்கள் (விதி: 5(2)(ii)).. மொத்தம் 96 விதமான பதிவேடுகள்  கிளைச் சிறைகளில் பேணப்படுகின்றன. 

Advertisment

மாவட்ட சிறை:  தமிழகத்தில் விழுப்புரம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, நாகப் பட்டினம், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், பேரா வூரணி, நாகர்கோவில் என 13 இடங்களில் மாவட்டச் சிறைகள் செயல்படுகின்றன.  மாவட்டச் சிறையில் கூடுதல் கண்காணிப்பாளர் பதவியில் இருப்பவர் தலைமை தாங்குவார். ஆனால்,  தற்போது தமிழகம் முழுவதுமுள்ள மாவட்டச் சிறைகள்,  துணைச் சிறை அலுவலர் (Inspector rank) பதவியில் உள்ளவர்களின் தலைமையிலேயே இயங்குகின்றன.  அரசாணை எண்: 126, நாள்:17.02.2006-ன்படி சிறை விதி: 5(2)-ல் திருத்தம் செய்து, விசாரணைக் கைதிகள் மற்றும் மூன்று மாதத்திற்குக் கீழ் தண்டனை பெற்ற கைதிகளை மாவட்டச் சிறையில் அடைத்துக்கொள்ள லாம் என உத்தரவிடப்பட்டது. நடைமுறையிலோ, கிளை மற்றும் மாவட்டச் சிறைகளில் தண்டனைச் சிறைவாசிகளை அனுமதி எடுப்பது கிடையாது. மத்திய சிறைகளில் மட்டுமே அனுமதி எடுக்கின்றனர். 

Advertisment

நடைமுறை பிரச்சினைகள்: சிறைத்துறையில் அனுதினமும் கொடுமையை அனுபவிக்கும் ஜீவன்கள் உண்டென்றால், அது இந்தக் கிளை மற்றும் மாவட்டச் சிறைக் கண் காணிப்பாளர்களே.  நேர் மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் யாராவது ஒருவரை கிளை மற்றும் மாவட்டச் சிறைகளில்  கண்காணிப்பாளராக நியமித்தால் போதும்,  அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும்.   அந்த அளவுக்கு கிளை மற்றும் மாவட்டச் சிறையிலுள்ள சில காவலர்கள் இந்தக் கண்காணிப்பாளர்களை மிரட்டுவதோடு, அநாக ரிகமாகவும் நடந்துகொள் வார்கள். தங்களுக்குக் கீழுள்ள காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அங்கு கண்காணிப் பாளர்களுக்கு அதிகார மில்லை. காவலர்கள் ஏதேனும் தவறு செய்தால், அதுகுறித்து, கிளை மற்றும் மாவட்டச் சிறை களின் கட்டுப்பாட்டு அலுவல ரான,  அருகிலுள்ள மத்திய சிறைக் கண்காணிப்பாளரிடம்  அறிக்கை மட்டுமே  அளிக்க முடியும். அவ்வாறு காவலர் மீது ஏதேனும் புகார் அறிக்கை யை கட்டுப்பாட்டு அலுவலருக்கு அவர் அளித்தால், சம்பந்தப்பட்ட காவலர், கிளை மற்றும் மாவட்டச் சிறைக் கண்காணிப்பாளரை கடுமையான நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கிவிடுவார்கள்.  அப்புகாருக்கு 17(ஹ) அல்லது (க்ஷ) வழங்கிவிட்டால்  அவ்வளவுதான், அந்தக்  கிளை அல்லது மாவட்டச் சிறைக் கண்கணிப்பாளர்கள் குறித்து மீடி யாக்களிடம் தகவல் தெரிவித்தும், தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் பெட்டிசன் போட்டு மிரட்டி யும்,  சொல்லொணா  துயரத்திற்கு உள் ளாக்கிவிடுவார்கள். இதனை நன் கறிந்த முன்னாள் சிறை அதிகாரி ஒரு வர், "கிளை மற்றும் மாவட்டச் சிறை என்பது ஒரு குடும்பம் போல செயல் படவேண்டும், இல்லையென்றால்  நாறிவிடும்''’ என்று கூறியிருக்கிறார். 

பணி அதிகாரம்: சிறைத்துறை யைப்  பொறுத்தவரை,  பில்கள் மற்றும் வங்கிக் காசோலைகளில் யார் கையெழுத்துப் போடுகிறார்களோ,  அவர்களுக்கே  அந்தப் பணத்தில் அதிகமான பங்கு தரப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.  ஏனென்றால்,  கையெழுத்து இடு பவர்கள்தானே ரிஸ்க் எடுக்கிறார்கள். பின்னாளில் அந்த பில்கள் மற்றும் வங்கிக் காசோலைகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதில் கையெழுத்திட்ட அதிகாரிதானே  பதில் கூறவேண்டிய இடத்தில் இருக்கிறார்? அதன்படி, கிளை மற்றும் மாவட்டச் சிறைக் கண்காணிப்பாளரே self drawing officer-ஆக இருந்தாலும், கிளை மற்றும் மாவட்டச் சிறைகளில் உணவு சமைப்பதற்குத் தேவைப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் அனைத்து பில்களிலும், அருகிலுள்ள மத்திய சிறையின் கண்காணிப்பாள ரான   கட்டுப்பாட்டு அலுவலரே கையெ ழுத்திடுவார். அதனால், எனக்கும் அந்த வருமானத்தில் பங்கு கொடு என்று மத்திய சிறைக் கண்காணிப் பாளர்கள் அடாவடித்தனம் பண்ணு வார்கள், அல்லது மாதாமாதம் மாமூல் வசூல் செய்வார்கள். இதிலும் இவர் கள் கைவைப்பது கண்டு, இதெல்லாம் அடுக்குமா என கிளை மற்றும் மாவட் டச் சிறை கண்காணிப்பாளர்கள் புலம்புவார்கள்.  

Advertisment

கிளை மற்றும் மாவட்டச் சிறைகளில் அனுமதி எடுப்பது: பெரும்பாலும் கிளை மற்றும்  மாவட்டச் சிறைகளில் சிறைவாசிகளை அனுமதி எடுப்பதில்தான், காவல்துறைக்கும் சிறைத் துறைக்கும் பிரச்சினையே ஆரம்பிக்கும். கைது செய்யப்பட்டவரின் உடம்பிலுள்ள காயத்திற்கு யார் பொறுப்பேற்பது என்ற பிரச்சினைதான் அது. மருத்துவ அதிகாரியிடம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உடலில் காயங்கள் இல்லை எனச் சான்று வாங்கி,  அதை நீதித்துறை நடுவரிடம் காட்டி  ரிமாண்ட் செய்ய அனுமதி பெற்று விடுவார்கள். அல்லது ரிமாண்ட் ஆணை பெற்றபின், சிறைக்கு அழைத்துவரும்போது அடித்துவிட்டு கூட்டி வருவார்கள். அவ்வாறு சிறைக்குள் அனுமதிக்க வரும்போது சிறை வாசியின் உடலில் உள்ள காயங்கள் குறித்து அனுமதிப் பதிவேட்டில் (Admission Register)        பதிவு செய்யக்கூடாது என காவல் துறையினர் உத்தரவு போடுவார்கள். அப்போது சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட சிறைவாசிக்கு ஏதேனும் நடந்துவிட்டால் யார் பொறுப்பு ஏற்பது  என்ற பிரச்சனை வெடிக்கும். சாத்தான்குளம் வழக்கில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கோவில்பட்டி கிளைச் சிறையில் 20-06.2020ல் அனுமதி எடுத்தபோது  இதே பிரச்சனைதான் நடந்தது. 

தாங்கள் கொண்டுவருவது  எந்தச் சிறைவாசி யாக இருந்தாலும் கண்டிப்பாக அனுமதி எடுக்க வேண்டும் என்றும்,  வேறு சிறைக்கு மாற்றக் கூடாது எனவும்,  அந்த ஏரியா  DSP-ஐ கூட பேசவைத்து அழுத்தம் கொடுப்பார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம்,  கிளை மற்றும் மாவட்டச் சிறைகளில் அனுமதி எடுக்கும் அதிகாரியின் பதவியானது,  முதன்மை தலைமைக் காவலர் என்பதுதான். தற்போது காவல்துறையில் காவல்நிலைய அதிகாரியாக    (STATION HOUSE OFFICER)) இன்ஸ்பெக் டர்கள் இருப்பதாலும்,   அந்த RANK-க்கு கீழுள்ளவர்கள்  கிளைச் சிறைகளில் பணி செய்வ தாலும்,  அந்த இடத்தில் ‘உன்னைவிட பதவியில் பெரியவன் நானே!’ என்கிற ரீதியில் காவல் துறையினர் நடந்து கொள்வதாலும், இந்தப் பதவி வேறுபாடுகளே பல பிரச்சினைகளை உண்டு பண்ணுகின்றன. 

இத்தகைய பிரச் சினைகள்  இதற்குமுன் வந்தபோது, கிளைச் சிறைக் கண்காணிப்பாளர் ((SI Rank) ) இல்லாதபோது, முதல் நிலைக் காவலர் தலைமைப் பொறுப்பு வகித்ததை,  அரசாணை எண்: 1238, உள்(சிறை - ஒஒ) துறை, நாள்: 13.12.2001-ன்படி மாற்றி, 112 முதல் நிலைக் காவலர் பணியிடங்கள் முதன்மைத் தலைமைக் காவலர் (CHW) பணியிடங்களாகக் கிளைச் சிறைகளில் மாற்றப்பட்டன.  இதேபோல் தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல், நிர்வாக அமைப்பு முறையை மறுசீராக்கம் செய்து, கிளைச் சிறைகளில், ஏற்கனவே உள்ள பணியிடங்களுடன் புதிதாக துணை மற்றும் உதவி சிறைஅலுவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.   

(ஊழல் தொடர்ந்து கசியும்…)     

______________
சிறைகளில் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம்!

சிறையில் உணவு தயாரிப்பதற்கு வழங்கப்படும் DATA  கணக்கீட்டு அட்டவணையின்படி சிலிண்டர்களைப் பயன்படுத்தும்போது,  ஒவ்வொரு நாளும் மத்திய சிறைகளில் 3 சிலிண்டர்கள் வீதமும், மாவட்டச் சிறைகளில் வாரத்திற்கு 3 சிலிண்டர்கள் வீதமும், கிளைச் சிறைகளில் வாரத்திற்கு ஒரு சிலிண்டர் வீதமும் மீதமாகின்றன. இதனை மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளில் வெளியில் விற்றுவிடுவார்கள். மத்திய சிறையில் முன்பெல்லாம் PCP-கேன்டீன் காவலருக்கு விற்றுவிடுவார்கள். தற்போதுள்ள சிறை DGP-யின் கெடுபிடியால், அவ்வாறு விற்கமுடியாமல் போனது. மீதமாகும் சிலிண்டர்களைக் கணக்கில் ஏற்றினாலோ, அல்லது திருப்பிக் கொடுத்தாலோ, இதுவரை நடந்த முறைகேடுகள் அனைத்தும், அரசுக்கு வீண் செலவு ஏற்படுத்தியதும் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஆனபோதிலும், சில சிறைகளில் கணக்கில் ஏற்றிவிட்டனர். சில மத்திய சிறைகளிலோ ரேசன் ஸ்டோர் காவலர்கள், மீதமான முழு அளவில் GAS உள்ள சிலிண்டர்களை மறைவான இடங்களுக்குக் கொண்டுசென்று GAS-ஐ திறந்துவிட்டு Empty Cylinder-ஆக மாற்றி, முழு சிலிண்டர் பெறும் மறுசுழற்சிக்கு கொடுக்கிறார்கள்.  இதனால்,  சிறைக்குள் வெடி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  அதேநேரத்தில்,  சிறைவிதி: 671-ல் குறிப்பிடப்பட்டுள்ள தீ தடுப்பு வழிமுறைகளை எந்தச் சிறைகளும்  கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக, சிறைகள் பலவற்றிலும் தீயணைக்கும் கருவிகள் (FIRE EXTINGUISHER) காலாவதியானதாகவும், செயல்படாத நிலையிலுமே உள்ளன.