நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் தடுப்புக்கான உயர்மட்டக் குழு: தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான, மேம்பட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்வதற்காக, நீதிபதி ஜி.ராமானுஜம் தலைமையில் உயர்மட்ட நிர்வாக சீர்திருத்தக் கமிட்டியை அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அமைத்தார். இக்கமிட்டி ஜூன் 1997-ல் முதல் அறிக்கையையும், செப்டம்பர் 1997-ல் இரண்டாவது அறிக்கையையும் அளித்தது. இக்கமிட்டியின் பரிந்துரையின்படி, இந்தியாவி லேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் திறந்த வெளி ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம் (The Tamilnadu Transparency in Tenders Act, 1998 & Rules, 2000) இயற்றப்பட்டது. மேலும், கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் தமிழ்நாடு மாநில விஜிலன்ஸ் கமிஷனர் என்ற பணியிடம், தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்பட்டது.
இக்கமிட்டியின் முதலாவது அறிக்கையின் பத்தி எண் 37-ல் “தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும், மண்டலம்/சரகம் மற்றும் மாவட்ட அளவிலுள்ள உயர் அதிகாரிகள், தங்களுக்குக் கீழுள்ள அலுவலகம்/அதிகாரிகளின் பணிகள் குறித்து ஆய்வு செய்யவேண்டும். இவ்வாறு ஆய்வு செய்து தரப்படும் மதிப்பாய்வு அறிக்கையை, சம்பந்தப்பட்ட துறையின் ஆண்டு அறிக்கையில் இணைத்து வெளியிட வேண்டும்’ என தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, G.O.(D).No.45, P&AR (Insp.I) Department, dated: 09.03.1999 என்ற அரசாணையை வெளியிட்டது.
மேற்கண்ட பரிந்துரை/அரசாணையின்படி சிறைத்துறை DIG மற்றும் கண்காணிப்பாளர் களுக்கு, வருகை (Visit) மற்றும் ஆய்வு (Inspection) செய்வதற்கான அதிகாரத்தை வழங்கவேண் டும் என சிறைத்துறை தலைவர் (கடித எண். 15779/E1(1)/98#2, dated: 24.06.1999 Utßm 09.05.2000 தேதியிட்ட கடிதங்கள்) தமிழக அரசுக்குப் பரிந் துரைத்தார். இதனைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு, அரசாணை எண் : 157, உள் (சிறை - 5) துறை, நாள் : 18.02.2003-ஐ வெளியிட்டது. இதன்படி, சிறைத்துறை DIG மற்றும் கண்காணிப்பாளர்கள், தங்களுக்குக் கீழுள்ள மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளை ஆய்வு/விஜயம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
புதிதாகக் கிளை மற்றும் மாவட்டச் சிறை கட்டுவதற்கும், அல்லது அதனை மூடுவதற்கும், சிறை DGP-யின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசிடம் அனுமதி பெறவேண்டும். தற்போது தமி ழகத்தில் ஆரணி, போர்டோ நோவா, மேட்டுப் பாளையம், கீரனூர், பட்டுக்கோட்டை, கொடைக் கானல், திருவாடானை, சாத்தூர், திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் 9 கிளைச் சிறைகள் மூடிய நிலையில் உள்ளன. செய்யாறு கிளைச் சிறை வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளைச் சிறைகள் மூடப்பட்டால் அந்தப் பணியாளர்கள் அருகிலுள்ள மத்திய சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள். பெரும்பாலும் சிறைப் பணியாளர்கள் பணிபுரிய விரும்புமிடம் கிளைச் சிறை, அடுத்து மாவட்டச் சிறை, விரும்பாத இடம் என்றால் அது மத்திய சிறை.
லஞ்சப் புகார்: சில மாதங்களுக்கு முன் தர்மபுரி மாவட்டச் சிறைக்கு திடீர் வருகை தந்த சிறைக் கண்காணிப்பாளரிடம் ஒரு சிறைவாசி, தன்னை நேர்காணல் செய்யவந்த தனது மனைவி யிடமிருந்து காவலர் ஒருவர் ரூ.200/- பெற்றதாகப் புகார் செய்தார். யார் அந்தக் காவலர் என்பதை 5 மணி நேரத்துக்கும் மேலாக அனைத்துப் பணி யாளர்களிடமும் விசாரித்த சிறைக் கண்காணிப் பாளர், கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றார். அந்த மாவட்டச் சிறைக்கு சிறைக் கண்காணிப் பாளர் வருகை தந்தபோது, அவருக்கும் அவருடன் வந்த டிரைவர் மற்றும் பாதுகாவலர் (PSO) ஆகியோருக்கும் சேர்த்து ஹோட்டலில் ரூம், உணவு, வந்துசென்ற செலவு ஆகியவை செய்து தரப்பட்டது. இதில்லாமல் டிரைவருக்கு ரூ.2000-மும் வழங்கப்பட்டது. இவை அனைத்தை யும் நேர்மையான கிளைச் சிறை மற்றும் மாவட்டச் சிறைக் கண்காணிப்பாளர்களால் எப்படி வழங்க முடியும்? மாவட்டச் சிறை மற்றும் கிளைச் சிறைகளுக்கு, சிறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறை டி.ஐ.ஜி.கள் எப்பொழுது வருகை தந்தாலும், அவர்களுக்காகப் பண்ணும் மேற்படி செலவுகளை எல்லாம் எப்படி சமாளிப்பது? இவர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால்தானே கிளைச் சிறை மற்றும் மாவட்டச் சிறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் லஞ்சம் வாங்காமல் இருப்பார்கள்? தர்மபுரியில் மட்டுமல்ல, அனைத்துச் சிறைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் மாமூலாக நடக்கின்றன.
சில கண்காணிப்பாளர்கள் மற்றும் டி.ஐ.ஜி. கள் மாதாமாதம் மாவட்டச் சிறை மற்றும் கிளைச் சிறைகளில் இருந்து மாமூல் வசூல் செய்கின்றனர். எந்த மாவட்டச் சிறை மற்றும் கிளைச் சிறைகளில் அதிக ஆட்கள் அடைப்பு செய்யப்பட்டுள்ளார் களோ, அந்தச் சிறையில் உணவு சமைப்பதற்குத் தேவைப்படும் மளிகைப் பொருள்கள் மூலம் ஊழல் செய்யும் பணத்தில் சிறைவாசிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப பங்கு கேட்கின்றனர்.
அவ்வாறு பங்கு தரவில்லை என்றால், மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளுக்கு ஆய்வு என்ற பெயரில் சென்று துன்புறுத்தி, மன உளைச் சலை ஏற்படுத்துவார்கள். இன்றுவரை தொடரும் இந்த யுக்திகளை வகுத்துக் கொடுத்தது முன்னாள் டி.ஐ.ஜி.களே. அது என்னவென்றால், மத்திய சிறை யில் இருந்து டி.ஐ.ஜி.கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் தரவில்லை என்றால் ஆய்வு, வாலாயப் பார்வை (visit) என்கிற பெயரில் சிறைக்கு வந்து, சிறைக் கண்காணிப்பாளர்களுக்கு செலவுக்கு மேல் செலவு வைத்து, அவர்களைக் கொடுமைப்படுத்து வார்கள். உதாரணமாக, சிறைக் கண்காணிப்பாள ரிடமிருந்து ஊழல் பணத்தில் ரூ.2 லட்சத்தை டி.ஐ.ஜி. கேட்டும், அதை சிறைக் கண்காணிப்பாளர் தரவில்லை என்றால், சிறைக்குள் சுற்று வந்து ரூ.3 லட்சத்துக்கு செலவு செய்வது போன்ற வேலைகளை டி.ஐ.ஜி.கள் இழுத்து வைத்து விடுவார்கள். இந்த வேலைகளை இவர்கள் செய்தால்கூட, செய்த வேலையில் அது சரியில்லை, இது சரியில்லை என்று குறைகூறி, திட்டித் தீர்த்துவிடுவார்கள். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள டி.ஐ.ஜி. கேட்ட ரூ.2 லட்சத்தைக் கொடுத்துவிட்டு, ‘நன்றாகப் பணிபுரிகிறார்’ என்ற நல்ல பெயருடன் இருந்துவிடலாம் என்ற தப்பான எண்ணத்திற் கும், ஊழல் செய்யவேண்டிய நிர்பந்தத்திற் கும் சிறைக் கண்காணிப்பாளர்கள் தள்ளப்படு கிறார்கள். புதிதாக வரும் சிறை அதிகாரிகளுக்கு இந்நடைமுறையை அறிமுகம் செய்துவைத்து, பயிற்சி அளிப்பதே இந்த டி.ஐ.ஜி.கள்தான். மேலும் இந்த பார்முலாவையே சிறைக் கண்காணிப்பாளர்கள், மாவட்டச் சிறை மற்றும் கிளைச் சிறைகளில் பயன்படுத்துகிறார்கள்.
இதுகுறித்து தமிழக அரசுக் கோ, வேறு உயர் அதிகாரிகளுக் கோ புகார் அளித்தாலும், சம் பந்தப்பட்ட சிறைக் கண்காணிப் பாளர் அல்லது டி.ஐ.ஜி.க்கே அந்தப் புகார் மனுவினை அனுப்பி, அவர்களையே விசா ரணை அலுவலர்களாக நிய மிப்பதால், யாரும் புகார் அளிப்பதற்கு முன்வருவதில்லை. அவர்களே மறுபடியும் சம்பந்தப் பட்ட கிளை மற்றும் மாவட்டச் சிறைக்கு புகார் குறித்த விசா ரணைக்காக வரும்போதுகூட ஹோட்டலில் ரூம், சாப்பாடு, அருகிலுள்ள சுற்றுலாத் தலங் களுக்குக் கூட்டிச்செல்வது, டிரை வர்களுக்கு படிக்காசு ஆகியவற் றுக்கு செலவு செய்தாக வேண் டும். சிறைத்துறை அதிகாரிகள் மீது இதுபோன்ற புகார்கள் வந்தால், அதனைக் காவல் துறைக்கு அனுப்பி விசாரித்தால் தானே சற்றாவது பயம் வரும்? ஆனால், ஒருபோதும் இதைச் செய்யமாட்டார்கள்.
(ஊழல் தொடர்ந்து கசியும்…)