"நக்கீரனில் வெளிவரும் தமிழகச் சிறைகள் குறித்த தொடர் கட்டுரைகளை விடா மல் படித்து வருகிறோம். கோவை சரகத்தி லுள்ள கோயம்புத்தூர், சேலம் கிளைச் சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் பணியாற்றும் நாங்கள் பெரும் மனச்சுமையில் இருக்கிறோம். எங்களது பிரச்சினைகளையும் வெளியிட்டு உதவவேண்டும்'’என்று Guard Duty பார்க்கின்ற சிறைக் காவலர்கள்  சிலர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.  

Advertisment

கிளை மற்றும் மாவட்ட சிறை -சிறைகள் சீர்திருத்தக் கமிஷன் அறிக்கை தொகுதி -I, 1978-79 தேவைக்கேற்ப அவசியமான இடங்களில் புதிய கிளைச் சிறைகள் கட்டப்படவேண்டும். அப்போதுதான் மத்திய சிறைகளில் கூட்ட நெரிசல் குறைவதுடன்,  சிறைக்குப் புதிதாக வரும் கைதிகள், பழைய கைதிகளைப் பார்த்து பெரும் குற்றம் செய்யத் தூண்டுகிற இத்தொற்று நோய் தடுக்கப்படும்.’(அத்தியாயம் 7, பாரா 16).  தமிழகத்திலுள்ள அனைத்து கிளைச் சிறைகளையும் வருவாய்த்துறையிடமிருந்து சிறைத்துறையிடம் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.”  (அத்தியாயம் 7, பாரா 13). 

Advertisment

இதன்படி அரசாணை எண்: 675, உள் துறை (சிறை-2), நாள்: 30.03.1983-ன்படி வருவாய்த்துறையிடமிருந்து கிளைச் சிறைகள் அனைத்தும் சிறைத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டன. 

தமிழகத்தில் 98 ஆண்கள் கிளைச் சிறைகளும், 11 பெண்கள் கிளைச் சிறைகளும், ஆக மொத்தம் 109 கிளைச் சிறைகள் உள்ளன.  இந்தியாவிலேயே அதிக கிளைச் சிறைகள் உள்ள மாநிலமாக, தமிழ்நாடு  முதல் இடத்தில் உள்ளது. 

Advertisment

1983-க்கு முன் கிளைச் சிறைகள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, தாசில்தாரே கிளைச் சிறையின் கண்காணிப் பாளர். இவர் விடுப்பு மற்றும் இதர காரணங் களால்  பணியில் இல்லை என்றால், பத்திரப் பதிவுத்துறை சார்பதிவாளர் அப்பொறுப்பினை வகிப்பார்.  இக்கிளைச் சிறைகளுக்கு தாலுகா காவல் நிலையத்திலிருந்து பாதுகாப்பு வழங்கப் பட்டது.  1983-க்கு பிறகு,   கிளைச் சிறை கண்காணிப்பாளராக உதவி சிறை அலுவலர் (S.I. Rank) இருந்து வருகிறார். இவர் விடுப்பு மற்றும் இதர காரணங்களால்  பணியில் இல்லை என்றால், முதன்மை தலைமைக் காவலர் அப்பணியினை மேற்கொள்வார்.  

பணி முறை:  கிளை மற்றும் மாவட்டச் சிறைகளில் இவ்வாறுதான் டியூட்டி பார்க்க வேண்டுமென எந்த விதியிலும் கூறப்பட வில்லை. இங்கு பொதுவாக பணிநேரம் என்பது ஒரு நாள் டியூட்டி,  ஒரு நாள் ஓய்வு.  ஒரு மனிதனால் எப்படி 24 மணி நேரமும் பணிபுரிய முடியும்? என்பதெல்லாம் தனிக்கதை. தமிழகம் முழுவதும் காலை 9 மணிக்கு  இந்தச் சுழற்சி ஆரம்பித்து,  அடுத்த நாள் காலை 9 மணிக்கு  முடிகிறது. கிளைச் சிறை கண்காணிப்பாளர் தினமும் காலை 5.45 மணிக்கு வருகை தந்து,  மாலை 6.15-க்கு வெளியே செல்வார். இவருக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும். ஒரு முதன்மை  தலைமைக் காவலர் (CHW), ஒரு  தலைமைக் காவலர், நான்கு காவலர்களைக் கொண்ட ஒரு குழு ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் பொறுப்பேற்கும்,  24 மணி நேரமும் காவல் காக்கும்.  உதாரணமாக,  இன்று காலை 9 மணிக்கு பணியாளர்கள்  குழு ஒன்று  பணி யேற்கும்போது,  மற்றொரு குழு பணிப் பொறுப்பிலிருந்து இறங்கும். இதற்கு Guard Duty என்று பெயர். தமிழகத்திலுள்ள கிளை மற்றும் மாவட்ட சிறைகளில் 99 சதவீதப் பணியாளர் களுக்கு குடியிருப்புகளும் இல்லை, சிறையில் சமைத்துச் சாப்பிடுவதற்கு அனுமதியும் இல்லை.

கிளைச் சிறை மற்றும் மாவட்ட சிறை களில் பணியாளர்கள் தவறு செய்துவிட்டால்,  ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பதிலாக கொடுமைப்படுத்தும்  நடவடிக்கைகளே,  அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும். காலை 9 மணிக்குப் பதிலாக காலை 6 மணிக்கு Guard Duty மாற்ற உத்தரவிடுவார்கள். இதில் என்னென்ன கொடுமையை பணியாளர்கள் அனுபவிப்பார்கள் என்றால், குடியிருப்பு இல்லாததால் அருகிலுள்ள ஊர்களில் இருந்து பணிக்கு வரும் பணியாளர்கள்,  காலை 4 மணிக்கு எழுந்து டியூட்டிக்கு வரும்போது,  பேருந்து கிடைப்பதில் சிரமத்தைச் சந்திக்கின்ற னர். சிறையில் உயரதிகாரியாகப் பொறுப்பிற்கு வந்தபின் பேருந்தில் பயணமே செய்யாதவர் களுக்கு  இவர்களின் கஷ்டம் எப்படி தெரியும்? 

மேலும்,  காலை 9 மணிக்கு  டியூட்டி மாற்றினால்,  நிம்மதியாகத்  தூங்கி எழுந்து,  காலை உணவை வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு, மதியம் மற்றும் இரவுக்கும் சேர்த்து எடுத்துவந்து விடலாம். ஓட்டல் உணவை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்ளத் தேவை யில்லை, செலவும் குறையும். சிறையிலும் சமைத் துச்  சாப்பிட அனுமதிகோர வேண்டியதில்லை, குடும்பத்தினருடனும் சற்று நேரத்தைச் செலவிட முடியும்.  

தற்போது கோவை சரகத்திலுள்ள கோயம் புத்தூர் மற்றும் சேலம் மத்திய சிறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளை மற்றும் மாவட்ட சிறைகளில் மட்டும் காலை 6 மணிக்கு Guard duty மாற்றும் கொடுமை நடக்கிறது. சத்திய மங்கலம் கிளைச் சிறையில் ஒரு வருடத்திற்கு முன் பணியாளர் ஒருவர் டியூட்டி விஷயத்தில் தவறு செய்ததற்காக கோவைச் சரகம், தற்போது வரை இந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை தற்போதுள்ள DIG-யிடம் எடுத்துக் கூறியும், சிறை DGP இதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார் என,  சிறை DGP-யை ஒரு காரணமாகக் காட்டி, பணியாளர்களைக் கொடுமைப்படுத்தி வருவது நடக்கிறது.  பணியாளர்கள் கண்ணீருடன் கேட்கும் இந்தச் சிறு விஷயத்தைக்கூட சிறை அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை. இதனைச் செய்து கொடுப்பதால் அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ என்ன நஷ்டம் ஏற்பட்டுவிடும்? அதிகாரிகள் பண்ணும் கோடிக்கணக்கான ஊழலைவிடவா இழப்பு உண்டாகிவிடும்?  தமிழகச் சிறைகள் முழுவதற்கும் ஒரு சட்டம், கோவை சரகத்திற்கு வேறொரு சட்டம். 

மற்ற சரகங்களில் டியூட்டி விஷயங்களில் எந்தத் தவறும் நடப்பதில்லையா? ஒருவர் தவறு செய்ததற்கு 500 பணியாளர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? என்று  புலம்புகின்றனர். தவறு செய்த பணியாளர் மீது மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா? 

இரவில் மீட்கப்பட்ட பெண் பணியாளர்:  “நான் சரியாக வேலை பார்க்கவில்லை என்று மீட்டிங்கில் சிறை DGP திட்டிவிட்டார் எனக் கூறி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களி டம், அரசு விடுமுறை நாட்களிலும் கண்டிப்பாக வந்து பணிபுரிய வேண்டும்.  எல்லா நாட்களிலும் இரவு 10 மணிவரை கட்டாயம் பணிபுரிய வேண்டும்” என்று வற்புறுத்தி, கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அந்தச் சிறை அதிகாரி பணியாளர்களைக் கொடுமைப்படுத்தி வருகிறார். அரசு ஆணையின்படி காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரைதான் அரசு அலுவலகங்களின்  பணி நேரமாகும்.  அந்த அதிகாரியோ, நான்  என்ன செய்தாலும் IG எனக்கே சப்போர்ட் பண்ணுவார்.  என் மீது என்ன பெட்டிஷன் போட்டாலும்,  அதை IG பார்த்துக்கொள்வார்’என்று தெனாவெட்டாகக் கூறுகிறார்.  

jail1

பெண் பணியாளர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும்,  இரவு 10 மணிவரை பெண் பணியாளர்களை தவறான நோக்கத்துடன் அலுவலகத்திலேயே வைத்திருப்ப தும், பணி முடிந்து செல்லும் பணியாளர்களிடம்,   தனக்குப் பிடித்த  பாடலை பாடிவிட்டுச் செல்லுமாறு கட்டாயப்படுத்துவதும் என அநாகரிக  நடவடிக்கைகளில் அந்த அதிகாரி பொழுதைக் கழித்து வருகிறார். 

சீனியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளநிலை உதவியாளரை, இரவு 10 மணிக்கு மேலும் சிறை அலுவலகத்தில் வைத்திருந்து வேலை என்ற     பெயரில் கொடுமைப் படுத்தியதை அறிந்த வழக்கறிஞரான அவருடைய கணவர், காவல் துறையின் 100-க்கு போன் செய்து புகாரளித்தார். 

பெருமாள்புரம் காவல் நிலையத்தினர் பாளையங் கோட்டை மத்திய சிறைக்குச் சென்று, சீனியம்மாளை மீட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அதன்பிறகு,  சீனியம்மாளை மட்டும் விட்டுவிட்டு,  மற்ற  பெண்களிடம் வழிந்துவருகிறார். ஆண் பெண் என்ற பாகுபாடின்றி தொந்தரவு அளிப்பதாக அந்த அதிகாரி மீது சிறைத்துறை வட்டாரம் குற்றம் சாட்டுகிறது. இது போன்ற செயல்கள், தனக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர் களைக் கொடுமைப்படுத்த வேண்டு மென்ற  சிறை அதிகாரிகளின் ஆதிக்க மனோபாவத்தையே  காட்டுகிறது. ஏற்கனவே இது போன்ற புகாரில்தான் இவர், 2021-ல் சென்னை-II மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப் பட்டார் என்கிறார்கள். மேலும், வேறொரு விஷயத்திலும் இவர் 2023-ல் பதவியிறக்கம் (Depromotion)  செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

பெண் பணியாளர்களைப் பணியிடத்தில் பாலியல் கொடு மைகளில் இருந்து பாதுகாப்பதற்கு  விசாகா கமிட்டி உள்ளது. பணியிடத்தில் பாலியல் தொந்தரவு தடை சட்டம் 2013-ம் உள்ளது.  இதனைப் பெண் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பணியிடத்தில் ஆண்களுக்கு ஆண்களே பாலியல் தொந்தரவு செய்தால் என்ன செய்வது? அதற்கும் உரிய  வழிகாட்டுதல் களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

(ஊழல் தொடர்ந்து கசியும்…)