Advertisment

JAIL FOLLOW UP -29  தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்! பெண் கைதிகளுடன் வாழும் குழந்தைகளின் உரிமை!

jail


ந்தியாவில் பெண்கள் சிறை :  அகில இந்திய சிறை சீர்திருத்தக் கமிட்டி 1982-83, "சிறை மருத்துவமனைகளில் பெண்களுக்கு ஒரு தனி வார்டு இருக்கவேண்டும். ஒரு பெண் மருத்துவர் சிகிச்சை அளிக்கவேண்டும்'’எனக் கூறியது.

Advertisment

1987-ல் நியமிக்கப்பட்ட நீதிபதி கிருஷ்ண ஐயர் கமிட்டி, சிறைகளில் பெண் கைதிகளின் குழந் தைகளுக்கான உரிமை குறித்து Model Prison Manual-லில் சேர்த்தது. 6 வயது வரையிலுள்ள குழந்தைகள் அவர்களுடனே தங்கிக்கொள்ளும் வகையில் அனைத்து மாநில/யூனியன் பிரதேச சிறைக் கையேடுகளைத் திருத்த வழிவகை செய்தது. 

Advertisment

நாடாளுமன்ற நிலைக்குழுவின் துணைக் குழு, உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கிய பரிந்துரையின் படி  (மத்திய அரசின் சுற்றறிக்கை No.17014/3/2009-PR, Dated: 17.07.2009)  ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கெனப் பிரத்யேகமாக குறைந்தபட்சம் ஒரு சிறைச்சாலையாவது உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. 

மேனகா சஞ்சய்காந்தி மத்திய அமைச்சராக இருந்தபோது மத்திய பெண்கள் மற்றும்  குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், 25.06.2018-ல் "சிறைகளில் பெண்கள்' என்னும் தலைப்பில் இந்திய பெண் கைதிகளின் நிலை குறித்து வெளியிட்ட அறிக்கையில் “"கைதிகள் மற்றும் அதிகாரிகளால் பெண் கைதி களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை உட்பட,  சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை நாடு முழுவதும் பதிவாகியுள்ளது. இருப் பினும், குற்றவாளிகள் அதே இடத்தில் தங்கவேண் டிய கட்டாயத்தில் இருப்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கைதிகள் அச்சம்கொள்வதால், அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் இதுபற்றி கூறப்படுவதில்லை' எனக் குறிப்பிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக,  இந்திய சிறைகளிலுள்ள பெண் கைதிகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலைமையை வழங்குவ


ந்தியாவில் பெண்கள் சிறை :  அகில இந்திய சிறை சீர்திருத்தக் கமிட்டி 1982-83, "சிறை மருத்துவமனைகளில் பெண்களுக்கு ஒரு தனி வார்டு இருக்கவேண்டும். ஒரு பெண் மருத்துவர் சிகிச்சை அளிக்கவேண்டும்'’எனக் கூறியது.

Advertisment

1987-ல் நியமிக்கப்பட்ட நீதிபதி கிருஷ்ண ஐயர் கமிட்டி, சிறைகளில் பெண் கைதிகளின் குழந் தைகளுக்கான உரிமை குறித்து Model Prison Manual-லில் சேர்த்தது. 6 வயது வரையிலுள்ள குழந்தைகள் அவர்களுடனே தங்கிக்கொள்ளும் வகையில் அனைத்து மாநில/யூனியன் பிரதேச சிறைக் கையேடுகளைத் திருத்த வழிவகை செய்தது. 

Advertisment

நாடாளுமன்ற நிலைக்குழுவின் துணைக் குழு, உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கிய பரிந்துரையின் படி  (மத்திய அரசின் சுற்றறிக்கை No.17014/3/2009-PR, Dated: 17.07.2009)  ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கெனப் பிரத்யேகமாக குறைந்தபட்சம் ஒரு சிறைச்சாலையாவது உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. 

மேனகா சஞ்சய்காந்தி மத்திய அமைச்சராக இருந்தபோது மத்திய பெண்கள் மற்றும்  குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், 25.06.2018-ல் "சிறைகளில் பெண்கள்' என்னும் தலைப்பில் இந்திய பெண் கைதிகளின் நிலை குறித்து வெளியிட்ட அறிக்கையில் “"கைதிகள் மற்றும் அதிகாரிகளால் பெண் கைதி களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை உட்பட,  சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை நாடு முழுவதும் பதிவாகியுள்ளது. இருப் பினும், குற்றவாளிகள் அதே இடத்தில் தங்கவேண் டிய கட்டாயத்தில் இருப்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கைதிகள் அச்சம்கொள்வதால், அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் இதுபற்றி கூறப்படுவதில்லை' எனக் குறிப்பிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக,  இந்திய சிறைகளிலுள்ள பெண் கைதிகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலைமையை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றறிக்கை (No.16012/2/2018#PR, Dated: 2.11.2018)  மூலம் மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு வழங்கியது.  

பாராளுமன்ற நிலைக்குழுவின் 245th Report Of Home Affairs On  Prison #Conditions, Infrastructure And Reforms 24.08.2023,  மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கியிருக்கும் அறிவுரையில்,   “"பெண் கைதிகளிடம் பாலியல் பாகுபாடு பார்க்கக்கூடாது. பெண் கைதிகளுக்கு வழங்கியுள்ள சலுகைகள் அனைத் தும், பெண் பாலினம் கொண்ட திருநங்கைகளுக் கும் பொருந்தும்'’எனக் குறிப்பிட்டுள்ளது.    

jail1

இந்தியாவில் பெண் கைதிகளுக்காகப் பிரத்யேகமாக  பெண்கள் சிறைகள் 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ராஜஸ்தானில் (7), கேரளா (3), ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி (தலா 2), கர்நாடகா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளத்தில் (தலா 1) உள்ளன.  

பெண் கைதிகளைச் சிறையில் கண்ணியத்துடன் நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை Tokyo Rules of 1990-ஐ உருவாக்கியது. பெண் கைதி களுக்கான சிறப்புத் தேவைகளையும்,  கர்ப்பமான பெண் கைதிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் சிறையில் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும்,  The Treatment of Women Prisoners and Non Custodial Measures for Women Offenders (The Bangkok Rules) December 2010-ல், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை வெளியிட்டது.

உச்ச நீதிமன்ற வழக்குகள்:  R.D. Upadhyaya Vs State of Andhra Pradesh & Ors - பெண் கைதிகளில் 70 சதவீதத்துக்கும்  அதிகமானோர் திருமணமாகி குழந்தைகளைப் பெற்றவர்கள். பெண்கள் கைது செய்யப்படும்போது அவர்களது குழந்தையைப் பராமரிக்க யாரும் இல்லை. அக்குழந்தைகள் எந்தக் குற்றமும் செய்யாமல் தண்டனைக்கு ஆளாக்கப்படு கிறார்கள். இச்சூழ்நிலையில், அத்தகைய குழந்தை களின் ஆரோக்கியமான வளர்ப்பிற்கு, இந்தியா முழுமைக்குமான  வழிகாட்டுதல் களை வழங்கவேண்டி, வழக்கறி ஞர் ஆர்.டி. உபாத்யாயா மற்றும் பெண்கள் நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் பெண்களுக்கான சட்ட நடவடிக்கை (WARLAW)அமைப்பு,  இந்திய உச்ச நீதி மன்றத்தில் பொதுநல வழக்கினை  (W.P. (Civil) No.559 of 1994)  தாக்கல் செய்தது. 

உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் சுவாரஸ்யமான ஒரு பகுதி: 20-1-2000-ல் பெண்களுக்கான பத்திரிகையில் Dogged by Death in Jail  என்னும் தலைப்பில் கட்டுரை வெளியானது.  பெங்களூர் பள்ளி ஒன்றில்  படிக்கும் 6 வயது சிறுமி, அக்கட்டுரையை இணைத்து உச்ச நீதிமன்ற தலை மை நீதிபதிக்கு 08.03.2000-ல் கடிதம் எழுதி அனுப்பி னாள். அதனை இவ்வழக்கின் I.A.No.7 என உச்ச நீதிமன்றம் பதிவு செய்துகொண்டது. 20.03.2001-ல்  இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங் கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறைகளில் பெண் கைதிகளின் குழந்தை கள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டுமென  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கின் இறுதி யில் இந்திய சிறைகளில் தங்களது  தாய்மார்களுடன் வாழும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை 13.04. 2006-ல் வழங்கியது. இதனை மத்திய அரசின் சுற்றறிக்கை No.V -17013/9/2006 -PR, Dated: 15.05.2006-ன்படி அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியது. தமிழக அரசும்  அரசாணை எண்: 1527, நாள்: 11.11.2008-ன்படி சிறை விதிகள் 963, 964/1983-ஐ புகுத்தியது. 

உச்ச நீதிமன்ற வழக்கு W.P.(Civil) No.406 Of 2013 (Re#Inhuman Conditions In 1382 Prisons): இந்திய சிறைகளில் அதிகக்  கூட்டம்  உள்ளது குறித்து அனைத்து மாநிலங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டது. இது குறித்து மேற்கு வங்க மாநிலச் சிறைகளில் விசாரணை செய்து அறிக்கை அளிக்க, amicus curiae தபஸ்குமார் பன்ஜா என்ற வழக்கறிஞர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். அவர்  நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், "மேற்கு வங்கத்தில் பெண்களுக்கென "அலிப்பூர் சீர்திருத்த இல்லம்' என்ற ஒரே ஒரு சிறை மட்டுமே உள்ளது. இம்மாநி லத்தின் மற்ற இடங்களில், 1,885 அல்லது அதற்கு மேற் பட்ட பெண் கைதிகள், ஆண்கள் சிறைச்சாலைகளின்  தனித் தொகுதிகளில் அடைக் கப்பட்டுள்ளனர். அங்கு பணக்கார/சக்தி வாய்ந்த ஆண் கைதிகளுக்கு பெண் கைதிகள் சப்ளை செய்யப் பட்டு பாலியல் துஷ்பிரயோ கம் நடந்ததால், இதுவரை 196 குழந்தைகள் சிறையில் பிறந்து, பெண் கைதிகளுடன் வசித்து வருகின்றனர். இதுகுறித்து வெளியே சொல்ல மிகவும் பயப்படுகிறார்கள்' எனக் கூறி ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்தார்.  

jail2

இது குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் I.A.No.36553/2024, dated:16.02.2024-ஆக பதிவு செய்து, இக்குற்றச்சாட்டு களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மூத்த வழக் கறிஞர் கௌரவ் அகர்வாலை கேட்டுக்கொண்டது. அவர் விசாரணை செய்து அளித்த அறிக்கையை WPA:7252/2018, dated:20.02.2024 -ஆக பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம்,  பெண் கைதிகளில் பெரும்பாலானோர் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்திலேயே கர்ப்பமாக இருந்தனர் எனக் கூறி வழக்கினை முடித்து வைத்தது.   

கர்ப்பத்தைக் கலைப்பதற்கு பெண் சிறைக் கைதிக்கு உரிமை உள்ளதா? ஹலிமா Vs மத்தியப் பிரதேச மாநிலம் (W.P.No.408/2013) என்ற வழக்கில்  16.01.2013-லும், High Court on its own Motion Vs State of Maharashtra, 2017  என்ற பொதுநல வழக்கிலும், இரண்டு உயர் நீதிமன்றங்களும் “ஒரு கர்ப்பிணிக் கைதி தனது கர்ப்பத்தைக் கலைக்க விரும்பினால், மருத்துவரது அறிக்கையின் பரிந்துரைப்படி, The Medical Termination Of Pregnancy Act,1971-ன் பிரிவு  3(2)(b)(i)  அல்லது (ii)-ன்படி கலைத்துக்கொள்ள உரிமையுள் ளது என்றும்,  கைதியாக இருந்தாலும் மற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு உள்ள உரிமை இவர்களுக்கும் பொருந்தும்” எனக் கூறியுள்ளன.   

தமிழ்நாடு: சிறைவிதிகளில் பகுதி: 44/1983, 43/2024-ல் பெண் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள் ளது. வேலூர் பிரெசிடென்சி பெண்கள் சிறை 15.04.1930-ல் தொடங்கப் பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற் றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில், ஒரு  மாதத்துக்கும் மேலாக சிறைத் தண்ட னை விதிக்கப்பட்ட பெண் கைதிகள் இங்கு அனுமதிக்கப்பட்டனர் (சிறை விதி:942/1983). சுதந்திரத்திற்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த கைதிகள் மட்டும் இங்கு அடைக்கப்படுகின்றனர்.

jail3

திருச்சி பெண்கள் தனிச்சிறை 04.05.1997-ல் தொடங்கப்பட்டது.   ரீட்டா மேரி வழக்கில் ஏற்பட்ட கசப்பான அனுபவத் தால், தமிழகம் முழுவதும் பெண்களுக்கென தனிச்சிறைகள் ஏற்படுத்தப்பட்டன. சென்னை, கோவை, மதுரை என மேலும் 3 பெரிய சிறை களும், கடலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, திருப்பூர், திருவாரூர், நிலக்கோட்டை, பரமக்குடி, கொக்கிரக்குளம், தக்கலை ஆகிய ஊர்களில்  10  கிளைச் சிறைகளும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த 5 பெரிய பெண் கள் சிறைகளை,  பெண் கண்காணிப்பாளர் களே  நிர்வகிக்கவேண்டும் என W.P.No:31223 Of 2024 என்ற பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

(ஊழல் தொடர்ந்து கசியும்)

nkn041025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe