தமிழ்நாட்டில் பெண் கைதிகளுக்கும் திறந்தவெளிச் சிறைகளை உருவாக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் 2002-க்கு முன்புள்ள காலகட்டத்தில் சிறைக்கு வரும் பல பெண் கைதிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். இதற்குக் காரணம், ஆண் சிறைவாசிகள் அடைப்பு செய்யப்படும், ஆண் காவலர்கள் பணிபுரியும் மத்திய மற்றும் கிளைச் சிறைகளிலுள்ள தனி அறை/தொகுதிகளில் பெண் சிறைவாசிகளைப் பூட்டியதுதான். குறிப்பாக, ரீட்டா மேரி வழக்கு கற்றுக்கொடுத்த பாடத்தால், மகளிர்க் கென தனிச்சிறைகள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அரசும் சிறைத்துறையும் உணரும் நிலை ஏற்பட்டது.
ரீட்டா மேரி வழக்கின் பின்னணி: 2001-ல் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரீட்டா மேரி, ஈரோட்டிலுள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டைவிட்டு வெளியேறினார். ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள நாராயணவாசலு என்பவரது நகைக்கடையில் தனது கொலுசை விற்று சென்னைக்குச் செல்லவிருந்த ரீட்டாவிடம், அங்கு எதேச்சையாக வந்த ஆனந்த் மற்றும் கவிதா, ரீட்டாவுக்கு வேலை வாங்கிக்கொடுத்து மகளிர் விடுதியில் சேர்த்துவிடுவ தாகக் கூறி, திண்டிவனத்தில் சாந்தி, ஈஸ்வரி ஆகியோர் நடத்திவரும் விபச்சார விடுதியில் 12 ஆயிரம் ரூபாய்க்கு ரீட்டா மேரியை விற்றுவிட்டார். இவர்கள் ரீட்டா மேரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி னார்கள்.
அங்கு ரீட்டா மேரியைச் சந்தித்த லட்சுமணன், ஆனந்தன், சித்திக் பாஷா, மோகன் ஆகிய நான்கு இளைஞர்களுக்கு அவரது உண்மை நிலை அறிந்து இரக்கம் ஏற்பட்டதால், ரீட்டா மேரியை அங்கிருந்து கூட்டிக்கொண்டு பஸ் ஏறி தப்பித்துச் சென்றனர். இதையறிந்த விபச்சாரக் கும்பல் பஸ்ஸை மறித்து அவர்களை இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த ந
தமிழ்நாட்டில் பெண் கைதிகளுக்கும் திறந்தவெளிச் சிறைகளை உருவாக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் 2002-க்கு முன்புள்ள காலகட்டத்தில் சிறைக்கு வரும் பல பெண் கைதிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். இதற்குக் காரணம், ஆண் சிறைவாசிகள் அடைப்பு செய்யப்படும், ஆண் காவலர்கள் பணிபுரியும் மத்திய மற்றும் கிளைச் சிறைகளிலுள்ள தனி அறை/தொகுதிகளில் பெண் சிறைவாசிகளைப் பூட்டியதுதான். குறிப்பாக, ரீட்டா மேரி வழக்கு கற்றுக்கொடுத்த பாடத்தால், மகளிர்க் கென தனிச்சிறைகள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அரசும் சிறைத்துறையும் உணரும் நிலை ஏற்பட்டது.
ரீட்டா மேரி வழக்கின் பின்னணி: 2001-ல் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரீட்டா மேரி, ஈரோட்டிலுள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டைவிட்டு வெளியேறினார். ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள நாராயணவாசலு என்பவரது நகைக்கடையில் தனது கொலுசை விற்று சென்னைக்குச் செல்லவிருந்த ரீட்டாவிடம், அங்கு எதேச்சையாக வந்த ஆனந்த் மற்றும் கவிதா, ரீட்டாவுக்கு வேலை வாங்கிக்கொடுத்து மகளிர் விடுதியில் சேர்த்துவிடுவ தாகக் கூறி, திண்டிவனத்தில் சாந்தி, ஈஸ்வரி ஆகியோர் நடத்திவரும் விபச்சார விடுதியில் 12 ஆயிரம் ரூபாய்க்கு ரீட்டா மேரியை விற்றுவிட்டார். இவர்கள் ரீட்டா மேரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி னார்கள்.
அங்கு ரீட்டா மேரியைச் சந்தித்த லட்சுமணன், ஆனந்தன், சித்திக் பாஷா, மோகன் ஆகிய நான்கு இளைஞர்களுக்கு அவரது உண்மை நிலை அறிந்து இரக்கம் ஏற்பட்டதால், ரீட்டா மேரியை அங்கிருந்து கூட்டிக்கொண்டு பஸ் ஏறி தப்பித்துச் சென்றனர். இதையறிந்த விபச்சாரக் கும்பல் பஸ்ஸை மறித்து அவர்களை இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நான்கு இளைஞர்களைத் திண்டிவனம் அழைத்துச் சென்று, அங்கு சாராயம் விற்றதாகக் கூறி பொய் வழக்கு பதிவுசெய்து திண்டிவனம் கிளைச் சிறையில் அடைத்தனர். ரீட்டா மேரி மீது சட்ட விரோத மாக லாட்ஜில் தங்கியிருந்து விபச்சாரம் செய்ததாகக் கூறி, போலீஸ் அதிகாரிகள் ராஜ்குமார், முகமது நசீர் மற்றும் ராஜேந்திரன் ஆகி யோர் செஞ்சி காவல்நிலையத்தில் (குற்றஎண்: 1115/2001) வழக்கினைப் பதிவு செய்தனர். 29.10.2001-ல் ரீட்டா மேரியை திண்டிவனம் காவல்துறையினர் கைது செய்து நீதித்துறை நடுவர் த.ட.கல்பனா முன் ஆஜர்படுத்தி செஞ்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.
செஞ்சி கிளைச் சிறையில் நடந்த கொடூரம்: ரீட்டா மேரி செஞ்சி கிளைசிறையில் ரிமாண்டுக்கு வரும்போது லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி, சேகர், முருகேசன் ஆகிய சிறைக் காவலர்களும், கண்ணம்மா என்ற பெண் சிறைக் காவலரும் பணியிலிருந்தனர். ரீட்டாவை செல் 2-ல் பூட்டிவிட்டு கண்ணம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன்பின், காவலர்கள் ரீட்டா மேரியை செல் 9-க்கு மாற்றினார்கள். இரவு 11 மணியளவில் ரீட்டாவின் அறைக்குள் ஜெயபால் நுழைந்துள்ளார். அதன்பின் வரிசையாக லாசர், அன்பழகன், ராமசாமி ஆகியோர் சென்றனர். மாறி மாறி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். அந்த அறைக்கு அருகிலுள்ள அறையிலிருந்த விசாரணைச் சிறைவாசி ஏகாம்பரம் அரசுத் தரப்பு சாட்சி-7 ஆவார். இப்பாலியல் வன்கொடுமையால் ரீட்டா மேரியின் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 31.10.2001-ல் நீதித்துறை நடுவர் த.ட.கல்பனா முன் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மனநிலை மற்றும் உடல்நிலையைக் கண்ட நீதிபதி, நடந்ததை ரீட்டா மேரியிடம் விசாரித்து புகார் மனுவைப் பெற்று கவர்னர், உள்துறைச் செயலர், முதலமைச்சர், மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பிவைத்தார். அதன்பின், விழுப்புரம் அரசு மருத்துவ மனைக்கு ரீட்டா மேரி சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சைபெற்று வந்தபோது 05.11.2001-ல் பிணையில் விடுதலையானார்.
மதுரை People’s Watch என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த கல்யாணி, ரீட்டாவை அவருடைய வீட்டில் வைத்துப் பார்த்துக்கொண்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரீட்டாவை சிகிச்சை செய்த Dr.சுப்புலட்சுமி (Gynecologist) பாலியல் வன்கொடுமை நடந்ததை உடலிலுள்ள காயங்களை வைத்து 09.11.2001-ல் உறுதி செய்தார். ரீட்டா மனநலம் சரியில்லாமல் இருந்ததால், அவரது தாய் லீலா வதியிடம் புகார் பெற்று, மதிச்சி யம் காவல் நிலையத்தில் அளிக்கப் பட்டது. அது திண்டிவனம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு (குற்றஎண் : 679/2001) பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை CBI விசா ரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டி கல்யாணி, லூசி, லூர்து சேவியர் ஆகிய சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கினை (Crl.O.P. Nos. 24090 & 24248 of 2001) தாக்கல் செய்தனர். இவ் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன், இதுகுறித்து அப்போ தைய தலைமையிடத்து ஐ.ஜி.திலக வதி IPS விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, இடைக்கால உத்தரவினை 23.11.2001-ல் பிறப்பித் தார். ஐ.ஜி. திலகவதி விசாரணை மேற்கொண்டு, ரீட்டா மேரி மீது பாலியல் வன்கொடுமை நடந்ததை உறுதிசெய்து உயர்நீதிமன்றத்தில் 04.12.2001-ல் தனது அறிக் கையைத் தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றம் 04.12.2001-ல் அளித்த உத்தரவின் படியும், Inspector General of Police (HQ) Chennai அரசுக்கு எழுதிய (D.O.Lr.27/IGP/HQ/2001, dated 5.12.2001) கடிதத்தின் படியும், G.O.(2D).No.346 Home (Police.XII) Department, dated 12.12.2001-ன் படி இடைக்கால நிவாரண மாக ரூ.5,00,000/- ரீட்டா மேரிக்கு வழங்கப்பட்டது. அந்த நான்கு இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் சமூக களங்கத்திலிருந்து விடுபட, அவருடைய புகைப்படங்கள் மற்றும் பிற விவரங்களை ஊடகங்கள் வெளியிடுவதைத் தடுக்கவேண்டும் எனவும், மீறுவோர் மீது IPC பிரிவு:228A-ஐ பயன்படுத்தவேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது.
உயர் நீதிமன்றம் ரீட்டா மேரி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி 05.12.2001-ல் உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. கண்காணிப்பாளர் ஸ்ரீதர், சிறைக் காவலர் களை 06.12.2001-ல் கைதுசெய்தார். அதன்பின், இவ் வழக்கை விசாரித்து திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் S.C.No:126-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
தண்டனை விவரம்: இவ்வழக்கில் நீதிபதி தயாளன் 21.06.2006-ல் வழங்கிய தீர்ப்பில் சிறைக் காவலர்கள் 6 பேரில் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற இரு சிறைக் காவலர் களான சேகரும் முருகேசனும் விடுவிக்கப்பட்டனர்.
விபச்சார கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரில் சாந்தி, ஈஸ்வரி இருவ ருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அவர்களுக்கு துணைபுரிந்த ஆனந்தராஜ், ஆனந்தன், கவிதா ஆகிய மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு அளிக்கப் பட்டபோது, இவர்கள் மூவரும் ஏற்கனவே சிறையில் 4 ஆண்டுகளைக் கழித்திருந்தனர். அதனால், இவர்கள் மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே 10 ஆண்டு தண்டனை பெற்ற நான்கு சிறைக் காவலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் Crl.A.No.913 & 929 of 2006 என்ற வழக்கில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி சுதந்திரம் விசாரித்து லாசர் மீது மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட வில்லை எனக்கூறி அவரை விடுவித்தும், மற்ற மூவருக்கும் தண்டனையை உறுதி செய்தும் 29.10.2010-ல் உத்தரவிட்டார்.
பெண் கைதிகளுக்கு சிறைகளில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வராதவை இன்னும் எத்தனையோ? சிறைகளில் நடந்த கொடூரங்களை மனதுக்குள் புதைத்தபடி நரக வாழ்க்கையை அனுபவிக்கின்ற பெண்கள் இன்னும் எத்தனை பேரோ?
(ஊழல் தொடர்ந்து கசியும்…)
________________
மனநல ஆலோசனைப் பிரிவு!
பொதுவாக தற்கொலை என்பது, வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாதவர்களின் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. சிறைவாசிகள் சிறையில் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்பதற்காகவும், அவகளின் மன அழுத்தங்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவும், ஏ.ஞ. (ஙள்) சர்.781, ஐர்ம்ங் (டழ்ண்ள்ர்ய்.ஒ) உங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற், க்ஹற்ங்க்:17.11.2011-ன்படி அனைத்து மத்திய சிறைகளிலும் புதிதாக டள்ஹ்ஸ்ரீட்ர்ப்ர்ஞ்ண்ள்ற் பணியிடம் தோற்று விக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். டள்ஹ்ஸ்ரீட்ர்ப்ர்ஞ்ண்ள்ற்-களுக்கு உதவுவதற்கும், மன நல ஆலோசனை வழங்குவதற்கும் அரசாணை எண்: 704, நாள்: 17.09.2013 மற் றும் சிறை உஏட சுற்றறிக்கை எண்: 17883/ஈ.ந.2/2011, நாள்: 11.12.2014-ன்படி, ஒவ்வொரு மத்திய சிறைக்கும் தலா இரண்டுபேரும், பெண்கள் சிறைக்கு தலா ஒருவர் என்ற வீதத்திலும் ஆற்றுப்படுத்துநர்கள் (ஸ்ரீர்ன்ய்ள்ங்ப்ப்ர்ழ்ள்) ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, கௌரவ ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையின் மனநல ஆலோசகர் வினோத் 23.06.2024-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை யைத் தடுப்பதற்கு ஆலோசனை வழங்கவேண்டிய அதிகாரியே, இரண்டு நாட் களாகத் தொடர்ந்து ள்ப்ர்ஜ் ல்ர்ண்ள்ர்ய் குடித்து தற்கொலை செய்துகொண்டது, சிறைத்துறையில் அதிர்வலைகளை உண்டுபண்ணியது.