ந்தியாவில் திறந்தவெளிச் சிறை:             1905-ல் கைதிகளைப் பொதுப்பணித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காக மும்பையின் தானே மத்திய சிறையிலுள்ள சிறப்பு வகுப்பு கைதிகளிடமிருந்து கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திறந்த வெளிச் சிறை தொடங்கப்பட்டு, 1910-ல் மூடப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதல் திறந்தவெளிச் சிறை 1949-ல் லக்னோவில் உள்ள மாதிரி சிறையுடன் நிறுவப்பட்டது.

Advertisment

NCRB சிறை புள்ளிவிவர அறிக்கை, 2022:  இந்தியாவில் மொத்தம் 91 திறந்தவெளிச் சிறைகளும் 17 மாநிலங்களில் மட்டுமே உள்ளன. ராஜஸ்தான் (41), மகாராஷ்டிரா (19), மத்தியப் பிரதேசம் (7), குஜராத், மேற்கு வங்கம் (தலா-4), கேரளா, தமிழ்நாடு (தலா-3), கர்நாடகா, ஆந்திர, தெலுங்கானா, ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு திறந்தவெளிச் சிறை உள்ளது. மற்ற மாநிலம்/யூனியன் பிரதேசங்களில் திறந்தவெளிச் சிறைகள் இல்லை. 

Advertisment

jail1

ஹரியானா மாநிலத்தில் குடும்பமில்லாத சிறைவாசியும், ராஜஸ்தான், மேற்கு வங்கம்                      மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் திருமணமாகாத கைதிகளும் திறந்தவெளிச்                   சிறைகளுக்கு மாற்றப்படுவதில்லை.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மாநிலங்களிலுள்ள தண்டனைபெற்ற நன்னடத்தைக் கைதிகள், திறந்தவெளிச் சிறைகளுக்கு  அனுப்பப்பட்டு, தங்கள் குடும்பத்தினருடன் தங்கி, சிறைக்கு வெளியே 10 முதல் 20 கி.மீ. தூரம்வரை பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.   

Advertisment

இந்தியாவில்  ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டுமே 34 விசாரணைக் கைதிகள் (29 ஆண்கள் மற்றும் 5 பெண்கள்) திறந்தவெளிச் சிறையிலிருந்தனர். அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  

தர்ம்பீர் யள் உத்தரப்பிரதேச மாநிலம் (1979) வழக்கில், இளம் வயது கைதிகளை  திறந்தவெளிச் சிறையில் அடைப்பது நன்மையைக் கொடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிப் பிடத்தக்கது. 

ராஜஸ்தான்: இம்மாநிலத்திலுள்ள 41 திறந்தவெளிச் சிறைகளில் 1604 கைதிகள் தங்கிக்கொள்ள இடவசதி உள்ளது. இதில் தற்போது 1273 கைதிகள் குடும்பத்துடன் தங்கி, சிறைக்கு வெளியே 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடங்களில் கணக்கர்கள், பள்ளி ஆசிரியர்கள், வீட்டு உதவியாளர்கள் மற்றும் Security  Guard-களாக காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை பணிபுரிகின்றனர். இவர்களின் குழந்தைகள் அருகிலுள்ள பள்ளி/கல்லூரிகளில் படிக்கின்றனர். 

கோட்டாவிலுள்ள திறந்தவெளிச் சிறையில் குடும்பத்துடன் வசிக்கும் பூல்சந்த் என்ற சிறைவாசியின் மகனான பியூஷ் மீனா, ஜூன் 2016-ல், JEE தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஐ.டி. படிப்பில் சேர்ந்துள்ளார்.  இச்சிறையின் அன்றாட விவகாரங்களை  நிர்வகிப்பது,  கைதிகள் தலைமையிலான பண்டி பஞ்சாயத்துகள் (Bandi panchayat) ஆகும்.    

இமாச்சலப் பிரதேசம்: Kanda Model Central Jail வளாகத்தில் 135 கைதிகளுள்ள இம்மாநிலத்தின் ஒரே திறந்தவெளிச் சிறையால், வருடத்திற்கு ரூ.3.5 கோடிக்கும் மேல் சிறைத்துறை வருவாய் ஈட்டி வருகிறது. 

சிறை-DGP சோமேஷ் கோயலால் உருவாக்கப்பட்ட ஆறு நடமாடும் வேன் கேன் டீன்கள் மற்றும் Book Café  என்ற  பேக்கரி ஆகியவற்றில் கைத்தறி மற்றும் பிற உணவு வகைகள் உள்ளிட்ட சிறையில் தயாரிக்கப்படும் பொருள்கள் விற்கப்படுகின்றன. 

தனது காதலியைக் கொன்றதற்காகத் தண்டனை பெற்ற முன்னாள்  ஐ.ஐ.டி. மாணவர் கௌரவ் வர்மா(28), சிறையில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கான Website, Visitor Management  போர்ட்டலை வடிவமைத்துள்ளார். அவர் இப்போது சிம்லாவிலுள்ள ஒஒப பயிற்சி மையத்தில் வேதியியல் மற்றும் இயற்பியல் கற்பிக்கிறார். 

ஆந்திரப் பிரதேசம்: அனந்தபூரில் 1427 ஏக்கர் பரப்பளவிலுள்ள திறந்தவெளிச் சிறையில் The Himalaya Drug Company,   தனது பெருநிறுவன சமூகப்பொறுப்பாக(corporate social responsibility), கைதிகளைக்கொண்டு  மருத்துவ மூலிகைகளை வளர்க்கிறது. மேலும் விவசாயமும் செய்கிறார்கள். அதற்கான சம்பளத்தைக் கைதிகள் பெறுகிறார்கள். 

கேரளா:  29.08.1962-ல் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் 474 ஏக்கர் பரப்பளவில் திறக்கப்பட்டு, 370 சிறைவாசிகளுள்ள நெட்டிவ் கேதேரி (Nettvketheri) திறந்தவெளிச் சிறையின் வருட வருமானம் ரூ.2 கோடி. இச்சிறையின் 200 ஏக்கரில் ரப்பர் தோட்டமும், மீதமுள்ள இடத்தில் நெல் பயிரிடுதல், கோழி மற்றும் மீன்வளர்ப்பு  செய்கிறார்கள். கைதிகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு மாதம் பரோல் விடுப்பும், குடும்ப உறுப்பினரின் மரணம், திருமணம் மற்றும் பிற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு ஐந்து நாள் விடுப்பும் வழங்கப்படுகிறது. 

தமிழ்நாடு:  தமிழகச் சிறை விதிகளில் தொகுதி-II, பகுதி-34-ல் திறந்தவெளிச் சிறை பற்றி கூறப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் (கோவை மத்திய சிறை), ஜாகிர் அம்மாபாளையம் (சேலம் மத்திய சிறை) ஆகிய இரண்டு இடங்களில் இருக்கிறது. அதன்பின், மூன்றாவதாக G.O.(Ms).No.1351, dated:30.09.2008 & G.O.(Ms).No.443, dated:03.07.2013-ன்படி, புரசடை உடைப்பில் (மதுரை மத்திய சிறை)  தொடங்கப்பட்டது. இம்மூன்று  திறந்தவெளிச் சிறைகளிலும் சேர்த்து தற்போது 93 சிறைவாசிகள் உள்ளனர். சிறை விதிகள்: 318(2)/1983,  329(2)/2024-ன்படி, ஒருநாள் வேலை செய்தால் ஒரு நாள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படுகிறது. 

jail2

P.Bharathi Vs Union Territory Of Pondicherry:  WP.No.9220 Of 2005 ஞச் 2005 என்ற வழக்கில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் திறந்தவெளிச் சிறையைத் திறக்கவேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் 06.11.2006-ல் வலியுறுத்தியது.  

சாஸ்த்ரா  பல்கலைக்கழக  வழக்கு:  1984-ல் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது. 03.12.1985-ல் திறந்தவெளிச் சிறை கட்டுவதற்காக சிறைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 58.71 ஏக்கரில் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தினர், திருமலைச்சமுத்திரம் என்ற இடத்திலுள்ள 20.62 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டினார்கள். இந்த இடத்திற்குப் பதிலாக புதுக்கோட்டையில் மாற்று இடம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள வேண்டியும், இந்த இடத்தில் திறந்தவெளிச்சிறை கட்டுவதற்குத் தடைவிதிக்கவும்,  ர.ட.சர்ள்.14718 & 14719 ர்ச் 1998 என்ற வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மாற்று இடம் வழங்குவதை தமிழக அரசு பரிசீலிக்குமாறும், திறந்த            வெளி சிறை கட்டுவதற்கு இடைக் காலத் தடையும் விதிக்கப்பட்டது. இக்கோரிக்கை G.O.Ms.1030 Prison (Home) Department, dated 25#07#1996ன்படி அரசால் நிராகரிக்கப் பட்டது.

மேலும் இந்த இரண்டு ரிட் மனுக்களும் 13-07-1998-ல் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்பின் மீண்டும் W.P.No.9037 of 2004 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பலகட்ட விசாரணைக்குப்பின்,  ஆக்கிரமிப்பு செய்த இடத்தைத் திருப்பி வழங்குமாறும், திருமலைச்சமுத்திரத்தில் புதிய திறந்தவெளிச் சிறை கட்டிக்கொள்ளவும் 11-08-2017-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

பெண்கள் திறந்தவெளிச் சிறை:   இந்தியாவின் முதல் பெண்களுக்கான திறந்தவெளிச் சிறை 2010-ல் மகாராஷ்டிரா வின் எரவாடாவிலும்,  தென்னிந்தியாவில் 2012-ல் கேரளாவின் பூஜப்புராவிலும் திறக்கப்பட்டது.

Sunil Kumar Gupta Vs Government of NCT of Delhi (W.P.(C):7787/2017) என்ற வழக்கில்,  பெண்களுக்கும் திறந்தவெளிச் சிறைகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும், பாலினப் பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும்   டெல்லி உயர் நீதிமன்றம் 14.05.2018-ல் கூறியுள்ளது. 

தமிழ்நாடு சிறைவிதி எண்:796, 797/1983-ல் திறந்தவெளிச் சிறைக்கு பெண்கள் தகுதியில்லை என்று கூறியிருப்பது, அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 16 மற்றும் 21-க்கு எதிரானவை என்றும், கைதிகளுக்கிடையே பாலினப் பாகுபாடு பார்க்கும் இவ்விதிகளை மறுபரிசீலனை செய்யவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை W.P (MD) Mo.17946 of 2018,, நாள்:10.09.2018-ல் உத்தரவிட்டது. அதனால்,  G.O.(Ms).No.367 (Home Department) dated 03.09.2021-ன்படி விதி:797 (9, 10, 11)/1983 நீக்கம் செய்யப்பட்டது. மேலும் சிறை விதி: 794-ஐ திருத்தம் செய்து, தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய சிறைகளுக்கும் ஒட்டியுள்ள  நிலத்தில், Semi Open Air Jail-ஐ திறக்கவும் ஆணையிட்டது.      

மீண்டும் இவ்வழக்கின் விசாரணையில், பெண் சிறைவாசிகளுக்கு திறந்தவெளிச் சிறை இல்லாததால் அதிக தண்டனைக் குறைப்பு (Remission) கிடைப்பது தடுக்கப்படுகிறது என வாதிடப்பட்டது. அதற்கு உயர் நீதிமன்றம், குறைந்த பட்சம் ஒரு பெண்கள் திறந்தவெளிச் சிறையையாவது தமிழகத்தில் திறந்திட பரிசீலிக்க வேண்டுமென 26.07.2024-ல் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால்,  மேற்கூறிய எதுவும் தற்போதுவரை நடைமுறை படுத்தப் படவில்லை.  

கைதிகளைச் சீர்திருத்தும் சுமையை, கைதிகளின் குடும்பத்துடன் அரசு பகிர்ந்துகொண்டால் அரசின் சுமையும், செலவினங்களும் குறையும், வருவாயையும் அதிகரிக்கும். எனவே தமிழகத்தில் அதிகமான திறந்தவெளிச் சிறைகளைத் திறக்கவும், இச்சிறைகளில் கைதிகள் தங்கள் குடும்பத்துடன் தங்க அனுமதிக்கவும், சிறைக்கு வெளியே சென்று வேலை செய்து வருவாய் ஈட்டுவதற்கும்,  தமிழக அரசு மற்றும் சிறை உஏட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

(ஊழல் தொடர்ந்து கசியும்)