Advertisment

JAIL FOLLOW UP - 26  தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்! கைதிகளின் சுய ஒழுக்கத்திற்கான திறவுகோல்!

jail

 "சிறை வாழ்க்கையின் யதார்த்தங்களையும், கைதிகளின் மனநிலைகளையும் வெளிச்சம்போட் டுக் காட்டிய ரஷ்ய எழுத்தாளர் Fyodor Dostoevsky-ன் The House of the Dead-லிருந்து திகார் சிறையில் பல பொறுப்புகளை வகித்த சுனில் குப்தா எழுதிய Black Warrant வரை பல புத்த கங்களைப் படித்திருக்கிறேன். அதே ஆர்வத்தில் தமிழகச் சிறைகளில் கோரதாண்டவ மாடும் ஊழல் குறித்து நக்கீரனில் எழுதுகிறார்களே எனத் தொடர்ந்து படித்து வருகிறேன். கோடிகளில் ஊழல் என்று தலைப்பு இருந்தாலும், உலக அளவில் சிறைகள் மற்றும் கைதிகளின் பன்முகத்தன்மை குறித்து  இத்தொடரில் விவரித்து வரு வது  வியப்பாக உள்ளது' என்று தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஓய்வுபெற்ற சிறை அதிகாரி.    

Advertisment

கைதிகளின் கூட்ட நெரிசலையும், அரசின் செல வினத்தையும் குறைப்பதற்கான  சிறந்த வழி -திறந்தவெளிச் சிறை (Open Air Jail): 18ஆம் நூற்றாண்டின் சிறை நிபுணர் களான ஜான் ஹோவர்ட் மற்றும் ஜெர்மி பெந்தம் ஆகியோர், மூடிய அமைப்பிலுள்ள சிறை களில் கொடுக்கப்படும் தண்ட னைகளால் குற்றங்களைத் தடுக்கமுடிவதில்லை என்ற முடிவுக்கு வந்தனர். பலகட்ட சோதனை களுக்குப் பின், இவர்களது தொடர் முயற்சிகளால் உலகின் முதல் திறந்தவெளிச் சிறை 1891-ல் சுவிட் சர்லாந்தில் (Witzwill) திறக்கப்பட்டது. அத

 "சிறை வாழ்க்கையின் யதார்த்தங்களையும், கைதிகளின் மனநிலைகளையும் வெளிச்சம்போட் டுக் காட்டிய ரஷ்ய எழுத்தாளர் Fyodor Dostoevsky-ன் The House of the Dead-லிருந்து திகார் சிறையில் பல பொறுப்புகளை வகித்த சுனில் குப்தா எழுதிய Black Warrant வரை பல புத்த கங்களைப் படித்திருக்கிறேன். அதே ஆர்வத்தில் தமிழகச் சிறைகளில் கோரதாண்டவ மாடும் ஊழல் குறித்து நக்கீரனில் எழுதுகிறார்களே எனத் தொடர்ந்து படித்து வருகிறேன். கோடிகளில் ஊழல் என்று தலைப்பு இருந்தாலும், உலக அளவில் சிறைகள் மற்றும் கைதிகளின் பன்முகத்தன்மை குறித்து  இத்தொடரில் விவரித்து வரு வது  வியப்பாக உள்ளது' என்று தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஓய்வுபெற்ற சிறை அதிகாரி.    

Advertisment

கைதிகளின் கூட்ட நெரிசலையும், அரசின் செல வினத்தையும் குறைப்பதற்கான  சிறந்த வழி -திறந்தவெளிச் சிறை (Open Air Jail): 18ஆம் நூற்றாண்டின் சிறை நிபுணர் களான ஜான் ஹோவர்ட் மற்றும் ஜெர்மி பெந்தம் ஆகியோர், மூடிய அமைப்பிலுள்ள சிறை களில் கொடுக்கப்படும் தண்ட னைகளால் குற்றங்களைத் தடுக்கமுடிவதில்லை என்ற முடிவுக்கு வந்தனர். பலகட்ட சோதனை களுக்குப் பின், இவர்களது தொடர் முயற்சிகளால் உலகின் முதல் திறந்தவெளிச் சிறை 1891-ல் சுவிட் சர்லாந்தில் (Witzwill) திறக்கப்பட்டது. அதன்பின் 1916-ல் அமெரிக்காவிலும், 1930-ல் மஃ-யிலும், 1950-ல் நெதர்லாந்திலும் திறக்கப்பட்டது.  

இந்தியாவில் 1949-ல் பக்வாசா (Pakwasa) கமிட்டி, சிறைவாசிகளைக்கொண்டு  சாலை அமைக்கவும்,  அணைக் கட்டுமானம் போன்ற பொதுப்பணிகளுக்கு  கைதிகளின் உழைப்பைப் பயன்படுத்தவும்,  அப்பணிக்கான ஊதியத்தை வழங்கவும்,  திறந்தவெளிச் சிறைகளை ஏற்படுத்த பரிந்துரைத்தது. 

jail1

நெதர்லாந்தின் ஐஹஞ்ன்ங் நகரில் 1950-ல் நடந்த 12th International Penal and Penitentiary Congress, பாரம்பரியச் சிறைகளை திறந்தவெளிச் சிறைகளாக மாற்றவேண்டியதன் அவசியத்தையும், திறந்த வெளிச் சிறைகளை நிறுவவும்  பரிந்துரைத்தது. 

Advertisment

1952-ல் அமெரிக்க குற்றவியல் நிபுணரான சர் வால்டர் ரெக்லெஸ், இந்தியாவிற்கு வந்து ஆய்வுசெய்து 'Jail Administration in India'  என்ற  அறிக்கையை  ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித் தார். இவ்வறிக்கையில் கைதிகளுக்குத் தண்டனை வழங்குவது, கொடுமைப்படுத்தும் விதத்தில் இருப்பதற்குப் பதிலாக, சீர்திருத்தும் வகையில்  (Deterrent to Reformative) இருக்கவேண்டுமென அவர் வலியுறுத்தினார்.  

1955-ல் ஜெனீவாவில் நடைபெற்ற 1st United Nations Congress on Prevention of Crime and Treatment of Offenders மாநாடு, கைதிகளை நடத்து வதற்கான குறைந்தபட்ச தரநிலை விதிகளை (UN Standard Minimum Rules for the Treatment of Prisoners) வகுத்தது. அதனை ஜூலை 31, 1957-ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன் சில் ஏற்றுக்கொண்டது.  இத்தீர்மானத்தின் பிரிவு 63(2)(3),   திறந்தவெளிச் சிறை  குறித்துக் கூறுகிறது.   

மேற்கண்டவற்றின் விளைவாக 1957-ல் அகில இந்திய சிறைக் கையேடு கமிட்டி அமைக்கப்பட் டது. இக்கமிட்டி, கைதிகளைச் சீர்திருத்துவதற்கான சாதனமான திறந்தவெளிச் சிறைகளை நிறுவ வேண்டுமெனப் பரிந்துரைத்தது. அதன்பின், ஏப்ரல் 1980-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.முல்லா தலைமை யில் அகில இந்திய சிறை சீர்திருத்த கமிட்டியை நியமித்தது. மார்ச் 1983-ல் அவர் சமர்ப்பித்த இறுதி அறிக்கையின், Volume -I  -ன் தொகுதி 24-ல், ‘இந்தியாவிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் திறந்தவெளிச் சிறைகள் திறக்கப்பட வேண்டுமென வும், ‘சுய ஒழுக்கம்’ என்ற கருத்தை அடிப்படை யாகக்கொண்டும், குறைந்தபட்ச பாதுகாப்புடனும்  அமைத்து, மாநில அரசுகள் திறந்தவெளிச் சிறைகளை திறம்பட பயன்படுத்தப்பட வேண்டு மெனவும் ’ பரிந்துரைத்தது.   

மேலும், The United Nations Standard Minimum Rules for the Treatment of Prisoners (The Nelson Mandela Rules), 2015-ன் பிரிவு 89 (2), (3)-ல்  திறந்தவெளிச் சிறை குறித்து கூறப்பட்டுள்ளது.  

ஸ்ரீராமமூர்த்தி யள் கர்நாடகா மாநில அரசு என்ற வழக்கில், டிசம்பர் 23, 1996 அன்று வெளியான  இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: பெங்களூரு மத்திய சிறையின் கைதியான ராமமூர்த்தி, ஏப்ரல் 12, 1984-ல் இந்திய தலைமை நீதிபதிக்கு (CJI)  கர்நாடகச் சிறைகளில் உள்ள மோசமான நிலைமைகள் குறித்து ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தை,  இந்திய அரசியலமைப் பின் பிரிவு 32-ன் கீழ் ஒரு ரிட் மனுவாக உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, பெங்களூரு மாவட்ட நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது. மாவட்ட நீதிபதி, ஏப்ரல் 28, 1993-ல் தனது விரி வான அறிக்கையினைச் சமர்ப்பித்தார். அவ்வறிக் கையானது, சிறையின் தவறான மேலாண்மை, கூட்ட நெரிசல், மோசமான சுகாதாரம், தரமற்ற உணவு, போதுமான மருத்துவ வசதிகள் இல்லாதது மற்றும் கடுமையான குற்றவாளிகளிடமிருந்து சிறார்களைப் பிரிக்கத் தவறியது உள்ளிட்ட பல சிக்கல்களை வெளிப்படுத்தியது. 

இவ்வழக்கில், இந்திய சட்ட ஆணையத்தின் 78-வது அறிக்கையின், அத்தியாயம்-9, பத்தி 20ஆ-ல் "சிறையில் கைதிகளின் கூட்ட நெரிசல்' என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து பொருத்தமான முடிவு எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், நாட்டின் ஒவ் வொரு மாவட்டத் தலைமையகத்திலும் குறைந்த பட்சம் ஒரு திறந்தவெளிச் சிறையையாவது திறக்கவேண்டுமெனக் கூறிய முல்லா கமிட்டியின் அறிக்கையினை நடைமுறைப்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.  

jail2

உச்ச நீதிமன்ற வழக்கு W.P(CIVIL) NO.406 of 2013 #382 சிறைகளில் மீண்டும் மனிதாபிமானமற்ற  நிலைமைகள்’: இவ்வழக்கில், 2017-ல் ராஜஸ்தான் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் (RSLSA)  நிர்வாகத் தலைவரும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியுமான கே.எஸ்.ஜாவேரி, ராஜஸ்தானின் திறந்தவெளிச் சிறைச்சாலை முறையைப் பற்றி ஆய்வு செய்வதற்கு கௌரவ சிறை ஆணையராக ஸ்மிதா சக்ரபர்த்தியை  நியமித்தார். இவர், ராஜஸ்தான் மாநிலம் முழுவதுமுள்ள 15 திறந்த வெளிச் சிறைகளுக்குச் சென்று, 428 தண்டனைக் கைதிகளிடம் நேர்காணல் நடத்தி, ஏழு மாதங்கள் ஆய்வு செய்தபின், 2729 பக்கங்கள்கொண்ட ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதன்பின், அவ்வறிக்கை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதில், மூடிய அமைப்பிலுள்ள சிறையைக் காட்டிலும் 78 மடங்கு அரசுக்கு செலவு குறையும் என்றும் (அதாவது மூடிய அமைப்பிலுள்ள சிறையில் ஆண்டுக்கு ரூ.78 கோடி செலவாகிறது என்றால் திறந்தவெளிச் சிறையில் ரூ.1 கோடிதான் செலவாகும்),  கைதிகளின் மறுவாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்பில் வெற்றிபெற்ற திட்டம் எனவும் கூறி,  அனைத்து மாநிலங்களிலும்  திறம்பட செயல்படுத்தும்படி உத்தரவிட்டது.   

(ஊழல் தொடர்ந்து கசியும்)

jailbox

nkn240925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe