ந்தியச் சிறைகளை நிர்வகிப்பதில் ஒரு விசித்திரமான பிரச்சினையாக உள்ளது பாலியல்  உறவுக்கான சந்திப்பு! 

Advertisment

CONJUGAL VISIT:  சிறையில் அடை பட்டுள்ள ஒரு கைதி, தனது பாலியல் வேட்கை யினை நிறைவேற்றிக்கொள்ளவும்,  தனது  சந்ததியை உருவாக்கவும், சிறைச்சாலை வளாகத் திலேயே உள்ள ஒரு அறையில், சட்ட திட்டங் களுக்கு உட்பட்டு,  கண்ணியமான முறையில் தன்னுடைய மனைவியுடன் கலவியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரு சலுகையாகும்.       

CONJUGAL VISIT-ன்  தேவைக்கான காரணம்: இந்திய சமூகவியல் ஆய்வாளர்கள், “கைதிகளின் திருமண முறிவினைத் தடுக்கவும், பாதுகாக்கவும், கைதிகளின் பாலியல் சார்ந்த எண்ணங்கள் வன்முறையாக மாறுவதைக்  குறைக்கவும்,  சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் தங்களது குடும்பங்களுக்கு அவர்கள் திரும்பவும் உதவும்’என்கிறார்கள்.

சமூகவியலாளரும் எழுத்தாளருமான கொலம்பஸ் பி.ஹாப்பர், Sex in Prison: The Mississippi Experiment with Conjugal Visiting”என்ற பெயரில் எழுதி 1969-ல் வெளியான  கவனம் ஈர்த்த புத்தகத்தில் “மனைவியுடன் நிகழ்த்தும் பாலியல் உறவுக்கான சந்திப்பானது, யதார்த்தமான ஒரு தீர்வென்றும், இது ஓரினச்சேர்க்கையை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், குற்றவாளியின் முழு நடத்தையையும் மாற்றுகிறது எனவும்,   சிறை நிர்வாகத்திற்கு ஒத்துழைக்கவும், ஒழுக்கத்தை மேம்படுத்தவும்கூட இது உதவும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  இது உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழிமுறையாகும்.    

Advertisment

The United Nations Standard Minimum Rules for the Treatment of Prisoners (The Nelson Mandela Rules)  டிசம்பர் 2015ன் பிரிவு 58(2)ன்படி, சிறையின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு,  பாலியல் உறவிற்கான சந்திப்பில் (Conjugal Visit)  எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல்,  நியாயமாக அணுகி,  அந்த உரிமையினை வழங்கவேண்டும். 

"தவறு செய்த ஒரு மனிதனின் உரிமைகளைப் பறித்து சிறையில் தண்டனை வழங்கப்படுகிறது. குற்றம் செய்தவரைத் தண்டிப்பது சரியே. ஆனால்,  கணவன் செய்த தவறுக்கு மனைவியும்  பாலியல் உறவு கொள்ளமுடியாத தண்டனையை ஏன் அனுபவிக்கவேண்டும்? அவர்களுடைய உரிமை ஏன் பறிக்கப்படுகிறது?'' என சமூகவியலாளர்கள்  கேள்வி எழுப்புகின்றனர்.     

அமெரிக்கச்  சிறைகளில் பாலியல் உறவுக்கான சந்திப்பு: 1918-ல் அமெரிக்காவில் மிசிசிபி மாகாணத்திலுள்ள   (Mississippi State Penitentiary in Parchman) பார்ச்மேன் சிறைச்சாலை,  ஒரு பருத்தித் தோட்டமாக (திறந்தவெளி சிறை) இருந்தது. அதில் அமெரிக்கா -ஆப்பிரிக்க கறுப்பினக் கைதிகளிடம், அந்தப் பருத்தி வயல்களில் கடுமையாக வேலை வாங்குவதற்கு சலுகைகாட்டும் விதத்தில்  பாலியல் சந்திப்புகள்  அனுமதிக்கப்பட்டன. திருமணமாகாத கைதி களுக்கும் பல்வேறு விதத்தில் அதற்கான அனுமதி கிடைத்தது. ஆவணங்களின் அடிப்படையில் இச்சிறையில்தான் உலகிலேயே முதல்முறையாக பாலியல் உறவுக்கான சந்திப்புகள் நடந்துள்ளன.     

Advertisment

அமெரிக்காவில் இந்த நடைமுறை 1990களில் 17 மாகாணங்களுக்கு  விரிவு படுத்தப்பட்டது. அதன்பின்,  குற்றவாளிகளுக்கு இதுபோன்ற சலுகைகள் கிடைக்கக்கூடாது என்ற முடிவை நோக்கி அமெரிக்கா நகர்ந்த தால், படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2014 முதல் கலிபோர்னியா, கனெக்டிகட், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டுமே இச்சந்திப்பினை அனுமதித்தன.   

அமெரிக்காவில் அச்சந்திப்பின் போது நடந்த கொலைகள்: அமெரிக்கா வின் தெற்கு கலிபோர்னியா மாகாணத் தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள Mule Creek State Prison என்ற சிறையில் சமீபத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. ஜூலை 2024-ல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் Anthony Curry.  சிறைவாசியான  இவர்,  பாலியல் உறவுச் சந்திப்புக்காக வந்த  தன்னுடைய  மனைவி Tania Thomas-ஐ கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.     நவம்பர் 2024-ல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் David Brinson.  பாலியல் உறவுக்காக சிறைக்கு வந்த 62 வயது மனைவி Stephanie Diane Dowells-ஐ கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இதுபோன்ற சம்பவங்களால்,   உலகிலுள்ள பெரும்பான்மையான நாடுகள், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கொடூரமான வழக்கு களில் தண்டனை பெற்றவர்களுக்கு பாலியல் உறவுச் சந்திப்புக்கான(conjugal visit)  சலுகைகளை வழங்குவது இல்லை.   

உலக நாடுகளின் சிறைகளில்:  சவூதி அரேபியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிலிப்பைன்ஸ், கனடா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, போலந்து, கிரீஸ், செக் குடியரசு, எஸ்டோனியா, இஸ்ரேல், நெதர்லேன்ட், ஸ்பெயின், துருக்கி, சில அமெரிக்க மாகாணங்கள் மற்றும் சில ஆஸ்திரேலிய மாகாணங்கள், தாம்பத் திய சந்திப்புகளை அனுமதிக்கின்றன. இந்த வரிசையில் கடைசியாக 2025ல் இணைந்த நாடு இத்தாலி.  

LGBTQIA + பிரிவினருக்கும் சிறைகளில்:  அர்ஜென்டி னா, கனடா, கொலம்பியா, டென்மார்க், பெல்ஜியம், பிரேசில், மெக்ஸிகோ, கோஸ்ட்டா ரிக்கா, இஸ்ரேல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஆஸ்திரேலியாவின் தலைமை மாகாணம் மற்றும் விக்டோரியா மாகாணம் போன்ற நாடுகளில் மனைவி மற்றும் LGBTQIA + பிரிவினர் களையும் அனுமதிக்கின்ற னர்.

இந்தியாவில்: ஆங்கிலேயர்கள் இந்தியா வில் ஆட்சிசெய்த காலத் தில் சிறைக் கைதிகளுக்கு எவ்வளவு கடுமையான தண்டனைகள் வேண்டு மானாலும் வழங்கலாம். ஆனால் கைதிகள், தங்களது  குடும்ப உறுப் பினர்களைச் சந்திப்பதற் கான சலுகைகளைத் தடுக்கக்கூடாது என்பதற் காக,  இரண்டு வகையான நேர்காணல்களை ஏற்பாடு செய்தனர்.  ஒன்று,  கச்சி முலாக்கத் (Kachi mulakat) -இது தற்போது சிறையில் நடைபெறும்  நேர்காணல் போன்றது. மற்றொன்று,  பக்கி முலாக்கத் (Baki mulakat)-கைதி தன்னுடைய மனைவியிடம் பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ள சிறைக்குள் தனிமையில் நேரத்தைச் செலவிட அனுமதிப்பது.  இது கைதிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், குடும்பத்தில் மறுஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கும்,  உளவியல் ரீதியாக சிறந்த மனநிலையில் இருப்பதற்கும் உதவும் என ஆங்கிலேயர்கள் நம்பினர். 

டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகப் பணித்துறையின் குற்றவியல் மற்றும் குற்றவியல்           நீதி நிர்வாகப் பிரிவின் விரிவுரையாளராக இருந்தவர் ஸ்ரீவஸ்தவா.  திகார் சிறையில் 2006-ல் இவர் மேற்கொண்ட ஆய்வில், குற்றவாளிகளில் 78.5 சதவீதம் பேர் திருமணமானவர்கள் என்றும், அதில் 1,000 கைதிகளின் மனைவிகள், ஏற்கனவே தங்களின் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்றும், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை வளர்த்துக் கொண்டுள் ளனர் என்பதையும்  கண்டறிந்துள்ளார். ஒரு குற்றவாளி பல வருட சிறைவாசத்திற்குப் பிறகு, நன்னடத்தையின் அடிப்படையில் மட்டுமே தங்களின் குடும்பத்தின ரைப் பார்க்க பரோல் விடுமுறை அளிக்கப்படு கிறது.  அதற்குள் அவரது குடும்பத்தில் ஏற்கனவே சேதம் நடந்து முடிந்து விடுகிறது என்று கூறுகிறார்.

இந்தியாவில் மாநிலப் பட்டியலில் சிறைகள் வருவதால், இந்தியச் சிறைகளில்  ஒரேமாதிரியான சட் டங்கள் இல்லை. இந்தியா முழுமைக்கும் ஒரேமாதிரியான சட்டத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக,  நவீன மாதிரி சிறைக் கையேடுகளை (Model Prison Manual) 2016 மற்றும் 2023-ல் மத்திய அரசு வெளியிட்டது. இதிலும்கூட,  கைதிகளின் பாலியல் உறவுக்கான சந்திப்புகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. அதற்குப் பதிலாக,  குடும்ப உறவுகளை மேம்படுத்த பரோல் விடுமுறையைக் கையாளுங்கள் என பொத்தாம்பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்கு முக்கியத் துவம் அளித்துவரும் இந்தியா, கைதிகளின் பாலியல் சந்திப்புகள் குறித்த  ஒரு நெறிமுறையை உருவாக்கவேண்டும்.   

(ஊழல் தொடர்ந்து கசியும்)