உலக சுகாதார நிறு வனமும் (WHO)ஐ.நா. சபையும் (UNAIDS) சேர்ந்து மே 2007-ல் சிறைவாசிகளுக்கு HIV Test எடுக்க வேண்டி யதன் அவசியத்தைக் கூறி, அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டன.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், ICTC (Integrated Counselling And Testing Center) மையங் களுக்கான செயல்பாட்டு வழிமுறைகளை ஜூலை 2007-ல் வெளியிட்டது. அதில், இந்தியா முழுவதுமுள்ள மத்திய சிறைகளில் ICTC மையங்களை அமைத்து, சிறைக்குள் வரும் சிறைவாசி களை சோதனை செய்து, HIV இருந்தால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியது.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை o.V#17013/24/2007#PR, நாள்: 29.11.2007 -மத்திய சிறை களில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்களின் (SACS) உதவியுடன், ஆலோ சனை மற்றும் சோதனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்தியது. இவற்றின் படி தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளிலும் ICTC மையங் கள் 2008-2009-ல் அமைக்கப் பட்டன.
HIV தொற்றினைக் கண்டறிதல்: தமிழகச் சிறைகளில், புதிதாக சிறைக்கு வரும் சிறைவாசிகளின் விருப் பத்துடன் மட்டுமே HIV பரிசோதனை மேற்கொள்ளப் பட வேண்டும். விருப்பமில் லாமல் பரிசோதனை செய்யக்கூடாது. இதற்கென்றே தனியாக லேப் டெக்னீசியன் ஒருவர் இருக்கிறார். சிறைவாசிக்கு இரத்தப் பரிசோதனை செய்தபின், HIV-positive என்று வந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட கைதிக்கு கண்டிப்பாகத் தெரிவிக்கவேண்டும். ஒரு சிறைக் கைதியைக் கூப்பிட்டு, உனக்கு எய்ட்ஸ் உள்ளது என்பதை எப்படிக் கூறுவது? சில கைதி கள் தங்களுக்கு HIV -positive இருப்பதை ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள், வெளியில் சென்று மீண்டும் பரிசோதனை செய்த பிறகுதான் நான் நம்புவேன் எனக்கூறி மருந்துகளை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கும் செல்வார்கள். இதை யெல்லாம் பக்குவமாகக் கையாளுவதற்குத்தான் கவுன்சிலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தால், ஒவ்வொரு மத்திய சிறையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சிறைக்குள் வரும்போது NEGATIVE; வந்தபின் POSITIVE: உதாரணமாக, 01.01.2020-ல் ஒரு சிறைவாசி சிறைக்குள் வரும்போது இரத்தப் பரிசோதனையில் ய்ங்ஞ்ஹற்ண்ஸ்ங் என்று வந்தபின்பு, 01.06.2024-ல் வேறு ஏதேனும் ஒரு சூழ்நிலையில், அதே கைதிக்கு இரத்தப் பரிசோதனை செய்யும் போது, அவருக்கு positive என்று வருவதாக வைத்துக்கொண்டால், அதற்கு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சிறைவாசி பெயிலிலோ, அல்லது வேறு காரணத்திற்காகவோ, சிறைக்கு வெளியே சென்று வந்தபோது HIV தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கூறுவார்கள். ஒருவேளை சிறையிலிருந்து வெளியில் செல்லவே இல்லையென்றால், சிறைக் குள் வரும்போது நடந்த பரிசோதனையின்போது, அவர் HIV Window Period-ல் இருந்திருப்பார். அதாவது, தொற்றைப் பெற்றதிலிருந்து சுமார் 3 மாதங்கள் கழித்துப் பரிசோதித்தால்தான் positive என்ற உண்மை தெரியவரும். அந்த 3 மாதங்கள் தான் HIV Window Period என்று கூறப்படுகிறது. அதனால்தான் negative என்று வந்திருக்கும் என்று கூறி அதிகாரிகள் தப்பித்துக்கொள்வார்கள். சிறைக்குள் வந்த பிறகுதான், சிறைவாசிக்கு HIV பரவியது என்பதை சிறை அதிகாரிகள் ஒரு போதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இந்தியா முழுவதுமுள்ள அனைத்துச் சிறைகளிலும் இதே நிலைமைதான்.
HIV & AIDS (Prevention and Control) Act, 2017: இச்சட்டத்தின் பிரிவு 2(ள்) -ன்படி HIV- positive உள்ள நபர் மற்றும் அவருடன் இணைந்து வாழும் நபர்கள், பாதுகாக்கப்பட்ட நபர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதன்படி பார்த்தால் சிறையில் உள்ள நபர்களும் வருவார்கள். பிரிவு 4-ன் படி HIV-positive உள்ள நபர் குறித்து எந்தவிதத்திலும் தகவலை வெளியே பரப்பினால், பிரிவு 37-ன்படி ஆறு மாதம் முதல் இரண்டு வருடம்வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் பிரிவு 11 ன்படி HIV-positive உள்ள நபர் குறித்த விவரங்களை மிகவும் இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிரிவு 31(1)-ல் சிறையிலுள்ள ஒவ்வொரு நபருக்கும், HIV-யில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, ஆலோசனை பெற, பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற என, அனைத்துச் சேவைகளையும் பெறுவதற்கான உரிமையுள்ளது.
இந்தியச் சிறைகளில் HIV தொற்று: அஸ்ஸாம் நகோன் மத்திய சிறையில் (அக்டோ பர் 2021) 88 கைதிகள், உத்தரப் பிரதேசத்திலுள்ள பாரபங்கி சிறையில் (செப்டம்பர் 2022) 26 கைதிகள், லக்னோ மாவட்ட சிறையில் (டிசம்பர் 2023) 36 கைதிகள், அதே மாநிலத்தில் மௌ(mau) மாவட்ட சிறையில் (மார்ச் 2025) 10 கைதிகள், உத்தரகாண்டிலுள்ள ஹல்த்வானி சிறையில் (ஏப்ரல் 2023) 44 கைதிகள் ஆகியோருக்கு HIV தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதெல்லாம் சிறு உதாரணம்தான். இது குறித்து அந்தந்த உயர் நீதிமன்றங்களும், தேசிய மனித உரிமை ஆணையமும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேள்வி கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், எந்த பயனும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதற்கு உதாரணமாக, திகார் சிறையில் 2009-ல் மட்டும் 84 கைதிகளுக்கு HIV தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, இந்தியப் பாராளுமன்றத்தின் ராஜ்யசபையில் 16.03.2010-ல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம், மோதிலால் வோரா எம்.பி. கேள்வி எழுப்பியபோது, திகார் சிறையில் ஜூன் 2008 முதல் பிப்ரவரி 2010 வரை, 2540 கைதிகள் பரிசோதிக்கப்பட்டதில் 201 கைதிகளுக்கு HIV positive இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சிறைக்கு வரும் அனைத்துக் கைதிகளுக்கும் பரிசோதனை நடத்தப்படுவதாகவும் அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று, மத்திய அரசின், குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் “HIV Sentinel Surveillance Plus 2023 : Central Prison Sites # Technical Report’ என்ற அறிக்கையில், 10 கைதிகளில் 5 கைதிகளுக்குத்தான் இந்தியச் சிறைகளில் HIV பரிசோதனை செய்யப்படுவதாகவும், தேசிய அளவில் கைதிகளிடையே ஐஒய தொற்று 1.99 சதவீதம் உள்ளதாகவும் கூறுகிறது (பக்கம் 13). இது வெளியே இருப்பவர்களைவிட 9 மடங்கு அதிகமாகும். மேலும், தமிழகச் சிறைகளில் ஓரினச்சேர்க்கை 20.9 சதவீதத் தினரிடையே நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது (பக்கம் 37).
HIV-யால் பாதிக்கப் பட்ட கைதிக்கு, தமிழகச் சிறைவிதி: 737/1983, 736/2024-ன்படி சிறை மருத்துவ ரது பரிந்துரையின் பேரில், சிறப்பு உணவாக தினமும் 1.2 லிட்டர் பால், ஒரு முட்டை, வாரத்தில் நான்கு நாட்கள் 250 கிராம் கோழி இறைச்சி வழங்கப்படும். சிறை விதி: 714/1983, 713/2024-ன்படி இதற்கெனத் தனியான ஒரு சமையலறையில் தான் இவற்றைச் சமைக்கவேண்டும். ஆனால், சிறையில் இதனை நடைமுறைப்படுத்துவதே இல்லை.
தொற்று நோய்களிலிருந்து கைதிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு G.O.Ms.No.799, Home (Prison#IV) Department, dated:07.10.2013-ன்படி 2014-2015-ல் ரூ.3.60 கோடியும், 2019-2020-ல் ரூ.12.401 கோடியும், அனைத்து மத்திய சிறைச்சாலைகள் மற்றும் பெண்கள் சிறைகளுக்கும், பூந்தமல்லி சிறப்பு கிளைச் சிறைக்கு ரூ.30.59 லட்சமும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்குச் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், G.O.Ms.No.706, Home (Prison#IV) Department, dated: 17.09.2013-ன்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு shaving razors வீதம் அனைத்து மத்திய சிறைகளிலும் வழங்குவதற்காக, ஒவ்வொரு வருடமும் ரூ.43.68 லட்சமும் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணம் உண்மையிலேயே இதற்குத்தான் செலவு செய்யப்பட்டதா என்பது சிறைத்துறை அதிகாரி களுக்கே வெளிச்சம்.
தமிழக புதிய சிறை விதிகள் 940(8)(a), 940(11)-ல் பெண் சிறைவாசிகளுக்கு மட்டுமே HIV சோதனை, பாலியல் ரீதியாகப் பரவும் நோய் களைத் தடுக்க கல்வி வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் சிறைவாசிகளுக்கு எதுவும் கூறப்படவில்லை. தமிழகத்தில் மத்திய சிறைகளில் மட்டுமே இந்த ICTC மையங்கள் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களில் மாவட்ட சிறைகளிலும் செயல்படுகின்றன. தற்போது மாவட்ட சிறைகளிலும் குண்டாஸ் உள்ளிட்ட வேறு சில வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட கைதிகள் நீண்டநாட்களாக அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
எனவே, இனிமேலாவது மத்திய சிறைக்கு வரும் அனைத்துக் கைதிகளுக்கும் HIV பரிசோதனை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். ICTC சேவையினை மாவட்ட சிறைகளுக்கும் விரி வாக்கம் செய்யவேண்டும். தமிழகச் சிறைகளி லுள்ள HIV-யால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கென, தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசும், சிறை DGP-யும் வகுக்க வேண்டும்.
(ஊழல் தொடர்ந்து கசியும்)