Advertisment

JAIL FOLLOW UP - 22 தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்! கைதிகளுக்கு HIV சோதனை?

jail

 

 

சிறைகளில் ஓரினச்சேர்க்கை குற்றமே இல்லை; அதற்குத் தண்டனையும் இல்லை என்றாலும், குத உடலுறவின்போது வைரஸால் பாதிக்கப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குக் காரணம்,  பெண் உறுப்பினுள் உள்ள தோலைவிட ஆசனவாயி னுள் உள்ள  தோல் மெல்லியதாக இருப்பதுதான் என மருத்துவ உலகம் விவரிக்கிறது. இந்நிலையில், 1990லிருந்து  2007 வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதுமுள்ள சிறைகளில் எய்ட்ஸ் மீதிருந்த பயத்தினால் ஆணுறை கொடுக்கும் அளவுக்கு அரசின் செயல்பாடு மாறியது.

Advertisment

உலகில்  HIV,, 1983-ல் அமெரிக்காவிலும்,  இந்தியாவில் 1986-ல் சென்னையிலும், முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் (WHO),  உலகெங்கிலும் உள்ள  சிறை களில் HIV & AIDS பரவுவதைத்  தடுப்பது குறித்த நெறிமுறைகளை செப்டம்பர் 1992-ல் ஜெனிவாவில் உருவாக்கி வெளியிட்டது. இதன் பிரிவு 10-ல் சிறைக்கு வரும் சிறைவாசிகளின் விருப்பத்துடன் அவர்களுக்கு HIV சோதனை செய்யப்பட வேண்டும் என்றும்,  பிரிவு 20-ல் சிறையில் HIV பரவுவதைத்  தடுக்க சிறைவாசிகளுக்கு ஆணுறை (CONDOM) கிடைக்க வழிவகை செய்யவேண்டும் எனவும் கூறுகிறது.  

ஐ.நா.சபை (UNAIDS), ஏப்ரல் 1997-ல் “"சிறைகள் மற்றும் எய்ட்ஸ்'’என்ற தலைப்பில், உலக நாடுகளிலுள்ள சிறைகளில், HIV உடலுறவின் மூலமும், போதை ஊசிகளைப் பரிமாறிக்கொள் வதன் மூலமும் அதிகளவில் பரவுவதாக ஆய்வில் தெரியவந்ததாகக் கூறியது. மேலும், சோதனை அடிப்படையில் சில நாடுகளின் சிறைகளில் தூய்மையான ஊசியும், ஆணுறையும் கிடைக்க வழிவகை செய்ததால் HIV  குறைந்துள்ளதை ஆதாரத்துடன் கூறி, HIV பரவுவதைத் தடுக்க இது சிறந்த வழிமுறை எனக்கூறியது.      

இந்தியாவில் ஒரு பெண் பாலியல் தொழிலாளிக்கு HIV பரவும் அளவுக்கு, சிறையிலுள்ள கைதிகளுக்கு  HIV ப

 

 

சிறைகளில் ஓரினச்சேர்க்கை குற்றமே இல்லை; அதற்குத் தண்டனையும் இல்லை என்றாலும், குத உடலுறவின்போது வைரஸால் பாதிக்கப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குக் காரணம்,  பெண் உறுப்பினுள் உள்ள தோலைவிட ஆசனவாயி னுள் உள்ள  தோல் மெல்லியதாக இருப்பதுதான் என மருத்துவ உலகம் விவரிக்கிறது. இந்நிலையில், 1990லிருந்து  2007 வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதுமுள்ள சிறைகளில் எய்ட்ஸ் மீதிருந்த பயத்தினால் ஆணுறை கொடுக்கும் அளவுக்கு அரசின் செயல்பாடு மாறியது.

Advertisment

உலகில்  HIV,, 1983-ல் அமெரிக்காவிலும்,  இந்தியாவில் 1986-ல் சென்னையிலும், முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் (WHO),  உலகெங்கிலும் உள்ள  சிறை களில் HIV & AIDS பரவுவதைத்  தடுப்பது குறித்த நெறிமுறைகளை செப்டம்பர் 1992-ல் ஜெனிவாவில் உருவாக்கி வெளியிட்டது. இதன் பிரிவு 10-ல் சிறைக்கு வரும் சிறைவாசிகளின் விருப்பத்துடன் அவர்களுக்கு HIV சோதனை செய்யப்பட வேண்டும் என்றும்,  பிரிவு 20-ல் சிறையில் HIV பரவுவதைத்  தடுக்க சிறைவாசிகளுக்கு ஆணுறை (CONDOM) கிடைக்க வழிவகை செய்யவேண்டும் எனவும் கூறுகிறது.  

ஐ.நா.சபை (UNAIDS), ஏப்ரல் 1997-ல் “"சிறைகள் மற்றும் எய்ட்ஸ்'’என்ற தலைப்பில், உலக நாடுகளிலுள்ள சிறைகளில், HIV உடலுறவின் மூலமும், போதை ஊசிகளைப் பரிமாறிக்கொள் வதன் மூலமும் அதிகளவில் பரவுவதாக ஆய்வில் தெரியவந்ததாகக் கூறியது. மேலும், சோதனை அடிப்படையில் சில நாடுகளின் சிறைகளில் தூய்மையான ஊசியும், ஆணுறையும் கிடைக்க வழிவகை செய்ததால் HIV  குறைந்துள்ளதை ஆதாரத்துடன் கூறி, HIV பரவுவதைத் தடுக்க இது சிறந்த வழிமுறை எனக்கூறியது.      

இந்தியாவில் ஒரு பெண் பாலியல் தொழிலாளிக்கு HIV பரவும் அளவுக்கு, சிறையிலுள்ள கைதிகளுக்கு  HIV பரவுவதாக India Gender Report, 2024 கூறுகிறது. 

Advertisment

jail1

திகார் சிறை, டெல்லி:  உலக சுகாதார தினத் தை முன்னிட்டு 07.04.1994-ல்,  திகார் சிறையில் கைதிகளுக்காக சுமார் 400 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைக்  கொண்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. டெல்லியின் மூல்சந்த் மருத்துவ மனையின் இருதயநோய் நிபுணரும், டெல்லி அரசின்  எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினருமான  Dr.K.K.அகர்வால்  இம்முகா மிற்கு தலைமை வகித்தார். இவரது தலைமை யிலான மருத்துவக்குழுவினர்,  இளம்பருவத்தினர் தங்கியிருந்த இரண்டு பிளாக்குகளுக்குச் சென்று சுமார் 1000 கைதிகளை சோதனை செய்ததில், மூன்றில் இரண்டு பங்கு கைதிகள் ஓரினச்சேர்க்கை யில் ஈடுபடுவதைக் கண்டறிந்தனர். இதில் ஒரு வருக்கு HIV பாதிப்பு இருந்ததும் கண்டறியப்பட் டது. மேலும் இவர்களுக்கு HIV பரவாமலிருப் பதற்கு, ஆணுறைகள் விநியோகிக்கப்பட வேண்டுமென்று Dr.அகர்வால் கோரினார்.

அதற்கு திகார் சிறையின் அப்போதைய IG கிரண் பேடி I.P.S., ஆணுறை வழங்குவது திகார் சிறையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் என்றும், IPC பிரிவு 377-ஐ மீறுவது  என்றும், இந்தியச் சிறைகளில் “மேற்கத்திய”  தீர்வுகளைத் திணிக்கும் முயற்சி எனவும் கூறி அனுமதி மறுத்தார். அதன்பின், சிறைவாசிகளிடம் மனுப்பெட்டிகள் மூலம் கணக்கெடுப்பை நடத்தி, ஓரினச்சேர்க்கை மிகக்குறை வாகவே  நடக்கிறது என்றும் கூறினார்.  ஆனால், Dr.அகர் வால்  "இது தார்மீகத்தின் கேள்வி அல்ல, ஆனால் யதார்த் தத்தின் கேள்வி'' என்றும்,  உலக சுகாதார நிறுவனம் (WHO) கைதிகளுக்கு ஆணுறைகளை விநியோகிக்கப் பரிந்துரை செய்துள்ளதையும், "விபச்சாரமும் சட்டவிரோத மானதுதான், ஆனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கு ஆணுறையை அரசாங்கமே விநியோகம் செய்கிறது'' என்பதையும்   சுட்டிக் காட்டி  வாதிட்டார். 

அதன்பின்,  இந்தப் பிரச்சனை டெல்லி சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் சென்றது. அவர் சிறைக்குள் எய்ட்ஸ் பரவுவது, ஓரினச் சேர்க்கையைவிட பெரிய அச்சுறுத்தல் எனக்கூறி,  ஆணுறைகளை விநியோகம் செய்வதை ஆதரித்து, டில்லி அரசின் சட்டச் செயலாளருக்கு "இது குறித்து சட்டத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்று பாருங்கள்'' என்று கடிதம் எழுதினார்.

jail2

1994-ல் திகார் சிறையிலுள்ள கைதிகளுக்கு HIV/AIDS  பரவுவதைத் தடுப்பதற்காக ஆணுறை களை, எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும் அரசு சாரா தொண்டு நிறுவனமான AIDS Bhedbhav Virodhi Andolan (ABVA)  மூலம் இரகசியமாக வழங்க டெல்லி அரசு முடிவு செய்தது.  (இவ்வாறு ஆணுறை வழங்க முடிவு செய்ததை 27.06.2008-ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திகார் சிறை நிர்வாகம் வெளிப்படையாக ஒத்துக்கொண்டது.)  அதற்கு கிரண் பேடி ஒத்துக் கொள்ளாததால், 1994-ல் AIDS Bhedbhav Virodhi Andolan (ABVA=NGO) Vs Government of NCTD என,  டெல்லி உயர்நீதிமன்றத்தில் NGO  ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. இதில் IPC பிரிவு 377 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும், திகார் சிறை வளாகத்தில் ஆணுறைகள் கிடைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. 

மேலும்,  அதே 1994-ல் ஆணுறை வழங்கும் அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் சிறைவாசி ஒருவர், ஆணுறை வழங்குவதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.  ரிட் மனுவை {ர.ட {W.P (Civil) : 1009/1994} தாக்கல் செய்தார். அதில் அந்த NGO-வையும் எதிர் மனுதாரராகச் சேர்த்தார். இந்த இருவழக்குகளும் 2001-ல் தள்ளுபடி செய்யப் பட்டன.  இந்த வழக்குகள்தான், 2018-ல் Navtej Singh Johar Vs Union of India என்ற வழக்கில் IPC 377 பிரிவை உச்ச நீதிமன்றம்  ரத்து செய்ய அடிப்படையாக இருந்தது. 

1993-ல் மணிப்பூர் மத்திய சிறைச்சாலையில்  ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்திய 488 சிறைவாசிகளில் 80 சதவீதம் பேர் HIV -யால் பாதிக்கப்பட்டிருந்ததும், 1994-ல் திகார் சிறையி லுள்ள பெரும்பாலான கைதிகள்  ஓரினச்சேர்க் கையில் ஈடுபடுவதும்,  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ICMR) அமைக்கப்பட்ட மருத்துவக்குழுவால் கண்டறியப்பட்டது.  அத னால்,  இந்தியாவிலுள்ள  ஒவ்வொரு சிறையின் சுகாதார வசதிகளிலும் ஆணுறைகளை ஒரு பகுதியாக மாற்றவும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கைதிகளுக்கு சிரிஞ்சுகள் மற்றும் ஊசிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும், இந்திய மருத்துவக் கவுன்சில் 28.02.1995-ல்  இந்திய அரசுக்குப் பரிந்துரைத்தது என டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், இது செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதே 1995 காலகட்டத்தில், சென்னை மத்திய சிறையினுள் ஆணுறை வழங்கும் திட்டம் பரிசீலனையில் இருந்ததாக, அப்போதைய சிறை மருத்துவர் Dr.காந்தராஜன் கூறியிருந்தார். தமிழகச் சிறை விதிகள்: 298/1983 & 308/2024ன்படி,  தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் ஆணுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

 ஆணுறை வழங்க முன்மாதிரி திட்டம்:  Module for Prison Intervention: South Asia, 2007 By UNODC அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, ஜனவரி 2000-ல், ஆந்திரப் பிரதேச அரசு, ஹைதராபாத்திலுள்ள, ஆந்திரப்பிரதேச மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தால் Partnership for Sexual Health’’ (PSH -சிறைச்சாலை முன்னோடி திட்டம்) என்ற சிறைவாசி களுக்கென  பிரத்யேகமான பாலியல் சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கியது. இது ஆந்திராவின் எட்டு மத்திய சிறைகள் மற்றும் மூன்று கிளைச் சிறைகளில் செயல்படுத்தப் பட்டது.  இந்தச் சிறைகள் ஒவ்வொன்றிலும் மூன்று பயிற்சி பெற்ற ஊழியர்கள் (ஒரு ஆண் திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒரு ஆண் சமூக சேவகர் மற்றும் ஒரு பெண் சமூக சேவகர்)  நியமிக்கப்பட்டனர். இதன் கீழ், பொது சுகாதாரம், HIV/AIDS  உள்ளிட்ட பாலியல் நோய்களின் அறிகுறிகள், அவற்றின் தடுப்பு நடவடிக்கைகள் மூலம்  ஆணுறைகளை சிறைக்குள் வழங்கி, அதனைப்  பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அனைத்து கைதிகளுக்கும் படங்கள், விளக்கப்படங்கள், சிறு புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இந்தத் திட்டத்தில் ஆலோசனை, பரிந்துரை மற்றும் மருத்துவ சிகிச்சையும் அடங்கும்.  பின்னாட்களில்,  அரசின் கொள்கைக்கு எதிரானது எனக்கூறி 2012-ல் ஆணுறை வழங்குவது நிறுத்தப்பட்டது.  

இந்திய உள் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை V#17013/24/2007#PR,  நாள்: 29.11.2007ல் “இந்திய சிறைகளுக்குள் HIV பரவுவது,  பொதுவாக வெளி உலகத்தைவிட பல மடங்கு அதி கம். HIV/AIDS பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, தடுப்பு நடைமுறைகளுக்கான அணுகல் இல்லாமை, அதிகக் கூட்டம்(Over crowding), மோசமான சுகாதார நிலைமைகள், கைதிகளின் உடல் நெருக்கம், தனிமை, சமூகக் கட்டுப்பாடு இல்லாமை, பொழுதுபோக்கு இல்லாமை, நீண்ட நாட்கள் குடும்பத்திலிருந்து விலகி இருப்பது, இதுபோன்ற காரணங்களால் சிறையில் ஓரினச்சேர்க்கை  நடக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேற்கூறியவற்றைக் கருத்தில்கொண்டே,  கைதிகளுக்கு ஆணுறைகளை விநியோகிக்க வேண்டுமென மாநில அரசுகளை இந்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. 

2030க்குள் எய்ட்ஸ் இல்லாத நாடாக இந்தியா மாறவேண்டும் என்றொரு இலக்கு இருக்கிறதே? 

(ஊழல் தொடர்ந்து கசியும்) 

nkn100925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe