சிறைகளில் ஓரினச்சேர்க்கை: பொதுவாக உலகம் முழுவதுமுள்ள சிறைகள் ஓரினச்சேர்க்கைக்கு ஏற்ற இடமாகவே இருக்கின்றன. இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை.  சிறைகளில் கைதிகள்,  எதிர் பாலினத் தினருடன்  தொடர்புகொள்ள முடி யாததால், பெரும்பாலும் தங்களது  பாலியல் தேவைகளை தங்களுக்குள் ளேயே பூர்த்தி செய்துகொள் கிறார்கள். சிறைகளில் ஓரினச்சேர்க்கை இருப்பதை ஒப்புக்கொள்வதற்கு சிறை அதிகாரிகள்  தயங்குகிறார்கள்/மறுக் கிறார்கள். ஏனென்றால்,  அவ்வாறு ஒப்புக்கொள்வது  தங்களது நிர்வாகத்தைத் தாங்களே சரியில்லை என ஒத்துக்கொள்வது போலவும்,  சிறைத்தண்டனையின் ஒரு பகுதியாக கைதிகளுக்கு பாலியல் ஆறுதல்கள் எதுவும் கிடைக்கக்கூடாது எனவும் கருதுகின்றனர்.

Advertisment

ஆஸ்கார் வைல்ட் (Oscar Wilde)  மற்றும் இஸ்மத் சுக்தாய் (Ismat Chughtai)  போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள், சிறைகளில் காணப் படும் பாலியல் செயல்பாடுகளை "சூழ்நிலை ஓரினச் சேர்க்கை' என்று அழைக்கிறார்கள். மேலும்,  ஓரினச் சேர்க்கையைக் குணப்படுத்த "சிகிச்சை' இருந்தாலும், ஓரினச்சேர்க்கையாளர் கள் அதை ஒருபோதும் விரும்பமாட் டார்கள் என்றும், சிறையில் இலவச மாக உணவு கிடைப்பது போல், இலவச உடலுறவும் கிடைப்பதாக ஒரு விசித்திரமான காரணத்தைச் சில சிறைவாசிகள் தங்களிடம் பகிர்ந்துள்ள தாகவும் கூறுகின்றனர்.

ஒரு சிறைவாசிக்காக மற்ற சிறைவாசிகளுக்குள் சண்டை நடந்த தும் உண்டு. பரோல் சென்றுவந்த அன்றே ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு மாட்டிய  சம்பவங்களும்  உண்டு.  

சிறையில் எவ்வாறு ஓரினச்சேர்க்கைக்கு ஆட்களைத் தெரிவு செய்கிறார்கள்? புதிதாக சிறைக்குள் வரும் சிறை வாசிகளில், சிறையைப் பார்த்து பயந்து மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பலவீனமாக இருப்பவர்களுக்கு பீடி, டீ, வடை ஆகியவற்றைக் கொடுக்கும் பெரிய தாதா போன்ற சிறைவாசிகள்,  தங்களது  ஆர்டர்லிகளாக வைத்துக்கொள் வார்கள். அடுத்து,  சிறைக்குள் கஞ்சா எடுத்துவருவதற்கு எனக்கூறி, அச்சிறைவாசிகளுக்கு ஆசனவாயை அகலப்படுத் தும் பயிற்சி அளிக்கப்படும். சிறிய பாட்டில்/டப்பாக்களில் எண்ணெய் தடவி, ஆசனவாய்க்குள் திரும்பத் திரும்பத் திணித்து,  அதன் துவாரத்தை இயல்புத்தன்மையிலிருந்து அளவில் பெரிதாக மாற்றுவார்கள்.  இந்தப் பயிற்சிக்குப்பின் கஞ்சா எடுத்துவந்து கொடுத்தால்,  அதற்குப் பதிலாக பிணைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியும், அதிகமான பீடி, டிபன், டீ, வடை ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தும், அந் தச் சிறைவாசிகளைத் தடபுடலாகக் கவனித்துக்கொள்வார் கள். அதன்பிறகே படிப்படியாக அவர்களை, பெண்களைப் போல் பயன்படுத்துவார்கள். இதுபோல் சிறைவாசிகளின் செயல்பாடுகளில் பலவிதங்கள் உண்டு. 

Advertisment

jail1

உச்ச நீதிமன்றத்தில் ஒரு விசித்திர வழக்கு:  கே.எம். பீமா கோரேகான் கலவர வழக்கில், மும்பைச் சிறையிலிருந்த சமூக ஆர்வலரான கௌதம் நவ்லகா என்ற சிறைவாசியை, மும்பையின் ஜஸ்லோக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றுமாறு தலோஜா ((Taloja Central Jail) சிறைக் கண்காணிப்பாளருக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  அதைத் தொடர்ந்து,  நவ்லகாவை மீண்டும் சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். சிறையில் பாலியல் ரீதியிலான பல குற்றங்கள் நடப்பதைத்தான் அதற்கான காரணமாகத் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் சிறைக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.  சிறைகளில் அளவுக்கதிகமான (Over Crowding)கைதிகள் இருப்பதை அறிகிறோம் என்றும், சிறைகளில் தன்பாலின ஈர்ப்பு (சோடோமி-Sodomy -anal or oral intercourse)  மற்றும் தன்பாலின  வன்கொடுமைகள் (forced homosexuality)  அதிக அளவில் நடப்பது கவலை யளிக்கிறது  எனவும் அந்நீதிபதிகள்  கௌதம் நவ்லகா ஸ்ள் தேசியப் புலனாய்வு அமைப்பு  (NIA)’”என்ற வழக்கில் 29.09.2022-ல் வருத்தம் தெரிவித்திருந்தனர். 

Advertisment

IPC 377- வரலாறு:  இங்கி லாந்து மன்னர் ஹென்றி VIII ஆட்சிக் காலத்தில், நாடாளுமன்றத்தால் The Buggery Act,, 1533-ன்படி,  அனைத்து ஓரினச் சேர்க்கைக்கும் எதிராக இச்சட்டம் இயற்றப்பட்டது.  ““Buggery’ என்றால் ஒரு நபருடனோ அல்லது விலங்குடனோ செய்யும் ஆசனவாய் வழியான உடலுறவு எனப் பொருள் படும். இச்சட்டத்திற்கு முன்,  இதுபோன்ற பாலியல் குற்றங்கள்,  திருச்சபை (Church) நீதிமன்றங்களால் விசாரணை செய்யப்பட்டன.   

இச்சட்டம் இயற்றப்பட்டு 300 ஆண்டுகளுக்குப் பின்,   The Offences Against the Person Act, 1828-ல் இயற்றப்பட்டு,  ஆண்  ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் குற்றத்தைச் சுருக்கியும், தண்டனையை இன்னும் கடுமையாக்கியும்,  மரண தண்டனை விதிக்கும் வகையிலும்  மாற்றப்பட்டது. 

இங்கிலாந்தில் ஓரினச் சேர்க்கைக் காக ஜேம்ஸ் பிராட் மற்றும் ஜான் ஸ்மித் ஆகிய இரண்டு ஆண்கள் 27.11.1835-ல் கடைசியாக தூக்கிலிடப் பட்டனர்.  அதன்பின் The Offences Against the Person Act 1861-ல், மரண தண்டனையை மாற்றி, கடின உழைப்புடன் (Rigorous)  கூடிய, 10 வருடங்கள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான தண்டனை விதிக்க வழி வகுக்கப்பட்டது.    இதே காலகட்டத் தில்தான்,  மெக்காலேயால் Indian Penal Code, 1860 உருவாக்கப்பட்டது.  மேலே கூறிய அதே தண்டனைதான்  IPC  377-லும் கூறப்பட்டது. ஆனால், The French Penal Code, 1791 மற்றும் The Napoleonic Code, 1804 ஆகியவற்றில் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த செப்டம்பர் 6, 2018 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு,   Navtej  Singh Johar Vs Union of India  என்ற வழக்கில், வயது வந்தோருக்கு இடையே, சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உடலுறவை (ஓரினச்சேர்க்கையை) தண்டனைக்குரிய குற்றம் எனக்கூறும் IPC  பிரிவு 377 அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறி,  அப்பிரிவை ரத்து செய்தது.  BNS-லும்  இப்பிரிவுக்கு இணையாக எந்தப் பிரிவும் சேர்க்கப்படவில்லை. 

jail2

சிறைக்குள் இருக்கும் இரண்டு ஆண்களும்/பெண்களும் திருமணம் செய்துகொள்ளலாமா? சட்டம் அதற்கு என்ன சொல்கிறது? 

பொதுவாக இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இடையிலான திருமணங்களை,  சிறப்பு திருமணச் சட்டம், 1954-ல் சேர்க்க உரிமை கோரிய மனுவை, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உ.வ.சந்திரசூட் தலைமையி லான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 17.10.2023-ல் தள்ளுபடி செய்தனர். அதன்பின்,  மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுஆய்வு மனு வைத் தாக்கல் செய்தார். இம்மனு வை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன் றம், நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடி யாது, நாடாளுமன்றத்தால்தான் சட்டத்தை உரு வாக்க முடியும் எனக்கூறி, அவ்வழக்கை 28.11.2023-ல் மீண்டும் தள்ளுபடி செய்தனர். இதற்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தால்,  சிறைச்சாலைகளின் பாடு  இன்னும் திண்டாட்டமாகிப் போயிருக்கும்.  

அரசின் விதிகள்/சுற்றறிக்கைகள் : இந்திய உள்துறை அமைச்சக சுற்றறிக்கை எண்:ய-17013/33/2024-டத, நாள்: 15.07.2024: சிறைக்குள் வரும் சிறைவாசிகளுக்கு நேர்காணல் (மனு) செய்து பார்ப்பது, மற்றவர்களைப்போல், ஓரினச்சேர்க்கை யாளர்களுக்கும் மற்றும் பலருக்கும் (LGBTQIA+) சமமாகப் பொருந்தும் என்றும், இவர்கள் எந்தப் பாகுபாடும் அல்லது நீதிமன்ற ஆணையும்  இல்லாமல் தங்களுக்கு விருப்பமான ஒருவரைச் சந்திக்கமுடியும் என்பதையும் உறுதிப்படுத்தியது.  

இந்திய சிறைச்சட்டம் -1894, பிரிவு: 45 மற்றும் தமிழ்நாடு சிறை விதிகளில் விதி: 297/1983,  307/2024-ல் 60 விதமான சிறைக் குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளன. இதில் ஓரினச் சேர்க்கையைக்  குற்றம் என்று எதிலும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், சிறை விதி : 214(1) (த்) /1983, 219 (1) (த்)/2024-ல் ஓரினச்சேர்க்கையில் ஈடு படும் ஒவ்வொருவரையும்  தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டுமென்று கூறுவதற்குப் பதிலாக, சிறைக்குள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிற அனைவ ரையும் ஒன்றாகச் சேர்த்து  ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்று தவறாகப் பொருள் படும் விதத்தில்  கூறப்பட்டுள்ளது.  இது விதி முரணாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் சிறைவிதி : 215 (க்) /1983-ன்படி ண்ல்ஸ்ரீ 376 & 377-ல் (பாலியல் வன்புணர்வு மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு) தண்டனை பெற்று வருபவர்களை மற்ற சிறைவாசி களிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். ஆனால்,  இது நடைமுறை யில் இல்லை.  மேலும் புதிய சிறைவிதி கள், 2024-ல் இது நீக்கப்பட்டுவிட்டது. 

தமிழகச் சிறை DGP-யின் சுற்றறிக்கை எண்: 41434/PW2/2013, நாள் : 06.11.2013-ல்,  சென்னை (புழல்) மத்திய சிறை ஒ-ல், சிறையின் மருத்துவ அதிகாரி நடத்திய ஆய்வில், 40 கைதிகள் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடு பட்டதால், ஆசனவாய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.  எனவே,  இதுபோன்ற சிறைவாசிகளை சிறை மருத்துவரின் உதவியுடன் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சிறைவாசிகளைத் தனிமைப்படுத்தி,  ஓரினச் சேர்க்கையைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் சிறைக் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.   

சிறைவாசிகளுக்கு  உளவியல் ரீதியாகத் தீர்வு கிடைக்கும் வகையில்,  அதற்கென புதிய நெறிமுறை களை வகுத்து,  மாற்று ஏற்பாட்டினை தமிழக அரசும்/சிறை உஏட-யும் செய்யவேண்டும்  என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.        

(ஊழல் தொடர்ந்து கசியும்)