Advertisment

JAIL FOLLOW UP - 19 தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்! அதிகாரிகள் தப்பிக்கவே ஆவணங்கள் அழிப்பு!

jail

 


கவல் அறியும் உரிமைச் சட்ட மும் ஊழல் ஆவணங்கள் அழிப்பும்:   சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் ரேஞ்ச் DIG-களுடன்,  சிறை IG வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறை DGP  அலுவலகத்திலிருந்து மீட்டிங் நடத்தினார். அப்போது, பழைய ஆவணங்கள் குப்பைபோல் குவிந்துள்ளதால் அதனை அழிக்கவேண்டும் என சிறை கண்காணிப்பாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, சிறை DGP சுற்றறிக்கை எண்: TNPCS/4870/2025-ES-1,, நாள்: 24.07.2025-ன்படி  அலு வலக நடைமுறை விதிகளில் குறிப்பிட்டுள்ள கால அளவுகளின்படி அனைத்து ஆவணங்களையும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அழிக்க உத்தரவிடப் பட்டது. மேலும், ஆவணங்களை அழிப்பது குறித்து சிறை IG-க்கு கடிதம் அனுப்பி,  உரிய அனுமதிபெற்று அழித்துக்கொள்ளும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆவணங்களைத்  தேடி எடுத்து அடுக்கி,  அதனை கடிதத்தில் பட்டியலிட்டு அனுமதி பெற,  இன்னும்  கால அவகாசம் வேண்டுமென்று சிறை கண்கணிப்பாளர்கள் கோரியுள்ளதால், இன்றுவரை ஆவணங்கள் அழிக்கப்படவில்லை. ஆனால், அழிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

Advertisment

ஆவணங்களை அழிக்கவேண்டும் என்ற கோரிக்கை தற்போது ஏன் வைக்கப்பட்டுள்ளது?   சிறைத்துறையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஊழல் நடந்துள்ளதை,  ஆதாரங்களுடன் நக்கீரன் இதழ் தொடராக வெளியிட்டு வரும் நிலையில், பத்தாண்டு கால ஆவணங்கள் இருந் தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்?’ என்ற உள்நோக்கத்துடன்,  ஆவணங்களை அழிப்பதற்கு சிறை DGP-யிடம் வேறு ஏதோ காரணங்களை முன்வைத்து அனுமதி பெற்றுள்ளனர். 

எந்தெந்த ஆவணங்களை எவ்வளவு நாள் வைத்திருக்காலாம் என தமிழ்நாடு அலுவலக நடைமுறை விதிகள் மற்றும் சிறை நடைமுறை விதிகளில் (பகுதி: 56/1983, 54/202

 


கவல் அறியும் உரிமைச் சட்ட மும் ஊழல் ஆவணங்கள் அழிப்பும்:   சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் ரேஞ்ச் DIG-களுடன்,  சிறை IG வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறை DGP  அலுவலகத்திலிருந்து மீட்டிங் நடத்தினார். அப்போது, பழைய ஆவணங்கள் குப்பைபோல் குவிந்துள்ளதால் அதனை அழிக்கவேண்டும் என சிறை கண்காணிப்பாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, சிறை DGP சுற்றறிக்கை எண்: TNPCS/4870/2025-ES-1,, நாள்: 24.07.2025-ன்படி  அலு வலக நடைமுறை விதிகளில் குறிப்பிட்டுள்ள கால அளவுகளின்படி அனைத்து ஆவணங்களையும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அழிக்க உத்தரவிடப் பட்டது. மேலும், ஆவணங்களை அழிப்பது குறித்து சிறை IG-க்கு கடிதம் அனுப்பி,  உரிய அனுமதிபெற்று அழித்துக்கொள்ளும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆவணங்களைத்  தேடி எடுத்து அடுக்கி,  அதனை கடிதத்தில் பட்டியலிட்டு அனுமதி பெற,  இன்னும்  கால அவகாசம் வேண்டுமென்று சிறை கண்கணிப்பாளர்கள் கோரியுள்ளதால், இன்றுவரை ஆவணங்கள் அழிக்கப்படவில்லை. ஆனால், அழிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

Advertisment

ஆவணங்களை அழிக்கவேண்டும் என்ற கோரிக்கை தற்போது ஏன் வைக்கப்பட்டுள்ளது?   சிறைத்துறையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஊழல் நடந்துள்ளதை,  ஆதாரங்களுடன் நக்கீரன் இதழ் தொடராக வெளியிட்டு வரும் நிலையில், பத்தாண்டு கால ஆவணங்கள் இருந் தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்?’ என்ற உள்நோக்கத்துடன்,  ஆவணங்களை அழிப்பதற்கு சிறை DGP-யிடம் வேறு ஏதோ காரணங்களை முன்வைத்து அனுமதி பெற்றுள்ளனர். 

எந்தெந்த ஆவணங்களை எவ்வளவு நாள் வைத்திருக்காலாம் என தமிழ்நாடு அலுவலக நடைமுறை விதிகள் மற்றும் சிறை நடைமுறை விதிகளில் (பகுதி: 56/1983, 54/2024) குறிப் பிடப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் ஆவணங்களை வைத்திருப்பார்கள்.  அதன்பிறகு அதனை அழித்துவிடுவார்கள்.  

jai2

Advertisment

தமிழக அலுவலக நடைமுறை விதிகளின்படி பெரும்பாலான ஆவணங்களைச் சேமித்துவைக்கும் காலம் 3 ஆண்டுகள்தான். அதற்கு முந்தைய ஆண்டுகளில் உள்ள ஆவணங்களை அழித்துவிட் டால்,  யார் எந்த விசாரணைக்காகக் கோரினாலும்,  அல்லது தகவல்  அறியும்  உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டாலும்,  இந்த ஆணைகளின்படி ஆவணங்கள்  அழிக்கப்பட்டுவிட்டன  எனக் குறிப்பிட்டு,  எந்த ஆவணத்தையும் வழங்காமல் தப்பித்துக்கொள்ள முடியும் அல்லவா? 

தகவல் அறியும்  உரிமைச்  சட்டம் பிரிவு 4(1)(a)- ன் படி,  அனைத்து ஆவணங்களையும்  மின்னணு ஆவணமாக மாற்ற வேண்டும் என்றும், பிரிவு 4(1)(b)-ன்படி ஒவ்வொரு வருடமும் பொது அதிகார அமைப்பு (அரசு அலுவலகம்)  தாமாக முன்வந்து ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும், பிரிவு 8(3)-ன்படி 20 வருடங்களுக்குள் இருக்கும் தகவல்களைத்தான் கேட்டுப் பெறவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

சிறைத்துறையினரோ,  கடந்த 20 வருடங்களுக்கான எந்த ஆவணங்களையும் கணினியில் SCAN செய்து மின்னணு ஆவணமாகச் சேமித்துவைக்காமலும்,   ஒவ்வொரு வருடமும் சிறையில் செய்யப்படும், பொருள்கள் கொள்முதல் குறித்து,  தாமாக முன்வந்து எந்த ஆவணத்தையும்  துறையின்  Official Website-ல் பதிவேற்றம் செய்யாமலும்  ஆவணங்களை அழிப்பது,  ஊழலை  மூடிமறைக்கும் செயலாகும்.     

ஆவணங்களை அழித்தபின்,  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம், யார்  எந்த ஆவணத்தைக் கோரினாலும், ஆவணங்கள் அளிக்கப்பட்டுவிட்டது எனக் கூறி,  தகவல் தராமல்  தப்பிப்பதற்கான  சிறை உயரதிகாரிகளின் திட்டமே இது. இனிமேல்,  பழைய/பின் தேதியிட்டு சிறை IG-யிடம் கையெழுத்து பெற்று,   இந்த ஆவணங் களை அழிக்க உத்தரவுபெறுவதுகூட  நடக்கும். இவையனைத்தும்  சிறைத்துறை  நிர்வாகத்தில்  எந்த  வெளிப்படைத்தன்மையும் இல்லாமல்,  ஊழல் தொடர்வதற்கே வழிவகுக்கும்.   

முன்னாள் சிறைவாசி ஒருவர் நமக்கு அனுப்பிய கடிதத்தில், கைதிகளின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.  பாலியல் சார்ந்த உளவியல் பிரச்சனைகளில் சிறைவாசிகள் சிக்கித்தவிப்பதும்கூட,  ஊழலின் இன்னொரு கோரமுகம்தான் எனக் குறிப்பிட்டிருந்தார். 

சிறையில் அடைபட்டுள்ள  கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? மக்கள் சிவில் உரிமைகள் சங்கம் (PUCL) Vs  - இந்திய ஒன்றியம் வழக்கு, 2003: வாக்குரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 326-ன் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள அரசிய லமைப்பு உரிமை எனவும், அடிப்படை உரிமை அல்ல என்பதையும் இந்திய உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும்,  வாக்களித்து ஒருவரைத் தேர்வுசெய்யும் உரிமையானது, அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (ஹ)-ன் கீழ் கருத் துச் சுதந்திரத்தின் ஒரு பகுதி எனக் கூறியுள்ளது.  

கைதிகளின் வாக்குரிமை பறிப்புக்கான வரலாற்று பின்னணி இது- 

ஆங்கிலேயப் பறிமுதல் சட்டம், 1870 (British Forfeiture Act of 1870): தேசத் துரோகம் அல்லது வேறு எதேனும் கடுமையான குற்றங்களுக்காகத்  தண்டனை பெறும் கைதிகளின் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து  உரிமைகளும்,  இச்சட்டத்தின்படி அரசால் பறிக்கப்படும்.

இந்திய அரசுச் சட்டம், 1935:  நாடு கடத்தப்படும் தண்டனை அல்லது வேறு ஏதேனும் சிறைத் தண்டனை பெறும் கைதிகள், தேர்தலில் வாக்களிக்கத்  தடை செய்யப்பட்டனர். இவற்றை பின்பற்றியே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்,1951, கைதிகளுக்கு தேர்தல் வாக்குரிமையை மறுக்கிறது.  

jail1

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்: அனுகுல் சந்திர பிரதான் Vs  - இந்திய ஒன்றியம் மற்றும் பிறர் வழக்கு, 1997 : இந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கைதிகளுக்கு வாக்குரிமை கோரும் மனுவை நிராகரித்த அதேவேளையில், அதற்கான சில காரணங்களையும்  முன்வைத்தது. 

(i) கைதிகளை வாக்களிக்க அனுமதிப்பதற்கு அதிக அளவில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும்.

(ii) தனது கெட்ட நடத்தையின் விளைவாக சிறையில் இருக்கும் ஒருவர், வெளியிலிருக்கும் நபருக்குச் சமமான சுதந்திரத்தைக் கோர முடியாது.

(iii) குற்றப்பின்னணி கொண்டவர்களைத் தேர்தல் களத்திலிருந்து விலக்கி வைக்கவேண்டும்.   

இவ்வாறு கூறியுள்ளது. 

ஏப்ரல் 2019-ல்,  டில்லி சட்டக் கல்லூரி மாணவர் களான பிரவீன் குமார் சவுத்ரி, அதுல் குமார் துபே மற்றும் பிரேர்ணா சிங் ஆகியோர் தங்களது மனுவில், கைதிகள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை,  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 62(5) தடை செய்வது, அரசியலமைப்பு உரிமையை அவமதிப்பதால், இச்சட்டப் பிரிவை திருத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (டஒக) தாக்கல் செய்தபோது வாதிட்டனர். இவ்வழக்கு  இன்னும் நிலுவையில் உள்ளது.   

சட்ட முரண்:   மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62(5)-ன்படி, சிறையிலிருக்கும் தண்டனைக் கைதிகளுக்கும், விசாரணைக் கைதிகளுக்கும் வாக்குரிமை கிடையாது. ஆனால்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வும், குண்டர் சட்டத்திலும், சிறையில் அடைக்கப்பட்டவர் களும் தபால் வாக்குகள் மட்டும் அளிக்கலாம். ஆனால்,  பெரும்பாலான சிறைகளில் இதைப் பின்பற்றுவதில்லை.  

அதேநேரத்தில்,  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்,1951, பிரிவு 8-ன் கீழ்,  ஒரு நபர் தனது குற்றச் செயலுக்குத் தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆகிறார்.   குற்றம் சாட்டப்பட்டவுடன் அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழப்பதில்லை. 

சிறைவாசம் ஒருவரது குடியுரிமை யைப் பறிக்கவில்லை என்றால், அது ஏன் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்? குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டி யிடலாம்,  ஆனால் அவர்கள் வாக்களிக்க முடியாதா?  இது சட்ட முரண் அல்லவா?

ஏப்ரல் 2018ல் வெளியிடப்பட்ட ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஆஉத) பாராளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் (இதில் 776 எம்.பி.க்களில் 768 பேரும், 4,120 எம்.எல்.ஏ.க்களில் 4,077 பேரும் அடங்குவர்) தேர்தலின்போது சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்களைப் பகுப்பாய்வு செய்து அளித்துள்ள அறிக்கையின்படி, எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் மொத்தம் 1580 பேர்,  அதாவது சுமார் 33 சதவீதத்தினர்,  தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

சமூக ஆர்வலர்களோ, கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பது பாரபட்சமானது என்றும், அரசிய லமைப்பின் சமத்துவக் கொள்கையை (பிரிவு 14) மீறுவதாகவும் வாதிடுகின்றனர்.  

கடந்த 2018-ல், அமெரிக்காவில் அமெரிக்கக் கைதிகளால் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. அவர்களது  கோரிக்கைகளில் ஒன்று, கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாகும் (IWOC 2018). கைதிகளில் ஒருவரான பில்கிங்டன்  "நான் அரசுக்கு வரி செலுத்துகிறேன், எனது வரி மட்டும் வேண்டும், ஆனால் நான் வாக்களிக்க முடியாதா? சிறைக் கைதிகளிடமிருந்து வரி வாங்க வேண்டாம் எனச் சட்டம் போடவேண்டியது தானே?''’எனக்  கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

(ஊழல் தொடர்ந்து கசியும்)

 

nkn300825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe