புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப் படுவதில்லை:  சிறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகவும், டிரைவராகவும், சிறை மோப்ப நாய் பிரிவு காவலர், சிறை பெட்ரோல் பங்க் காவலர், சிறை உள்வெளி கேன்டீன் காவலர், ரேஷன் ஸ்டோர் காவலர், சிறை தோட்டக் காவலர்,  சிறை அமைச்சுப்பணியாளர்களின் பணியிடங்கள்  போன்ற  பல பணியிடங்களுக்கு,  அங்கு பணிபுரிவ தாகக் கூறி,  சிறையின் அன்றாட காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல், டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடிவிடுகின்றனர். இத்தகையோர்,   சிறைக்குள் பணி செய்வதைக் கீழ்த்தரமாகவும், ஆபத்தானதாகவும் கருதுகின்றனர். ஏனென்றால்,  ‘சிறைவாசிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்,  தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கடத்தினார்’ என்பது போன்ற சில  காரணங்களை  முன்வைத்து,  ஒழுங்கு நடவடிக்கை, ட்ரான்ஸ்பர், சஸ்பெண்ட், டிஸ்மிஸ்  ஆகிய பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும் என்பதால்தான். 

Advertisment

சிறைக்கு வெளியே, மேலே கூறியதைப் போன்ற பணிகளில், பல ஆண்டுகளாக பல காவலர்கள் அதிகாரிகளின் ஆசியுடனும், அதிகாரி களுக்கு கையூட்டுப் பெற்றுத் தருபவர்களாகவும் செயல்பட்டு,  தங்களது பணியிடத்தை தக்கவைத் துக் கொள்கின்றனர். புதிது புதிதாக ப்ராஜெக்டு களைச் செயல்படுத்தத் துடிக்கும் சிறைத்துறை தலைமை அலுவலகம், அதற்கென தனியே புதிய பணியிடங்கள் எதையும் தோற்றுவிக்காமல், சிறையின் காவல் பணிக்கு என தேர்வு செய்யப் பட்ட காவலர்களை, காவல் அல்லாத வெளிப் பணிகளுக்குப் பயன்படுத்துவதால், இவர்களது பணியும், சிறைக்குள்ளே இருக்கும் மற்ற காவலர்கள் மீது சுமத்தப்படுவதால்,  உள்ளே பணிபுரியும் காவலர்கள் மேலும் அதிகப் பணிச்சுமைக்கும், உடல் உபாதைகளுக்கும், மன அழுத்தங்களுக்கும் ஆளாகின்றனர்.

இதேபோல்தான் மதுரை மத்திய சிறையின் கட்டுப்பாட்டில்,  சிவகங்கை மாவட்டத்திலுள்ள புரசடை உடைப்பு  திறந்தவெளிச் சிறையில் 29.06.2020 முதல் பணிபுரிந்து வரும் சீருடைப்பணி யாளரான  அலெக்ஸ்பாண்டியன்  (த/பெ. கொங்கன்)  என்ற இரண்டாம் நிலைக் காவலர், அமைச்சுப்பணியாளருக்கான பணியினை மேற்கொண்டபோது, அரசுப் பணத்தைக் கையாடல் செய்தார் எனப் புகார் எழுந்த நிலையில், மதுரை ரேஞ்ச் சிறை உஒஏ-யின் அலுவலகத்தி லுள்ள தணிக்கைக்குழு மூலம் சிறப்புத்தணிக்கை 09.07.2025 முதல் 18.07.2025 வரை மேற்கொள்ளப் பட்டது. இதில்  அரசுப் பணம் ரூ.39,30,005/-  கையாடல் செய்யப்பட்டது என கண்டுபிடிக்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து,  மதுரை மத்திய சிறையின்  கண்காணிப்பாளர் சதீஷ்குமார் அளித்த புகார்  (எண்: 2743/கிசி1/2025 நாள்: 06.08.2025) மனுவின்படி, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு-I, குற்ற எண்:17/2025 u/s 409,420,468,471,477(A) IPC-ன் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

jail1

Advertisment

பொதுவாக சிறையில் தணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது? சிறைத்துறையில் மொத்தம் மூன்று வகையான தணிக்கைகள் நடைபெறு கின்றன.  (i)இருப்பு சோதனை தணிக்கை,  (ii)ஆவணங்களின் அடிப்படையிலான தணிக்கை, (iii) ஆறு மாதங்களுக்கு  ஒருமுறை உஒஏ ஆய்வு செய்யும் தணிக்கை.  இந்த மூன்று தணிக்கை களையும் முடித்துவைக்கும் தலைமை அதிகாரி சம்பந்தப்பட்ட ரேஞ்ச்-DIGதான். இது மட்டு மில்லாமல், மாநில கணக்காய்வுத் தணிக்கை (ஈஆஏ) என்பது தனி.

இருப்பு சோதனை தணிக்கை:  சிறைத் துறையின் டி.ஜி.பி. அலுவலகத்தில் உதவி இயக்குநர் (உள் தணிக்கை) என்ற பணியிடம் உள் ளது. தமிழ்நாடு நிதி உள் தணிக்கைத்துறை கையேடு-2008-ல், பாரா 4-ன்படி இவரது பணி வடி வமைக்கப்பட்டுள்ளது. இவரிடம் உள்ள சிறை அமைச்சுப் பணியாளர்களைக் கொண்டு,  ஒவ்வொரு வருடமும் தமிழகத்திலுள்ள அனைத்துச் சிறைகளிலும், சிறைக்குள் பொருள்கள் இருப்பு உள்ள அனைத்து இடங்களையும் சீல் வைத்து,  ஆவணங்களின்படி சோதனை செய்து தணிக்கை நடைபெறும். தமிழ்நாடு நிதி விதிகள் தொகுதி-I, பகுதி: VII-ல் கூறியுள்ள விதிகளின்படி, தணிக்கைக் குழுக்கள் வருடத்திற்கு ஒருமுறையேனும் அனைத்து ஸ்டாக்கினையும் சோதனை செய்ய வேண்டும் (143). அவ்வப்போது திடீர் சோதனை யும் மேற்கொள்ளப்பட வேண்டும் (143ஆ).  நேரடி யாகப் பொருள்களை சோதனை செய்து ( Physical Verification) ஆய்வு நடத்தப்பட வேண்டும் (143இ). இச்சோதனைகளின்போது அரசுக்கு நிதியிழப்பு கண்டறியப்பட்டால், எவ்வாறு செயல்பட வேண்டும் என விதி: 294, 301, 302-ல் கூறப் பட்டுள்ளது.

ஆவணங்களின் அடிப்படையிலான தணிக்கை: இத்தணிக்கையானது, ஒவ்வொரு நிதியாண்டிலும், அந்தந்த ரேஞ்ச் உஒஏ-யின் அலுவலகத்திலுள்ள தணிக்கைக்குழுவினைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடலூர் மத்திய சிறையில் கணக்காளராகப் பணி புரிந்த வேல்ராஜ், சிறைவாசி களுக்கு  உறவினர்களால் நேர் காணலில் வழங்கப்பட்ட தொகை, சிறைவாசி களின் ஊதியம், மணியார்டர் ஆகியவற்றில் சுமார்  ரூ.8,00,000/- வரை கையாடல்  செய்தது 2013-ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 2013-க்கு முன், திருச்சி ரேஞ்ச் உஒஏ-யின் கட்டுப் பாட்டிலிருந்த தணிக்கை குழுவால், கடலூர் மத்திய சிறையில் பலமுறை  தணிக்கை நடந்தும்,   இக்குற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை.  அதன்பின், அந்தப் பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட் டது. ஆனால்,  குற்ற வியல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.   

Advertisment

அதே ரேஞ்ச் என்பதால்தான்,  ஒழுங் காகத் தணிக்கை செய்ய வில்லை என்று குற்றச் சாட்டு எழுந்ததால், அந்தந்த ரேஞ்சில் உள்ள மத்திய சிறைகளுக்கு, அந்தந்த ரேஞ்சிலுள்ள தணிக்கைக்குழு ஆய்வுக்கு செல்லக்கூடாது என்றும்,   வெவ்வேறு ரேஞ்சு களில் இருந்துதான் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனவும்,  சிறை DGP, தனது  சுற்றறிக்கை (எண் : 15931/ ஒஆ-2/2008, 2014) மூலம் உத்தரவிட்டார். அதன்படி,  2015-2016  நிதியாண்டு முதல் ஒவ்வொரு மத்திய சிறைக்கும், வேறு ஏதேனும் ஒரு ரேஞ்சில் இருந்துதான்  தணிக்கை ஆய்வு செய்யப்படுகிறது.

கடலூர் மத்திய சிறையைப் பொறுத்தவரை தற்போது திருச்சி வேறு ரேஞ்ச்தானே எனக் கேட்கலாம், ஆனால் 2014-க்கு முன் கடலூர் மத்திய சிறை, திருச்சி ரேஞ்ச் டி.ஐ.ஜி.யின் கட்டுப்பாட்டிலும், வேலூர் மத்திய சிறை சென்னை ரேஞ்ச் டி.ஐ.ஜி.யின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அரசாணை எண்: 169,  உள் (சிறை-I) துறை, நாள் : 25.02.2014-ன்படி,  வேலூர் சிறை  ரேஞ்ச்-DIG பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டு, அரசாணை எண் : 733, உள் (சிறை-I) துறை, நாள்: 26.09.2014-ன்படி, வேலூர் சிறை DIG ரேஞ்சிற்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இந்த இரண்டு மத்திய சிறைகளும் வேலூர் ரேஞ்ச் DIG-ன் கட்டுப்பாட்டில் வந்தது.       

மேலும்,  சேலம் மத்திய சிறையில் பணிபுரிந்த  வெற்றிவேல் (உதவியாளர்) என்பவர்,  அரசு பணத்தைக் கையாடல் செய்தார் எனப் புகார் எழுந்த நிலையில், சிறை உஏட குறிப்பாணை எண்: 27380/DR.4/2018, நாள்: 25.07.2018, 01.08.2018, 06.09.2018-ன்படி, கோவை ரேஞ்ச் சிறை DIG-யின் அலுவலகத்திலுள்ள தணிக்கைக்குழு மூலம், சிறப்புத் தணிக்கை 02.08.2018 முதல் 20.09.2018 வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசு பணம் ரூ.8,77,731-ஐ  கையாடல்  செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. இவர் மீது ஒழுங்குநடவடிக்கையும், சேலம் மாநகர குற்றப்பிரிவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரேஞ்ச் டி.ஐ.ஜி.யின் தணிக்கைப் பணி: சிறைத்துறை ரேஞ்ச் டி.ஐ.ஜி.யின் பணி சிறை விதிகளின்படி எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை சுருக்கமாகச் சொல்வதென்றால்,   98 சதவீதம்  தணிக்கை மற்றும் ஆய்வு செய்வது மட்டுமே இவரது பிரதான பணி.  மீதமுள்ள 2 சதவீதம்,  ஒழுங்கு நடவடிக்கை மேல்முறையீட்டு அலுவலராகவும், சிறைவாசிகள் வெளியே சென்று வேலை செய்வதற்கு அனுமதி அளிப்பது மற்றும் சிறைவாசிகளுக்கு சாதாரண விடுப்பு வழங்குவதும் ஆகும்.  ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை இந்தத்  தணிக்கை மேற்கொள்ளப்படும்.  

மேலும், சிறை DGP, ரேஞ்ச் DIG-களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை எண்: 18011/உத.1/2015, நாள்:05.05.2015-ல், சிறைகளில் தணிக்கை மேற்கொள்ளும்போது,  அனைத்துப் பதிவேடுக ளையும் 100 சதவீதம் ஆய்வுசெய்ய வேண்டு மெனவும், அதில் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், இழப்புத் தொகை எவ்வளவு?, யார் அதற்கு பொறுப்பு? என்பதைத்  தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஆணைகளை எந்த ரேஞ்ச் DIG-யும், தணிக்கைக்குழுக்களும் முறையாகப் பின் பற்றாததால்தான் மேற்கண்ட நிகழ்வுகளும், உணவுக்கொள்முதல் ஊழல், கேன்டீன் ஊழல், தொழிற்சாலை ஊழல் என  ஊழல் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகின்றன.  இனியும் இதுபோன்ற நிகழ்வுகளும், ஊழலும் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால், தணிக்கையை ஒழுங்காக மேற்கொள்ளாத தணிக்கைக்குழுக்களின் மீது கடுமையான ஒழுங்கு/குற்றவியல் நடவடிக்கை எடுத்தால்தான்  சிறைத்துறையில் ஊழல்கள் குறையும். ரேஞ்ச்-DIG மற்றும் சிறை-DGP-யின் அலுவலகத்திலுள்ள தணிக்கைக்குழுக்களின் மீது சிறை நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

(ஊழல் தொடர்ந்து கசியும்..)