துப்பறியும் மோப்ப நாய் பிரிவு: சிறைகளில் வெடிபொருள்கள் மற்றும் போதைப் பொருள்களைக் கண்டறிய, ரூ.18.72 லட்சம் செலவில், அரசாணை எண்: 641, உள் (சிறை-ஒய) துறை, நாள்: 31.07.2009-ன்படி, தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளுக்கும் தலா இரண்டு மோப்ப நாய்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் கொள்கைக் குறிப்பின்படி, மொத்தம் 18 மோப்ப நாய்கள் தமிழகச் சிறைத் துறையில் பணியில் உள்ளன. ஒரு மோப்ப நாய்க்கு இரண்டு காவலர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, காவல்துறை மோப்ப நாய் பிரிவினர் மூலம், மோப்ப நாய் மற்றும் காவலருக்கு அடிப்படைப் பயிற்சியாக 9 மாதம் பயிற்சி அளிக்கப்பட்ட 36 காவலர்கள் பணியில் உள்ளனர். சில மத்திய சிறைகளில் மோப்ப நாய் பிரிவு தற்போது செயல்படவில்லை என்றாலும், நாய்களுக் கான பணியிடம் இன்றும் அப்படியேதான் உள்ளது.
மோப்ப நாய்களுக்கான ராயல் கேனின் (Royal Canin) உணவுக்காக, நாய் ஒன்றுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.200 ஒதுக்கப்படுகிறது. சோப்பு, ஷாம்பு, கிருமி நாசினிகள், வைட்டமின் மாத்திரைகள் போன்ற பராமரிப்புச் செலவிற்காக ஒரு மோப்ப நாய்க்கு ஒவ்வொரு மாதமும் ரூ.500 வழங்கப்படுகிறது. ஒரு மோப்ப நாய்க்கு ஆண்டுதோறும் ரூ.1000/- தடுப்பூசிக்காகச் செல விடப்படுகிறது.
சிறை DGP சுற்றறிக்கை எண்: 17720/ஈந.1/2013, நாள்: 29.04.2013-ன்படி சிறையைத் திறப்பதற்கு முன்பு அதிகாலையில் மோப்ப நாய்களைக் கொண்டு, முந்தைய இரவில் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் வீசப்பட்டனவா என்பதை சிறையின் ச
துப்பறியும் மோப்ப நாய் பிரிவு: சிறைகளில் வெடிபொருள்கள் மற்றும் போதைப் பொருள்களைக் கண்டறிய, ரூ.18.72 லட்சம் செலவில், அரசாணை எண்: 641, உள் (சிறை-ஒய) துறை, நாள்: 31.07.2009-ன்படி, தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளுக்கும் தலா இரண்டு மோப்ப நாய்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் கொள்கைக் குறிப்பின்படி, மொத்தம் 18 மோப்ப நாய்கள் தமிழகச் சிறைத் துறையில் பணியில் உள்ளன. ஒரு மோப்ப நாய்க்கு இரண்டு காவலர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, காவல்துறை மோப்ப நாய் பிரிவினர் மூலம், மோப்ப நாய் மற்றும் காவலருக்கு அடிப்படைப் பயிற்சியாக 9 மாதம் பயிற்சி அளிக்கப்பட்ட 36 காவலர்கள் பணியில் உள்ளனர். சில மத்திய சிறைகளில் மோப்ப நாய் பிரிவு தற்போது செயல்படவில்லை என்றாலும், நாய்களுக் கான பணியிடம் இன்றும் அப்படியேதான் உள்ளது.
மோப்ப நாய்களுக்கான ராயல் கேனின் (Royal Canin) உணவுக்காக, நாய் ஒன்றுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.200 ஒதுக்கப்படுகிறது. சோப்பு, ஷாம்பு, கிருமி நாசினிகள், வைட்டமின் மாத்திரைகள் போன்ற பராமரிப்புச் செலவிற்காக ஒரு மோப்ப நாய்க்கு ஒவ்வொரு மாதமும் ரூ.500 வழங்கப்படுகிறது. ஒரு மோப்ப நாய்க்கு ஆண்டுதோறும் ரூ.1000/- தடுப்பூசிக்காகச் செல விடப்படுகிறது.
சிறை DGP சுற்றறிக்கை எண்: 17720/ஈந.1/2013, நாள்: 29.04.2013-ன்படி சிறையைத் திறப்பதற்கு முன்பு அதிகாலையில் மோப்ப நாய்களைக் கொண்டு, முந்தைய இரவில் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் வீசப்பட்டனவா என்பதை சிறையின் சுற்றுச்சுவர்களை ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கைகளை அவ்வப்போது சிறைத்துறையின் தலைமை அலுவலகத் திற்குத் தெரிவித்திட கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறை களில் கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட பொருள்களின் பயன்பாட்டைக் கட்டுப் படுத்த மோப்ப நாய்களின் சேவைகளைப் பயன்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே, 2013-ல் DGP சுற்றறிக்கை எண்:54212/நப.3/2012-ன்படி மோப்ப நாய்களின் நலனைக் கவனித்துக்கொள்வதற்கும், அவற்றுக்கு ஏர் கண்டிஷனிங் வசதி வழங்கவும் வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இத்துறையில் உண்மையில் நடப்பது என்னவென்றால், அதிகாலை 5 மணி முதல் 5:45 மணி வரை, வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே இந்த மோப்ப நாய்களைச் சிறையின் சுற்றுச் சுவரைச் சுற்றி வாக்கிங் கூட்டிச் சென்றுவிட்டு, சிறைக்கு வெளியே உள்ள அதற் கான இடத்தில் அடைத்துவிடுவர். அதைத் தாண்டி இந்த நாய்கள் சிறைத்துறை வரலாற்றில் எந்தவிதமான தடை செய்யப்பட்ட பொருளையும் கண்டறிந்ததாக ஆவணங்கள் எதுவும் இல்லை. சிறைவாசிகளைக் காலையில் 6:00 மணிக்கு திறந்துவிட்டு மாலை 6 மணிக்கு அடைப்பு செய்வார்கள். அந்த நேரங்களில்தான் கஞ்சா புழக்கம் மிகவும் அதிகமாக இருக் கும். அந்த சமயங்களில் ஒருமுறை கூட மோப்பநாய்கள் சிறைக்குள் வருவதில்லை. ஒரு மோப்பநாய் கஞ்சாவைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், குறைந்தது 100 கிராம் அளவாவது இருக்க வேண் டும் என வல்லுநர்கள் கூறுகின்ற னர். 100 கிராம் இருந்தால்தான் அதிலிருந்து வரும் வாசனையை வைத்து இந்த மோப்ப நாய்களால் கண்டறிய முடியும். சிறைக்குள் எத்தனை கிலோ கஞ்சா வந்தாலும், வந்த மறுநொடியே அது சிறு சிறு உருண்டைகளாகத் திரட்டப்பட்டு பிரிக்கப்பட்டுவிடும். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, மோப்ப நாய்கள் வரவேண்டும், வந்து தங்களிடமுள்ள கஞ்சாவைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று, 100 கிராம் அளவு கஞ்சா பொட்ட லத்தை யார்தான் வைத்திருப் பார்கள். இந்த மோப்ப நாய் பிரிவினால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்புதான். மற்றபடி, ஒரு பயனும் இல்லை.
இந்த மோப்ப நாய் பிரிவு, பணிச் சுமை மிகுந்த சிறைச்சாலைக்குள் காவலர்கள் ‘டூட்டி’ செய்வதற்குப் பதிலாக, சிறைக்கு வெளியே இந்த மோப்ப நாய்களைக் கவனித்துக்கொள்வது என்ற போர்வையில் ஓபி’ அடிப்பதற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. ஏதேனும் ஒரு மத்திய சிறையில் ஒரு மோப்ப நாய் இறந்துவிட்டால், அங்கு பணிபுரியும் காவலர்கள் தங்களது சொந்த செலவிலேயே ஒரு நாய்க்குட்டியை வாங்கி, ஏதேனும் ஒரு டிரஸ்ட் அல்லது சஏஞ மூலம் அது அன்பளிப்பாக வழங்கப்பட்டதுபோல் கணக்கு காண்பித்து, அதைச் சிறையில் வைத்துக்கொள்வார்கள். ஏன் காவலர்கள் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்? இந்த மோப்ப நாய்கள் மூலம், சிறைக்குள் தடை செய்யப்பட்ட ஒரு பொருள்கூட வந்து விடக்கூடாது என்ற அதீத ஆர்வத்திலா என்றால், அதுதான் இல்லை. சிறைக்குள்ளே டூட்டி போட்டுவிடுவார்கள் என்ற பயத்தினால்தான். இந்த மோப்ப நாய்களை வைத்தே, சிறைக்குள் டூட்டிக்கு வராமல், இன்னும் பல ஆண்டுகளை ஓட்டிவிட வேண்டும் என்பதற்காகவே, நாய்க்குட்டிகளை இவர்கள் வாங்கிவந்து மோப்ப நாய் பிரிவில் சேர்த்துவிடுகின்றனர். இதுபோன்ற கேலிக்கூத்து கள், சிறைத் துறையில் அன்றாடம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
மேலும், டிரஸ்ட் அல்லது NGO மூலம் தானமாகப் பெறப்படும் நாய்க்குட்டியை Kennel Club of India என்கிற நிறுவனத்தில் முறையாகப் பதிவுசெய்திருக்கவேண்டும். பெறப்படும் நாய்க்குட்டிக்கு, பிறந்து 60-வது நாளிலிருந்து பயிற்சி அளிக்கப்படும் என்பதால், அது பிறந்து இரண்டு மாதங்களுக்கு மிகாமலிருக்க வேண்டும். அந்த நாயை சிறைத்துறையில் பணிக்கு எடுத்துக்கொள்வதற்கு, சம்பந்தப்பட்ட சிறைக் கண்காணிப்பாளர், ரேஞ்ச் டி.ஐ.ஜி. மூலம் சிறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்புவார். அந்தக் கடிதத்தின்படி, சிறை டி.ஜி.பி. உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதி, தமிழக அரசிடமிருந்து முறையாக அனுமதி பெற்ற பின்புதான், அந்த நாய்க்குட்டியைப் பணிக்கு ஏற்றுக்கொள்ளமுடியும். அதன்பிறகு, காவல்துறையில் நாய்களுக்குப் பிரத்தியேகமாகப் பயிற்சியளிக்கும் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். பயிற்சி முடிந்து பணியில் சேரும் நாயின் ரேங்க் டி.எஸ்.பி. தரத்திலானது என்று கூறப்படுகிறது. ஆனால், நாயின் ரேங்க் குறித்து எந்த விதிகளிலும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நாய்களைப் பாரமரிப்பதற்கென்றே, ஒவ்வொரு மத்திய சிறையிலும் பல லட்சங்கள் செலவு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. குளிர்சாதனப் பட்டியும் வழங்கப்பட்டுள்ளது. மின்கட்டணம், காவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், காவலர்களுக்கும் மோப்ப நாய்களுக்கும் பயிற்சிக் கட்டணம், நாய்களுக்குச் செலவிடப்படும் உணவு மற்றும் பராமரிப்புத் தொகை இவை அனைத்துமே வீண் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு சிறு கணக்கு: நாய்க்குட்டி ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது என்றுகூட வைத்துக்கொள்வோம். மேற்காணும் செலவுப் பட்டியலானது மிகவும் குறைத்தே கணக்கிடப் பட்டுள்ளது. மோப்ப நாய் பிரிவை துவக்கிய ஆண்டில் 1,90,35,000/- ரூபாயும், ஒவ்வொரு வருடமும் மோப்ப நாயை பராமரிக்கவும், பராமரிப்பவருக்குச் சம்பளமும் சேர்த்து 1,23,48,000/- ரூபாயும் செலவிடப்பட்டது. அப்போதிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆக மொத்தம் ரூ.3,13,83,000 அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின் கடந்த 10 ஆண்டுகளில் மோப்ப நாயை பராமரிக்கவும், பராமரிப்பவருக்கு சம்பளமும் சேர்த்து ரூ.12,34,80,000/- செலவிடப்படுகிறது. தமிழகச் சிறைத்துறையில் இந்த மோப்ப நாய் பிரிவைத் துவக்கியதால், ஒட்டுமொத்தமாக ரூ.15 கோடிக்கும் மேல் தமிழக அரசின் நிதி ஏப்பம் விடப் பட்டுள்ளது. இனிமேலாவது, சிறைத்துறையில் எந்தப் பணியையும் சரிவரச் செய்யாமல் இருக்கும் இந்த மோப்ப நாய்களை காவல் துறையிடமாவது ஒப்படைத்து, நிதி இழப்பைத் தவிர்ப்பது நல்லது.
சிறையில் தடைசெய்யப்பட்ட பொருள்களை ஒழிக்கிறேன் என்ற போர்வையில், அரசுக்கு செல்போன் ஜாமர், மோப்ப நாய் பிரிவு, நவீன இயந்திரங்கள் கொள்முதல் என இன்னும் எந்தெந்த விதத்தில் எத்தனையெத்தனை கோடிகளை விரயம் செய்யப் போகின்றனரோ?
(ஊழல் தொடர்ந்து கசியும்..)