சிறை சீர்திருத்தத்திற்கான அகில இந்திய குழு (A.N.முல்லா குழு) (1980-83) தொகுதி-ஒ: பத்தி 8.34.30: சிறைகளுக்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதைக் கண்டறிந்து தடுப்ப தற்கு காவல்துறையின் உளவுப் பிரிவைத் தீவிரமாக ஈடுபடுத்தவேண்டும் என்றும், சிறைத்துறையின் தலைமையகத்திலிருந்து Vigilance Cell என்ற பிரிவின் மூலம் சிறைப் பாதுகாப்பு,  சிறைவாசிகள் மற்றும் சிறைப்பணியாளர்களின்  ஒழுக்கத்தில்  சரியான கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

Advertisment

நீதிபதி M.M.இஸ்மாயில் கமிஷன் (1977):  இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனத்தின்போது சென்னை மத்திய சிறையில் அடைபட்டிருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிட்டி பாபு உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்கள்,  சிறைப் பணியாளர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க, மெட்ராஸ் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்  ஏ.ஞ.சர்: 1202, க்ஹற்ங்க்: 11.05.1977- ன்படி ஒரு நபர் கமிஷனை அமைத்தது.  இது சிறையின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் அறிக்கை அளித்தது.

தமிழ்நாடு சிறை சீர்திருத்தக் குழு (1978-79): இஸ்மாயில் கமிஷனின் அறிக்கை (1977)  தொகுதி II-ன் அடிப்படையில் சிறை நிர்வாகத்தைச் சீர்திருத்த எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதலமைச்சராக இருந்தபோது R.L.நரசிம்மன் (ஓய்வு பெற்ற நீதிபதி) தலைமையில் S.M.PV (ஓய்வு பெற்ற சிறைத்துறைத் தலைவர்) மற்றும் சில உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இது சிறை நிர்வாகத்தை மேம்படுத்துவதையும்  சேர்த்து, மொத்தம் 178 பரிந்துரைகளை அளித்தது.

followup1

Advertisment

இந்திய அரசின் அறிக்கை: சிறை நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, இந்திய உள்துறை அமைச்சக அறிக்கை எண்: V-16014/3/86-GPA-VI, dated: 28.07.1986-ன்படி சிறை அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறை(CIA)அதிகாரிகள் கொண்ட குழுவை இந்திய அரசு அமைத்தது. இதன் அறிக்கை 1987ஆம் ஆண்டு, இந்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில சிறைத்துறை தலைமை அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டது. இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்ய துணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது. 05.02.1991-ல்  மத்திய அரசின் அறிக்கை யர்ப்ன்ம்ங் ஒ-ல் கூறப்பட்ட பெரும்பான்மையான கருத்து களை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதில் சிறைகளில் ஜெனரேட்டர் வசதிகள், Intercom YN§, Watch Tower, இதில் முக்கியமானது, சிறையில் உளவுத் தகவல்களைச் சேகரிப்பது.            

நீதிபதி M.M.இஸ்மாயில் விசாரணைக் கமிஷன் (1990): சென்னை மத்திய சிறையிலிருந்து 20/21.08.1990-ல் விசாரணை சிறைவாசி சங்கர் என்கிற ஆட்டோ சங்கர்  மற்றும் நான்கு சிறைவாசிகள் தப்பிச் சென்றது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு  அமைக்கப்பட்டது. இக்கமிஷனின் பரிந்துரைகள்,  அரசாணை எண்: 630, நாள்:10.04.1992 மூலமாக தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில், “கைதிகளிட மிருந்து உளவுத்துறைகளுக்குத் தேவையான தகவல் களைச் சேகரிப்பது மற்றும் சிறைவாசிகளின் நடத்தை களில் ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் உள்ளனவா என்பதைக் கண்காணிப்பது, சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உளவுப் பணி குறித்து பயிற்சி அளிப் பது,  உளவுத் தகவல்களைச் சேகரிப்பது,  கைதிகளின் பாதுகாப்பிலும், சிறையின் மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கும் உதவும்’என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (பக்கம் 146, இணைப்பு XVII)

நீதிபதி ராமானுஜம் விசாரணைக் கமிஷன்: சென்னை மத்திய சிறையிலிருந்து 27.02.1995 இரவு தப்பிச்சென்ற 9 தடா சிறைவாசிகள் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு, சிறை நிர்வாக மேம்பாடு தொடர்பாக, பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. 

Advertisment

சிறைப் பணியாளர்கள் கொலை: கோவை மத்திய சிறையிலிருந்த முஸ்லிம் கைதிகள் துன்புறுத்தப்பட்ட தாகக் கூறப்பட்டதைக் கண்டித்து, 22.04.1996-ல் கோவை மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறைத்துறை டி.ஐ.ஜி. அலுவலகத்தில், டெய்லர் ராஜா மற்றும் மூவர்  பெட்ரோல் குண்டு வீசியதில், அப்போது பணியி லிருந்த சிறை வார்டர் பூபாலன் இறந்தார்.

1997-ல் மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயி லராகப் பணிபுரிந்த ஜெயபிரகாஷ், பயங்கரவாத அமைப்பான அல்-உம்மாவைச் சேர்ந்த ஷாகுல் ஹமீத் என்ற கைதியைச் சோதனை செய்ததால், மதுரை சிறை முன்பாக, டெய்லர் ராஜா மற்றும் இருவரால் கொலை செய்யப்பட்டார். (சி.பி.சி.ஐ.டி. குற்ற எண். 1861/1997, எஸ்.சி.எண்.456/2000) 

followup2

இந்த இரண்டு சிறைப்பணியாளர் கள் கொலை வழக்கு மற்றும் 14.02.1998-ல் தமிழ்நாடு முழுவதும் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, பல்வேறு வகுப்புவாதக் கொலை வழக்குகளில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஏ.சாதிக் (அ) ராஜா (அ) டெய்லர் ராஜா (50), கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் ஜூலை 9, 2025-ல் தமிழக பயங்கரவாத தடுப்புப் படை(TN-ATS) பிரிவால் கைது செய்யப்பட்டார். இதற்காக தமிழக முதலமைச்சர் இவர்களைப் பாராட்டினார். 

நீதிபதி ஒ.டேவிட் கிறிஸ்டியன் விசாரணைக் கமிஷன்: 17.11.1999-ல் சென்னை மத்திய சிறையினுள் நடந்த வன்முறை மற்றும் கலவரத்தால் ஜெயக்குமார், துணை சிறை அலுவலர் மற்றும் சிறைவாசிகள் சிலர் இறந்தது குறித்தும், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்தும் விசாரணை அறிக்கை அளித்தது.  ஊழல் செய்யும் சிறைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரைகள் G.O.No:1088 உள்(சிறை-I) துறை, நாள் : 03.10.2000-ன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மேற்கண்ட அறிக்கைகளின் வாயிலாக தமிழகச் சிறைகளில் நுண்ணறிவு மற்றும் விழிப்புப்பணி பிரிவு   (Intelligence cum vigilance wing) 2002-ல் தொடங்கப்பட்டது.   

இந்தப் பிரிவின் பெயர் விஜிலன்ஸ் என்றதும் சிறைத்துறை யில் லஞ்சத்தை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவு என்று யாரும் அவசரப்பட்டுவிட வேண்டாம். நடப்பு நிலவரத்தைச் சொல்வதென்றால், இவர்கள் லஞ்சத்தை ஊக்குவிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பிரிவினர்.  

தமிழகச் சிறைகளில் உளவுப்பிரிவு வந்தபின் ஊழலும் குற்றமும் தடுக்கப்பட்டு  சிறைகள் சொர்க்க பூமியாக மாறிவிட வில்லை. மாறாக சிறையில் எங்கு என்னென்ன  தவறுகள்  நடக் கின்றன  என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்ற வகையில் லஞ்சம் பெறுவது இவர்களது தனிச்சிறப்பாகும்.  இந்தப் பிரிவு சிறைத் துறையில்  உருவாக்கப்படுவதற்கு முன்புவரை  மூன்று பங்குகளாக பிரிக்கப்பட்ட லஞ்சப்பணம், விஜிலன்ஸ் பிரிவு வந்தபின்  4 பங்கு களாகப் பிரிக்கப்படுகிறது. விஜிலன்ஸ் வந்தபின்பும் சிறைகளில் கஞ்சா, பீடி, செல்போன், உணவு கொள்முதல் ஊழல், தொழிற் சாலை ஊழல், கேன்டீன் ஊழல் மற்றும் பலவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

உதாரணமாக, புழல் சிறை கேன்டீன் ஊழல் குறித்து சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். கடந்த 30.11.2023 அன்று சென்னை புழல் மத்திய சிறை ஒஒ-ல்  விஜிலன்ஸ் பிரிவின் தலைமைக் காவலராகப் பணியாற்றிய ராஜேஷ்,  புழல் சிறையில் உள்ள கேன்டீனில் மாதம் ரூ.25 ஆயிரத்தை  ஜிபே மூலம் லஞ்சமாகப் பெற்று வந்தது  கண்டுபிடிக்கப்பட்டு, அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

ஒரு சாதாரண கேன்டீன் காவலரிடம் விஜிலன்ஸ் காவலர் ரூ.25000 லஞ்சப்பணம் கேட்டு வாங்கியிருக்கிறார் என்றால், அங்கு என்ன தவறு நடந்தது?  எதற்காக  அந்தக் காவலர்  பணம் கொடுத்தார்?  மாதாமாதம் ரூ.25000  கொடுக்கும் அளவிற்கு காவலருக்கு எந்தெந்த வகைகளில் எவ்வளவு வருமானம் வந்தது?  என்பது குறித்து அன்றே இந்த அதிகாரிகள் ஏன் முழுமையாக ஆய்வு செய்யவில்லை?

விஜிலன்ஸ் தலைமைக் காவலர் ராஜேஷின் வங்கிக் கணக்கை மட்டும் ஆய்வு செய்துள்ளனர். அவருக்குப் பணம் போட்டுவிட்ட காவலர்களின்  வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்து, புழல் சிறை கேன்டீனில் ஏதேனும் ஊழல் நடைபெற்றதா? என்பதைக் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தியிருந்தாலே,  இன்று நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் குடும்பத்தினர்,   இத்தனை பாதிப்புக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். அன்றே இந்த ஊழலும் வெளிச்சத்திற்கு வந்து,  பல காவலர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார் கள்.  அன்று ராஜேஷ் மீதும்,  இன்று  சிக்கிய காவலர்களின் தலையிலும் அனைத்துப் பழிகளையும் போட்டு தற்காலிகமாகப் பிரச்சனையை முடித்து வைப்பதுதானே சிறை அதிகாரிகளின் பிரதான வேலையாக இருக்கிறது.  இதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் அல்லவா? 

ரூ.25,000 லஞ்சம் வாங்கிய ராஜேஷ் மீது நடவடிக்கை எடுத்தவர்கள், லட்சங்களில் கறந்துவரும் உயர் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தனர்?

(ஊழல் தொடர்ந்து கசியும்)