"ஹலோ தலைவரே, தி.மு.க. இளைஞரணியின் ஆசைப்படி ஒருவழியாக உதயநிதி ஸ்டாலின் ’மாண்புமிகு’ ஆகிவிட்டார்.''”
"ஆமாம்பா, உதயநிதி அமைச்சராகும் தகவலே நம் உரையாடல் மூலம்தான் முதன் முதலில் வெளியே தெரிந்தது.''”
"உண்மைதாங்க தலைவரே, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராகப் பார்க்கணும்கிற ஆசை நீண்டகாலமாவே சித்தரஞ்சன் சாலையில் மையங்கொண்டிருந்தது. இதேபோல் அமைச்சர்கள் சிலரும் இது தொடர்பான எண்ணத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்கள். அப்படி இருந்தும் முதல்வர் ஸ்டாலின், இந்த விசயத்தில் அவசரப்படவில்லை. பல்வேறு கட்டங்களிலும் உதயநிதியின் செயல் வேகத்தையும், எளிமையையும் பார்த்து, முழுமையாக திருப்தியடைந்த நிலையில்தான், உதயநிதிக்கு மனப்பூர்வமாக அமைச்சர் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். ஆரம்பத்தில் இருந்தே உதயநிதி தொடர்பான மூவ்களை அவ்வப்போது நம்ம நக்கீரன்தான் வெளிப்படுத்தி வந்தது. இந்த நிலையில், உதயநிதி 14-ஆம் தேதி அமைச்சராகிறார் என்பதையும், அவருக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட இருக்கிறது என்பதையும் ஷார்ப்பாக ஸ்மெல் செய்த நாம், கடந்த வாரமே நம் உரையாடல் மூலம் அதை வெளிப்படுத்தினோம். இது அனைத்துத் தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கு.''
"முதல்வர் ஸ்டாலினிடமே, உதயநிதியைப் பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி மனம் திறந்து பாராட்டி இருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, பதவியேற்பு முடிந்ததும் கவர்னர் ரவியும் முதல்வர் ஸ்டாலினும் ராஜ்பவன் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, "மிஸ்டர் உதயநிதிக்கு என்ன வயதாகிறது?' என முதல்வரிடம் விசாரித்த கவர்னர் ரவி, புருவம் உயர்த்தியபடி, "அவருக்கு வயதே தெரியவில் லையே. மிக இளமையாகவும் எளிமையாகவும் சுறு சுறுப்பாகவும் உதயநிதி இருக்கிறார். அவருக்கு இது பொருத்தமான இலாகாதான்' என்று மனம் திறந்து மகிழ் வோடு பாராட்டியிருக்கிறார். ஒரு தந்தையாக இதைக்கேட்டு ரொம்பவே ஸ்டாலின் நெகிழ்ந்து போனாராம். உடனே, அவர் கவர்னரின் கையைப் பற்றிக்கொண்டு, "தேங்க் யூ சார், தேங்க் யூ' என்றிருக்கிறார்.''”
"உதயநிதிக்கு அமைச்சரவையில் 10ஆம் இடம் அளிக்கப்பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, நாம் முன்னதாகவே சொன்னபடி, அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத் துறை, உதயநிதியிடம் வழங்கப்பட்டிருக்கு. அதே போல் முதல்வர் ஸ்டாலின் கவனித்துவந்த அரசின் சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தும் துறையும் உதயநிதிக்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் மெய்யநாதனுக்கு, அவர் துறைக்கு மாற்றாக சுற்றுச்சூழல் மற்றும் மாசுடக கட்டுப் பாட்டு வாரியத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலை யில், அமைச்சரவையில் சீனியர்கள் பலர் இருந்தும், புதிதாகப் பொறுப்பேற்ற உதயநிதிக்கு திடீரென அமைச்சரவையில் 10ஆம் இடத்தை கொடுத் திருப்பது விவாதத்தையும் உருவாக்கி வருகிறது.''”
"நாம் முன்பே பேசிக்கொண்டபடி மேலும் சில அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் மாற்றித் தரப்பட்டிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபுவுக்கு வீட்டுவசதித் துறையை மாற்றிக் கொடுக்கலாமா? என்ற யோசனை ஸ்டாலினிடம் இருந்ததாம். ஆனால் முத்துசாமி அதை சிறப்பாக நிர்வகித்து வருவதால், சி.எம்.டி.ஏ.வை மட்டும் சேகர்பாபுவிடம் கொடுத் தாராம் ஸ்டாலின். அதேபோல், பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜனிடம், ஐ.பெரியசாமியிடம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக வழங்கப் பட்டிருக்கிறது. நிதித்துறையோடு இது தொடர் புடைய துறை என்பதால், இதை தியாகராஜனிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். தன்னிடம் இருந்த கூட்டுறவுத்துறையால் அதிருப்தியில் இருந்த ஐ.பெரியசாமியைக் குளிர்விக்க எண்ணிய ஸ்டாலின், அவரிடம் இருந்த கூட்டுறவுத்துறையை அமைச்சர் பெரியகருப்பனிடம் கொடுத்துவிட்டு, பெரியகருப்பனிடம் இருந்த ஊரக வளர்ச்சித் துறையை ஐ.பெரியசாமியிடம் வழங்கியிருக்கிறார். பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்குக் கூடுதலாக கதர் மற்றும் கிராம தொழில் துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கு. அதேபோல் அமைச்சர் காந்திக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.''”
"வனத்துறையும் கைமாறி இருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, வனத்துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்திருக்கும் ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மீது, தொடர்ந்து புகார்கள் வெடித்தபடியே இருக்கிறது. மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஜக்கி யோடு வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் மிகுந்த நெருக்கம் பாராட்டிவந்தார். இதையெல்லாம் நம் நக்கீரன்தான் ஆதாரங் களோடு அம்பலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவருக்கு மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை, அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அதனால் அவரிடமிருந்த வனத்துறையைப் பறித்து, அமைச்சர் மதிவேந்த னிடம் கொடுத்திருக்கும் ஸ்டாலின், மதியிடம் இருந்த சுற்றுலாத் துறையை ராமச்சந்திரனுக்குக் கொடுத்திருக்கிறார். திடீரென வனத்துறை பறிக்கப்பட்டதில் அமைச் சர் ராமச்சந்திரன் அதிக மாய் அப்செட் ஆகிவிட் டாராம்.''”
"அமைச்சரவை மாற்றம் முடிந்ததுமே, அமைச்சர் ஒருவர் தன் துறைக் கூட்டத்தைப் பர பரப்பாக நடத்தியிருக் கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, அறநிலையத் துறை அமைச்சரான சேகர்பாபுவுக்கு கூடுதலாக சி.எம்.டி.ஏ.வையும் ஸ்டாலின் கொடுத்திருக்கும் நிலையில், அந்தத் துறையில் இருப்பவர்களுக்கே இந்த விசயம் முழுதாய்ப் போய்ச்சேரும் முன்பாக, அடுத்த சிலமணி நேரத்திலேயே, சி.எம்.டி.ஏ.வில் ஆய்வுக்கூட்டத்தை நடத்தி அதிகாரிகள் தரப் பையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் சேகர் பாபு. இதில் முதல்வர் கொண்டுவர நினைக்கும் சில விசயங்களை விரைவாக நடைமுறைக்குக் கொண்டுவரவே இந்தக் கூட்டம் அவசரகதியில் நடத்தப்பட்டிருக்கிறது என்கிறது அதிகாரிகள் தரப்பு. இதில் வீட்டு வசதித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ்., சி.எம்.டி.ஏ.வின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ். ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.''”
"தே.மு.தி.க. சைடிலும் பரபரப்பு தெரியுதே?''”
"அண்மையில் தே.மு.தி.க.வின் மா.செ.க் களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார், கட்சியின் லகானைப் பிடித்திருக்கும் பிரேமலதா விஜயகாந்த். அப்போது அவர், தீவிர அரசியலில் ஈடுபடும் அளவுக்கு நம் கேப்டனின் உடல்நலம் இன்னும் சீராக வில்லை. அவர் குணமடைந்திருந் தால், தமிழக அர சியலே வேறு மாதிரி மாறியிருக் கும். என்ன பண்றது? நமக்கு நேரம் சரியில்லை. தொடர் தோல்வி களால் நீங்களும் சோர்ந்துபோயிட்டீங்க. நிச்சயம் நமக்கு எதிர்காலம் உண்டு. நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு நிச்சயம் கணிசமான வெற்றி கிடைக்கும். அதற்கு ஏற்பதான் நம் கூட்டணி அமையும். அதனால் தி.மு.க., அ.தி.மு.க. மாதிரி இப்போதே பூத் கமிட்டி அமைக்கும் வேலையைத் தொடங்குங்கள். ஒரு கமிட்டியில் குறைந்தது 20 பேராவது இருக்க வேண்டும்னு சொல்லியிருக்கிறார். மா.செ.க்களோ, பெரிய கட்சிகளே, பூத் கமிட்டியில் 10 பேரை சேர்க்கவே திணறுது. இயன்றவரை முயற்சிக்கிறோம்னு சொன்னாங்களாம்.''’
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் பள்ளித் தாளாளர் ரவிகுமார், அவர் மனைவி சாந்தி மற்றும் மூன்று ஆசிரியைகள் உட்பட ஐவரும் ஜாமீனில் வெளியே வந்திருக்கும் நிலையில், இதை எதிர்த்து அரசுத் தரப்பு அப்பீல் செய்யவில்லை. இந்த நிலையில் மாணவியின் தாய் செல்வி, வழக்கறிஞர் சங்கரசுப்பு மூலம், உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி, "என் 17 வயது மகள் ஸ்ரீமதி, மானபங்கம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். எனவே குற்றவாளிகள் மீது போக்சோ சட்டமும் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே காவல்துறை இந்த வழக்கை சரிவர விசாரிக்கவில்லை. எனவே முதலில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப் பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும்' என்று முறையிட்டிருக்கிறார். இதை விசா ரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், உங்கள் ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று ரவிகுமார் உள்ளிட்ட ஐவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.''