மீபத்தில் கோவை நகரில் மிகப்புகழ்பெற்ற ஆனந்தாஸ் ஓட்டலில் வருமான வரித்துறை ரெய்டு 5 நாள் நடந்தது. 60 வருமானவரித்துறை அதிகாரிகள் ஆனந்தாஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் பாய்ந்தார்கள். இது தவிர ஆனந்தாஸ் ஓட்டலின் முதலாளி மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகள் ரெய்டுக்குள்ளாக்கப்பட்டது. மொத்தம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த ரெய்டில் என்ன கிடைத்தது? என்பது பற்றி வருமான வரித்துறையினர் எந்த விளக்கமும் பத்திரிகையாளர்களுக்கு தரவில்லை.

gg

ஆனந்தாஸ் ஓட்டல் நிறுவனம் வரி ஏய்ப்பு செய் திருக்கிறது. அந்த வரிஏய்ப்பின் மூலம் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறது. அதன் மதிப்பு பல கோடிகளில் இருக்கும் என வருமானவரித்துறையிலிருந்து செய்திகள் கசியவிடப்பட்டன. இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, வருமான வரித் துறையிடம் எந்த பதிலும் இல்லை.

ஆனந்தாஸ் நிறுவனம் கோவையில் ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்களே ஆகிறது. கோவையின் முக்கிய சைவ ஓட்டலான அன்னபூர ணாவை ஆனந்தாஸ் வியாபாரத்தில் முந்தியது. தரம், சுவை என நல்ல நிலையில் ஓட்டல் இயங்கிவந்தது. அதனால் விலை சற்று அதிகம் என்றாலும் கோவை மக்கள் ஆனந்தாஸ் ஓட்டலை ஆதரித்தார்கள். ஆனந்தாஸுக்குப் போட்டியாக ஆர்ய பவன் என்கிற ஓட்டல் கோவைக்கு வந்தது. நாகர்கோயிலை தலைமை யகமாகக் கொண்ட ஆர்யபவன் கோவையில் பெரிதாக ஆனந்தாஸின் போட்டியை சமாளிக்க முடியவில்லை. இதனால் வடவள்ளி பகுதியில் ஆர்ய பவன் கிளை மூடப்பட்டது.

இந்நிலையில்… ஆனந்தாஸ் ஓட்டல் மீது திடீரென மத்திய அரசு பாய்ந்ததன் பின்னணி என்ன? என் கோவை மக்கள் ஆச்சரியப் பட்டார்கள். கோவையில் பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் இதுபோல தொழில் நிறுவனங்களை மிரட்டுவார், அவர்கள் சொன்னபடி கேட்கவில்லையென்றால் வருமான வரித்துறையை ஏவிவிடுவார் என எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன.

Advertisment

gg

Advertisment

கோவையில் ஏகப்பட்ட பினாமி சொத்துக்களை வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவரது தம்பி அன்பரசன் ஆகியோரின் சொத்துக்களில் ரெய்டு நடத்தாமல் ஆனந்தாஸ் ஓட்டல் மீது வருமானவரித்துறை பாய்ந்ததற்கு ஒரு சுவையான பின்னணிக் கதையை கோவையில் உள்ள தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ய பவன் ஓட்டல் திறப்புவிழா விளம்பரங்களில் ஜக்கி வாசுதேவின் படம் பெரிதாக இடம்பெற்றது. அந்த ஓட்டல் திறப்புவிழாவில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டார். அந்த ஓட்டலின் அனைத்துக் கிளைகளிலும் ஓட்டல் உரிமையாளரின் படத்தைவிட ஜக்கி வாசுதேவின் படமே பிரதானமாக இடம்பெற்றிருக்கும். நான்கூட, "ஏன் ஜக்கி வாசுதேவின் படத்தை வைத்திருக்கிறீர்கள்? அவர் இந்த ஓட்டலின் உரிமையாளரா?' என கேட்டேன், அதற்கு, அந்த ஓட்டல் ஊழியர்கள், "எங்கள் முதலாளி வைக்கச் சொன்னார், நாங்கள் வைத்துள்ளோம்' என பதில் சொன்னார்கள் என்கிறார் ஜக்கி வாசுதேவிற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திவரும் காமராஜ் என்பவர்.

உண்மையில் ஜக்கி வாசுதேவ், வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் பங்குபெற்ற ஒரு பஞ்சாயத்து ஆனந்தாஸ் ஓட்டல் நிறுவனத்துடன் நடந்திருக்கிறது. ஜக்கிக்கு சொந்தமான ஈ’ஷா யோக மையத்தில் ஜக்கியே ஒரு ஓட்டல் நடத்துகிறார். அதன் கிளை சென்னை, மயிலாப்பூரிலும் இயங்குகிறது. இந்த ஓட்டல் ஜக்கியின் ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களின் சுவைக்கு சரியானதாக இல்லை. எனவே ஜக்கியின் ஆசிரமத்தில், ஃபுட் கோர்ட் என்ற பெயரில் ஓட்டல்களின் சங்கமத்தை அமைக்க ஜக்கி விரும்பினார். அதற்கு ஆனந்தாஸ் நிறுவனத்தை அழைத்தார். ஜக்கியின் இந்த அழைப்பை ஆனந்தாஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டது. ஜக்கியுடன் சென்றால் அது தனது நிறுவனத்துக்கு ஒரு பா.ஜ.க. ஆதரவு அரசியல் சாயத்தை உருவாக்கும் என்பதால் ஜக்கியின் அழைப்பை ஆனந்தாஸ் நிராகரித்தது என்கிறார்கள் ஆனந்தாஸ் நிறுவனத்துக்கு நெருக்கமானவர்கள்.

;;

ஆனந்தாஸின் இந்த நிராகரிப்பு, ஜக்கியை கோபமடைய வைத்தது. ஆனந்தாஸுக்குப் பதிலாக ஆர்ய பவன் ஓட்டல் கிளையை ஜக்கி தனது ஆசிரம வளாகத்தில் திறந்தார். அன்று முதல் ஆர்ய பவன் நிறுவனம் ஜக்கிக்கு நெருக்கமான நிறுவனமாக மாறிவிட்டது. இப்போது ஆர்ய பவன் நிறுவனத்துக்காக ஜக்கி, தானே களமிறங்கி, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மூலம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழியாக வருமான வரி சோதனையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் என்கிறார்கள் ஜக்கிக்கு நெருக்கமானவர்கள்.

இதுபற்றி வானதி சீனிவாசனிடம் கேட்ட போது, "இந்த வருமானவரி சோதனைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என உறுதியாக மறுக்கிறார்.

ஆர்ய பவன் நிர்வாகமும், ஆனந்தாஸில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கும் எங்களது நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மறுக்கிறது.

ஆனால் கடந்த ஆட்சியைப் போல மாநில அரசில் ஆதிக்கம் செலுத்த ஜக்கியால் முடியவில்லை. மத்திய அரசில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்குப் பிடிக்காதவர்களை காயப்படுத்தும் வேலையை ஜக்கி திறமையாகச் செய்கிறார் என்கிறார்கள் ஜக்கியின் எதிர்ப் பாளர்கள்.