நீதிக்கு சவால்விடும் ஜக்கி! -தொடரும் ஈஷாவின் அத்துமீறல்கள்!

isha

பொதுவாக குற்றச்செயல்களை தடுக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும்தான் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஆனால் அந்த நீதிமன்றத்தையே ஏமாற்றி, குற்றச்செயல்களை செய்துவருகிறார் பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் என்கிற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்பவர்கள், அவர்கள் எந்த நோக்கத்திற்காக வழக்குத் தொடருகிறார்கள்? அது தொடர்பான ஏதேனும் வழக்குகள் முன்பு தொடரப்பட்டிருந்தால் அதைப்பற்றி குறிப்பிட வேண்டும் என தெளிவான உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கண்டிப்பாக இதைப் பற்றி குறிப்பிடாத வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட மாட்டாது. ஏற்கனவே நடந்த வழக்குகளை குறிப் பிடுபவர்கள் கோர்ட்டின் தண்டனைக்கு உள்ளா வார்கள் என குறிப்பிடப்பட்டிருந் தது. ஆனால் ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

isha

தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டுத்துறையிடம் ஜக்கிவாசுதேவ் எந்த அனுமதியும் பெறாமல் கட்டிடங்கள் கட்டியுள் ளார். மத்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டத்துக்குப் புறம்பாக 22-12

பொதுவாக குற்றச்செயல்களை தடுக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும்தான் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஆனால் அந்த நீதிமன்றத்தையே ஏமாற்றி, குற்றச்செயல்களை செய்துவருகிறார் பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் என்கிற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்பவர்கள், அவர்கள் எந்த நோக்கத்திற்காக வழக்குத் தொடருகிறார்கள்? அது தொடர்பான ஏதேனும் வழக்குகள் முன்பு தொடரப்பட்டிருந்தால் அதைப்பற்றி குறிப்பிட வேண்டும் என தெளிவான உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கண்டிப்பாக இதைப் பற்றி குறிப்பிடாத வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட மாட்டாது. ஏற்கனவே நடந்த வழக்குகளை குறிப் பிடுபவர்கள் கோர்ட்டின் தண்டனைக்கு உள்ளா வார்கள் என குறிப்பிடப்பட்டிருந் தது. ஆனால் ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

isha

தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டுத்துறையிடம் ஜக்கிவாசுதேவ் எந்த அனுமதியும் பெறாமல் கட்டிடங்கள் கட்டியுள் ளார். மத்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டத்துக்குப் புறம்பாக 22-12-2014-க்குப் பிறகு ஜக்கி வாசுதேவ் 20 கிரவுண்ட் பரப்பளவு கட்டிடங்களை கட்டியுள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுத் துறை ஒரு நோட்டீஸை அனுப்பியது.

"நான் கட்டி நடத்தும் பள்ளிகளை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது தவறு என வழக்குப் போட்டார் ஜக்கி. அந்த வளாகத்தில் பள்ளி கட்டிடம் மட்டுமின்றி, ஆசிரமங்களை யும் கோவிலையும், ஆதியோகி என்கிற பிரம்மாண்ட சிலையையும் வைத்து உலகம் பூராவும் நன்கொடைகளை வாங்கிவருகிறார். ஒட்டுமொத்த சொத்துக்களையும் இந்து அறநிலையத்துறை கைப்பற்றும் அளவிற்கு மத நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஜக்கி வாசுதேவ்தான் இப்படி ஒரு வழக்கு போட்டார். டெக்னிக்கலாக மத்திய அரசை எதிர்த்து வழக்கு போட்டதால், மத்திய அரசு ஜக்கி யின் வழக்கிற்கு சாதகமாக பதிலளிக்க தாமதமானது. அதைப் பயன்படுத்தி வழக்கு முடியும்வரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தடை பெற்றார் ஜக்கி வாசுதேவ்.

ஜக்கியின் இந்த வழக்குதான் அவருக்கு எதிராக திரும்பப் போகிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஜக்கி அவரது ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் பல உண்மைகளை மறைத்துள்ளார். விதிமுறைகளை மீறி கட்டிடங்களைக் கட்டுகிறார்கள் என ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை மறைத்துள்ளார்.

முதலாவது வழக்கு பூவுலகின் நண்பர்கள் இயக்கத் தைச் சேர்ந்த வெற்றிச்செல் வன் என்பவர் தொடர்ந்த வழக்கு. ஜக்கியின் ஆசிரமம் அமைந்துள்ள இக்கரை போடுவம்பட்டி கிராமம், ரிசர்வ் வனப்பகுதிக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. அங்கு ராஜன் வாய்க்கால் என்கிற வாய்க்கால் ஓடுகிறது. இந்த இடத்தில் எந்தக் கட்டிடம் கட்டினாலும் ஹெச்.ஏ.சி.ஏ. மலைப்பரப்பு பாதுகாப்பு கமிட்டியிடம் அனுமதி பெறவேண்டும்.

isha

ஜக்கி வாசுதேவ் கட்டிய எந்தக் கட்டிடத்திற்கும் இதுவரை ஹெச்.ஏ. சி.ஏ.வின் அனுமதி பெறவில்லை. அவர் அமைத்த சிவன் சிலைக்கு மட்டும் எடப்பாடி ஆட்சியில் அனுமதி பெற்றார். ஆனால் அந்தச் சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளை உபயோகப்படுத்த எடப்பாடி அரசை ஜக்கி கேட்டார். அதற்கு எடப் பாடி அரசே அனுமதி மறுத்துவிட்டது. அதேபோல் வனத்துறையும் 2012-ஆம் ஆண்டு இந்த கட்டிடங்கள் வனத்துறை சட்டத்தை மீறி கட்டப்பட்டது என அறிவித்தது. ஹெச்.ஏ.சி.ஏ.வும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி தர முடியாது என அறிவித்தது.

இப்படி அனைத்து விதிமுறைகளை யும் மீறி கட்டிய கட்டிடங்களை கல்வி நிறுவனங்கள் என ஜக்கி அறிவித்து அரசிடம் அனுமதி கோரினார். அதற்கும் அனுமதி தர முடியாது என அரசு அறிவித்துவிட்டது.

இப்படி அனைத்து சட்ட விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மத்தியில் மகா சிவராத்திரி என்கிற ஏழுநாள் நீடிக்கும் திருவிழாவை ஜக்கி நடத்தினார். இந்த மகா சிவராத்திரி அதிக பணத்தை கொண்டுவந்தது. அத்துடன், சினிமா நடிகைகள், அரசியல்வாதிகள் ஆகி யோருடன் வழக்குகளையும் கொண்டுவந்தது.

ishaa

வெற்றிச்செல்வன் என்பவர், ஜக்கி கட்டிய கட்டிடங்களில் இருந்த விதி மீறல்களையும், மகா சிவராத்திரி கொண்டாட்டத்தையும் எதிர்த்து 2013-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். மகா சிவராத்திரிக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் வெற்றிச்செல்வன் தொடர்ந்த வழக்கு இன்றளவிலும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. 2015-ஆம் ஆண்டு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தததாக கோர்ட் ரெக்கார்டுகள் தெரிவிக் கின்றன. அதன்பிறகு முத்தம்மாள் என்கிற ஆதிவாசி பெண்மணி, வனப்பகுதியில் ஓடிய ராஜன் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதாக வழக்கு தொடர்கிறார். அத்துடன் வெற்றிச்செல்வனைப் போலவே ஜக்கியின் சிவராத்திரி கொண்டாட்டத்திற்கும் தடை கோரினார். அந்த வழக்கும் இன்றுவரை நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணையின் ஒரு கட்டத்தில் ஜக்கிவாசுதேவ் கட்டிய கட்டிடங்கள் தொடர்பான புகார்களில் முகாந்திரம் இருந்தால் அதை விசாரிக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார். சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படவில்லை.

இந்த இரண்டு வழக்குகளும் முக்கியமானவை. இதை மறைத்துவிட்டு மத்திய அரசை எதிர்த்து ஒரு வழக்கைப் போடுகிறார். ஜக்கிக்கு இருக்கும் மத்திய அரசின் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக்கப் பார்க்கிறார் என்கிறார் கோவை வழக்கறிஞர் கலை.

ss

இந்த இரண்டு வழக்குகளையும் மறைத்து ஜக்கி தொடர்ந்துள்ள மூன்றாவது வழக்கு ஹைகோர்ட்டின் நிலையாணைகள்படி நடத்த முடியாத வழக்கு. ஹைகோர்ட்டில் வெற்றிச்செல்வனோ, முத்தம்மாளோ இடைச்செருகல் மனு தாக்கல் செய்து ஜக்கி இரண்டு வழக்குகளை மறைத்து மூன்றாவது வழக்கை தாக்கல் செய்தார் எனச் சொன்னால் உயர்நீதிமன்றம் ஜக்கிக்கு தண்டனை தரும். பழைய வழக்குகளும் உயிர்பெறும் என்கிறார் வழக்கறிஞர் நடராஜன்.

இந்தியாவில் ட்ரெண்ட் ஆகிவிட்ட பெருமுதலாளிகள் கோர்ட்டை ஏமாற்றும் வித்தையை ஜக்கியும் பயன்படுத்துகிறார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைத் தாக்கும் காட்டு விலங்கு பாணியில் செயல்படும் ஜக்கியின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் ஆப்பு வைக்குமா? என்பதுதான் தற்போதுள்ள கேள்வி.

nkn260222
இதையும் படியுங்கள்
Subscribe