கர்நாடகாவின் நந்திதுர்க்க மலையில் உருவாகும் ஊற்று, பின்னர் ஆறாக மாறி இரண்டாகப் பிரிந்து ஒன்று ஆந்திரா வழியாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் தமிழகத்துக்குள் நுழைந்து பாலாறாகிறது. மற்றொன்று கர்நாடகாவின் கோலார் மாவட்டம், பெங்களுரூ மாவட்டம் என 112 கி.மீ பயணமாகி, தமிழ்நாட்டின் ஒசூர் பாகலூரில் தென்பெண்ணை ஆறாக நுழைகிறது.
தென்பெண்ணை ஆற்றால், 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதியும், சுமார் 50 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையும் தீர்க்கப்படுகிறது.
தென்பெண்ணையின் துணை ஆறான மார்கண்ட நதியின் குறுக்கே கர்நாடகா மாநிலத்தில் யார்கோல் என்ற இடத்தில் 50 மீட்டர் உயரம், 432 மீட்டர் அகலத்துக்கு தடுப்பணை கட்ட 2012-ல் முடிவுசெய்தது கர்நாடக அரசு. இதற்காக மத்திய நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி வாங்கியது. இது வட மாவட்ட விவசாயிகளிடமும், மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2013-ல் தி.மு.க. விவசாய மக்களைத் திரட்டிப் போராடியது.
அப்போது முதல்வராகயிருந்த ஜ

அப்போது முதல்வராகயிருந்த ஜெ., தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா தடுப்பணை கட்டவுள்ளதை எதிர்த்து அரசின் சார்பில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை நடத்த எந்த முயற்சியும் எடுக்காததால் கிடப்பிலேயே இருந்தது. இரண்டாவது முறையாக 2016-ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தபோதும், வழக்கில் வேகம் காட்டவில்லை, முதல்வராக இருந்த ஜெ. மறைந்தார், எடப்பாடி முதலமைச்சரானார். 2018-ல் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டின் ஒப்புதலில்லாமல் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா ஆய்வுகள், கட்டுமானப் பணிகள் செய்ய முயல்கிறது. இது 1892-ம் ஆண்டு நதி நீர் ஒப்பந்தத்தை மீறுகிறது, அதனால் அந்தப் பணிகள் செய்ய தடை விதிக்கவேண்டும் என்றது.
2019 நவம்பர் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம், உள்நாட்டு நீராதார பிரச்சனை தீர்வுச்சட்டம் 1956-ன்படி மத்திய அரசிடம் ஏன் தமிழ்நாடு, கர்நாடகாவின் செயலை முறையிடவில்லை? நதிநீர் பிரச்சனைக்காக ஆணையம் அமைக்கவேண்டுமென ஏன் மத்திய அரசிடம் கேட்கவில்லை? தற்போது 70 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்தபின்பு அதை எப்படி நிறுத்துவது? இந்த வழக்கை தமிழ்நாடு சரியாகக் கையாளவில்லை. அதனால் தமிழ்நாடு அரசின் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளிக்க, தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியான தமிழ்நாட்டின் விவசாயிகள், அரசியல் கட்சிகள், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டுமென கேட்டன. அதனை வலியுறுத்தி 2019 நவம்பர் இறுதியில் தி.மு.க. போராட்டம் நடத்தியது.
தென்பெண்ணை பாலாறு பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலாறு வெங்கடேசன், “"2019 நவம்பரில் தீர்ப்பு வருகிறது. அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்யப்படும் என்றார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஓராண்டில் கொரோனாவை பயன்படுத்தி மிகவேகமாக அணையைக் கட்டிமுடித்துவிட்டது கர்நாடகா. இனி தென்பெண்ணையாற்றின் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துவிடும். தென்பெண்ணையாற்றில் ஆண்டுக்கு சராசரியாக 6.5 டி.எம்.சி தண்ணீர் வருகிறது. இதனை அடிப்படையாக கொண்டுதான் தென்பெண்ணை -பாலாறு இணைப்பு, தென்பெண்ணை -செய்யாறு இணைப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.
தற்போது கர்நாடகா கட்டியுள்ள அணை யால் இனி இந்தத் திட்டங்களைச் செயல்படுத்து வார்களா என்கிற கேள்வியெழுகிறது. தென் பெண்ணையில் நீர்வரத்து குறைந்தால் கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை உட்பட 5 அணைகளின் நீர் கொள்ளளவு குறையும். இதனால் குடிநீர் பற்றாக்குறை உருவாகி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆந்திராவிடம் பாலாற்றுக்கான உரிமையை இழந்தோம். இப்போது கர்நாடகாவிடம் தென்பெண்ணையாற்றுக்கான உரிமையை இழந்துவிட்டோம். முதல்வர் ஸ்டாலின் கவனம் எடுத்து நமக்கான உரிமையைப் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார்.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு விரைந்து நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தியுள்ளோம். மார்கண்டேய கிளை நதியில் கட்டப்பட்டுள்ள அணையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 870 ஹெக்டர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும். விவ சாயிகளின் நலனை பாதுகாக்க தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நடுவர் மன்றம் அமைக்க தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்''’என்றவர், டெல்லிக்குச் சென்று நேரிலும் வ-யுறுத்தியுள்ளார்.
மோடியுடன் இருந்த மோதல், ஈகோவால் ஜெ. இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுசென்றார். அப்போது கர்நாடக நீதிமன்றத்தில் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடந்துவந்ததால், இதில் தீவிரம் காட்டினால் தனது வழக்கில் சிக்கலாகிவிடுமோ என பயந்துகொண்டு வழக்கை நடத்தவில்லை. அதைப் பயன்படுத்தி அணையைக் கட்டிவிட்டது கர்நாடகா. 2019-ல் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பாதகமாக வந்தது,
மேல்முறையீடு செய்யப்படும் என்றார் இ.பி.எஸ். தன்னை காப்பாற்றிக்கொள்ள, கர்நாடகாவில், நடந்துகொண்டுள்ள பா.ஜ.க. ஆட்சியை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டுமென மேல்முறையீடு செய்யவில்லை, ஆணையம் அமைக்கவும் வலியுறுத்தவில்லை. பிற்காலத்தில் வடதமிழ்நாடு பாலைவனமாக அடிக்கல் நாட்டிவிட்டது ஜெ, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.