நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக சிறப்பு போலீஸ் பிரிவு ஒன்றை ஏற்படுத்த கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டி ருந்தார். தனி சட்டமோ, தனி நீதிமன்றமோ, தனி விசாரணை அமைப்போ ஏற்படுத்த முறையான சட்டமன்ற மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்ற வேண்டும். ஒரு அரசாணை மூலம் அதை செயல்படுத்த முடியாது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தி.மு.க. முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.

jj

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "அரசாணை தவறு' என ரத்து செய்தது. இதை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. நில மோசடி குறித்து விசாரிக்க இந்திய தண்டனை சட்டம், சொத்து மாற்று சட்டம் என ஏற்கனவே சட்டங்கள் உள்ளது. தனியாக அரசாணை மூலம் தனிப்பிரிவு அமைத்து தனி நீதிமன்றம் அமைக்க அவசியம் இல்லை' என கூறி ரத்து செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தனது நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம்சங்கர் மூலமாக உச்சநீதிமன்றத்தில் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

ராம்சங்கர் வாதிடுகையில், "சுமார் 3000 எப்.ஐ.ஆர். 23 மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. சிலர் தவறாக இதனை பயன்படுத்துகின்றனர். கணவர் சொத்தை மனைவி விற்றுவிட்டார் என்பதற்காக நில அபகரிப்பு சட்டம் மூலம் வழக்கு தாக்கல் செய்து அதை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கிறார்கள்'' என முறையிட்டார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் ஆஜரானார்.

jj

இந்த இரு வழக்குகளையும் விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா அமர்வு கடந்த மே 4ஆம் தேதி தீர்ப்பை வழங்கியுள்ளது.

"இரு நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நிலப் பிரச்சினைகளில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது. மேலும், தமிழகத்தில் நிலப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் இருப்பது போன்று தமிழகத்திலும் நில அபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

ஜெயலலிதா அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த தாமரைச்செல்வன் நம்மிடம் பேசும்போது, "நில அபகரிப்பு தடுப்பு வழக்கு ஜெயலலிதா கொண்டுவந்ததற்கு காரணம் தி.மு.க.வினரை பழிவாங்கத்தான். உள்நோக்கத்தோடு செயல்பட்டனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மீது இந்த வழக்கை போட்டு அவர்களுக்கு இரண்டு ஆண்டு தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்கள் அடுத்து வரவிருக் கும் 2016 சட்டமன்றத் தேர்தலில் நிற்க முடியாது என்பதற்காக இதனை அ.தி.மு.க. வினர் பயன்படுத்தினர். உண்மையாகவே ஒருவர் நிலத்தை விற்க முன்வந்து, அந்த நிலத்தை காசு கொடுத்து வாங்கியதாக இருந்தாலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பொய் புகார் கொடுக்கும் சம்பவங்களும் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மீது நடந்தது.

அதிகாரத்தில் இருந்தவர்கள் இதனை தவறாக பயன்படுத்திய தால் அப்போது தி.மு.க.வினர் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஒரு அரசாணையை வைத்து இப்படி செய்ய முடியாது, இதனை எதிர்த்து வழக்கு தொடரலாம், அதற்கு அனுமதி அளியுங்கள் என நான் கலைஞரிடம் கேட்டேன். அவர் கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நாம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய் யப்பட்டாலும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று நாம் வெற்றிபெறலாம் என சட்ட நுணுக் கங்களை நான் கலைஞரிடம் எடுத்து கூறி அவரிடம் அனுமதி பெற்று வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கைத்தொடர்ந்து மேலும் சில வழக்கறிஞர்களும் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற டிவிசன் பெஞ்ச், "அரசாணை தவறு' என ரத்து செய்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. உச்சநீதிமன்றமும் ரத்து என உத்தரவிட்டது. இந்த உத்தரவால் நில அபகரிப்பு விவகாரத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சரியே என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது'' என்றார்.

நீதிக்கான போராட்டம் வென்றது.

Advertisment