""கிராமப்புறங்களிலுள்ள ஏழ்மையை நீக்குவதற்காக "புதுவாழ்வு'’ என்னும் ஒரு புதுமையான திட்டம் உலக வங்கி கடனுதவியுடன் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2005-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, புதுவாழ்வு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டாவது திட்டத்திலும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர்''’ ’-முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இரண்டு வருடங்களுக்குமுன் செய்த பரப்புரைதான் இது. ஆனால், இன்னமும் வேலை கிடைக்காததால் வறுமையும் வெறுமையும் சூழ சென்னை -வள்ளுவர் கோட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அன்னை தெரேசா மகளிர் வளாகத்திலுள்ள புதுவாழ்வுத்’திட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

protest

protestஅனைத்து புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழரசு மற்றும் செயற்குழு உறுப்பினர் கஸ்பர், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நம்மிடம், ""மாற்றுத் திட்டங்களில் பணியமர்த்துவதாக உறுதிமொழிக் கடிதம் அளித்தார் திட்ட மேலாண்மை இயக்குநர் பிரவின் நாயர் ஐ.ஏ.எஸ். ஆனால், ஓராண்டாகியும் எங்களுக்கு பணி வழங்காமல்… கோர்ட் தடையுத்தரவையும் மீறி "இரண்டாம் புதுவாழ்வுத் திட்டத்திற்கு புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க ஏஜென்சி தேவை' என அழைப்பாணை விளம்பரம் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை. அதனால்தான், இந்தப் போராட்டம்’’ என்கிறார்கள். அம்மாவின் ஆட்சியைக் கொடுக்கிறோம் என்கிற இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். கூட்டணியோ, ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட புதுவாழ்வு பணியாளர்களையே வீட்டுக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

Advertisment

-மனோசௌந்தர்

படம்: எஸ்.பி.சுந்தர்