ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மம் மறுபடியும் தமிழக அரசியல் அரங்கில் விவாதமாகப் போகிறது. அதற்குக் காரணம், "ஆறுமுக சாமி கமிஷன் மறுபடியும் தனது விசாரணையை துவக்க லாம்' என சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவுதான்.

நீதிபதிகள் அப்துல்நாசர், கிருஷ்ணமுராரி அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்புதான் ஆறுமுகசாமி கமிஷனை உயிர்ப்பித்திருக்கிறது. ஆறுமுகசாமி கமிஷனுக்கு உதவி செய்ய அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்திலிருந்து (எய்ம்ஸ்) மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவை நியமித்திருக்கிறது.

ops-eps

Advertisment

ஜெ. எந்தெந்த வியாதிகளால் அவதிப்பட்டு இறந்தாரோ, அந்தந்த வியாதிகளுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைக் கொண்ட அந்தக் குழு, ஆறுமுகசாமி கமிஷன் இதுவரை விசாரித்த, ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் அடங்கிய அறிக்கைகளை பரிசீலிக்கலாம். அதன்பிறகு அந்த குழு கொடுக்கும் அறிக்கையை ஆறுமுகசாமி கமிஷன் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை விரும்பினால் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யலாம். ஜெ.வின் மரணத்தில் உள்ள உண்மைகளை கண்டறிய நியமிக்கப்பட்ட கமிஷன் அரசுக்கு, ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் சிகிச்சை முறைகளில் உள்ளவற்றைப் பற்றிய தனது கருத்தை மட்டுமே சொல்ல முடியும். அந்த விசாரணையில் மருத்துவ ரீதியான குறைபாடுகள் இருக்கிறது என அப்பல்லோ மருத்துவமனை வழக்குத் தொடர்ந்திருக்கிறது. அதற்கு இதுதான் தீர்வு என தெளிவுபடுத்திய நீதிபதிகள், ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை தொடர அனுமதித்திருக்கிறார்கள்.

"நாங்கள் எப்பொழுதுமே ஜெ.வின் மரண மர்மத்தைப் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷனை ஒழிக்க முயற்சி செய்யவில்லை. விசாரணைகளை ஆய்வு செய்ய மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவை நியமியுங்கள் என கேட்டோம். அதை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்கவில்லை. அதற்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டோம். சுப்ரீம் கோர்ட் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு தரும் அறிக்கையின் நகல்களை எங்களுக்கும் தர உத்தரவிட்டுள்ளது'' என அப்பல்லோ மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisment

jayalalitha

2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன், 2019 ஜனவரி வரை இயங்கியது. கடந்த மூன்றாண்டுகளாக அது இயங்கவில்லை... அதற்கு முழுமுதற் காரணம் அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குதான். மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்த கமிஷன், இதுவரை அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த 56 டாக்டர்கள், 22 பணியாளர்கள், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள் 12 பேரை விசாரித்துள்ளது. இந்த விசாரணையில், "ஜெ. இனிப்பு சாப்பிட்டார், ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்' என்பது போன்ற சாட்சியங்கள், அப்பல்லோ நிர்வாகம் சார்பில் பதிவு செய்யப்பட்டது.

அதில் டாக்டர்கள் அளித்த சாட்சியங் களிலும் மருத்துவமனை ஊழியர்கள் அளித்த சாட்சியத்திலும் ஏகப்பட்ட முரண்பாடுகள் காணப்பட்டது. அதை ஆணையத்தின் வழக்கறி ஞராக இருந்த பார்த்தசாரதி சுட்டிக்காட்டினார். இதில் அப்பல்லோ முரண்பட்டது.

apollo director

பார்த்தசாரதியைத் தொடர்ந்து, ஆணைய வழக்கறிஞராக வந்த ஜபருல்லாகான், "மறைந்த ஜெ.வின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாக காணப்பட்டது. மாரடைப்பை கணிசமாக கொண்டுவரும் தனிமமான பொட்டாசியம் எப்படி ஜெ.வின் உடலில் வந்தது. பொட்டாசியம் அதிகம் உள்ள மலைவாழைப் பழங்களை ஜெ. வுக்கு வழங்கியது யார்?'' என ஆறுமுக சாமி கமிஷனில் அபிடவிட் தாக்கல் செய்து வாதாடி னார்.

அப்பல்லோ மருத்துவமனைக்கு இது பிடிக்கவில்லை. உடனடியாக மருத்துவர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆறுமுகசாமியும், அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்ற அப்பல்லோ, அதில் வெற்றிபெற முடியவில்லை. மாநில அரசின் மருத்துவர்கள் அடங்கிய குழுவை ஆறுமுகசாமி அமைத்தார். அதற்குப் பதில், மத்திய அரசின் மருத்துவர்கள் அடங்கிய குழுவை மூன்று வருடங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி அப்பல்லோ நிர்வாகம் பெற்றிருக்கிறது. அதற்காக மூன்று வருடங்கள், விசாரணைக் கமிஷனையே அப்பல்லோ நிறுத்தி வைத்தது என நடந்ததைச் சொல்கிறார்கள் கமிஷ னைச் சேர்ந்தவர்கள்.

தற்பொழுது ஒரு நீதிபதி, ஒரு கிளர்க் மட் டும் மிச்சமாக கமிஷனில் இருக்கிறது. மொத்தம் 154 சாட்சிகளை விசாரித்த கமி ஷன், இன்னும் நான்கு சாட்சி யங்களை மட்டும் விசா ரிக்க வேண் டும் என 2019-ஆம் ஆண்டு விசாரணை நிறுத்தப்படும்போது அறிவித்தது. அதில் முக்கிய மானவர்கள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே, சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோர். இது தவிர சசிகலா தரப்பில், நாங்கள் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என சாட்சியங்களின் பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஓ.பி.எஸ்., பொன் னையன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ் ணன் என பதினைந்து பேர் பட்டியலில் இருக்கிறது. ஓ.பி.எஸ்.ஸை விசாரணைக்கு வரச்சொல்லி ஆறுமுகசாமி கமிஷன் ஏற்கனவே சம்மன் அனுப்பி யிருக்கிறது என்கிறது கமிஷன் வட்டாரங்கள்.

arumugasamy

இதுபற்றி பேசும் வழக்கறிஞர்கள், "ஆறுமுக சாமி கமிஷனின் விசாரணை நோக் கமே ஜெ.வுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்கள்தான். அதை ஆய்வு செய்த நீதிபதி ஆறுமுகசாமி, ஜெ.வுக்கு என்னென்ன வியாதிகள் இருந்தது, அதற்கு அவர் என்னென்ன சிகிச்சை பெற்றார் என போயஸ் கார்டன் வீட்டிலிருந்து விசாரணை செய்து விவரங்களைத் திரட்டினார். ஜெ.வுக்கு இதயத்தில் பிரச்சினை ஆரம்பம் முதல் இருக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை, ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சினைகள் நீண்ட நாட்களாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் ஜெ. பங்கேற்கும் மேடைகளில் பாத்ரூம் அமைக்கப்பட்டது. ஜெ.வின் வாகனம் வேகமாக ஓட்டப்பட்டதன் காரணம், ஜெ.வுக்கு இருந்த சிறுநீர் பிரச்சினைகளால்தான்.

"ஜெ. மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு மூட்டு வலியால் பெரும் அவதிக்குள்ளானார். அவ ருக்கு ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளும் இருந்தன' என அப்பல்லோ, ஜெ. மரணத்திற்குப் பிறகு வெளியிட்ட மருத்துவக் குறிப்பில் காணப் படுகிறது. இத்தனை வியாதிகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு அவதிப்பட்ட ஜெ.வுக்கு, "என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, சிகிச்சையின்போது ஜெ.வின் இதயத்தில் உள்ள மிட்ரல் வால்வ் பகுதியில் பூஞ்சைக்காளான் வளர்ந்தது' என அப்பல்லோ தனது மருத்துவக் குறிப்புகளில் சொல்கிறது.

"ஜெ. முழுமையாக குணமடைந்துவிட்டார், அவர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் மருத்துவமனையை விட்டுச் செல்லலாம்' என அப்பல்லோவின் உரிமையாளர் பிரதாப் ரெட்டி அறிவித்த சில தினங்களில் ஜெ. இறந்துபோனார்.

இதயத்தில் நோய் வைத்திருந்த ஜெ.வுக்கு, ஒரே ஒரு முறைதான் அப்பல்லோவில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. "இதய நோய் உள்ளவர்களுக்கு சாதாரணமாக எடுக்கப்படும் ஆஞ்சியோகிராம் என்கிற சின்ன சோதனையைக் கூட ஏன் செய்யவில்லை' என ஏகப்பட்ட கேள்விகளை ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோவை நோக்கி வீசியது.

பயந்துபோன அப்பல்லோ, ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப் பட்ட அரசாணையைத் தவறு என சுப்ரீம்கோர்ட்டில் வழக்குத் தொடுத்து, ஆணையத்தை முடங்கியது.

ops-eps

"முடங்கிய ஆணையத்தை உயிர்ப்பிக்க எடப்பாடி அரசு எதுவும் செய்யவில்லை' என நீதிபதி ஆறுமுக சாமி, அரசுக்கே கடிதம் எழுதினார்.

தி.மு.க. ஆட்சி வந்ததும், சுப்ரீம் கோர்ட்டில் துஷ்யந்த் தவே அரசு சார்பில் சீரியஸாக வாதாடினார். ஆணையத்துக்கு மறுபடியும் உயிர் வந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வர வேற்றுள்ள அப்பல்லோ, ஏற்கனவே ஆணையம் விசாரித்த சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வோம் என சுப்ரீம்கோர்ட்டில் சொன்னது. தீர்ப்பை வரவேற்று அளித்துள்ள அறிக்கையில் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.

"புத்துயிர் பெற்றுள்ள ஆறுமுகசாமி ஆணை யம், தி.மு.க. ஆட்சியில் முதல் சாட்சியாக முன் னாள் முதல்வர்கள் எடப்பாடியையும் ஓ.பி.எஸ்ஸை யும், அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியையும் கூண்டில் ஏற்றப்போகிறது'' என உற்சாகமாகத் தெரிவிக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.