Advertisment

ஜெ. மரணத்துக்கு காரணம்! அடையாளம் காட்டிய ஆணையம்! அடுத்த நடவடிக்கை என்ன?

ff

ஜெயலலிதா மரணத்தின் மர்மங்களை கண்டறிவதற்காக அமைக் கப்பட்ட ஆறுமுகசாமியின் அறிக்கை, பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

Advertisment

தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையத்தின் 608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார், சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், துறையின் முன்னாள் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம்சாட்டுகிறது. உண்மைகளை மறைத்திருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் குற்றம் சாட்டியுள்ளார் ஆறுமுகசாமி.

Advertisment

jaya death

அப்பல்லோ மருத்துவமனையில் 2016, செப்டம்பர் 22-ந்தேதி சுயநினைவில்லாத நிலையில் அட்மிட் செய்யப்பட்டார் ஜெயலலிதா. அவர் வசித்த போயஸ் கார்டன் இல்லத்திலும், மருத்துவச் சிகிச்சையிலும் நடந்தது என்ன? அவரது பொதுவான உடல்நிலை எப்படி இருந்தது? உள்ளிட்டவைகளை விரிவாக விசாரித்துள்ளது ஆணையம்.

அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட் செய்யப்படுவதற்கு முந்தைய 2 நாட்களில் போயஸ்கார்டனில் என்ன நடந்தது என்பதிலிருந்து தொடங்குகிறது விசாரணை. 20-ந்தேதி ஜெயலலிதாவுக்கு உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், சிவக்குமாரின் அட்வைஸ்படி வெறும் பாராசிட்டமால் மாத்திரை மட்டுமே கொடுத்துள்ளார் சசிகலா. காய்ச்சல் குறையாத நிலையிலும் 21-ந்தேதி தலைமைச்செயலகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டுவிட்டு வீட்டிற்கு அவர் திரும்பியபோது தன்நிலை மறந்து கீழே விழப்போன ஜெயலலிதா, சுதாரித்துக்கொண்டு தனது அறைக்கு சென்றார்.

மறுநாள் 22-ந்தேதியும் அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், சபரிமலைக்கு சென்றிருந்த டாக்டர் சிவக்குமாரை வரவழைத் தார் சசிகலா. இரவு 8.45-க்கு அவர் வந்தபோது ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசிக் கொண்டிருந்தனர். பல் துலக்குவதற்காக குளியலறைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஜெயலலிதா மயக்கமடைய, அவரை சசிகலாவும் சிவக்குமாரும் தாங்கிப் பிடித்துக்கொண்டனர்.

ff

அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இரவு 10

அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இரவு 10:15-க்கு சுய நினைவில்லாத நிலையில் உள்நோயாளியாக அட்மிட் செய்யப்பட்டார் ஜெயலலிதா. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட செப்டம்பர் 27-ந்தேதி நள்ளிரவு வரை சிகிச்சையளித்த டாக்டர்கள், பின்னடைவுக்கு காரணமான இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கத் தவறி விட்டனர்.

மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு 3 நாட்களாக இருந்த காய்ச்சலை கட்டுப்படுத்தவோ அதற்கான காரணத்தை கண்டறியவோ எந்த முயற்சியையும் சிவக்குமார் எடுக்கவில்லை' என்று தனது அறிக்கையில் குற்றம் சாட்டுகிறார் ஆறுமுகசாமி.

"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு நடந்த நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு 27-ந்தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஆஞ்சியோ செய்ய தயாரானார் டாக்டர் சமீன்சர்மா. ஆனால், ஆஞ்சியோ செய்யப்படவில்லை. சரியான நேரத்தில் ஆஞ்சியோ செய்யப்படாமல் இருக்க சசிகலாவால் திறமையான உத்தி கையாளப் பட்டிருக்கிறது.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு பொருத்தமான சிகிச்சையளிக்க அனைத்து முயற்சிகளையும் சசிகலா எடுத்திருக்க வேண்டும். வியக்கத்தக்க வகையில் அனைவரையும் புறந்தள்ளியுள்ளார். உண்மையான நிகழ்வுகளை வெளிப்படுத்தாமல் சிகிச்சையின் முழு விபரங்களும் ரகசியமாக்கப்பட்டன. அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் நம்பத்தக்கவர்களாக கருதப்படவில்லை என்பதும் புதிராக உள்ளது. இந்தத் திட்டம் அனைத்தும் அறிவார்ந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதயம், நுரையீரல் வீக்கம் உள்ளிட்ட பல மோசமான உபாதைகள் இருந்தும் அவை குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படாதது ஏன்? மருத்துவர் ரிச்சர்ட் பீலே, பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்டுடன் டாக்டர் பாபு ஆப்ரகாம் தொலைபேசியில் பேசும்போது, ஆஞ்சியோ மற்றும் அறுவைச் சிகிச்சை செய்ய அக்டோபர் 11-ந்தேதி இரவு 11 மணி என நேரம் குறித்துள்ளார். ஆனால், அது தேவையில்லை என பாபுஆப்ரகாம் தெரிவித்ததால் அந்த சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

r

டாக்டர்களும் அறுவைச் சிகிச்சை நிபுணர்களும் முரணில்லாமல் இணைந்து நோயாளியின் நன்மைக்காக ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. சிகிச்சை முழுநடைமுறையும் சசிகலா மற்றும் அவரது மருத்துவ உறவினர்கள் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. சிகிச்சை தொடர்பாக யாருக்கும் தெரியப்படுத்தாமலும், வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைத்ததுபோல் காட்சிப்படுத்தி ஆஞ்சியோ, அறுவைச் சிகிச்சை செய்ய விடாமல் மிக எச்சரிக் கையாக செயல்பட்டுள்ளார் சசிகலா என்று சுட்டிக் காட்டியுள்ளது ஆணையம்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணனின் சாட்சியம் பொறுப்பற்ற முறையில் இருந்ததை விவரித்துள்ள ஆறுமுகசாமி, சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று கேட்ட போது, இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்று ராதாகிருஷ்ணன் சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டி, வெளிநாட்டு சிகிச்சையை தவிர்ப்பதற்காகவும் சிகிச்சைகள் எதுவும் முறையாக இல்லை என்றும், சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ராதாகிருஷ்னணின் சாட்சியம் இருந்தது என்றும் பதிவு செய்துள்ளார் ஆறுமுகசாமி.

அப்போதைய தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவை பொறுத்தவரை பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பமிடுவதை அரசுக்குத் தெரிவிக்கவில்லை என்பதை தவிர, அவருக்கு எதிரான குறைகள் எதுவும் காண வில்லை.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனு மதிக்கப்படுவதற்கு முன்பு, நீரழிவு, உயர்ரத்த அழுத்தம், வெர்டிகோ, தோல் வியாதி, தைராய்டு, உடல்பருமன் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டாக்டர் சாந்தாராம் மற்றும் மூத்த மருத்துவர்களால் சிகிச்சையளிக் கப்பட்டது. படிப்படியாக அவர்கள் சசிகலாவால் மாற்றப்பட்டனர். அதனையடுத்து டாக்டர்கள் வினோதகன், ஹரிகரன் ஆகியோர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் அல்ல!

d

டாக்டர் ரிச்சர்ட் பீலே முதல்முறை வந்த போது, "லண்டனில் சிகிச்சை அளிக்கலாம்; ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லலாம். அதில் நானும் உடன் செல்கிறேன்' எனச்சொல்லியிருக்கிறார். ரிச்சர்ட்பீலே இரண்டாம் முறை வந்தபோது, "உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது; இதே சிகிச்சையை தொடரலாம்' என சொல்லியுள்ளார். டாக்டர் பாபு ஆப்ரகாம், ரிச்சர்ட்பீலேவை தொடர்புகொண்டு, உடல்நிலை நன்றாக இருக்கிறது எனச்சொல்லி அறுவைச் சிகிச்சையை நிறுத்தி வைக்க தந்திரம் செய்திருக்கிறார். இதுவே ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம்.

உண்மைகளைத் தெரிவிக்கும் அதிகாரம் பெற்றவரான அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி, பொய்யான அறிக்கையை வெளியிட்டார். அடிக்கடி தனது அறையில் அவர் விளக்கக்கூட்டம் நடத்திய போதும் சிகிச்சை குறித்த உண்மைகளை தெரிவிக்கத் தவறியுள்ளார்.

-இப்படி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ள ஆறுமுகசாமி, விசாரணையின் அடிப்படையில் சசிகலா, டாக்டர் சிவக்குமார், விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, டாக்டர் ஒய்.வி.சி.ரெட்டி, டாக்டர் பாபுஆப்ரகாம், ராம்மோகன்ராவ் ஆகியோரை விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

ஜெயலலிதா-சசிகலா இடையே 2012-க்குப் பிறகு சுமூகமான உறவு இல்லாததால் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் தனது சுய லாபத்துக்காக ஆஞ்சியோ செய்யவிடாமல் சசிகலா தடுத்தார் என்பதே ஆறுமுக சாமியின் முக்கியமான குற்றச் சாட்டாக இருக்கிறது.

சசிகலா உள்ளிட்டவர்கள் மீது நேரடியாக ஆணையம் குற்றம்சாட்டியிருப்பது அ.தி.மு.க.வில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கும் இது குறித்த சந்தேகம் ஏற்கனவே இருந்ததால் அதை உறுதிப் படுத்துவது போல இருக்கிறது ஆணையத்தின் அறிக்கை.

ஆறுமுகச்சாமி தன்னை நேரடியாகவே குற்றம்சாட்டியிருப்பதால் அதனை மறுத்துள்ள சசிகலா, "என் மீது பழிபோடுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் கரத்தை நான் என்றைக்குப் பிடித்தேனோ அன்றைக்கு என்மீது பழிபோடும் படலம் தொடங்கிவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்தை ஆணையம் என்று அமைத்து அரசியலாக்கி விட்டனர். மரணத்தில் எந்த சந்தேகமும் கிடையாது. முறையாக சிகிச்சையளிக்கப்பட்டு, வீடு திரும்பலாம் என்ற நிலையில் துரதிர்ஷ்டமாக மரணம் நிகழ்ந்து விட்டது. விசாரணை ஆணையம் தனது வரம்பை மீறி தேவையற்ற அனுமானத்தைத் சொல்லி என் மீது பழி போடுவது எந்த விதத்தில் நியாயம்?

யாரையோ திருப்திப் படுத்த யாருடைய அரசியலுக் காகவோ சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது. எனக்கும் ஜெயலலிதாவுக்கும் உறவு சரி யில்லை என்று ஆணையத்துக்கு எப்படி தெரியும்? ஜெயலலிதா சொல்லியிருக்க முடியாது. அப்படியிருக்கும் நிலையில், இப்படி சொல்வதன் உள்நோக் கம் என்ன? ஜெயலலிதாவை அரசியல்ரீதியாக எதிர்க்கத் துணியாதவர்கள் அவரின் மரணத்தை அரசியலாக்குகிறார் கள்'' என்று நீண்ட விளக்கத்தை தந்திருக்கிறார்.

விசாரணை ஆணையத் திற்கு நிறைய அதிகாரங்கள் இருந்தாலும் குற்றவாளிகள் என கண்டறியப்படுவர்களை தண்டிக் கும் அதிகாரம் கிடையாது. அரசாங்கத்துக்கு பரிந்துரைக்க மட்டுமே முடியும். இதன்மீது சட்ட அங்கீகாரம் கொடுத்து அரசு நினைத்தால் மட்டுமே தனி விசாரணை நடத்தி அதன்மீது குற்றவியல் நடைமுறைகளைத் தொடர்ந்தால் மட்டுமே குற்றவாளிகளை தண்டிக்க முடியும். அதே சமயம், குற்றவாளிகளுக்கு எதிராக அரசு வழக்கு தொடரும்பட்சத்தில், வழக்கு விசாரணையில் ஆணை யத்தின் ரிப்போர்ட்டை ஒரு சாட்சியாகவோ, ஆதாரமாகவோ காட்ட முடியாது. அப்படியே காட்டினாலும் அதனை நீதிமன்றங்கள் ஏற்காது. விசா ரணையில் முன்வைக்கப்படும் ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படுமே தவிர, ஆணை யத்தின் ரிப்போர்ட்படி தீர்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்.

ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டதை அடுத்து, துறைரீதியாக விசாரணை நடத்த சுகாதாரத் துறையின் செயலாளர் செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்.சுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அவரது விசாரணைக்குப் பிறகே குற்றவியல் நடைமுறைகளை தொடரலாமா... வேண்டாமா? என தி.மு.க .அரசு முடிவு செய் யும் என்பதே தற்போதைய நிலை.

nkn221022
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe