ன்னுடைய பேட்டிகளில் சொல்வது போல, எதையும் வந்தால் வரட்டும் போனால் போகட்டும், எல்லோரும் நம் உறவினர்களே, அவர்கள் தவறு செய்தாலும் ஏற்போம் பரவாயில்லை... என அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து போகும் ரகத்தைச் சேர்ந்தவர் அல்ல சசிகலா. தான், நினைத்த காரியத்தைச் சாதிக்க எதையும் செய்யும் நபர். அவர் சமீபத்தில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை எடப்பாடி பழனிச்சாமியை அலற வைத்து ரோட்டுக்கு வரவைத்துவிட்டது என்கிறார்கள் அ.தி.மு.க.வினரே.

f

அ.தி.மு.க.விற்கு நான்தான் பொதுச்செயலாளராக, பொதுக்குழு, செயற்குழு மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டேன். பொதுச்செயலாளராக என்னை மறுபடியும் ஒரு பொதுக் குழுவைக் கூட்டி நீக்க முடியாது. அப்படி ஒரு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டுமென்றால் நான்தான் கூட்ட வேண்டும். மற்றவர்கள் கூட்டமுடியாது என சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சிவில் சூட் வழக்காக தொடுத்திருக்கிறார். ஆனால் இது தொடர்பான கிரிமினல் வழக்குகளை எடப்பாடி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் முறியடித்துவிட்டார். இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. கட்சி ஆகியவை பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்குத்தான் சொந்தம் என அனைத்து நீதிமன்றங்களிலும் தேர்தல் கமிஷனிலும் தீர்ப்பு வாங்கிவிட்டார்.

இனி சசிகலா ஐ.நா. சபைக்குத்தான் போகணும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நக்கலடித்தார். ஆனால், சசிகலா ஒதுங்கிவிடவில்லை. நான்தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என அவர் தொடுத்த வழக்கு நிலுவையிலிருக்கிறது. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிக்கடி மாறிக் கொண்டிருப்பார்கள். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விசாரித்த வழக்கில் சசிகலாவுக்கு எதிராக நிற்பவர்கள் அவைத்தலைவர் மதுசூதனன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்.

Advertisment

sasi

இதில் ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிக ஆர்வம் இல்லை. ஜெ.வின் சாவில் மர்மம் என தர்மயுத்தத்தை தொடங்கியவர் ஓ.பி.எஸ். பின்னர், ஜெ.வின் சாவிற்கு சசிகலா காரணமில்லை என ஒதுங்கினார். இப்போது, சசிகலாவுடன் நல்ல புரிதலோடு பேசிவருகிறார். ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத், சசிகலாவோடு மோதல் வேண்டாம் எனக் கூற மகனின் பேச்சைத் தட்டாத தந்தையாக டி.டி.வி. தினகரனின் நண்பராக, சசிகலா வட்டாரங்களில் வளையவருகிறார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி கடந்த மாதம் இறந்துவிட்டார். ஒருகாலத்தில் தனது நம்பிகைக்குரியவராக -கார் டிரைவராக இருந்தவரும் தற்பொழுது வடசென்னை மாவட்ட செயலாளராக இருப்பவருமான ஆர்.எஸ்.ராஜேஷின் பராமரிப்பில் இருந்துவரும் மசூசூதனன், முன்பு ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளராக இருந்தவர். அவர்தான் ஜெ. இறந்த பிறகு, "அம்மா நீங்கதான் கட்சிக்குத் தலைவராக, முதல்வராக வந்து அ.தி.மு.க.வை காப்பாத்தணும்' என முதன்முதலில் சசிகலாவிடம் கோரிக்கை வைத்தவர். அவரை அவைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு பொன்னையனை அவைத்தலைவர் பதவிக்கு கொண்டுவர எடப்பாடி திட்டமிட்டிருந்தார்.

dsdfகொங்கு மண்டலத்தின் சீனியர், அரசியல் பிரமுகரான பொன்னையனுக்கு அவைத்தலைவர் பதவி அளித்தால் கட்சி முழுவதும் கொங்கு மண்டல கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்பது எடப்பாடியின் கணக்கு. ஆனால், பொன்னையனை அவைத்தலைவராக ஓ.பி.எஸ். ஏற்கவில்லை. டி.டி.வி. தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் எடப்பாடியின் ஆதரவோடு போட்டி போட்டபோது, ஓ.பி.எஸ். அணியின் வேட்பாளராக நிறுத்தப் பட்டவர் மதுசூதனன். மதுவை, எடப்பாடியின் விசுவாசியான ஜெயக் குமாருக்குப் பிடிக்காது. எடப்பாடிக்குப் பிடித்ததோ சசிகலாவின் எதிர்ப்பாளரான பொன்னையன்தான். அதனால் அவரே அவைத்தலைவர் என எப்போதோ எடப்பாடி முடிவெடுத்துவிட்டார். ஓ.பி.எஸ்.ஸின் எதிர்ப்பால் அந்த முடிவு தள்ளிப்போனது. மதுசூதனன்தான் அவைத்தலைவர்.

Advertisment

இப்போதைய ஓ.பி.எஸ். போலவே மதுவும் சசியின் ஆட்களிடம் நட்பு பாராட்டி வந்தார். மது, சசி பக்கம் போய்விட்டால் எடப்பாடி இதுவரை இரட்டை இலை, அ.தி.மு.க. கட்சி, கட்சி தொடர்பாக வாங்கிய தீர்ப்புகள் எல்லாம் செல்லாக்காசாகிவிடும் என்பதால் ஆர்.எஸ்.ராஜேஷ் மூலம் மதுவை கண்காணித்து நெறிப்படுத்திவந்தார் எடப்பாடி.

இந்நிலையில் வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றினார் மது. அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட மதுவுக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு, வென்டிலேட்டர் பொருத் தப்பட்டது.

அப்பல்லோ மருத் துவமனை, வென்டி லேட்டர், தீவிர சிகிச்சை இதெல்லாம் ஜெ.வின் 72 நாள் சிகிச்சையின்போது உடனிருந்த சசிக்கு நன்கு தெரிந்தவை. ஆட்சியில் இருந்தவரை எடப்பாடி மூலம் பண உதவி செய்து வந்த மதுவுக்கு, மருத்துவச் செலவுக்குப் பணமில்லை. இந்த இரண்டு சூழலையும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் சசி.

மறுபடியும் கட்சி யைக் கைப்பற்ற வேண்டும். இந்தமுறை விட்டுவிட் டால் மற்றொரு வாய்ப்பு வராது என இதுவரை நூற்றுக்கணக்கான கோடி களை சசி வாரியிறைத்து வருகிறார். எம்.எல்.ஏ.க் களுக்கு கூவத்தூரில் கொடுத்தது போல சசி கலா பணம் கொடுத்து விட்டார். கூவத்தூரில் அப்போது ஆளுங் கட்சி யாக இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கான பண விநியோகத்தைப் பார்த்துக்கொண்டவர்தான் எடப்பாடி. இப்போது, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அ.தி.மு.க எம்.எல். ஏ.க்களிடம் சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர்களான பழனி வேலும் ராமச்சந்திரனும் நேரடியாக பண விநி யோகத்தில் ஈடுபடு கின்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என சசியின் பணம் பாய்ந்தோடுகிறது. அதனால்தான் எடப்பாடியால் மாநில அளவில் ஒரு கூட்டத்தைக் கூட்டி சசிகலாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர முடியவில்லை.

dd

இந்நிலையில், அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனனுக்கு மருத்துவச் செலவுக்கு பணமில்லை என்றதும் சசிகலா, மதுவின் குடும்பத்தை தொடர்புகொண்டார். பணம் கொடுத்தார். ஆர்.எஸ்.ராஜேஷ் மூலம் இந்த தகவலை தெரிந்துகொண்ட எடப்பாடி, அதிர்ச்சியடைந்தார். அடுத்த கட்டமாக சசி, மது உடல்நலம் குன்றி அப்போலோவில் சிகிச்சை பெறும் இந்தச் சூழலில், ஏற்கனவே, 2016 இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களுக் காக அப்போலோ தீவிர சிகிச்சை வார்டில் இருந்த ஜெயலலிதாவிடம் கைநாட்டை பெற்றதுபோல், மதுசூதனனின் கைநாட்டை பெற்றுவிடுவார் என்றும், அதற்கு சசி நேரில் வரவேண்டும் என்பதில்லை. வெண்ட்டிலேட்டரில் இருக்கும் மதுவின் கைரேகைகளை கோர்ட் ஆவணங்களில் பெற்றுத்தர அப்பல்லோவில் சசிக்கு ஆட்கள் இருக்கிறார்கள் எனவும் எடப்பாடி பயந்தார். அப்படி ஒரு டாகு மெண்ட்டை சசிகலா பெற்றுவிட்டால் அடுத்தது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.தான் பாக்கி. அவர் கையெழுத்து போட்டுவிட்டால் அ.தி.மு.க., சசிகலா கையில் போய்விடும் என்பதுதான் எடப் பாடியின் பயம்.

ஓ.பி.எஸ். கையெ ழுத்து போடாமல் அவருக்கு கோடிக் கணக்கில் கேட்கும் போதெல்லாம் படியளக்க வேண்டும். அவர் சொன்னதையெல்லாம் செய்யவேண் டும். இப்பொழுதும்கூட, தான் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஓ.பி.எஸ். கையெழுத்திடுவதில்லை என்கிற வருத்தம் எடப்பாடிக்கு இருக்கிறது. அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தால், ஓ.பி.எஸ். கையில் பொம்மையாகிவிடுவார் எடப்பாடி.

தங்கமணி, வேலுமணி போன்ற எடப்பாடியின் சமூகப் பிரதிநிதிகளும் பின்வாங்கிவிட்டனர். தி.மு.க. அரசு தொடுக்கப் போகும் ஊழல் வழக்குகளை சந்திப்பது எப்படி என தி.மு.க. முகாமிற்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து தி.மு.க. அரசு, எடப்பாடியின் ஊழல்கள் மீதும் பாயும். இப்பொழுதே சசிகலாவின் பேட்டி அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த பேட்டிக்கு எதிராக, தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தினகரன், திவாகரன் என யாரோடும் எந்த விரோதமும் இல்லை. அ.தி.மு.க. கட்சி நன்றாக இருக்கவேண்டும் என்கிற சசியின் தொனி அ.தி.மு.க.வினருக்கு புத்துணர்ச்சி தந்திருக்கிறது.

அந்தப் பேட்டியில் சசி சொல்லியிருந்த பல விஷயங்களை மறுத்துப் பேச எடப்பாடி சொன்னபோதும், பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் தயாராகவில்லை. ஆர்.எம்.வீ.யும் அதை மறுத்து எதுவும் பேசவில்லை என ஏகப்பட்ட கணக்குகள் எடப்பாடிக்கு எதிராகவே இருப்பதால் உடனடியாக ஆர்.எஸ்.ராஜேஷை அழைத்து மசூதனனின் பக்கத்திலேயே அமரச் சொன்னார் எடப்பாடி.

நிலைமைகளைத் தெரிந்துகொண்ட சசிகலா, நான் மதுவை நேரில் சந்திக்கிறேன் என அப்பல்லோவுக்கு வர, சசி ஏதாவது ஏடாகூடம் செய்துவிடப்போகிறார் என எடப்பாடியும் புறப்பட்டு முன்கூட்டியே அப்பல்லோ வந்தார்.

ஐ.சி.யு.வில் உயிருக்குப் போராடும் மதுவை யாரும் பார்க்க அப்பல்லோ அனுமதிக்கவில்லை. ஒரே நேரத்தில் அப்பல்லோ வந்த சசியும் எடப்பாடியும் நேரில் சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்களிடமும் ஒன்றும் பேசாமல் பறந்தார் எடப்பாடி என அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகார போட்டியையும், அந்தப் போட்டிக்கான களமாக மறுபடியும் அப்பல்லோ அமைந்திருப்பதையும் விரிவாக வர்ணித்தார்கள் அ.தி.மு.க.வினர்.