"எங்க ஊருல யாரு என்ன குற்றம் பண்ணுனாலும் போலீஸ் நடவடிக்கை எடுக்காது'’என்று உறுதியாகச் சொன்ன வழக்கறிஞர் கண்ணன், "அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகனின் அராஜகத்தால், அருப்புக்கோட்டையில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக் கிறது''” என்றார் ஆதங்கத் துடன்.
வாகனத்தை நொறுக்கி, ரவுடித்தனம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது சுதா என்பவர் கொடுத்த புகாரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நடந்துகொண்ட விதமே, வழக்கறிஞர் கண்ணனை நம்மிடம் குமுற வைத்தது.
மாகாளியம்மன் வகையறா திருக்கோயில்களின் எழுத்தர்களான மாரிமுத்து வும், சங்கரமணியும் அதே அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்தில் 18-ஆம் தேதி புகார் அளித்துவிட்டு, நம்மைத் தொடர்புகொள்ள, நேரில் சந்தித்தோம். “காலைல பத்தரை மணி இருக்கும். இந்து அறநிலையத்துறை யோட அரசாங்க ஆவணங்கள் இருக்கிற கோயில் ஆபீசுக் குள்ள திமுதிமுன்னு ஏழெட்டு பேரு வந்தாங்க. உள்ளே நுழையுறதுக்கு முன்னால, எதிர்த்தாப்ல இருந்த சி.சி. டி.வி.ய ஆப் பண்ணிட்டாங்
"எங்க ஊருல யாரு என்ன குற்றம் பண்ணுனாலும் போலீஸ் நடவடிக்கை எடுக்காது'’என்று உறுதியாகச் சொன்ன வழக்கறிஞர் கண்ணன், "அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகனின் அராஜகத்தால், அருப்புக்கோட்டையில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக் கிறது''” என்றார் ஆதங்கத் துடன்.
வாகனத்தை நொறுக்கி, ரவுடித்தனம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது சுதா என்பவர் கொடுத்த புகாரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நடந்துகொண்ட விதமே, வழக்கறிஞர் கண்ணனை நம்மிடம் குமுற வைத்தது.
மாகாளியம்மன் வகையறா திருக்கோயில்களின் எழுத்தர்களான மாரிமுத்து வும், சங்கரமணியும் அதே அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்தில் 18-ஆம் தேதி புகார் அளித்துவிட்டு, நம்மைத் தொடர்புகொள்ள, நேரில் சந்தித்தோம். “காலைல பத்தரை மணி இருக்கும். இந்து அறநிலையத்துறை யோட அரசாங்க ஆவணங்கள் இருக்கிற கோயில் ஆபீசுக் குள்ள திமுதிமுன்னு ஏழெட்டு பேரு வந்தாங்க. உள்ளே நுழையுறதுக்கு முன்னால, எதிர்த்தாப்ல இருந்த சி.சி. டி.வி.ய ஆப் பண்ணிட்டாங்க. அவங்கள்ல லால்குடி செந்தில், சங்கரநாராயணன், லட்சு மணன், பாரதிராசன்னு நாலு பேரை தெரியும். அருவருக் கத்தக்க வார்த்தைகளால் திட்டியதோடு, எங்க ரெண்டு பேரையும் அடிச்சு ஆபீசுக்கு வெளிய தள்ளிட்டாங்க. அவங்க வந்த நோக்கம் திருடுறதுக்குத்தான். பணத்துக்கு ஆசைப்பட்டு, எல்லாரும் சேர்ந்து பீரோ, டேபிள்னு எல்லாத்தயும் தூக்கிட்டு போயிட்டாங்க. அந்த பீரோவுல ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருளும் பணமும் இருந்துச்சு. கோடிக் கணக்கான மதிப்புள்ள அறநிலையத்துறைக்கான ஆவணங்கள் இருந்துச்சு. மாகாளியம்மன் திருக்கோயில் களுக்குச் சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள பத்திரங்கள், கோவில்-டிரஸ்ட் முத்திரைகள், பேங்க் செக் புத்தகங்கள், எங்க சொந்தப் பணம் ரூ.10 ஆயிரம்னு எல் லாத்தயும் கொள்ளையடிச் சிட்டு போயிட்டாங்க. புகார் கொடுத்திருக்கோம். எங்க ஊரு இன்ஸ்பெக்டரு நட வடிக்கை எடுக்கிற மாதிரி தெரியல'' என்றனர் பரிதவிப் புடன்.
வருஷத்துக்கு ஆயிரத்து சொச்சம் எப்.ஐ.ஆர். போட்டுட்டு இருந்த ஸ்டே சனை, செயல்படவிடாம பண்ணிட்டாரு இன்ஸ்பெக்டர் பாலமுருகன். அவரோட வசூல் வேட்டை பெரிய அளவுல மட்டும்தான். காதும் காதும் வச்ச மாதிரி கமுக்கமா நடக்கும். மூணு வருஷமாச்சு.. இந்த ஸ்டேஷனவிட்டு போக அவருக்கு மனசில்ல. மேலவரைக்கும் செல்வாக்கு இருக்கும்போல. பாலமுருகன் இங்கேயிருந்து போனாத்தான் அருப்புக்கோட்டைக்கு விமோசனம்..’ என்று பல தரப்பினரும் புகார் வாசித்தனர்.
மாரிமுத்துவும் சங்கர மணியும், "இன்ஸ்பெக்டர் பாலமுருகன் எங்ககிட்ட எப்.ஐ.ஆர். எதுக்கு போட ணும்? பேசி முடிச்சிருவோம். கொள்ளையடிச்சதா நீங்க புகார் கொடுத்த எல்லா பொருளையும் திரும்ப அங்கேயே வச்சிருவாங்க. ராசியாயிட்டு போங்கன்னு சொல்லுறாரு. ரொம்ப கேவலமா இருக்கு'' என்றனர்.
18-ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடந்து புகாராகி, 19-ஆம் தேதி வரையிலும் விசாரணை நடக்காத நிலையில், இன்ஸ் பெக்டர் பாலமுருகனை தொடர்புகொண்டோம். "அதெல்லாம் வழக்கு பதிவு செய்துவிடலாம். நாளை (20-ஆம் தேதி) காலை 10 மணிக்கு புகார்தாரருடன் நீங்களே வாங்க. காவல் துறையின் நேர்மையான செயல்பாட்டை நேரில் பாருங்க...''’என்று உறுதி யளித்தார்.
20-ஆம் தேதி காலை 10 மணிக்கு அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையம் சென்றோம். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விருதுநகர் போய்விட்டதாகச் சொன்னார்கள். காத்திருந்து மதியம் 2 மணியளவில் சந்தித்தபோது, அவர் மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்தோம். "நான் மற்றவர்கள் (அதிகாரிகள்) மாதிரி கிடையாது. எந்த வழக்கிலும் டென்ஷன் ஆகமாட்டேன். கோபப்பட மாட்டேன். ரெண்டு தரப்பிடமும் கூலா பேசுவேன். அவங்களே சமரசமா போகணும்னு நினைக்கிறபோது எதுக்கு தேவையில்லாம வழக்கு பதியணும்? சரி, நக்கீரனே வந்து நீதி கேட்கும்போது, எப்.ஐ.ஆர். போடாம இருக்க முடியுமா?''’என்று தனது ‘டிரேட் மார்க்’ சிரிப்பை உதிர்த்தார்.
"இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சொல்லுறத நம்பாதீங்க. அவரு பேச்சை தண்ணிலதான் எழுத ணும்...''’என்று போலீஸ் சோர்ஸ் ஒருவர் சொல்ல, அங்கிருந்து விருதுநகர் சென்று மாவட்ட காவல் கண் காணிப்பாளர் மனோகரை சந்தித்தோம். கொள்ளைபோன புகாரைப் படித்துவிட்டு, “"நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்''’என்று உறுதியளித்தார். ஆனாலும், 21-ஆம் தேதி வரையிலும், அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையம் அந்தப் புகார் மீது முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யவில்லை.
வழக்கறிஞர் கண்ணன் நம்மிடம், "டான்சி நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டு, திரும்ப அரசாங்கத்திடமே ஒப்படைத்துவிடுவதா சுப்ரீம் கோர்ட்ல சொன்ன ஜெயலலிதா மாதிரில்ல பாலமுருகன் செயல்படறாரு. கொள்ளை போனதா ஒருவர் புகார் கொடுத்தால், அதை விசாரித்து வழக்குப் பதிவு செய்வதற்குத் தானே போலீஸ் ஸ்டேசன் இருக்கு? கொள்ளையடிக் கப்பட்ட பொருட்களைக் கைப்பற்றி, மனுதாரரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிமன்றம்தானே உத்தர விடவேண்டும்? சட்டத்தைக் கையில் எடுத்து, சுய ஆதா யத்துக்காக குற்றம் சாட்டப் பட்டவர்களிடம் ‘கட்டப் பஞ்சாயத்து’ நடத்தி, வழக்கே பதிவு செய்யாமல் இருப்பது, கொடுமையிலும் கொடுமை'' ’என்றார் வேதனையுடன்.
ஆய்வாளர் பாலமுருகனால் சட்டம்-ஒழுங்கு கெட்டு அவஸ்தைப்படும் அருப்புக் கோட்டை மக்களைக் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.