சி.பி.ஐ.யின் விசாரணை இயல்பாக இருந்தபோதும், கேட்கப்பட்ட கேள்விகளால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் விஜய். அதிலிருந்து மீள்வதற்காக பொங்கல் பண்டிகையைச் சுட்டிக்காட்டி தற்காலிக ரிலீஃப் பெற்ற அவர், சென்னையில் கால் வைத்ததுமே, ’விசாரணைக்காக 19-ந்தேதி மீண்டும் ஆஜராக வேண்டும்’ என்று அவருக்கு ஓலை அனுப்பியிருக் கிறது சி.பி.ஐ. முதல்கட்ட விசாரணை எப்படி இருந்தது என்பதை தம்முடன் தனி விமானத்தில் பயணித்த நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக் கிறார் விஜய். சென்னை வந்ததும் வழக்கறிஞர் களிடமும் அதே பகிர்தல் நடந்திருக்கிறது. அடுத்தகட்ட விசாரணைக்காக எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை விஜய்க்கு வகுப்பெடுத்து வருகின்றனர் வழக்கறிஞர்கள்.
இதுகுறித்து விசாரித்தபோது, சி.பி.ஐ. விசாரணைக்காக சென்னையிலிருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், விஷ்ணு ரெட்டி, ஜெக தீஸ், ராஜேந்திரன், நயீம் அயிட்டண்டி, கூவக் கண்டி ஆகியோரும் பயணித்தனர். இவர்களில் ஆதவ், நிர்மல், ராஜேந்திரன், நயீம் ஆகியோ ருடன் சி.பி.ஐ. அலுவலகத்துக்குச் சென்றார் விஜய். இந்த 4 பேரும் ஒவ்வொரு எல்லையோடு நிறுத்தப்பட்டுவிட்டனர். வழக்கறிஞர் என்கிற முறையில் நிர்மல் மட்டும் விசாரணை நடத்தப் பட்ட ஹால் வரை சென்றார். விசாரணை அறைக் குள் விஜய் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு அறையில் காத்திருந்தார் நிர்மல்.
6 மணி நேர விசாரணை, அதன் பிறகு கையெழுத்து வாங்கும் நடைமுறைக்காக 1 மணி நேர காத்திருத்தல் என 7 மணி நேரத்தை கடந்து வெளியே வந்தார் விஜய். விசாரணை எப்படி இருந்தது என்பதை அறிவதற்காக பத்திரிகை யாளர்கள் காத்திருந்த நிலையில், அவர்களை சந்திக்காமல் சென்னைக்கு வருவதில் அவசரம் காட்டினார் விஜய்.
கரூர் துயரச் சம்பவத்தில், பத்திரிகையாளர் களை சந்திக்காமல் சென்னைக்கு கிளம்பலாம் என ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டவர்களின் யோசனையை ஏற்று எப்படி நடந்து கொண் டாரோ அதேபோல, சி.பி.ஐ. விசாரணை முடிந்து வெளியே வந்ததும் பத்திரிகையாளர்களை சந் திப்பதை தவிருங்கள் எனச் சொல்லப்பட்ட அறி வுறுத்தலின் படியே நடந்துகொண்டார் விஜய்.
விசாரணை கடுமையாக இருந்திருந்தாலும், இயல்பாக இருந்திருந்தாலும் பத்திரிகையாளர் களை எதிர்கொண்டி ருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துணிச்சலாகப் பதில் சொல்லியிருக்க வேண் டும். அரசியல் கட்சி யின் தலைவராகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்பவர், தமிழகத்தின் அடுத்த முதல்வர் நான் தான் என மார்தட்டிக்கொள்பவர் பத்திரிகையாளர்களை தவிர்ப்பது அவரின் அரசியல் மெச்சூரிட்டி லெவல் அவ்வளவுதான் என்பதையே காட்டுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/vijay-cbi1-2026-01-14-16-29-47.jpg)
விசாரணை முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்து சற்று ஓய்வெடுத்த விஜய், தம்முடன் தனி விமானத்தில் வந்தவர்களிடம் நீண்ட நேரம் பேசியிருக்கிறார். அப்போது, "ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், மதியழ கன் உள்ளிட்டவர்களிடம் சி.பி.ஐ. நடத்திய விசா ரணையில் கேட்கப்பட்ட பல கேள்விகளை என் னிடமும் கேட்டு, பதில் வாங்கினார்கள். அதனை ஒப்பிட்டு உடனுக்குடன் துணைக்கேள்விகளை சி.பி.ஐ. கேட்டபோது ரொம்பவே திணறிவிட்டேன்.
இன்வெஸ்டிகேஷன் ஆபீசரா (புலனாய்வு அதிகாரி) நானும் பல படங்களில் நடித்திருக்கேன். ஆனா, சினிமாவில் நான் விசாரித்த தொனியைவிட ஒரிஜினல் விசாரணைங்கிறது பல கோணங்களில் இருந்தது. சினிமாவைவிட நிஜ விசாரணை ஹெவி யாகத்தான் இருந்தது. எதெல்லாம் கேள்விகளாகக் கேட்கப்படும் என யோசித்து பதில்களை ரெடி பண்ணிக்கிட்டுப் போயிருந்தோம். ஆனா, அதையும் தாண்டி பல கேள்விகளை அதிகாரிகள் கேட்டபோது, தெரியலைன்னு சொல்லிட்டேன். அதேசமயம், விசாரணையில் என்னை மரியாதையாகவே நடத்தினார்கள். சில அதிகாரிகளின் குடும்பத்தினர் எனது ரசிகர்களாக இருக்கிறார்கள்ங்கிறதை அவர்கள் சொன்னார்கள். நானிருந்த சூழலில், தேங்க்ஸ் மட்டும் சொன்னேன்.
மீண்டும் விசாரணைக்குக் கூப்பிடுவோம்; உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என அதிகாரிகள் சொல்லவும், ஒரு செகண்ட் எனக்குள் ஜெர்க்காச்சு. உடனே சுதாரிச்சிக்கிட்டு, என்னிடம் கேட்க இன்னும் கேள்விகள் இருக் கிறதா? என நான் கேட்கவும், ஆம் என்றார்கள் அதிகாரிகள். அதை மறுக்கமுடியாததால், எப்போது கூப்பிட்டாலும் வருகிறேன்னு சொன் னேன்' என்றெல்லாம் தம்முடன் இருந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டார் விஜய். சி.பி.ஐ. விசாரணைங் கிறது விஜய்க்கு சில நிஜ அரசியலையும், பாடங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது''‘ என்று விவரிக்கின்றனர் விஜய்யின் நண்பர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள்.
விஜய் உள்ளிட்டவர்கள் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும், பொங்கல் முடிந்து 19-ந் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சி.பி.ஐ.! இதனை யடுத்து, வழக்கறிஞர்களுடன் நீண்ட ஆலோசனை நடந்துள்ளது. அதில், முதல் கட்ட விசாரணையில், இதுவரை கேட்கப்பட்ட கேள்விகள் என்ன? அதற்கு விஜய் சொன்ன பதில்கள் என்ன? உள்ளிட்டவைகளை அலசிய வழக்கறிஞர்கள், இனி எப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வாய்ப்பிருக் கிறது? என்பது குறித்து விவாதித்து, அதற்கான பதில்களையும் ரெடி செய்து கொண்டிருக் கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த சி.பி.ஐ. விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், விசாரணையின் போக்கு எப்படி இருக்கிறது? விஜய் எப்படி எதிர்கொண்டார்? அவரது மனநிலை எப்படி இருந்தது? அவர் சொன்ன பதில்கள் என்ன? என்பதையெல்லாம் டெல்லி மேலிடம் அறிந்துகொண்டிருக்கிறது.
முதல்கட்ட விசாரணையில் தி.மு.க. அரசுக்கு எதிராக பல பதில்களைச் சொல்லியிருக்கிறார் விஜய். அவரிடம் முழுமையான விசாரணை முடிந்ததும் அவர் சொல்லியுள்ள பதில்களை வைத்து அரசின் உயரதிகாரிகள் சிலருக்கும், தி.மு.க. அமைச்சர்கள் சிலருக்கும் சம்மன் அனுப்ப சி.பி.ஐ. திட்டமிட்டிருப்பதாகவும், தேர்தல் நெருக்கத்தில், விசாரணைக்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.
இதற்கிடையே, இரண் டாம் கட்ட விசாரணையை நினைத்து மன உளைச்சலில் விஜய் இருப்பதாக உளவு வட்டாரங்களில் செய்தி பரவிக்கிடக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/vijay-cbi-2026-01-14-16-29-28.jpg)