Advertisment

அது விபத்தல்ல... துணை சபா மகன் வில்லங்கம்! பொள்ளாச்சி கொடூரத்தின் மறுபக்கம்!

caraccident

பொள்ளாச்சி நகரில் வெளிப்பட்ட காம கொடூர சம்பவங்களுக்கு பிறகு பொள்ளாச்சி நகரத்தையே ஒட்டுமொத்தமாக போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டது தமிழக அரசு. ஒரு பக்கம் சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் சுற்றி வருகிறார்கள். இன்னொரு பக்கம் பட்டாலியன் கணக்கில் குவிக்கப்பட்ட தமிழக போலீசார் வெறும் ஒரு கி.மீ. சுற்றளவுள்ள பொள்ளாச்சி நகரத்தை சந்து பொந்துகளில் கூட படைபடையாக சுற்றி வருகிறார்கள்.

Advertisment

பொள்ளாச்சி கொடூரம் அந்த மக்களை வெகுவாக பாதித்துள்ளது. ""இந்தக் கொடுமைகளுக்கு சம்பந்தமேயில்லாத, கண்ணியமான குடும்பத் தைச் சேர்ந்த பொம்பளப் புள்ளைங்க மனசு என்ன பாடு பட்டுக்கிட்டி ருக்கும்கிறத நினைச்சாலே கஷ்டமா இருக்குதுங்க'' என்கிறார்கள் பொள்ளாச்சிவாசிகள். ஒருபக்கம் இந்த காம கொடூர சம்பவங்களில் எல்லாம் பொள் ளாச்சி ஜெயராமனின் டீம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதால், அதை வேறு யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக் கிறார். அதற்காக நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஒரு பெரிய ரவுடி படையே பொள்ளாச்சி நகரில் சுற்றி வருகிறது.

caraccident

மறுபக்கம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை- அவர்கள் ஏற்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை பயன்படுத்தி, தமிழக அரசு ஜாபர்சேட் தலைவராக உள்ள சி.பி.சி.ஐ.டி. டீமை களமிறக்கி யுள்ளது. இந்த டீம் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை நான்கு நாட்கள் தங்களது கஸ்டடி யில் எடுத்து விசாரித்தது. அத்துடன் திருநாவுக்கரசு மற்றும் நண்பர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய பெண்களுடன் எங்கெங்கு சுற்றி னார்கள் என பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அத்தனை சி.சி.டி.வி. பதிவுகளையும் கைப்பற்றியிருக்கிறது. ஆனால், தமிழக போலீசாரின் இந்த வேலைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் எந்த ஆதரவுமில்லை.

caraccident

""ஏழு வருடங்களாக பொள் ளாச்சியில் நடந்து வந்த இந்த காமக் கொடுமைகளை போலீசார்

""ஏழு வருடங்களாக பொள் ளாச்சியில் நடந்து வந்த இந்த காமக் கொடுமைகளை போலீசார் நினைத் திருந்தால் எப்பொழுதோ தடுத்திருக்க முடியும். போலீசார் உதவியுடன்தான் இந்த கொடுமைகள் நடந்தன. குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசிய எஸ்.பி. பாண்டியராஜன், டி.எஸ்.பி. ஜெயராமன் ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் தமிழக காவல் துறை எடுக்கவில்லை. மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார் சொன்னவரின் பெயரை வெளியிட்டார் என பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருபத்தைந்து லட்சரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதியரசர் கிருபாகரன் உத்தரவிட்டார். அதைப்பற்றி எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு கவலைப்படவே இல்லை என சொல்கிறார்கள் பொது மக்கள். அவர்களின் இந்த கோபம் குறைய வேயில்லை. சி.பி.சி.ஐ.டி. விசாரணை என அறிவிக் கப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான பேர் "நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம்' என சி.பி.சி.ஐ.டி.யின் தொலைபேசி மூலம் சொன்னார்கள். அவர்களில் ஒருவரிடம்கூட அடுத்தகட்டமாக எழுத்துப்பூர்வ மான எந்தப் புகாரையும் பதிவு செய்யவில்லை.

Advertisment

பொள்ளாச்சியில் நடந்த காமக் கொடுமைகளுக்கு எதிராக 19.3.2019 அன்று ஒரு முழு அடைப்புக்கு கட்சி சார்பற்ற முறையில் பொள் ளாச்சி நகர மக்களே அழைப்பு விடுத்துள்ளார்கள் என பொள்ளாச்சி நகரத்தில் நிலவும் சூழலை விவரிக்கிறார்கள் பொதுமக்கள். கவர்னர், நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. எப்படி தடயங் களை அழிக்க முயற்சி செய்ததோ அதேபோல் இந்த வழக்கிலும் தடயங்களை அழித்துவிட்டு இப் பொழுது கைது செய்யப்பட்டுள்ள நாலுபேருடன் வழக்கை முடிக்க சி.பி.சி.ஐ.டி.யினர் திட்டமிட்டுள்ள னர். இதனால், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி பெருகுமானால் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக் கரசு, சபரிராஜன் (ரிஸ்வந்த்) ஆகியோரை என்கவுண்டரில் போட்டு தள்ளி... இந்த பிரச் சினைக்கு ஒரு முடிவு கட்டலாம் என தமிழ அரசு திட்டமிட்டுள்ளது'' என்கின்றார்கள்.

caraccident

இதற்கிடையே "இந்த வழக்கில் தொடர்புள்ள அத்தனை பேருக்கும் தலைவனாக இருந்து இந்த சம்பவங்களை நடத்தியதில் பொள்ளாச்சி ஜெய ராமனின் மகன் பிரவீனுக்கு பெரும்பங்கு இருக்கிறது' என்கிறார்கள். பொள்ளாச்சி ஜெயராமன் தனக்கு சட்டப்படி இரு மனைவியர் என்பதை தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். 1984-ல் அ.தி.மு.க. ஆட்சி யின் போது வீட்டுக்கூரையை பிரித்து உள்ளே குதித்து ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய வில்லங்க மான விஷயங்களும் உண்டு. ""ஜெயராமனின் மகன் பிரவீன் செய்யும் கொடூரங்கள் பற்றி இருவருக்கும் ஏற்படும் வாக்குவாதத்தில் "நீ என்ன யோக்கியமா?' என அப்பாவை கேள்வி கேட்பது பிரவீனின் வழக்கம்'' என்கிறார்கள் அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையே பிரவீன் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் திருப்பூர் அங்கேரி பாளையம் சாலையில் குடியிருக்கும் கீதா (காவல்துறையால் சுரேகாவின் பெரியம்மா எனக் குறிப்பிடப்பட்டிருப்பவர்) என்பவர், ""4.10.2016 அன்று பிரவீன் அவருடைய நண்பன் திலக் முருகன் மற்றும் 4 பெண்கள் பிரவீன் படிக்கும் பி.எஸ்.ஜி. கல்லூரியில் இருந்து சேலம் நோக்கி டி.என்.41 ஏ ஹெச். 2233 பதிவெண் கொண்ட காரில் வேகமாக சென்றுள்ளனர். ஆதியூர் மேம்பாலத்திற்கு கீழ்ப்புறமாக கார் செல்லும் போது 120 கி.மீ. வேகத்தில் சாலைக்கு நடுவில் இருந்த தடுப் புச் சுவரை மீறி எதிர்திசையில் வந்த லின்சன் என்பவர் ஓட்டி வந்த மாருதி ஸ்விப்ட் கார்மீது மோதியது. இதில் வீர சுரேகா என்ற பெண் தலை சிதறி உடல் நசுங்கி பிண மானார். பிரவீனுக்கு பெரியளவில் காயம் இல்லை. ஆனால், சுரேகாவின் உடல் முழு வதும் நசுங்கி அவரது கால் காரில் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த விபத்து நடந்த பொழுது எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. இந்த விபத்தினால் சுரேகாவின் தந்தை யான மாதவன் நிலைகுலைந்து போய்விட்டார். நாங்கள்தான் சுரேகாவின் பிணத்தை அடக்கம் செய்தோம்.

காரை ஓட்டிய பிரவீனுக்கு தலையில் அடியும் முழங்கையில் காயமும் மட்டுமே ஏற் பட்டிருந்தது. அவர் குறைந்தபட்ச முதலுதவி சிகிச்சைகள் பெற்றுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். திலக்கிற்கு மூக்கு, வலது முழங்கை, நடுவிரலில் காயம், மற்ற பெண்களுக்கு பெரிய காயமில்லை. "சுரேகா பிணத்தை பார்த்த போது அவருக்கு தலையே இல்லை. கழுத்தி லிருந்து வயிறு வரை நசுங்கியிருந்தது. கால்கள் காருக்குள்ளும் உடல் தரையிலுமாக தொங்கிக் கொண்டிருந்தன' என அவர் உடலை காரில் இருந்து எடுத்தவர்கள் சொன்னார்கள்.

caraccident

பொள்ளாச்சியில் நடைபெற்ற காமக் கொடுமைகளில் பிரவீன் சம்பந்தப்பட்டிருக்கிறார் என வரும் செய்திகளை பார்க்கும் போது, பிரவீனுடன் காரில் சென்ற சுரேகாவுக்கு நேர்ந்தது விபத்தாக தெரியவில்லை. பாலியல் தொந்தரவு தாங்காமல் சுரேகா காரில் இருந்து குதிக்க முயற்சி செய்திருப்பார். அதை தடுக்க நினைத்த பிரவீன் தடுப்புச்சுவரில் காரை மோத 120 கி.மீ. வேகத்தில் வந்த கார் தடுப்புச்சுவரை தாண்டி பல்டி அடித்து எதிரே வந்த காரின் மீது மோதியிருக்கலாம் என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. இது விபத்தல்ல... கிட்டத்தட்ட கொலைதான்'' என்கிறார் கீதா.

caraccident

இதுபற்றி மேலும் உண்மையறிய பிரவீன் காருடன் மோதிய கே.எல்.08 ஏ யூ 799 பதிவெண் கொண்ட காரினை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சீரச்சி என்ற ஊரை சேர்ந்த ஓட்டுநர் லின்சன் மற்றும் கார் உரிமையாளரான ஜோசின் மகன் பினாய் ஜோஸ் ஆகியோரை சந்தித்தோம். "எதிரே வந்த காரை அதி வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார்கள். அந்த விபத்தில்தான் சுரேகா இறந்து போனார்' என விபத்து நடந்த பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த வர்தான் லின்சன். அவரோ, "நான் அப்படியெதுவும் புகார் கொடுக்கவில்லை' என மறுத் தார். கார் உரிமையாளரான பினாய் ஜோஸ், "விபத்து நடந்தது உண்மைதான். அந்த விபத்தினால் சேதமடைந்த எங்களின் காருக்கு இன்சூரன்ஸ் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் எங்களுடன் விபத்து நடந்த கொஞ்ச காலம் பேசி வந்தார். இப்பொழுது அவர் பேசுவதில்லை. விபத்து நடந்த போது பிரவீனின் கார் பறந்து வந்து எங்கள் கார் மீது மோதியது. நான் பிரேக் போட்டு எனது காரை நிறுத்தினேன். எனக்கு அடிபட்டது. அதன் பிறகு எனக்கு ஏதும் தெரியவில்லை'' என்றார்.

""பெருமாநல்லூர் நகர காவல்துறையின் பதிவுகள்படி திருப்பூர் 4-வது மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவின் போது இந்த வழக்கு பொய் வழக்கு என பிரவீன் சொல்கிறார். இந்த புகாரை கொடுத்த லின்சன் "நான் புகாரே கொடுக்கவில்லை' என சொல்கிறார். காவல்துறை சாதாரண வழக்காக இதை பதிவு செய்து, பிரவீனை கைது செய்து அன்றைய தினமே விடுவித்து விட்டது. இதையே பிரவீன் பொய் வழக்கு என கோர்ட்டில் தெரிவித்திருக்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதற்கு ஒரு புதிய புலன் விசாரணை தேவை'' என்கின்றார் திருப்பூர் வழக்கறிஞர் சையது இப்ரகிம்.

-தாமோதரன் பிரகாஷ்

_______________

வீடியோவை வைத்து பணம் பறிப்பு!

caraccidentதுணை சபா மகன்கள் முகுந்தனும், பிரவீனும் தலைமறைவு ஆகி விட்ட நிலையில், அவர்களுக்கு நெருக்கமான, திருநாவுக்கரசு கும்பலின் பின்னால் மறைந்து இருக்கும் கோவை ஒண்டிப்புதுரைச் சேர்ந்த சுரேஷ் என்பவனால் பாதிக்க்கப்பட்ட ஐஸ்வர்யா (பெயர் மாற்றப்பபட்டுள்ளது) என்ற குடும்ப பெண் தன் சூழலைக் கதறலுடன் நம்மிடம் விளக்கினார். நீண்ட நாட்களாக, நான் அறியாமல் என்னை கவனித்து வந்த சுரேஷ், ""ஒரு பஸ் பயணத்தின்போது என் குழந்தையைக் கொஞ்சுவது போல பேச்சுக் கொடுத்தான். பிறகு, போன் நம்பர் வாங்கி பேசினான். அந்தப் பழக்கம், அப்படியே நெருக்கமாயிடிச்சி. என்னைய மயக்கி ..என்னைய வாட்ஸ் அப் வீடியோவுல மோசமா பதிவு பண்ணிட்டான். வீடியோவை என் குடும்பத்தினரிடம் போட்டுக் காட்டுவதா மிரட்டி, பணம் பறிக்க ஆரம்பிச்சான். வாட்ஸ்அப் மூலம் அக்கவுண்ட் டீடெய்ல் கொடுத்து, இதுவரை 4 லட்ச ருபாய் பிடுங்கிட்டான். என்னை மாதிரி நிறைய பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க'' என கண்ணீருடன் தெரிவித்த அவர், ""இவனையும் மொத்த கூட்டத்தையும் புடுச்சி தண்டனை கொடுக்கணும்'' என்கிறார் ஆவேசத்துடன்.

-அருள்குமார்

nkn220319
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe