புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட டெல்லி மேலிட பிரதிநிதி ஜான் குமாருக்கும், ஜெயக்குமார் என்பவருக்கும் கடும் போட்டி இருந்தது. எப்படியாவது ஜெயக்குமா ருக்கு சீட் பெற்றுத்தந்துவிட மாநில தலைவர் நமச்சிவாயம் பகீரத பிரயத்தனம் செய்தார். முத லமைச்சர் நாராயணசாமி எம்.எல்.ஏ. ஆவதற்காக நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததாலும், அடுத்த தேர்தலில், தான் போட்டி யிட ஏதுவாக தொகுதியை தனது கட்டுப்பாட்டில் இருக்க வைப்பதற்காகவும் தனது நம்பிக்கைக்குரிய ஜான்குமாருக்கு சீட் பெற்றுத் தந்து நிற்க வைத்துள் ளார் நாராயணசாமி. எதிரணியில் கடந்த தேர்தலில் 3600 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் வந்த என். ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இத்தொகுதியில் ஆர்வம்காட்டினா லும், யாரும் எதிர்பாராதவிதமாக சென்னை சென்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சமாளித்து தொகுதியை வாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. நேருதான் போட்டியிடு வார் என எதிர்பார்க்கப்பட்டு அவரும் இரண்டு நாட்கள் தனக்காக ஆதரவைத் திரட்டினார். அதே சமயம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண் டன், ‘"கூட்டணிக் கட்சியினரை ஆலோசிக்காமல் நேரு எப்படி தனியாக பிரச்சாரம் போகலாம்?'’என விமர்சித்தார். இதனிடையே நேருக்கு சீட் இல்லையென தெரியவந்ததால் ஆவேசமடைந்து 29 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தனது ஆதங்கத்தை கொட்டினார்.
இந்த விமர்சனத்தால் நேருவை நிறுத்த விருப்ப மில்லாத ரங்கசாமி வேட்பு மனு தாக்கலுக்கு முதல் நாள் இரவுவரை முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ண னை நிறுத்தும் முடிவிலிருந்துள்ளார். அடுத்தநாள் காலையில் கடந்த எம்.பி. தேர்தலில் போட்டியிட் டுத் தோல்வியுற்ற நாராயணசாமியை நிறுத்த திட்ட மிட்டார். அவரது குடும்பத்தினரும் நழுவிக்கொள்ள, திடீரென தொழிலதிபர் புவனா (எ) புவனேஸ் வரனை நிர்ப்பந்தப்படுத்தி நிற்க வைத்துள்ளார்.
தொகுதியை தக்கவைக்கவும், ஆளும் கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தவும் இங்கு வெற்றிபெற்றாக வேண்டுமென ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுகிறது. விட்டுக் கொடுக்காமல் வியூகம் வகுக்கிறார் ரங்கசாமி. இதனிடையே தேர்தல் விதிமுறைகளை மீறி புதுவை ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரசுக்கு சொந்தமான கம்பன் கலையரங்கத்தில் மத்திய அரசின் பொருளாதார நிலவரம் குறித்து கூட்டம் நடத்தியிருப்பதாக அ.தி.மு.க. தரப்பு புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளின் கடும் போட்டிக்கிடையே முன்னாள் அமைச்சர் கண்ணனின் புதிய கட்சியான மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் வெற்றிச்செல்வன் களமிறக்கப் பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
-சுந்தரபாண்டியன்