Advertisment

வரும்... ஆனா வரலை!  இழுத்தடிக்கும் வேலூர் விமான நிலையம்!

vellore

வேலூர் என்றாலே கோட்டை, கிருஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், நாராயணி தங்க கோவில் உள்ளிட்ட பல்வேறு சிறப்புக்களால் தினமும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள், பெற்றோர்கள், பக்தர்கள் வேலூரில் வந்து குவிகின்றனர். ஆம்பூர், வாணியம்பாடி, விஷாரம், ராணிப்பேட்டையிலுள்ள காலணி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை களுக்கு வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங் களிலிருந்தும் தொழிலதிபர்கள் வந்து செல் கிறார்கள். இந்தியாவுக்கு பல்லாயிரம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் காலணித் தயாரிப்புகளை சென்னை, பெங்களூரு வழியாகவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் வேலூரில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்துவருகின்றது.

Advertisment

வேலூர் அப்துல்லாபுரத்தில் 1938களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிறிய அளவிலான 34 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. அது, மெட்ராஸ் பிளையிங் கிளப்பின் பயிற்சி விமானிகளுக்காக பயன்படுத்தப்பட்டு,

வேலூர் என்றாலே கோட்டை, கிருஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், நாராயணி தங்க கோவில் உள்ளிட்ட பல்வேறு சிறப்புக்களால் தினமும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள், பெற்றோர்கள், பக்தர்கள் வேலூரில் வந்து குவிகின்றனர். ஆம்பூர், வாணியம்பாடி, விஷாரம், ராணிப்பேட்டையிலுள்ள காலணி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை களுக்கு வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங் களிலிருந்தும் தொழிலதிபர்கள் வந்து செல் கிறார்கள். இந்தியாவுக்கு பல்லாயிரம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் காலணித் தயாரிப்புகளை சென்னை, பெங்களூரு வழியாகவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் வேலூரில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்துவருகின்றது.

Advertisment

வேலூர் அப்துல்லாபுரத்தில் 1938களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிறிய அளவிலான 34 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. அது, மெட்ராஸ் பிளையிங் கிளப்பின் பயிற்சி விமானிகளுக்காக பயன்படுத்தப்பட்டு, 2011-ல் அதுவும் கைவிடப்பட்டது. 2016-ல் ஒன்றிய அரசின் உதான் திட்டத்தின் கீழ் ஆர்.சி.எஸ். -பிராந்திய விமான இணைப்புத் திட்டத்தின்கீழ் வேலூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இங்கு மட்டுமல்லாமல் கரூர், ராமநாதபுரம், ஒசூரிலும் அமைக்க முடிவு செய்தனர். 2017-ல் 97 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி விமான நிலைய ஆணையகத்திடம் ஒப்படைத்தது. 66 கோடி நிதியும் விமான நிலையத்துக்காக ஒதுக்கப்பட் டது. 850 மீட்டர் நீளத்துக்கு விமான ஓடுபாதை அமைக்கப்பட்டது. பயணிகள் காத்திருப்பு கட்டடம், அலுவலக கட்டடம், கட்டுப்         பாட்டு அறை போன்றவை கட்டப்பட்டது, திடீரெனப் பணிகள் நின்றுவிட்டது. அதன்பின் 2023ஆம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கின. அனைத்துப் பணிகளும் முடி வடைந்த நிலையில் இரண்டாண்டுகளாகியும் திறக்கப்படவேயில்லை.

Advertisment

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, "ஒன்றிய அரசும், மாநில அரசும் 60:40 விகிதாச்சாரத்தில் முதலீடு செய்துள்ளன. 20 பயணிகள் பயணிக்கும் ஏர்கிராப்ட் இயக்கும் அளவுக்கே இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை, பெங்களுரூ, திருப்பதி, திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய சிவில் விமானப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். 2023, செப்டம்பரில் விமானத்தை இயக்கி பாதுகாப்பு டெஸ்ட் செய்யப்பட்டபோது பக்காவாக சிக்னல் கிடைப்பதாகக் கூறினார்கள், அப்படியிருந்தும் விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி தரவில்லை. 

அதன்பின் மீண்டும் டெல்லியிலிருந்து 2024, பிப்ரவரியில் ஆய்வு செய்தார்கள். 2024 ஏப்ரலிலிருந்து விமான நிலையம் செயல்படு மென்று அறிவிக்கப்பட்டது, ஆனால் செயல் பாட்டுக்கு வரவில்லை. மீண்டும் பார்வையிட்ட அதிகாரிகள், விமான நிலையத்தை சுற்றி கம்பி வேலி போடப்பட்டதை அகற்றிவிட்டு 

கருங்கல் சுவர் கட்டவேண்டுமென அறிக்கை தந்தனர். 2024, நவம்பரில் சுற்றுச்சுவர் கட்ட 8.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, 12 மாதத்தில் பணிகள் முடிக்கவேண்டுமென்று கன்டிஷன் போடப் பட்டது'' என்கிறார்கள்.

வேலூர், திருப்பத்தூர் மாவட்ட வர்த்தக அமைப்புகளின் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கூறுகையில், "90 ஆண்டுகளாக வேலூரில் விமான நிலையம் அமையப்போகிறது எனச் சொல்லிவந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையம் கட்டப்பட்டு ரன்வே அமைக்கப்பட்டும் இதுவரை விமான நிலையம் அமைக்கவில்லை. இதனால் மக்கள் பணம் தான் கோடிக்கணக்கில் விரயமாகியுள்ளது'' என்கிறார்கள். 

இது குறித்து வேலூர் எம்.பி.யும், தி.மு.க. மா.செ.வுமான கதிர்ஆனந்திடம் கேட்டபோது, "விமான நிலையத்தை கிடப்பில் போட்டுட்டாங்க. நான் முதல்முறையா எம்.பி.யான பின் அந்த ஃபைலை திரும்ப ஓபன் செய்ய வைத்தேன். நிலப் பிரச்சனையை அதன் உரிமையாளர் களை வர வைத்து பேசி, நிலங்கள் கையகப்படுத்தப் பட்டது. பின்பு விமான ஓடுபாதை 800 மீட்டருக்கு இருந்ததை, அதிகப்படுத்தி ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது பிரதமரின் விமானம் அந்த ரன்வேயில் தான் வந்திறங்கியது. பிரச்சாரம் செய்துவிட்டு அந்த விமான நிலையம் வழியாகவே திரும்பிச் சென்றார். அந்தளவுக்கு எல்லா ஏற்பாடுகளும், அதாவது ரேடார், ஏர்கன்ட்ரோல் ட்ராஃபிக் இயந்தி ரங்கள் கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது. மூன்று கமர்ஷியல் ஃலைன் வேண்டுமெனக் கேட்கப்பட்டது, அதற்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. விமானத்துறை அமைச்சர் ராம்மோகன் என் கோரிக்கையை ஏற்று அதிகாரிகளை அனுப்பிவைத்தார். விமானப் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தபோது, விமான நிலையத்தை சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளதை பார்த்துவிட்டு, இப்படியிருந்தால் அனுமதி கிடைக்காது என்றார்கள். இந்தியா முழுவதும் விமான நிலையங்களை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்தால் மட்டுமே அனுமதி தருவார்கள் எனச் சொன்னார்கள். அதன்பின்பு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது, 

மீதிப் பணிகள் இன்னும் இரண்டு மாதத்துக்குள் முடிந்துவிடும். ஒர்க் கம்ப்ளீட் சர்ட்டிபிகேட் வந்ததும் உடனடியாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்து, விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிடுவேன்'' என்றார். அப்படி வந்தால் வேலூர் நகர வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கும்!

-கிங்

nkn100126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe