மெரினா புரட்சியில் தொடங்கி கிராமங்கள் தோறும் போராட்டக் களமாகி தமிழ்நாடே கொந்தளித்த நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கான உரிமை கிடைத்தது. ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டால் குறைந்துகொண்டே வரும் நாட்டின மாடுகள் முற்றிலும் அழிந்துபோகும். அவற்றை மீட்டெடுக்க ஜல்லிக்கட்டு அவசியம் வேண்டும் என்றுதான் இளைஞர்கள் போராடினார்கள். ஆனால் இப்போது, நாட்டு இன மாடுகளை இனப்பெருக்கம் செய்யவிடாமல் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் செயல்படத் தொடங்கி உள்ளது. அரசாங்கத்தின் அடுத்தடுத்த இந்த செயல்பாடுகளால் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், காளையர்கள், இளைஞர்கள் மீண்டும் கொதிக்கத் தொடங்கி உள்ளனர்.
இந்த வருட பொங்கல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் தொடங்கியது முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை களத்தில் நின்று கலக்கியது காமன்வெல்த்தில் பளு தூக்கிய வீராங்கனை புதுக்கோட்டை எஸ்.ஐ. அனுராதாவின் க
மெரினா புரட்சியில் தொடங்கி கிராமங்கள் தோறும் போராட்டக் களமாகி தமிழ்நாடே கொந்தளித்த நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கான உரிமை கிடைத்தது. ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டால் குறைந்துகொண்டே வரும் நாட்டின மாடுகள் முற்றிலும் அழிந்துபோகும். அவற்றை மீட்டெடுக்க ஜல்லிக்கட்டு அவசியம் வேண்டும் என்றுதான் இளைஞர்கள் போராடினார்கள். ஆனால் இப்போது, நாட்டு இன மாடுகளை இனப்பெருக்கம் செய்யவிடாமல் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் செயல்படத் தொடங்கி உள்ளது. அரசாங்கத்தின் அடுத்தடுத்த இந்த செயல்பாடுகளால் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், காளையர்கள், இளைஞர்கள் மீண்டும் கொதிக்கத் தொடங்கி உள்ளனர்.
இந்த வருட பொங்கல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் தொடங்கியது முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை களத்தில் நின்று கலக்கியது காமன்வெல்த்தில் பளு தூக்கிய வீராங்கனை புதுக்கோட்டை எஸ்.ஐ. அனுராதாவின் காளை ராவணன். இந்த ராவணன் பற்றித்தான் ஊடகங்கள் முதல் சமூக வலைத்தளங்களிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் பேச்சாக இருந்தது.
இந்த காளை ராவணன் எஸ்.ஐ. அனுராதாவுக்கு எப்படி வந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா, பளு தூக்கி காமன்வெல்த் முதல் தெற்காசிய போட்டிவரை நூற்றுக்கணக்கான பதக்கங்களை குவித்தவர். விளையாட்டில் சாதித்ததால் தஞ்சை மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியும் கிடைத்தது.
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து சொந்த ஊருக்கு வந்த அனு ராதாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்படித்தான் தஞ்சை வினோத், தன் மனைவியின் தோழியான அனுராதா வுக்காக தஞ்சை வத்திராயிருப்பு பாலச்சந்திரன் கிடையில் இனப் பெருக்கத்திற்காக வைத்திருந்த காளையை வாங்கி பரிசாக வழங்கி, ’"உனக்கு இந்த காளையும் பெருமை சேர்க்கும்'’என்று சொல்லிக் கொடுத்தார்.
8 மாதங்களுக்கு முன்பு தன் வீட்டுக்கு வந்த காளைக்கு அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து "ராவணன்' என பெயர் வைத்து, தன் காளையான "அசுர'னுடன் ராவணனுக்கும் பயிற்சி கொடுத்தார்.
அவனியாபுரத்தில் முதன் முதலில் ராவணனை களமிறக்கினார்கள். களத்தில் நின்று விளையாடிய ராவணனை அந்த களமே பாராட்டியது. ஊடகங்களின் பார்வையும் ராவணன் மேல் பட்டது. சிறந்த காளை என்ற பெயரோடு வீட்டுக்கு வந்தது.
அடுத்த நாள் உலகப்புகழ் அலங்காநல்லூரில் காலை 8:30 வரை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன்கள் நின்று விளையாடின. அதைப் பற்றியே பேச்சு இருந்த நிலையில், அதன் பிறகு அனுராதாவின் ராவணன் களமிறங்கி கலக்கியதும், நாள் முழுவதும் ராவணன் பற்றியே தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பேச்சு ஓடியது. அலங்காநல்லூரின் சிறந்த காளை ராவணன்தான் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்.
ஆனால், ஜெர்ஸி இன காளைக்கு முதல் பரிசும் நாட்டு இன காளையான ராவணனுக்கு இரண்டாம் பரிசும் அறிவித்தார்கள். நாட்டு இனத்தை காக்கத்தான் ஜல்லிக்கட்டு போராட்டமே நடந்தது. ஆனால் அரசு கலப்பினப் பக்கம் போகிறது என்ற சர்ச்சை எழுந்தது.
அலங்காநல்லூரில் தொடர்ந்து தவறு நடக்கிறது. அதாவது நாட்டின காளைகளுக்கே முதல் பரிசு வழங்கவேண்டும். ஆனால் புதுக்கோட்டை காளைக்கு முதல்பரிசு போகக்கூடாது என்று நினைத்து இப்படி கலப்பினத்திற்கு கொடுக்கிறார்களா அல்லது நாட்டினத்தை குறைக்க நினைத்து இப்படிக் கொடுக்கிறார்களா என்ற சர்ச்சை விவாதம் சமூக வலைத்தளங்களிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ரசிகர்களிடமும் எழுந்துள்ளது.
இந்த சர்ச்சை குறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் பி.ராஜசேகரனிடம் கேட்டபோது, ""அலங்கா நல்லூரில் சிறந்த காளைகளை தேர்வுசெய்ய அதிகாரிகள் கொண்ட குழு இருந்தது. அவர் கள் தேர்வு செய்த காளைக்கு பரிசு வழங்கப் பட்டுள்ளது. ஜெர்சி இன காளைக்கு முதல்பரிசு என்ற சர்ச்சை எழுந்துள்ளது உண்மைதான்''’ என்றார்.
துணைத்தலைவர் ஜூலி (ஓய்வு எஸ்.ஐ.) நம்மிடம் பேசியபோது, ""ஜல்லிக்கட்டில் வாலை பிடிக்கக்கூடாது, திமிலை மட்டுமே பிடித்து அடக்கவேண்டும் என்பது விதிமுறை. அதன்படி பார்த்தால் நாட்டின காளைகளுக்கு மட்டும்தான் திமில் இருக்கும். ஆனால் ஜெர்ஸி போன்ற கலப்பினக் காளைகளுக்கு திமில் இருக்காது. அப்புறம் எப்படி வீரர்கள் பிடிக்க முடியும். விதிமுறைகளுக்கு முரண்பட்டு செயல்படவும் முடியாது. அப்படித்தான் அலங்காநல்லூரில் நாட்டின காளைக்கு சிறந்த பரிசு கொடுக்காமல் ஜெர்ஸி காளைக்குப் பரிசு வழங்கியிருக்கிறார்கள். தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் முதலில் காளைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் தேர்வுகளும் சரியாக இருக்க முடியும்''’என்கிறார்.
-இரா.பகத்சிங்