ருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் பேசிய வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவியும், உதவிப் பேராசிரியர் முருகனும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகிவருகிறார்கள்.

karupasamy

போலீஸ் வேனிலிருந்து இறங்கி, கோர்ட்டுக் குள் செல்லும் வரையிலான சில நிமிடங்களில் ‘"மாணவிகளிடம் பேசும்போது கவர்னர் பெயரை இழுத்தது ஏன்? அந்த கவர்னர் லெவல் வி.வி.ஐ.பி. யார்? யாருக்காக மாணவிகளிடம் பேசினீர்கள்? வாக்குமூலம் என்ற பெயரில் நாளிதழில் வந்தது அனைத்தும் பொய் என்று சம்பந்தப்பட்டவர்கள் மறுக்கிறார்களே? இறுக்கத் தைத் தளர்த்தி மனம் திறந்து பேசுங்கள்!' என்று நிர்மலா தேவியின் முகத்துக்கு நேராகவே நக்கீரன் சார்பில் கேள்விகளைத் தொடுத்தோம். பதில் இல்லை. தினுசான பார்வையும், அழுத்தமான மவுனமுமே அவரிடமிருந்து வெளிப்பட்டது.

நிர்மலாதேவியைப் போல வாயை இறுகக் கட்டிக்கொள்ளாமல், முருகனும் கருப்பசாமியும், மீடியாக்களிடம் தங்களின் ஆதங்கத்தை உரத்த குரலில் வெளிப்படுத்தினார்கள். கிடைத்த இடைவெளியில் இருவரிடமும் நம்மால் தனியே பேச முடிந்தது.

Advertisment

முருகனின் உள்ளக்குமுறல் இதுதான்-

murugan

நிர்மலாதேவி கவர்னர் பேரை இழுத்திருக்கக் கூடாது. அவரு பேரை இழுக்காம இருந்திருந்தா.. ரெண்டு நாள்ல கேஸை முடிச்சிட்டுப் போயிருந்திருக்கலாம். 200 நாளுக்கு மேல உள்ளே இருக்கோம். பொழப்பு போச்சு. எல்லாம் போச்சு. மன உளைச்சல்ல உடம்புக்கும் முடியாம போச்சு. குழந்தையை ரேப் பண்ணவன்கூட 20 நாள்ல பெயில்ல போயிடறான். ஒண்ணுமே தப்பு பண்ணல. மனசு கஷ்டமா இருக்கு. சி.பி.சி.ஐ.டி. வாக்குமூலம் எப்படின்னா.. மொதல்ல நம்ம ப்ரொஃபைல் வாங்கிக்கிறாங்க. அப்புறம் அவங்க இஷ்டத்துக்கு எழுதிக்கிறாங்க. படிக்காத ஆளுன்னா வெளில சொல்ல மாட்டான். படிச்ச எங்ககிட்ட அப்படி நடந்தா சொல்லாம இருப்போமா? விசாரணை பண்ணுனப்ப என்னை யாரும் அடிக்கல. ஆனா.. மரண பயத்தை ஏற்படுத்தி, அவங்க நினைச்ச மாதிரி வாக்குமூலம் வாங்கிட்டாங்க.

Advertisment

நிர்மலாதேவி ஒரு சைக்கோ மாதிரிதான் நடந்துக்கிறாங்க. நல்ல ஒரு மனநல மருத்துவர் கிட்ட கூட்டிட்டுப்போயி செக் பண்ணுறது நல்லது. கண்ணால பார்த்த அத்தனை பேரையும் சொல்லுறாங்க. பயமா இருக்கு. சி.பி.சி.ஐ.டி. போலீஸ்காரங்க, நிர்மலாதேவிகிட்ட இருந்த பேனாவைக்கூட கையால தொடல. "உன் பேனா வேணாம், போம்மா'ன் னுட்டாங்க. எல்லாம் பயம்தான். பேனாவை வாங்கினவங்களை ஏதாச்சும் சொல்லி மாட்டிவிட்டுட்டாங் கன்னா? சி.பி.சி.ஐ.டி. ஆபீஸ்ல அந்தம்மா (எஸ்.பி. ராஜேஸ்வரி) "யுனிவர் சிடில எல்லாரும் மாமா வேலை பார்க்கிறீங் களா? யாரும் அங்கே பாடம் நடத்துறது கிடையாது'ன்னு ரொம்ப கேவலமா பேசினாங்க. "நீ என்ன இம்பொடென்டா? பிம்ப்பா?' இப்படியெல்லாம் அசிங்கமா கேட்டாங்க. ஒரு கட்டத்துல என் மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சு போயி, "உங்க வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வரச்சொல்லவா? நீ வீட்ல போன்ல பேசுறியா? என் போன்ல இருந்து பேச வேணாம். லேண்ட் லைன்ல பேசு'ன்னாங்க. அப்புறம் எங்கே இருந்து அழுத்தம் வந்துச்சோ? இந்தக் கேஸ்ல என்னை மாட்டி விட்டுட்டாங்க. காவல்துறைக்கும் இன்னொரு முக்கிய துறைக்கும் எங்கிருந்தோ ஒரு அழுத்தம் வருது. அது நல்லாத் தெரியுது. இப்ப பாருங்க.. எஸ்.பி. ஒரு பெண்ணா இருந்தும், இன்னொரு பெண்ணை (நிர்மலாதேவி), வாக்குமூலம்கிற பேர்ல விபச்சாரி ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்க. இதுனால, மாணவிகளுக்கும் கெட்ட பேரு.

nirmaladeviபி.ஆர்.ஓ. அறிவழகன்தான் மதுரை பல் கலைக்கழகத்தில் அன்று கவர்னர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார். புரோட்டாகால் விதிகளை மீறி, அந்த நிகழ்ச்சியில் கவர்னர் அருகில் நிர்மலாதேவி செல்ல முடிந்தது என்றால் அதற்கு காரணமானவர்கள் பி.ஆர்.ஓ. அறிவழக னும், நிர்மலாதேவியை பின்னால் இருந்து இயக்கி வந்த புத்தாக்கப் பயிற்சி இயக்குநர் கலைச் செல்வனும்தான். கவர்னர் நிகழ்ச்சியில்கூட, அப்போது நான் கலந்துகொள்ளவில்லை. அந்த கோர்ஸ் அட்டெண்ட் பண்ணுன நாள்ல இருந்து கலைச்செல்வன் கண்ட்ரோல்லதான் நிர்மலா தேவி இருந்தாங்க. ஏன்னா.. கலைச்செல்வன்தான் அந்த கோர்ஸ் டைரக்டர். "முத்தமிட்டுக் கொண்டோம்; பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விட்டோம்'னு சொல்லுறாங்க. அவ்வளவு அன்னி யோன்யமா இருக்கிறவங்களுக்கு அவங்களே சப்ளை பண்ணுவாங்களா? என்னை மாதிரி ஆளுக்கு சப்ளை பண்ணுவாங்களா? நிர்மலா தேவியை முழுக்க முழுக்க இயக்கியது கலைச் செல்வன்தான். நிர்மலாதேவியைத் தன் கைப்பிடி யில் வைத்திருந்தவரும் அவர்தான்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஸ். அதிகாரி சந்தானத்தி டம் கொடுத்தது மட்டுமே உண்மையான வாக்குமூலம். படிச்சுப் பார்த்துட்டு கையெழுத்துப் போடச் சொன்னாரு. அவருடைய அப்ரோச்சே டிஃபரன்ட்டா இருந்துச்சு. ""நீ உண்மையைச் சொல்லணும். பொய் பேசினா ஏதாச்சும் எழுதி வச்சிருவேன். பின்னால கஷ்டப் படுவீங்கன்னாரு'' அவருடைய விசாரணை ஸ்டைல் அந்த மாதிரி இருந்துச்சு.’’

இதே ரீதியில்தான் கருப்ப சாமியும் கொதிக்கிறார்.

governorபேப்பர்ல வந்தது சார்ஜ்ஷீட்ல இருக்கிற பொய்யான வாக்குமூலம். அது எப்படி கேஸ் நடக்கிறப்ப வெளில வருது? யாரு இந்த வேலையைப் பார்த்தது? நான் மூணு பக்கம் சொன்னது சார்ஜ் ஷீட் போடறப்ப முப்பது பக்கமா வந்திருக்கு. விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. ஆபீசுல என்னை விசாரிச்சப்ப, டி.எஸ்.பி. முத்து சங்கரலிங்கம் "நீ என்ன ஜாதி டா'ன்னு கேட்டாரு. எஸ்.சி.ன்னு சொன்னேன். "எஸ்.சி. பயலுக எல்லாம் பண்ணுவீங்கடா'ன்னு சொல்லிச் சொல்லி அடிச்சாரு. நெஞ்சுல மிதிச்சாரு. இப்பக்கூட வீக்கமும் வலியும் இருக்கு. அப்புறம் கழுத்துல குத்தவும் செய்தாரு. ரெண்டுபேரும் ஆளுக்கு ரெண்டு மாணவிகளைக் கூப்பிட்டு வரச் சொன்னோம்னு ஒத்துக்கச் சொல்லி அடிச்சாங்க. நாங்க ஒத்துக்கல. கல்வித் துறையில் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் யார் பெயரையும் சொல்லக் கூடாதுன்னு மிரட்டவும் செய்தாங்க. அந்த கலைச்செல்வன், எஸ்.பி. ராஜேஸ்வரி காலில் விழுந்து அழுதாரு. அவரு கொஞ்சம் செல்வாக்கான ஆளுங்கிறதுனால, 38 மணி நேரம் விசாரிச்சும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காரங்க அவரை விட்டுட்டாங்க.

உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டு எங்களை மாட்டிவிட்டுட்டாங்க நிர்மலாதேவி. நாங்கதான் அந்த குற்றத்தைச் செய்தோம்னு ஒரு வாதத்துக்கு வச்சிக்குவோம். அப்படின்னா அவங்க என்ன பண்ணிருக்கணும்? எங்க ரெண்டு பேரையும் அப்பவே போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிருக்கணும். சரி, போலீஸ்லதான் கம்ப்ளைண்ட் பண்ணல... அவங்க காலேஜ்லயாச்சும் சொல்லிருக்கலாம்ல.

முருகனும் கருப்பசாமியும் காலேஜ் பிள்ளைங்க வேணும்னு கேட்கிறாங்கன்னு காலேஜ்ல சொல்லிருக்கணும். அதுவும் சொல்லல. அதுக்கப்புறம்... கோர்ஸ் டைரக்டர் கலைச்செல்வன்... அவர்கிட்டயாச்சும் முருகனும் கருப்பசாமியும் இப்படி காலேஜ் கேர்ள்ஸ் வேணும்னு கேட்கிறாங்கன்னு முறையிட்டி ருக்கணும். அப்படிப் பண்ணியி ருந்தா... யுனிவர்சிடில மேல இருக்கிறவங்ககிட்ட, இந்த முருகனும் கருப்பசாமியும் தேவாங்கர் காலேஜ் பிள்ளைங்க வேணும்னு சொல்லுறாங்கன்னு அவரு, தனக்கு மேல பொறுப்புல இருக்கிறவங்ககிட்ட விஷயத்தை கொண்டு போயிருக்கணும்.

இது எதுவுமே நிர்மலாதேவி பண்ணல.

மொத்த கேஸும் கலைச் செல்வனும் நிர்மலாதேவியும் போடுற நாடகம். இந்த ரெண்டு பேரும் சேர்ந்துதான் எல்லாத்தயும் பண்ணுனாங்க. இந்த ரெண்டு பேருக்கும், இவங்கள விசாரிச்ச சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கும்தான் தெரியும், மேலவரைக்கும் யார், யாருக்காக மாணவிகளைக் கூப்பிட்டாங்கன்னு! இதைச் சொல்லுறதுக்கே எனக்கு நாக்கு கூசுகிறது. இந்த வழக்குக்கு சம்பந்தமே இல்லாத என்னை மாட்டிவிட்ட தால் சொல்ல வேண்டியது இருக்கிறது.

ஆண்கள் யாரைப் பார்த்தாலும் அனுபவித்து விடத்துடிப்பவர் நிர்மலாதேவி. அவர் ஒரு செக்ஸ் சைக்கோ. காமப் பேய்; பிசாசு. ஆத்திரத்தில் இதை நான் சொல்லவில்லை. ஓரிரு நாளிலேயே, அவரது நடவடிக்கைகளை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.’’

தனித்தனியே நம்மிடம் பேசிய முருகன் மற்றும் கருப்பசாமியின் சோகம் இணைந்தும் வெளிப்பட்டது.

kalaiselvanயுனிவர்சிடி கெஸ்ட்ஹவுஸ்ல அந்த அறையை ஒதுக்கியது யாருன்னு சி.பி.சி.ஐ.டி. ஏன் விசாரிக்கல? பெரிய பெரிய ஆளுங்க அங்கே சாப்பிடுவாங்க.. போவாங்க.. அங்கே என்ன நடக்குதுங்கிறதுல நாங்க ஆர்வம் காட்டுறது இல்ல. நாங்கள்லாம் அங்கே போகமுடியாது. வந்தவன் போனவன் எல்லாம் அங்கே தண்ணி அடிக்கிறான். நாசம் பண்ணிக்கிட்டிருக்கானுங்க.. நிர்மலாதேவியை அந்த கெஸ்ட்ஹவுஸுக்கு கூட்டிட்டுப் போகாம இருந்திருந்தா... இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.

இந்தக் கேஸுல ராஜ்பவன் தலையீடு ரொம்ப இருக்கு. கவர்னருக்கும் எங்களுக்கும் என்ன சார்? நாங்க குடிசையில இருக்கிற ஆளுங்க.

அவரு கோபுரத்துல இருக்கிறவரு. நிர்மலாதேவி வாய் கொழுத்துப் பேசினாருன்னா.. அவருக்கு வாயா நாங்க? எல்லாம் அங்கே இருக்கிற ராஜகோபால் பண்ணுற வேலை சார். ஓவர் நைட்ல ராஜ்பவன்ல இருந்து டைரக்ஷன். எங்களுக்கு பெயில் கிடைக்கவிடாம பண்ணிட்டாங்க.

நிர்மலாதேவி, பார்த்தவனைப் பூரா சொல்லுறாங்க. எல்லாரும் விசாரணைல மாட்டினாங்க. எங்க நிலைமைதான் இந்த மாதிரி ஆயிருச்சு. கார்ல வச்சு நான் (கருப்பசாமி) எந்தத் தப்பும் பண்ணல. அந்தம்மா என்ன சொல்லுது? என்ன சீக்வென்ஸ் சொல்லுது? ரெண்டு நாள் பார்த்தாங்களாம். ஒருநாள் இடையில் வந்து பார்த்தாங்களாம். என்னம்மா ஏற்பாடு பண்ணிட்டீங்களான்னு நான் (முருகன்) கேட்கிறேனாம். அவங்க போயிடறாங்களாம். அப்புறம் கடைசியா வந்து கம்ப்ளைண்ட் ஆனபிறகுதான் என்னைப் பார்க்க வாராங்களாம். பொய் சொல்லுறதையும் கரெக்டா சொல்லணும்ல. இவரு (கருப்பசாமி) ரெண்டுநாள் போனா ராம். ஒருநாள் சென்னை போகணும். அர்ஜென்டா வேணும்னு கேட்டாராம்.. என்ன கொடுமை சார்?

நிர்மலாதேவியிடம் மட்டுமல்ல... எங்கள் இருவரிடமும் (முருகன், கருப்பசாமி) சி.பி.சி.ஐ.டி. வாங்கிய வாக்குமூலங்கள் உண்மையான வாக்குமூலங்கள் அல்ல. சார்ஜ்ஷீட்ல இருக்கிறது நாங்க கொடுத்த வாக்குமூலமே கிடையாது.

அதே நேரத்தில், சந்தானத்திடம் நாங்கள் அளித்தது உண்மையான வாக்குமூலம். நாங்க வாக்குமூலம் அளித்தபோது, கடைசி வரையிலும் மறுப்புத்தான் தெரிவித்தோம். நிர்மலாதேவி உயர் பொறுப்பில் உள்ள யாருக்காக மாணவிகளை அழைத்தார் என்று எங்களுக்குத் தெரியாது. கலைச்செல்வனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதனால்தான் அவரை அரெஸ்ட் பண்ணாமல் விட்டுட்டாங்க.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தவறானதுங்கிறதுக்கு என்கிட்ட (முருகன்) மெட்டீரியல் எவிடென்ஸ் இருக்கு. இதுல அவங்க மாட்டுறாங்க. கலைச்செல்வனை வழக்கில் சேர்த்திருந்தால், பதிவாளர், துணைவேந்தர் அதற்கும் மேலான கல்வித்துறை உயர் பொறுப்பில் உள்ளவர்களை நிச்சயம் காட்டிக் கொடுத்திருப்பார். அதனால்தான், திட்டமிட்டே அவரை விட்டுட் டாங்க.

ரெண்டு நாளைக்கு முன்னால ஜெயில் சூப்பிரண்டு நிர்மலாதேவியை தனியா கூப்பிட்டு ரொம்ப நேரம் பேசிருக்காங்க. ஜெயில்லயும் அவருக்கு செல்வாக்குதான். இப்பவே வேணும்னாலும் நாங்க சொல்லுறோம். "அய்யா கவர்னரே! உங்களுக்கும் நிர்மலா தேவிக்கும் தொடர்பே இல்லைன்னுகூட சொல்லுறோம். எங்களை நீங்க (கவர்னர்) வெளிய விடச்சொன்னா போதும்.'’’

இவர்களின் பரிதவிப்பைப் பார்க்கும் போது, ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தா லும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக் கூடாது’என்ற கருத்து நிழலாடியது. இருவரும் நிரபராதிகளா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அதே நேரத்தில், மேலிட உத்தரவால், உண்மைக் குற்றவாளிகளைத் திட்டமிட்டே தப்பவிட்டிருக்கிறார்கள்‘ என்பது புலனாகிறது.

-சி.என்.இராமகிருஷ்ணன்

படங்கள் : ராம்குமார்