Advertisment

இசையா? மொழியா? இளையராஜா-வைரமுத்து ஈகோ ஃபைட்!

ss

"தனது பாடல்களின் விற்பனை மூலம் இளையராஜா பெற்றுள்ள தொகை எல்லாம், அவருக்கு மட்டும்தான் சொந்தமானதா?' -என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், அது குறித்த முடிவு, இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று கூறி, கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம், "இசை பெரிதா? மொழி பெரிதா?' என்கிற திசையில் திடீரென நகர்ந்து, சிறு உரசலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

இசைஞானி இளையராஜாவை தமிழுலகமே இசை சகாப்தமாகக் கொண்டாடிவருகிறது. அவரும், "கோட்டை யில்லை கொடியும் இல்லை அப்பவும் நான் ராஜா' என்றபடி, தனது தனித்துவமான இசைஞானத்தால் தமிழ்த்திரையுலகில் செல்வாக்கோடு திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisment

ee

"அன்னக்கிளியே உன்னத் தேடுதே' என 76-ல் தனது இசை ராஜாங்கத்தைத் திரை யுலகில் தொடங்கிய அவரது இசைப்பெருக்கு, "மடைதிறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான் இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது' என்று, அவரே மகிழும் வகையில், அசுர வேகத்தில் ஒட்டுமொத்த உலகத் தமிழர் களையும் உருக்கத் தொடங்கியது. 92-ல் "ரோஜா' படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ் மான் தன் இசைச் சுவடுகளைப் பதிக்கத் தொடங்கும்வரை, அசைக்க முடியாத அரியாசனத்தில் அமர்ந்திருந்தார் இளையராஜா. அதன் பின்னர் இப்போதுவரை அவரது பழைய வெளிச்சமும், இசையும் அவரது ரசிகர்களைக் கட்டிப்போட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இன்று இளையராஜாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் ஓவர்டேக் செய்தபடி ஏராளமான இளம் இசையமைப் பாளர்கள் கோலிவுட்டில் தங்கள் திருவிழாவை ஆரவாரமாக நடத்தி வருகிறார்கள். வைரமுத்துவோடு இளையராஜா இணைந்து நடத்திய திருவிழாவின் தித்திப்பும், இன்னும் தமிழர்களின் நினைவுகளில் வழிந்துகொண்டே இருக்கிறது.

இளையராஜாவின் இசைப் பெருக்கு, உலகத்தமிழர்கள் மத்தியிலும், அவரது சிம்பொனி வித்தை மேற்கத்திய நாட்டினர் மத்தியிலும் அவரை உயர்த்திப் பிடித்து வருகிறது. அப்படிப்பட்ட ஜாம்ப வானான இளையராஜா, தனது முன்கோபத்தாலும், அவசர முடிவுகளாலும், தொடர்ந்து சங்கடங்களைச் சந்தித்துவருகிறார்.

அந்த வரிசையில் அவர் தொடுத்த வழக்கு ஒன்றே, அவரை இப்போது சங்கடப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆம், அவர் தொடுத்த வழக்கு ஒன்று இப்போது அவருக்

"தனது பாடல்களின் விற்பனை மூலம் இளையராஜா பெற்றுள்ள தொகை எல்லாம், அவருக்கு மட்டும்தான் சொந்தமானதா?' -என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், அது குறித்த முடிவு, இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று கூறி, கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம், "இசை பெரிதா? மொழி பெரிதா?' என்கிற திசையில் திடீரென நகர்ந்து, சிறு உரசலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

இசைஞானி இளையராஜாவை தமிழுலகமே இசை சகாப்தமாகக் கொண்டாடிவருகிறது. அவரும், "கோட்டை யில்லை கொடியும் இல்லை அப்பவும் நான் ராஜா' என்றபடி, தனது தனித்துவமான இசைஞானத்தால் தமிழ்த்திரையுலகில் செல்வாக்கோடு திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisment

ee

"அன்னக்கிளியே உன்னத் தேடுதே' என 76-ல் தனது இசை ராஜாங்கத்தைத் திரை யுலகில் தொடங்கிய அவரது இசைப்பெருக்கு, "மடைதிறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான் இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது' என்று, அவரே மகிழும் வகையில், அசுர வேகத்தில் ஒட்டுமொத்த உலகத் தமிழர் களையும் உருக்கத் தொடங்கியது. 92-ல் "ரோஜா' படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ் மான் தன் இசைச் சுவடுகளைப் பதிக்கத் தொடங்கும்வரை, அசைக்க முடியாத அரியாசனத்தில் அமர்ந்திருந்தார் இளையராஜா. அதன் பின்னர் இப்போதுவரை அவரது பழைய வெளிச்சமும், இசையும் அவரது ரசிகர்களைக் கட்டிப்போட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இன்று இளையராஜாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் ஓவர்டேக் செய்தபடி ஏராளமான இளம் இசையமைப் பாளர்கள் கோலிவுட்டில் தங்கள் திருவிழாவை ஆரவாரமாக நடத்தி வருகிறார்கள். வைரமுத்துவோடு இளையராஜா இணைந்து நடத்திய திருவிழாவின் தித்திப்பும், இன்னும் தமிழர்களின் நினைவுகளில் வழிந்துகொண்டே இருக்கிறது.

இளையராஜாவின் இசைப் பெருக்கு, உலகத்தமிழர்கள் மத்தியிலும், அவரது சிம்பொனி வித்தை மேற்கத்திய நாட்டினர் மத்தியிலும் அவரை உயர்த்திப் பிடித்து வருகிறது. அப்படிப்பட்ட ஜாம்ப வானான இளையராஜா, தனது முன்கோபத்தாலும், அவசர முடிவுகளாலும், தொடர்ந்து சங்கடங்களைச் சந்தித்துவருகிறார்.

அந்த வரிசையில் அவர் தொடுத்த வழக்கு ஒன்றே, அவரை இப்போது சங்கடப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆம், அவர் தொடுத்த வழக்கு ஒன்று இப்போது அவருக்கு எதிராகவே திரும்பிக்கொண்டிருக்கிறது.

தனது பாடல்களை வெளியிட்டு விற்பனை செய்து கொள்ளும் உரிமையை எக்கோ மற்றும் அகி உள் ளிட்ட நிறுவனங்களுக்குக் கொடுத்து, அதற்காகக் கணிச மான தொகையையும் வாங்கியிருக்கிறார் இளையராஜா. அந்த ஒப்பந்தம் 2014ஆம் வருடத்தோடு முடிந்த நிலை யில், இனி என் பாடல்களை விற்கக்கூடாது என்று, அந்த நிறுவனங்களுக்கு எதிராக சில வருடங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கில் 2019-ல் தீர்ப்பளித்த உயர் நீதி மன்றம், "தயாரிப்பாளரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு இளையராஜா விற்பனை உரிமையைக் கொடுத்திருப்பதால், அந்தப் பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை, அந்த இசை நிறு வனங்களுக்கு உண்டு. அதேநேரம் இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறது'’ என்று குறிப்பிட்டிருந்தது.

eee

உரிமைபெற்ற நிறுவனங்கள் அவரது பாடல் களைப் பயன்படுத்தலாம் என்ற உத்தரவில் திருப்தி இல்லாத இளையராஜா, மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே உயர்நீதிமன் றத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து எக்கோ நிறுவனம், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

அந்த மனுவில், "பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில் இந்தப் பாடல்களைப் பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது'’என சொல்லியிருந் தது. இந்த மனு மீதான விசாரணை அந்த அமர்வு முன் வந்தபோது, எதிர்பாராதவிதமாக அமர்வில் நீதிபதிகளில் ஒருவரான சுப்பிரமணியம், அந்த வழக்கில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். மேலும் வழக்கை, வேறு அமர்விற்கு மாற்றும் படியும் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் கடந்த 24ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணனும், இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரனும் ஆஜராகி வாதிட்டனர்.

eeஅப்போது இளையராஜா தரப்பு, “"இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணியாகும். அதனால் இதற்கு காப்புரிமை சட்டம் பொருந்தாது'’என்று சொல்ல, உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், “"பாடல் என்பது வெறும் இசை மட்டுமல்ல. பாடலின் வரிகள், பாடலைப் பாடும் பாடகர்களின் உழைப்பு என அனைத்தையும் சேர்த்துக் கொண்டுதான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் இதேபோல் உரிமை கோரினால் என்ன ஆகும்?''’என்று கேள்வியெழுப்பினர்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், ”பாடல்களின் விற்பனை மூலம் இளையராஜா இதுவரை பெற்றுள்ள தொகை யாருக்குச் சொந்தம் என்பது, இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது” என்று அதிரடியாக செக் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கவிதை வடிவில் தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதில்

மனிதா! நீ எழுப்பும் இசை,

உடலால் விளைவதா? உயிரால் விளைவதா?

உயிர் உந்தி எழாமல் உடல் சிந்திவிடாமல்

இசையேது இசை? மொழியேது மொழி?

சுயமென்று ஏதுமில்லை; எல்லாம் கூட்டியக்கம்’

-என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பூடகமான இந்தக் கவிதை பற்றி நாம் வைரமுத்துவையே தொடர்புகொண்டு கேட்டபோது, "இந்த விவகாரம் தொடர்பாக, இந்தக் கவிதையிலேயே என் எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டேன். இதைத் தாண்டி என்னால் எதையும் சொல்ல இயலாது. எனினும் என் கவிதைக்கு பதவுரை, பொழிப்புரை எழுதிக்கொள்ளும் உரிமை, பத்திரிகையாளர்களுக்கு உண்டு''’என்று முடித் துக்கொண்டார்.

இளைய ராஜாவின் தீவிர ரசிகரான இயக்குநர் சீனு ராமசாமியோ, "ஒரு காலத்தில் இசைஞானியின் பாடல் களுக்காகவே படம் ஓடியது. ஆரம்ப நாட்களில் குறைந்த சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு நிறைய படங்களுக்கு அவர் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். அவரால் நிறையபேர் லாபமடைந்தார்கள். இதையெல்லாம் கருதியே அவர் பாடல்களின் உரிமை மூலம் ஆதாயம்பெற விரும்புகிறார் என்று கருதுகிறேன். காப்புரிமை சட்டம், இசை மீதான உரிமை குறித்து என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.

அதே நேரம் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் தார்மீகக் கேள்விகளை எவராலும் அலட்சியப்படுத்தி விட முடியாது. எனினும் இசைஞானியின் இசை அறிவை இரண்டாம் பட்சமாகவும் கருதத் தேவையில்லை. நீதிமன்றம், பாடலின் உரிமையில் பாடலாசிரியர்கள், பாடகர்கள் பற்றியும் கேள்வி எழுப்பியிருக்கிறது. இவர்களுக்கும் உரிமை உள்ளது என்று தீர்ப்பு வந்தால் மகிழ்ச்சிதானே?''”என்று முடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் 28ஆம் தேதி மாலை சென்னையில் நடந்த "படிக்காத பக்கங்கள்'’என்ற படத்தின் ஆடியோ விழாவில், பேசிய வைரமுத்து, “"ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழியை விட இசை சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி'' என்று, இசையின் மதிப்பையும் விட்டுக்கொடுக் காமல் சொன்னதோடு, பாட்டுக்குப் பெயர் சூட்டப்படும்போதுதான் பொருள் உரிமையாகிறது. பெயர் தான் பட்டா, பெயர்தான் பத்திரம், பெயர்தான் ஆதாரம். வரிகளைச் சொல்லிதான், பாடலின் பெயர் அழைக்கப்படுகிறது''’என்றார்.

அங்கே அவர் இளைய ராஜாவின் பெயரை எங்கேயும் மறைமுகமாகக் கூட உச்சரிக்க வில்லை. இந்த நிலையில், வைர முத்துவுக்கு பதிலடி கொடுக்க வந்த இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், “

"பொதுவாகவே மனிதனாக இருந்தால் கொஞ்சம் நன்றி வேண்டும். எங்க ளால் மேலே வந்த ஒருவர் இப்படி பேசுவது தவறு. வைரமுத்து பாடலுக்கு அதிகமான புகழ் கிடைத்துவிட்ட காரணத்தால் கர்வம் தலைக் கேறிவிட்டது. வைரமுத்துவை வாழவைத்தது இளையராஜாதான். எனவே, இளையராஜாவின் போட்டோவை வைத்து தினம் அவர் வணங்க வேண்டும். இசையில்லாமல் பாடல்கள் என்பது இல்லவே இல்லை. இனிமேல், இளையராஜா வை பற்றி குறைகள் சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளைச் கண்டிப்பாக சந்திக்க வேண்டி இருக்கும்''’என்று காட்டமாகவே எச்சரித்திருக்கிறார்.

கங்கை அமரனின் இந்த பதில் வைரமுத்து ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி யிருக்கிறது.

இந்த விவாதம் குறித்து தன் கருத்தைப் பதிவிட்டிருக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் “"மொழியைவிட இசைதான் பிரதானம் என யார் வேண்டு மானாலும் சொல்லலாம். எழுது கிறவனே சொல்லலாமா?''’என்று கேட்டிருக்கிறார்.

-தமிழ்நாடன்

_______________

சன் பிக்ஸர்ஸ் மீது இளையராஜா வழக்கு!

நடிகர் ரஜினிகாந்த், தனது 171-வது படமாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு "கூலி' எனப் பெயரிடப்பட்ட நிலையில் சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்றிருக்கும் சண்டைக் காட்சியில் "நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம்பெற்ற "சம்போ சிவசம்போ' பாடலின் இடையிலுள்ள சில வரிகள், "தங்க மகன்' படத்தின், "வா வா பக்கம் வா' பாடலின் பின்னணி இசை என கலவையாக இடம்பெற்றிருக்கும். இதையடுத்து தனது பாடலின் ஒரு பகுதியை தன் அனுமதி பெறாமலே பயன்படுத்தியுள்ள தாக சன் பிக்சர்ஸ் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் இளையராஜா. லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே "விக்ரம்' படத்தில், முந்தைய கமல் படமான "விக்ரம்' படத்தின் விக்ரம் பின்னணி இசை, லோகேஷ் தயாரிப்பான "பைட் கிளப்' படத்தின் பெயர் போடும்போது "ஏஞ் ஜோடி மஞ்சக் குருவி' பாடலை முழுமையாகப் பயன்படுத்தியிருப்பார். இதனால் "முறையான அனுமதியின்றி தன் பாடலைப் பயன்படுத்தும் லோகேஷுக்கு எதிர்ப்பாகவும், எதிர்காலத்தில் பிறர் யாரும் இப்படி பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவுமே இந்த வழக்கு இளையராஜா தரப்பால் தொடுக்கப்பட்டுள்ளது' என்கிறார்கள். ஏற்கெனவே எக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் தொடுத்த, பாடல்களின் உரிமை யாருக்கு என்ற வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

___________

இறுதிச் சுற்று!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஓய்வு எடுக்காமல் தேர்தல் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின், சற்று ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றார். மே 4-ந் தேதி வரை கொடைக்கானலில் ஓய்வு எடுத்துவிட்டு சென்னை திரும்புவதாக அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். இந்த நிலையில் அவசர நிமித்தம் காரணமாக முன்கூட்டியே சென்னை திரும்புகிறார் முதல்வர் என்று 2-ந் தேதி காலையில் இருந்தே அறிவாலய வட்டாரங்களில் செய்தி பரவியபடி இருந்தது.

-இளையர்

nkn040524
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe