கொரோனா நெருக்கடிகளால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை, எளியவர்களுக்கு கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசு பை ஜூன் 15 முதல் ரேசன் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இரண்டாவது தவணைத் தொகையான 2000 ரூபாயும் கொடுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், "அ.தி.மு.க. ஆட்சியைப்போல தி.மு.க. ஆட்சியிலும் ஊழல் முறைகேடுகள் நடக்கிறது' என சர்ச்சை கிளம்புவதால், உணவுத்துறையின் உயரதிகாரிகளிடம் நாம் விசாரித்தோம்.
"டெண்டர் நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டிருக் கிறார். அதன்படி, 20,000 டன் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஆன்லைன் மூலமாக விடப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், ஒரு கிலோ பருப்பு 143 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருந்தனர். ஆனால், தற்போது
கொரோனா நெருக்கடிகளால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை, எளியவர்களுக்கு கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசு பை ஜூன் 15 முதல் ரேசன் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இரண்டாவது தவணைத் தொகையான 2000 ரூபாயும் கொடுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், "அ.தி.மு.க. ஆட்சியைப்போல தி.மு.க. ஆட்சியிலும் ஊழல் முறைகேடுகள் நடக்கிறது' என சர்ச்சை கிளம்புவதால், உணவுத்துறையின் உயரதிகாரிகளிடம் நாம் விசாரித்தோம்.
"டெண்டர் நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டிருக் கிறார். அதன்படி, 20,000 டன் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஆன்லைன் மூலமாக விடப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், ஒரு கிலோ பருப்பு 143 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருந்தனர். ஆனால், தற்போது தி.மு.க. ஆட்சியில் 1 கிலோ துவரம் பருப்பு 87 ரூபாய்க்கும், கண்ணாடி பருப்பு 78 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. முந்தைய அரசை ஒப்பிடும்போது 20,000 டன் கொள்முதலில் 88 கோடி ரூபாய் அரசுக்கு லாபம் கிடைத்துள்ளது. ஊழலும் தடுக்கப்பட்டுள்ளது.
14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு களுக்காக ஆன்லைன் டெண்டர் விடப்பட்டது. அதில் கலந்துகொண்ட நிறுவனங்களில் எல்-1 ஆக அருணாச்சலா இம்பெக்ஸ், எல்-2 ஆக ஐ.பி.எஸ். இண்டகரேட்டேட் சர்வீஸ் பாயிண்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட், எல்-3 ஆக நஃபெட், எல்-4 ஆக ஸ்வர்ணபூமி எண்டர்பிரைசஸ் ப்ரைவேட் லிமிடெட் (கிருஸ்டி குரூப்) ஆகிய நிறுவனங்கள் வந்தன. இதில் எல்-1 நிறுவனமான அருணாச்சலா, தொகுப்பு ஒன்றுக்கு (பரிசு பை) 440 ரூபாய் கோட் பண்ணியிருந்தது.
அந்த நிறுவனத்திடம் நெகோஷியேசன் பண்ணி 35 ரூபாயை குறைக்க வைத்தோம். இறுதியில் 405 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டது. அதேசமயம் மொத்தம் சப்ளை செய்ய வேண்டிய பரிசு பைகளின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம். அவை முழுவதையும் அருணாச்சலா நிறுவனத்துக்கே தர ஒப்புக்கொள்ளாமல் 1 கோடியே 20 லட்சம் பைகளை சப்ளை செய்ய மட்டுமே அனுமதித்தோம். மீதமுள்ள 90 லட்சம் பைகளையும் சப்ளை செய்ய எல்-2 ஆக வந்த ஐ.பி. எஸ். இண்டகரேட்டேட்டிடம் பேச்சுவர்த்தை நடத்தப்பட் டது. எல்-1ன் சப்ளை விலைக்கே (ரூ.405) கொடுக்க வலியுறுத்தினோம். ஒப்புக் கொண்டனர்.
கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி இந்த திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கவிருப்பதால், டெண்டர் நிபந்தனைகளின்படி அந்த 2 நிறுவனங்களும் ஜூன் 2-ந் தேதி முழுமையாக சப்ளை செய்யவேண்டும். ஆனால், சுமார் 20 சதவீதம்தான் சப்ளை செய்ய தயாராக இருந்தனர்.
திட்டம் துவங்கிவிட் டால் ரேசன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களும் பரிசு பை வாங்க குவிந்துவிடுவர். பாதி நபர் களுக்கு கிடைத்து மீதி நபர் களுக்கு கிடைக்காமல் தாமத மானால் அதுவே பிரச்சனை யாகும் என ஆலோசிக்கப்பட் டது. அப்போது, 100 சதவீத பைகளும் கொள்முதல் செய்ய மேலும் 10 நாட்கள் கால அவகாசம் தரலாம் என முடிவெடுத்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களையும் அழைத்து, ஜூன் 14-ந்தேதிக்குள், உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டரை முழுமையாக சப்ளை செய்து விடமுடியுமா? என கோரினோம்.
2 நிறுவனங்களுமே கொஞ்சம் தயங்கிய நிலையில், ஜூன் 30-ந் தேதிதான் முழுமையாக சப்ளை செய்ய முடியும் என தெரிவித்தன. ஜூன் 30-வரைங்கிறது ரொம்ப லேட் என அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டதுடன் ஜூன் 15-ல் பரிசு பைகள் கொடுக்கப்பட வேண்டும் என அரசு விரும்புவதால், ஜூன் 14-ந் தேதிக்குள் எவ்வளவு தான் உங்களால் சப்ளை செய்ய முடியும்? என அவர்களிடம் கேட்டதற்கு, எல்-1 நிறுவனம் 80 லட்சம் பைகளையும், எல்-2 நிறுவனம் 70 லட்சம் பைகளையும் சப்ளை செய்து விட முடியும் என உறுதி கொடுத்தன.
அதன்படி எல்-1 மற்றும் எல்-2 முறையே திருப்பி ஒப்படைக்கப்பட்ட 40 லட்சம் மற்றும் 20 லட்சம் என மொத்தம் 60 லட்சம் எண்ணிக்கையிலான பரிசு தொகுப்பினை எல்-3 மற்றும் எல்-4 நிறுவனங்களை அழைத்து, குறிப்பிட்ட நாளில் நீங்கள் சப்ளை செய்ய முடியுமா? என அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு 2 நிறுவனங்களும் ஒப்புக்கொண்டதால் அவைகளுக்கு தலா 30 லட்சம் பைகள் என பிரித்து வழங்கப்பட்டது.
ஆக, முந்தைய அ.தி.மு.க. அரசில் ஒரே ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட டெண்டர், தி.மு.க. ஆட்சியில் 4 நிறுவனங்களுக்கு பிரித்து தரப்பட்டதுடன், ஒரு தொகுப்புக்கு டெண்டரில் கோட் பண்ணப்பட்ட விலையை விட, 35 ரூபாயை குறைத்து டெண்டர் கொடுக்கப்பட்டதில், அரசுக்கு 73 கோடியே 30 லட்சம் ரூபாய் லாபம்''”என்று நடந்துள்ள உள் விவகாரங்களைச் விவரித்தனர் உயரதிகாரிகள்.