நாமக்கல் மக்களவை தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொ.ம. தே.க. நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதுகிறது. கொ.ம.தே.க. சார்பில் ஏ.கே.பி. சின்ராஜ் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில், டி.எல்.எஸ். பி.காளியப்பன் நிறுத்தப்பட்டு உள்ளார். அ.ம.மு.க. தரப்பில் பி.பி.சாமிநாதனும் களத்தில் இருக்கிறார். இம்மூன்று கட்சிகளைத் தவிர நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளும் களத்தில் இருக்கின்றன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பரப் புரையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ். 2009 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, காந்திச்செல்வன் எம்.பி. ஆனார். 2014-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் பி.ஆர்.சுந்தரம் வெற்றி பெற் றார். பெரும்பாலும் அ.தி. மு.க.வுக்கு சாதகமாகவே இருக்கும் இந்தத் தொகுதியில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் ஆதிக்கம் அதிகம் இல்லை. வன்னியர், முதலியார், பட்டியலினத்தவர் என பல சமூகத்தினரும் பரந்து கிடக்கின்றனர்.

n

அ.தி.மு.க.வின் கோட்டை என்று கூறப்பட்டாலும், வேட் பாளர் தேர்வில் அ.தி.மு.க. கோட்டை விட்டுவிட்டதாக அ.தி.மு.க.வினர் புலம்புகிறார்கள். ஜெயலலிதா இருக்கும்வரை சீட் பெறமுடியாத காளியப்பன், கவுன்சிலர் தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு தோற்றவர். அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்பே இல்லாதவர். தங்கமணி ஆதரவில்தான் இவ ருக்கு சீட் கொடுத்திருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.

தி.மு.க. அணியில் கொ.ம.தே.க. வேட்பாளர் சின் ராஜும் கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகம்தான். செல்வச் செழிப்பில் இருவரும் சமபலத்தில் இருந்தாலும் சின்ராஜுக்கு கூட்டணியில் இடம்பெற்ற கட்சியால் சிறிது பின்னடைவு இருக்கும் என்கிறார்கள்.

"இந்தத் தொகுதியை ஜெயித்துக் கொடுப்பது அமைச்சர் தங்கமணியோட பொறுப்பு. தேர்தல் நெருக்கத்தில் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் வரை பாய்ச்சுவதற்கான திட்டமும் இருக்கு. தொகையை கவர்களில் போட்டு தயா ராக வைத் திருக்கிறோம். 7 லட்சம் வாக் காளர்களுக்கு கொடுக்கப் போகிறோம்' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

வேட்பாளரின் தகுதியைப் பார்த்து ஓட்டுப் போடுவதாக இருந்தால் நிச்சயமாக கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ்தான் ஜெயிப்பார். ஜெயித்தே ஆகணும். அவர் ரொம்பவே தடாலடியாக பேசக்கூடியவர். "எம்.பி.க்கு வழங்கப்பபடும் சம்பளத்தை கட்சி நிதியாக கொடுத்துவிடுவேன்' என்றும், "தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பைசா கூட கமிஷன் எடுக்கமாட்டேன்' என்றும் வெளிப்படையாகவே சொல்லிவருகிறார். எதிலும் நேர்த்தியும், ஒழுங்கும் இருக்க ணும்னு எதிர்பார்ப்பார்'' என் கிறார்கள் கொ.ம.தே.க.வினர்.

அ.ம.மு.க. கணிசமாக அ.தி.மு.க. வாக்குகளை பிரித்தால், இந்த தொகுதியில் சின்ராஜ் கரையேறிடுவார். அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காத பி.ஆர்.சுந்தரம் ஆதரவாளர் களின் உள்ளடி வேலைகளும் சின்ராஜுக்கு உதவும் என் கிறார்கள்.

-இளையராஜா