Advertisment

ஜாலியாக இருக்கலாம் வா! அழைக்கும் ஆப்கள்.. சித்ரவதைக்குள்ளாகும் இளைஞர்கள்!

dd

கோவை கீரநத்தம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் அவர். மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்துவரும் அவர், அடிக்கடி குறிப்பிட்ட ஆப் பார்ப்பது வழக்கம். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கென இயங்கும் அந்த ஆப் மூலம் அடிக்கடி சாட்டிங் செய்திருக்கின்றார் அவர். சமீபத்தில் குறிப்பிட்ட ஆப்-பில் சாட் செய்யும்பொழுது எதிர்முனையில் இருந்த நபர் ஒருவர், "நீங்கள் அந்த பகுதிக்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம்' என அழைப்பு விடுத்திருக்கின்றார். மென்பொருள் பொறியாளரோ, ஆப்-பில் வந்த லொக்கேஷன் படி அந்த இடத்திற்குச் சென்று அங்கிருந்த வாலிபருடன் பேசிக்கொண்டிருக்கின்றார். திடுமென அங்கு வந்த மற்றொரு வாலிபர், ஏற்கனவே இருந்த வாலிபருடன் இணைந்து மென்பொருள் பொறியாளரின் ஆடைகளைக் களைந்து, நிர்வாணப்படுத்தி அவரிடம் பணம் கேட்டு அடித்துத் துவைத்திருக்கின்றனர். "இல்ல... பணம் என்னிடம் இல்ல. ஜிபே-யில் வேண்டுமானால் போடுகிறேன்'' என உஷாராக பேசிப் பார்க்க, மொபைலை பறித்துச்சென்றுள்ளனர் அவர்கள்.

Advertisment

இது அப்படியே சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகாராக பதிவாக, காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் நடக்கவுள்ள நிலைய

கோவை கீரநத்தம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் அவர். மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்துவரும் அவர், அடிக்கடி குறிப்பிட்ட ஆப் பார்ப்பது வழக்கம். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கென இயங்கும் அந்த ஆப் மூலம் அடிக்கடி சாட்டிங் செய்திருக்கின்றார் அவர். சமீபத்தில் குறிப்பிட்ட ஆப்-பில் சாட் செய்யும்பொழுது எதிர்முனையில் இருந்த நபர் ஒருவர், "நீங்கள் அந்த பகுதிக்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம்' என அழைப்பு விடுத்திருக்கின்றார். மென்பொருள் பொறியாளரோ, ஆப்-பில் வந்த லொக்கேஷன் படி அந்த இடத்திற்குச் சென்று அங்கிருந்த வாலிபருடன் பேசிக்கொண்டிருக்கின்றார். திடுமென அங்கு வந்த மற்றொரு வாலிபர், ஏற்கனவே இருந்த வாலிபருடன் இணைந்து மென்பொருள் பொறியாளரின் ஆடைகளைக் களைந்து, நிர்வாணப்படுத்தி அவரிடம் பணம் கேட்டு அடித்துத் துவைத்திருக்கின்றனர். "இல்ல... பணம் என்னிடம் இல்ல. ஜிபே-யில் வேண்டுமானால் போடுகிறேன்'' என உஷாராக பேசிப் பார்க்க, மொபைலை பறித்துச்சென்றுள்ளனர் அவர்கள்.

Advertisment

இது அப்படியே சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகாராக பதிவாக, காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் பொறியாளரின் காயம் பல கேள்விகளுக்கு அடித்தளமிட்டுள்ளது.

Advertisment

bb

காவல்துறையால் கூறப்படும் இன்னொரு சம்பவமோ, "திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்துவருகின்றார். அடிப்படையில் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ள அந்த மாணவரும் அதே ஆப்-ஐ பயன்படுத்தியுள்ளார். ஓரினச் சேர்க்கை தொடர்பான தகவல்களை அடிக்கடி ஆப்-பில் பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கியுள்ளார் அந்த மாணவர். இதில் ஒருவர் சம்பந்தப்பட்ட மாணவருடன் சாட்டிங்கில் நெருக்கமாகி, "நெருக்கமாக இருக்கலாம் வா' என அழைப்பு விடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பிட்ட மாலைநேரத்தில் சரவணம்பட்டி பூந்தோட்டம் நகர் பகுதியிலுள்ள ஆள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியில் சந்திக்கலாம் எனவும் கூறியிருக்கிறார்.

உண்மை என நம்பிய மாணவரும், ஓரினச் சேர்க்கை மோகத்தில் ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதிக்கு சென்று அந்த நபருக்காக காத்திருக்கின்றார். இருள் கவ்வும் அவ்வேளையில் அங்கு பிரசன்னமானவர், மாணவருடன் நெருக்கமாக இருப்பதுபோல் தூண்டுதல் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது மாணவர் எதிர்பாராத நிலையில் சரியாக அரைமணி நேரம் கழித்து புதரின் உட்பக்கமிருந்து மூன்று நபர்கள் வந்து சேர்ந்தனர். மாணவருடன் பேசிக்கொண்டிருந்த நபரும் இணைய, மாணவனை நிர்வாண மாக்கி வீடியோ எடுத்துள்ளனர். சுமார் ஒரு மணிநேர சித்ரவதைக்குப் பிறகு, மாணவனை அடித்துக் காயப்படுத்தி மாணவரிடமிருந்து 11 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு, மாணவனின் ஆடை களை எதிர்த்திசையில் வீசியெறிந்து சென்றுள்ளனர் அவர்கள்.

பின் மண்டையில் அடிபட்டும், உடலெங்கும் இரத்தக் காயங்களுடனும் படுகாயமடைந்த நிலையில், ஆடைகளை தேடிப்பிடித்து அணிந்து பிரதான சாலைக்கு வந்த நிலையில், அந்த மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அங்கிருந்த பொதுமக்கள். வழக்கம்போல் சரவணம்பட்டி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்'' என்கின்றனர் அவர்கள்.

bb

இளைஞர்கள், மாணவர்கள்தான் ஆப்-பில் ஏமாறுகின்றனர் என்றால் பெண் போலீஸின் கணவர் ஒருவரே இதில் சிக்கிச் சீரழிந்துள்ள கதை காவல்துறை வட்டாரத்தையே கலங்கடித்துள்ளது. கோவை ஆயுதப்படையில் 12-வது பட்டாலியனில் பணிபுரியும் பெண் காவலரின் கணவர், கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் பாரில் வேலை செய்துவரு கின்றார். அவர் சாய்பாபா காலனி காவல் நிலைய குற்றப்பிரிவில் எழுதிக்கொடுத்த புகாரிலோ, "குறிப்பிட்ட ஆப்பில் உறுப்பினராக இருக்கின்றேன். எனக்கு ஓரினச் சேர்க்கை பழக்கமுண்டு. குறிப்பிட்ட அன்று இரவு 02.00 மணிக்கு பிரசாந்த் என்பவர் என் போனுக்கு அழைத்து ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். நான் சரி என்று சொல்லவும் அவர் என்னை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்குப் பின்புறம் வரச்சொன்னார். எங்கே போகலாம் என்று கேட்டதற்கு கங்கா ஆஸ்பிடல் பின்புறம் உள்ள ரயில்வே டிராக் பக்கம் போய்விடலாம் என்று அவரது பல்ஸர் வண்டியில் அழைத்துச்சென்றார். அப்போது சுமார் 2.30 மணி இருக்கும். அங்கு போய் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். அப்போது அங்குவந்த சிவானந்தா காலனியைச் சேர்ந்த நிஷாந்த் மற்றும் மாணிக்கம் இருவரும் "உங்களை நாங்கள் படம்பிடித்துள்ளோம். பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம். இல்லையென்றால் வீடியோவை வெளியில் விடுவோம்' என்று கூறி என்னிடம் இருந்த என் செல்போனையும், பணம் ரூ.2500யும் கொண்டு சென்றுவிட்டார்கள்.

நான் என்னுடன் இருந்த பிரசாந்திடம், ‘"உனக்குத் தெரியாமல் நடந்திருக்காது. அவங்களை உனக்குத் தெரியும்'’ எனக்கூறி சண்டை போடும்போது மேற்படி பிரசாந்த், ‘"நீ என்ன பெரிய இவனா... அதுக்குதானே வந்தே, மரியாதையா பணத்தைக் கொடுத்துவிட்டு போய்ட்டே இரு'’ என்று கத்தியைக் காட்டி மிரட்டினார். நான் பிரசாந்துடன் இருந்தபோது பிரசாந்த் போனுக்கு என்னிடமிருந்து பிடுங்கிச் செல்லப்பட்ட போன் எண்ணிலிருந்து மாறி, மாறி பணம் கேட்டு போன் வந்தது. ஒரு கட்டத்தில் பிரசாந்த் என்னை அடித்துத் தள்ளிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டான். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று பேசாமல் நான் இருந்துவிட்டேன்'' என்றிருக்கின்றது அந்த புகார்.

பாதிக்கப்பட்ட மக்கள் வெளியில் தெரிந்தால் தங்களுக்கு அவமானம் எனக் கருதி, காவல்துறையில் புகாரளிக்க முன்வருவதில்லை. அதனால் குற்றவாளிகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதால் கோவை மாநகரில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காவல்துறையிலுள்ள உயரதிகாரி ஒருவரோ, "மாநகரத்தைப் பொறுத்தவரை இளைஞர்களும், மாணாக்கர்களும்தான் இந்த குறிப்பிட்ட செயலிகளை பயன்படுத்துகின்றார்கள். குறிப்பாக ஏழ்ண்ய்க்ழ், இப்ன்ங்க் ஆல்ல்கள். இப்ன்ங்க் ஆல்ல்ல் சீனாவைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் மா பாவோலி உருவாக்கியது. பயன்படுத்துவோருக்கு மொழி பிரச்சனை எனினும் குறிப்பிட்ட இரு ஆப்கள் ஸ்மார்ட்போன்களின் ஏடந திறனைப் பயன்படுத்துகிறது என்பதால் அருகிலுள்ளவர்களை அடையாளம் காணமுடியும். விரைவில் இதற்கான தீர்வு உண்டு'' என்கின்றார் அவர்.

nkn270424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe